Thursday 5 June 2014

மதாரிஜுன் நுபுவ்வா வில் தேவ்பந்திகளின் மோசடிகள்


           ஷைக் அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) [இறப்பு 1052 ஹிஜ்ரி]  இந்திய துணை கண்டம் இந்நாள் வரை உருவாக்கிய மிக பெரிய இஸ்லாமிய அறிஞர்களுள்  ஒருவர்.அவர் தான் முதன் முதலில் இந்திய துணை கண்டத்தில் ஹதீஸ் கலையின் போதனைகளை நிறுவியவர்.

இந்திய துணை கண்டத்தை சார்ந்த சில  முஹத்தித்தீன்களுக்கு  ஷாஹ்  அப்துல் ஹக் அவர்களுக்கு முன்பு அரபு அறிஞர்களிடம் இருந்து  ஹதீஸ் அறிவிக்க இஜாஸா(அனுமதி) இருந்தது, ஆனால் அந்த அறிஞர்கள் ஹதீஸ் கற்பிக்க எந்த மதராஸாவும் ஆரம்பிக்க வில்லை அல்லது திட்டமிட்ட போதனை முறைகளை தொடங்கியதும் இல்லை.ஷாஹ் அப்துல் ஹக் அவர்களின் முப்பாட்டனார் புகாராவில் இருந்து இந்தியாவின் தில்லிக்கு புலம் பெயர்ந்தார்.

அவர் ஒரு முஹக்கிக் (அராய்ச்சியாளர் ) ,தம் வாழ்க்கை முழுவதும் பழமையான இஸ்லாமிய கையெழுத்து பிரதிகளை கற்பித்தும் ,படித்தும் வந்தார்.அவர் எழுதிய பல நூற்களில் மதாரிஜுன் நுபுவ்வத் மிகவும் பிரசித்தி பெற்றது.அது செய்யதுல் அன்பியா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் அவர்களின் சுயசரிதை. அதன் மூல பிரதி பார்ஸியில் எழுதப்பட்டது .

பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு தேவ்பந்தி அறிஞரான சயீதுர் ரஹ்மான் அலவீ என்பவர் இந்த நூலை சமீபத்தில் உர்துவில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதன் பதிப்பாளர்கள் மக்தபா ரஹ்மானியா,உர்து பஜார்,லாகூர், பாகிஸ்தான்.

இந்த தேவ்பந்தி அறிஞர் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் காலம் காலமாக செய்து வரும் மோசடியை அரங்கேற்றினார். தனது தேவ்பந்தி வஹாபிய கொள்கைக்கு மாற்றமான பகுதிகளை திரித்து மொழிபெயர்த்தார்.

அல்லாமா முப்தி முஹம்மத் அப்பாஸ் அவர்கள் இந்த பதிப்பில் உள்ள மோசடிகளை வெளிப்படுத்தினார்
.
மோசடி 1

     ஷெய்கு முஹக்கிக் அவர்கள் ' வ ஹுவ பி குல்லி ஷையின் அலீம் ' என்பதை விளக்கும் போது எழுதுகிறார்கள் " பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் அருளப்பட்டது,எல்லா படைப்பினங்களின் ஞானமும் இன்னும் இறுதி நாளின் ஞானமும் "

தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் ஷெய்கு முஹக்கிக் அவர்களின் இந்த வாக்கியத்தை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார்.      

மேலும் ஷெய்கு முஹக்கிக் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்வரும் சொற்பதங்களை பயன்படுத்தி இருக்கிறார் .
"நபிமார்களின் தலைவரும்,உஸ்தாத் ஏ குல்,முதன்மையானதையும் இருதியானதையும் நன்கறிந்தவரும்,மழார் ஹசன் வ ஜமால் "

இந்த வாக்கியம் தேவ்பந்தி வாஹாபிகளின் கொள்கைக்கு முரணானவையாதலால் தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதையும் எழுதவில்லை ,தவிர்த்திருக்கிறார்.  

மோசடி 2
        
ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் "அவ்வலூ மா ஹலக் வா நூரி " அதோடு எழுதுகிறார்கள் " அல்லாஹ் முதன் முதலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நூரை படைத்தான் " .

தேவ்பந்தி மௌலவி [வால்யும் 2,பக்கம் 11] ல் ஷெய்கு முஹக்கிக் அவர்களின் விளக்கத்தை கொடுக்கவில்லை ,இன்னும்  [வால்யும் 1,பக்கம் 71] விளக்கம் கொடுக்கும் போது தனது சுய விளக்கத்தை அடைப்புக் குறியில் கொடுத்து எழுதுகிறார் " நுபுவத்தின் ஒளியையும் ,வழிகாட்டுதலையும் " என்று .


மோசடி 3
 
ஷெய்கு முஹக்கிக் அவர்கள் துவைபாவின் ஹதீஸை மேற்கோளிட்டு , எழுதுகிறார்கள் " இந்த ஹதீதில் மீலாதுன் நபியை கொண்டாடுவோருக்கு சுப சோபனம் கூறப்படுகிறது  ".


எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேல் முஹப்பத் கொள்வது என்பது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்துக்கு அலர்ஜி ஆதலால், தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இந்த வாக்கியத்தை தமது மொழிபெயர்ப்பில் இருந்து அழித்து விட்டார் .

மோசடி 4

ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் " நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரிய வெளிச்சத்திலோ நிலவின் ஒளியிலோ நிழல் விழுந்தது இல்லை,இது விஷயமாக சவ்கான் அவர்கள் விவரித்துள்ளார்கள் மேலும் அல் ஹாகிம் அல் திர்மிதி அவர்களும் நவாதிர் அல் உசூல் லில் பதிவுசெய்துள்ளார்கள் "

 தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதை எழுதி பின்னர் தனது வஹாபிய கருத்தை இணைத்துள்ளார் "மேலும் உண்மை என்னவெனில் நபிகளாருக்கு நிழல் இருந்த்தது".

மோசடி 5

ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் " இன்னும் சிலரின் அறிவிப்பாகிறது ரோஜா மலர் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமான வியர்வையில் இருந்து உண்டாக்கப் பட்டது "

 தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதை எழுதி பின்னர் தனது கருத்தை இவ்வாறு எழுதியள்ளார்  " இவை நல்ல பேச்சாக இருக்கின்றன" 
(யே மஹஸ் குஷ் அகீதே கி பாத் ஹை )


மோசடி 6

ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் " பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறுநீர் குணப்படுத்தும் தன்மையுடையதாக உள்ளது என பல ஆதாரங்கள் உள்ளன "

 தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதை எழுதி பின்னர் தனது கருத்தை இவ்வாறு எழுதியள்ளார்  " இந்த போதனைகள் ஆன்மாவுக்கு எதிரானவை"
( லேகின் இன் சீசோ கோ பீனே பீலானே கி பாதேன் முகத்தஸ் தாலிமாத் கே முஸ்முஅயெ மீஜாஸ் அவுர் ரூஹ் கே கிளாப் ஹை )









    
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment