Monday 1 June 2015

மரணித்த பின் மீண்டு வந்து உதவும் தேவ்பந்தி மவ்லவி !

அர்வாஹே ஸலாசா ,பக்கம் 242 நூலில் (தேவ்பந்த் அறிஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ) உள்ள ஒரு சிறு சம்பவம் !

Arwahe Salasa,Page 242


மவ்லவி காஸிம் நானோத்வி அல் தேவ்பந்தி மரணித்த பின்பு தமது பூத உடலுடன் மீண்டு வந்து தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறார் .

" ஒரு நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் மவ்லவி ரபியுத்தீன் சாஹிப் தமது அறைக்கு (தேவபந்த் மதரசாவிற்கு உள் ) மவ்லவி மஹ்மூதுல் ஹசன்  சாஹிப் அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார் . மவ்லானா  மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அவ்வழைப்பை ஏற்று ,கதவை திறந்து உள்ளே நுழைந்தார் . அது ஒரு கடுமையான பனிக் காலம் .

மவ்லானா ரபீயுத்தீன் சாஹிப் தமது மேலங்கியை ஆய்வு செய்யுமாறு கூறினார் . மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அதை ஆராய்ந்த பொழுது அவரது மேலங்கி நனைந்திருக்க கண்டார் . மவ்லவி ரபியூத்தீன் சாஹிப் தற்பொழுது தான் மவ்லானா காசிம் நானோத்வி தமது பூத உடலுடன் (ஜசதே உன்சரீ ) தம்மை வந்து சந்தித்ததாகவும் ,அதைக் கண்டு தாம் பயந்து நடுங்கியதால் தமது மேலங்கி நனைந்து விட்டதாகவும் கூறினார் . மவ்லவி காசிம் நானோத்வி ,மவ்லானா மஹ்மூதுல் ஹசன் அவர்களுக்கு தாருல் உலூம் தேவ்பந்தின் ஆசிரியர்களுக்கு இடையில் நடைபெறும் உட் பூசல்களில் தலையிட வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள் . மவ்லவி மக்மூதுல் ஹசன் கூறினார் ,'ஹசரத் நான் உங்கள் கரம் பற்றி தவ்பா செய்கின்றேன் ,இனி இது விஷயத்தில் நான் எதுவும் பேச மாட்டேன் '. "

மேற்கூறிய சம்பவத்தில் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் உஸ்தாதான மவ்லவி காஸிம் நானோத்வி மரணித்து விட்ட பின்பும் மீண்டு வர இயலும் ,அதுவும் தனது பூத உடலுடன் ,தேவ்பந்தின் ஓர் உட்பூசலைத் தீர்க்க வேண்டி !!!!


எனினும் அகிலத்தாருக்கு அருட்கொடையான நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது புனித ரவ்ழா ஷரீபை விட்டு அகல இயலாது என்று பத்வா கொடுத்துள்ளனர் இந்த தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் !

குறிப்பாக மவ்லித் மஜ்லிஸ்களில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறிக்கும்  பைத் ஓதும் பொழுது எழுந்து நின்று (கியாமில்  ) சங்கை செய்வது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் நடைமுறை ,ஏனெனில் உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த சபையில்  ஹாழிர் ஆகின்றார்கள் என்பதினால் . இது அநேக வலிமார்களின் அனுபவத்தில் நிகழ்ந்துள்ளதாக வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளது .

ஆனால் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் இவையெல்லாம் இயலாது என்று மறுக்கின்றனர் .

இது பற்றிய தேவ்பந்தின் பத்வா பின்வருமாறு ,

Darul Uloom Deoband Fatwa



கோடிட்ட பகுதியில் பின்வருமாறு உள்ளது ,

' பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறை வாழ்வானது ,ஹயாதே பர்ஜக் , இந்த வாழ்க்கையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பயணிக்க இயலாது (ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ) '




Related Posts Plugin for WordPress, Blogger...