ஹரம் ஷரீபின் மார்க்க அறிஞர்கள் தங்கள் "ஹுஸாமுல் ஹரமைன்" பத்வாவை வெளியிட்ட பின் தேவ்பந்தி வஹாபிகளின் சாயம் வெளுத்து விட்டது. பொது மக்களை குழப்பும் பொருட்டு தேவ்பந்தி வஹாபிகள், இமாம் அஹமத் ரஜா கான் பரேலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தேவ்பந்தி அறிஞர்களின் கூற்றுகளை தவறுதலாக மொழிபெயர்த்து விட்டார்கள் என வதந்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.
அப்போது அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த மிகப்பெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞரான அல்லாமா ஹஷ்மத் அலி கான் அவர்கள் ,ஒருங்கிணைந்த இந்தியாவின் பல மார்க்க அறிஞர்களிடமும் , மேற்படி ஐந்து அறிஞர்களின் ( குலாம் அஹ்மத் காதியானி,மௌலவி அஷ்ரப் அலி தானவி,மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி காசிம் நானுத்வி,மௌலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி ) சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி கேட்டறிந்தார் .
ஒருங்கிணைந்த இந்தியாவைச் சார்ந்த 268 முன்னணி முப்திகள் தங்கள் பத்வாவை வெளியிட்டனர் .அனைவரும் உர்து , பார்சி , அரபி மொழி அறிந்தவர்கள் மேலும் மேற்படி ஐந்து அறிஞர்களின் ( குலாம் அஹ்மத் காதியானி,மௌலவி அஷ்ரப் அலி தானவி,மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி காசிம் நானுத்வி,மௌலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி ) சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.
அவர்களிடம் இந்த ஐந்து அறிஞர்களின் நூல்கள்,பத்வாக்களை நேரடியாக அணுகவும் வசதி இருந்தது .அவர்களின் பத்வா தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. சங்கைக்குரிய 268 உலமாக்கள் “அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா” என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காஃபிர்கள்,முர்தத்துகள் என்று மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345ல் வழங்கியுள்ளார்கள்.
268 முப்திகளின் பட்டியலில் பிராங் மஹால்,ராம்பூர்,சிந்த், ஹைதராபத்,சூரத்,டில்லி,ஆக்ரா போன்ற நகரங்களின் முப்திகளும் அடங்குவர் .
இந்த பத்வாவுக்கு பின் தேவ்பந்தி வஹாபிகளின் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடப்பட்டது .
286 or 268 which figure is correct ?
ReplyDeleteIn 4th Para 268 is mentioned "சங்கைக்குரிய 268 உலமாக்கள் “அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா” என்ற தலைப்பில் ........."
In 5th Para 286 is mentioned "286 முப்திகளின் பட்டியலில் பிராங் மஹால்,ராம்பூர்,சிந்த், ஹைதராபத்,சூரத்,டில்லி,ஆக்ரா போன்ற நகரங்களின் முப்திகளும் அடங்குவர் ."
தவறுக்கு வருந்துகிறோம் . 268 என்பதே சரி . பதிவில் திருத்தம் செய்துள்ளோம் .
ReplyDeleteஎல்லா நன்மையும் அல்லாஹு தஆலாவின் புறமிருந்து வருகின்றன ,
பிழைகள் அனைத்தும் இந்த சிறியோனின் விளைவுகளால் ஏற்படுகின்றன .