Thursday 27 November 2014

அல் முஹன்னத் - 1




     தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் அகாபிர் அல் முஹன்னத் நூலை ஏன் எழுதினார்கள் ?
                                            Al Muhannad

                    அல் முஹன்னத் அலா அல் முபன்னத் என்னும் நூல் அல் தஸ்திகத் லி தாப் அல் தல்பிஸாத் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நூல் இந்திய துணைக்கண்டத்தில் முதன்முதலில்  ஹிஜ்ரி 1325(1907)ல் வெளியிடப்பட்டது.

அல் முஹன்னத் எழுதப்பட்டதின் பிரதான நோக்கம் அரபுலகைச் சார்ந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களிடையே தேவ்பந்திகள் வஹ்ஹாபிகள் அல்ல என்று நிரூபணம் செய்வதற்கே !!!

 அல் முஹன்னத் மெளலவி கலீல் அஹ்மத் சஹரான்பூரி(மறைவு 1346 ஹிஜ்ரி/1927) என்ற தேவ்பந்திகளின் முன்னோடிகளால் மக்களை ஏமாற்றவும் ,தேவ்பந்திகளின் நூற்களில் உள்ளவற்றை மறைத்தும் எழுதப்பட்டது. அல் முஹன்னதைக் கொண்டு போலி பெருமை பேசும் தேவ்பந்திகள் அதில் கையொப்பமிட்ட அறிஞர்களின் பட்டியலை மட்டும் தான் தருவார்கள்.அவர்களிடம் எவ்வளவு கேட்டாலும் கேட்டாலும் அதில் கையொப்பமிட்ட அறிஞர்களின் கருத்துகளை நம்மிடம் காண்பிக்க வெட்கி மறுத்துவிடுவார்கள் .

இந்த நிலையை இங்கு காணுங்கள் 

இன்னும் தேவ்பந்திகள் அந்த நூலை அதன் மூல வடிவத்தில் எவ்வாறு அரபுலக இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் சமர்ப்பிக்கப் பட்டதோ அவ்வாறே மக்களிடையே சமர்ப்பிக்க வேண்டும்,அதாவது அதன் கேள்வி,பதில் வடிவத்தில். அதன் மூலம் அனைவரும் உண்மையை அறிய முடியும் .
முதலில்,தேவ்பந்தி முன்னோடிகளில் ஒருவரான மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி தனது 'பதாவா ரஷீதியாவில்'      மெளலூது பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம் .

"எந்த மெளலித் சபைகள் ஷரீயத்திற்கு புறம்பான செயல்களை விட்டும் தூய்மையாக இருந்தாலும்,முன்னெச்சரிக்கை காரணமாக,மக்கள் அதில் கலந்து கொள்வது தற்காலத்தில் ஆகாத செயலாகும்   "   

கேள்வி :
      ஒரு மெளலித் சபையில் பலவீனமான அல்லது ஜோடிக்கப்பட்ட சம்பவங்களை விட்டும் விலக்கி  ஆதாரப்பூர்வமான சம்பவங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டு நடைபெற்றால் அதில் கலந்து கொள்வதற்கு அனுமதி உள்ளதா ?

பதில் :
இதில் கலந்து கொள்வதற்கு வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
[நூல் - பதாவா ரஷீதியா ,வால்யூம் 2,பக்கம் 131]

மெளலித் சபைகள் நடத்துவது எந்த நிலையிலும் அனுமதி இல்லை
[நூல்- பதாவா ரஷீதியா ,வால்யூம் 2,பக்கம் 96]


கேள்வி :
     வலிமார்களின் 'உரூஸ்' என்னும் கந்தூரி வைபவத்தில் குர்ஆன் மட்டுமே ஓதி இனிப்பு வழங்கப்பட்டால் அதில் கலந்து கொள்வதற்கு அனுமதி உள்ளதா ?

பதில்:
         எந்த உரூஸ்,மெளலித் மஜ்லீஸ்களிலும் கலந்து கொள்வதற்கு    அனுமதியில்லை  மேலும் எல்லாவிதமான உரூஸ்,மெளலித் மஜ்லீஸ்களும் அனுமதியல்லாதவையாகும். 
[நூல்- பதாவா ரஷீதியா ,வால்யூம் 3,பக்கம் 143]

        மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.


 [நூல் - பதாவா ரஷீதியா,பாகம் 2 பக்கம் 144 -150,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநேஹ்ரி மஸ்ஜித் டில்லி ,ஹிஜ்ரி 1352,1933ம்  வருட பதிப்பு ]

[நூல் - பதாவா ரஷீதியா ,பாகம் 3 பக்கம் 93,941 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநேஹ்ரி மஸ்ஜித் டில்லி ,ஹிஜ்ரி 1351,1932ம்  வருட பதிப்பு  ]

 
இனி அல் முஹன்னதில் உள்ள தேவ்பந்தி மோசடிகள் பின்வருமாறு
தேவ்பந்திகளின் இந்த பத்வாவை வாசித்த சுன்னத் வல் ஜமாஅத் அன்பர்களே,இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி அல் முஹன்னதில் எவ்வாறு உண்மைகளை உருக்குலைத்தார் என்று பார்ப்போம் .
அல் முஹன்னதில் உள்ள கேள்விகளைக் கேட்டது அரபு அறிஞர்கள் அல்ல என்பதை வாசகர்கள் நினைவில் கொள்க !!!

மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி தானே கேள்விகளைக் கேட்டு ,அதற்கு தேவ்பந்திகளின் நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் என்ன என்பதை தமது பதிலாக எழுதியுள்ளார் .

கேள்வி எண் 21: [அல் முஹன்னத் ]


      " நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் அது குற்றம்(கபீஹ்),பித்அத்,ஹராம் என்று  சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "

இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி கடுகளவு நேர்மையுடைய ஒரு தேவ்பந்தியாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்,

 " ஆமாம்,எங்களின் ஸ்தாபகர் இஸ்மாயில் திஹ்லவி இம்மாதிரியான கொண்டாட்டங்களை முஷ்ரிக்கான நடைமுறை என்கின்றார் .எங்களின் ஷைகு ரஷீத் அஹ்மத் அனைத்து மெளலித் வைபவங்களையும் அனுமதியில்லாதது என்று தனது நூல்களிலும்,பத்வாக்களிலும் கூறியுள்ளார்.நாமும் இம்மாதிரியான மெளலித் விழாக்கள் ஹிந்துக்கள் தங்களின் கடவுள் கிருஷ்ணனை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா போன்று என்று கூறியுள்ளோம் "(பதாவா ரஷீதியா ,பராஹீனே காத்தியா )

இந்த பதிலை கலீல் அஹமத் தனது அல் முஹன்னதில் எழுதியிருந்தால் எத்துணை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அதில் கையொப்பமிடுவார்கள் !!

ஆனால்,கலீல் அஹ்மத், வஹ்ஹாபி பித்னா எவ்வாறு அரபுலகில் வேகமாக பரவி வந்ததையும், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த சத்திய உலமாக்கள் அதை எதிர்த்து வந்ததையும் அறியும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார் .

கலீல் அஹ்மத் அல் முஹன்னதில் என்ன எழுதினார் என்று அறியும் முன் தேவ்பந்திகளின் மற்றொரு அறிஞரான அன்வர் ஷாஹ் காஷ்மீரி(இறப்பு 1933) மெளலித் பற்றி என்ன எழுதினார் என்று பார்ப்போம்
Anwar Shah Kashmiri

وأحدثه صوفي في عهد سلطان إربل سنة ( 600 ) ، ولم يكن له أصل من الشريعة الغراء
العرف الشذي شرح سنن الترمذي - (2 / 82 مؤسسة ضحى للنشر والتوزيع)
"அது சுல்தான் இப்ரில் காலத்தைச் சார்ந்த ஸூபி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இதற்கு நமது தூய்மையான ஷரீயத்தில் எந்த ஆதாரமும் இல்லை " 

இனி,மெளலானா கலீல் அஹமதுவின் பதில் அல் முஹன்னதில் என்ன என்பதைப் பார்ப்போம் .


"எந்த ஒரு முஸ்லீமுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் யாரும் பெருமானார் அவர்களின் செருப்பைப் பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியைப் பற்றி பேசுவதையோ கூட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் தொடர்புடைய எல்லா சம்பவங்களையும் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் பேசுவது அழகான ஒரு செயலாகும் இன்னும் எங்களிடத்தில் அது 'முஸ்தகப் '.அது பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியோ அல்லது அன்னாரின் கனவுகளைப் பற்றி பேசி பிறப்பைக் கொண்டாடுவது எங்களிடத்தில் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு செயலாகும்" .

ஆக கலீல் அஹ்மத் அரபுலகை சார்ந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்களை திருப்திபடுத்தும் பொருட்டு இந்த பதிலை அல் முஹன்னதில் எழுதினார் என்பது திண்ணம் .

மேலும் சில வரிகளுக்கு பின் அவர் எழுதுகிறார் ,

"நாம் பெருமானாரின் மெளலித் பற்றி பேசுவதற்கு எதிரானவர்கள் அல்லர் ,ஆனால் அதில் கலந்து விட்ட தவறான விஷயங்களுக்கு எதிர்ர்பாக உள்ளோம் .உதாரணமாக நீங்கள் இந்தியாவில் உள்ள மெளலித் மஜ்லிஸ்களில் ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் (மவ்து ) பேசப்படுகின்றன ,ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த சபைகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர் , மின்விளக்குகளும் தேவையற்ற வீண் விரயங்களும் நடைபெறுகின்றன,இதில் கலந்து கொள்வது  'வாஜிப்' என்று சொல்கின்றனர் ,கலந்து கொள்ளாதவர்களை விமர்சிக்கின்றனர் .இதுவெல்லாம் போக இன்னும் பல ஷரீயத்திற்கு மாற்றமான பல்வேறு விஷயங்கள் எல்லா மெளலித் மஜ்லீஸிலும் நீக்கமற நிறைந்துள்ளன ".

இது அல் முஹன்னதில் உள்ள  பொய்களின் முதல் ஆரம்பம் !

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த எந்த மார்க்க அறிஞரும் மெளலித் மஜ்லிஸை 'வாஜிப்'
என்று கூறியதும்  கிடையாது,அதில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து இருப்பதும் கிடையாது .இப்பொழுதும் இன்றைய நவீன யுகத்தில் பெருவாரியான மீலாத் விழாக்கள்  இரவில் நடைபெறும் பொழுது ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர் .காலையில் நடைபெறும் விழாக்களில் பல்வேறு உலமாப் பெருமக்களின் பயான்கள் நடைபெறுவதையும் கண்கூடாகப் பார்க்கின்றோம் .

அப்படியானால் சில நூறு ஆண்டுகள் முன் கலீல் அஹ்மத் கூறியது போல் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து இருப்பதை யோசித்துப் பாருங்கள் ???

இனி தேவ்பந்தின் ஒரு பத்வாவைக் காண்போம் .


Deoband on Milad

கேள்வி :

      " நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி கண்டிக்கத்தக்க(முஸ்தக்பாஹ்)  ஒன்று என்றும் அது தீய தடை செய்யப்பட்ட பித்அத்(அல் பித்அத் அல் ஸய்யியாஹ் அல் முஹர்ரமாஹ் ) என்று  சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "

[இது விஷயமாக ரஷீத் அஹ்மத் கங்கொகியும் ,அன்வர் ஷாஹ் கஷ்மீரியும் கூறியதை நினைவில் கொள்க ]

பதில் :

     "எந்த ஒரு முஸ்லீமும் கூறாத ஒன்றை நாங்கள் ஒரு போதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ மட்டுமல்ல ,இன்னும் பெருமானார் அவர்களின் புனித செருப்பில் கிளம்பும் தூசியோ  பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியின் சிறுநீரையோ  பற்றி பேசுவதையோ கூட ஷரீயத்தின் படி கண்டிக்கத்தக்க  ஒன்று என்றும் அது தீய தடை செய்யப்பட்ட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் குறைந்த அளவு தொடர்புடைய சம்பவங்களை பற்றி பேசுவது மிகவும் விரும்பத்தக்க பரிந்துரைக்கப்பட்ட செயல்(அஹப் அல் மன்துபத் ) இன்னும் அது மிகப் பெரும் விரும்பத்தக்க செயலாகும்(அலா அல் முஸ்தஹப்பத் ).

இன்னும் எங்களிடத்தில் பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நினைவு கூறுவதோ அல்லது அன்னாரின் புனித திருமுகத்தையோ,நடப்பது,நிற்பது,உட்காருவது,உறங்குவது அல்லது  அன்னாரின் புனித சிறுநீரைப் பற்றியோ  நினைவு கூறுவது என்பதானது எங்களின் தெளிவான ஆய்வு நூலான 'பராஹீனெ காத்தியா'வில் கூறியது  போன்றும் மற்றும் எங்களது பல்வேறு மஷாயிகுமார்களின் பத்வாக்களில் உள்ளது போன்றும் ,உதாரணத்திற்கு மவ்லானா அஹ்மத் அலி அல் முஹத்தித் அல் சஹாரான்பூரி ஷாஹ் முஹம்மது இஷாக் திஹ்லவியின் மாணவர் மற்றும் முஹாஜிர் மக்கி அவர்களது பத்வாவை நாம் எங்கு குறிப்பிடுகின்றோம் ,இதன் மூலம் இவை இது விஷயமாக உள்ள எங்களது பிற பத்வாகளுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகும் .

அவர்களிடத்தில் மீலாத் விழாவைக் குறித்து கேட்கப்பட்டது  ,இது எந்த முறையில் அனுமதிக்கப் பட்டது எந்த முறையில் அனுமதி  இல்லை  என்று ?

அவர்கள் பின்வருமாறு பதில் உரைத்தார்கள் ,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித பிறப்பை வலுவான ஆதாரங்களைக் கொண்டும் ,கடமையான வழிபாடுகள் அல்லாத 
காலங்களிலும்,ஸஹாபிகளின் வழிமுறைக்கு மாற்றமில்லாத்தும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று தலைமுறைகளைச் சார்ந்த ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமில்லாத்தும்,ஷிர்க் பித்அத் போன்றவற்றை விட்டு அகன்றதும்,  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் கூற்றான "நானும் என் தோழர்களும் உள்ளது போல்" என்பதற்கு ஆதரமாக விளங்கிய ஸஹாபிகளின் நடைமுறைகளுக்கு எதிராகவும் இல்லாமல் ,ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகிய 
மஜ்லிஸில்  நினைவு  கூறுவது,  நன்மைகளும் பரக்கதுகளும்  அடைய ஒரு காரணமாகும்.

மேலும் இதை நடத்த உள்ள ஓர் நிபந்தனை இந்த மஜ்லிஸை தூய எண்ணத்துடனும் ,நேர்மையுடனும்    மேலும் இவை முழுமையான நல்ல நினைவுகூர்தலில் உள்ளடக்கியது என்று நம்பிக்கை கொள்ளுதல் 
(ஜும்லாத் அல்  அத்கர் அல் ஹஸனஹ் அல் மந்தூபஹ் ), மேலும் குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு தடையில்லாமல் இருத்தல் .இவ்வாறு இருக்கும் பொழுது இத்தகைய ஒரு மெளலித் மஜ்லீஸை சட்டவிரோதம் (கைர் மஷ்ரூ ) என்றோ பித் அத் என்றோ எந்த முஸ்லிமும் கூற முடியாது .

பத்வா முடிவுற்றது .

இதைக் கொண்டு நாங்கள் மீலாத் விழாவை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை ,மாறாக இத்தகைய மெளலித் மஜ்லீஸுகளில் நடைபெறும் அருவருப்பான செயல்களையே,நீங்கள் இந்தியாவில் காண்பது போல் ,ழயீபான அல்லது மோசடியான நிகழ்ச்சிகளைக் பயான்களில்  கூறுவது ,
ஆண்பெண் இருபாலாரும் மறைவின்றி கலத்தல் ,ஆடம்பரமாக விளக்குகளைக் 
கொண்டு அலங்கரித்தல் ,இவை கடமையானது என்று நம்பிக்கை கொள்ளுதல் ,இத்தகைய மஜ்லிஸில் கலந்து கொள்ளாதவர்களை இழிவுபடுத்துதல் ,அவமதித்தல் ,பெரும்பாலும் ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகியிருக்காத  மஜ்லிஸ்   ஆகியவற்றையே   நாம் பகிரங்கமாகக் கண்டிக்கின்றோம் .

அவற்றிக்கு மற்றாக ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகிய
மஜ்லிஸில் நினைவு கூறுவதை நாம் அருவருப்பு என்றோ  பித்அத் என்றோ கூறவில்லை .
எப்படி இந்த அசிங்கமான நம்பிக்கையை  ஒரு முஸ்லீமைக்  கொண்டு சந்தேகிக்கப்படும் ?எனவே இந்த பண்புகளை எங்களிடத்தில் சாற்றியவர்கள் ஏமாற்றும் பொய் சிந்தனையாளர்களின் கண்டுபிடிப்புகள்  ( அல்லாஹ் உயர்வான அந்த ரப்பு அவர்களை இழிவுபடுத்துவானாக,இன்னும் கடலிலும் நிலத்திலும் ,மென்மையான மற்றும் கடினமான நிலத்தில் அவர்களை சபிப்பானாக )

[ நூல் - அல் முஹன்னத் அலா அல்  முபன்னத் யானி அகாயிதே உலமாயே அஹ்லுஸ் ஸுன்னாஹ் தேவ்பந்த் ,பக்கம் 60-63 ]

மெளலிதுக்கு எதிரானவர்கள் ,அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த முஸ்லிம்களை அறியாமையில் இருப்பதாக
பிதற்றுகிறார்கள் .
செளத் ஆப்ரிக்காவில் உள்ள வஹாபிகள் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் பின்வருமாறு கூறியுள்ளனர் ,இந்தியாவில் மெளலித் மஜ்லீஸ் நடைபெறும் பொழுது திரைக்கு பின்னால் ஒரு பெண்,தன் மடியில்  குழந்தையுடன் அமர்ந்திருப்பால் ,சிறிது நேரத்தில் குழந்தையைக் கிள்ளும் போது அதன் அழுகுரலைக் கேட்டு மக்கள் கியாமில் எழுந்து நிற்பர் .அதாவது பெருமானாரின் பிறப்பை குறிப்பதாக எண்ணிக் கொண்டு .

வாசகர்களே இது ஒரு கடைத்தெடுந்த பொய் ,இந்த கூற்றைக் கூறியவர் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்படுவது நிதர்சனம் .
இந்த வஹாபிகள் சுன்னத் வல் ஜமாத்தினரை எந்த அளவு வெறுக்கின்றனர் என்றால் தமது விருப்பத்தை நிறைவேற்ற இந்த அளவுக்கு பொய் புரட்டுகளை புனைவர் .

இது அல் முஹன்னதில் உள்ள ஒரு கேள்விக்கான பதில் தான் ( கேள்வி எண் 21).

ஏனைய பிற கெள்வி பதில்களும் இம்மாதிரியான பொய் புரட்டுகளால் நிரம்பியது தான் .

அல் முஹன்னதின் மூல பிரதியை வாங்கி படியுங்கள் ,அப்பொழுது தெரியும் இவர்களின் கொள்கைகளுக்கும் அல் முஹன்னதிலும் உள்ள வேறுபாடுகள் !!!



Related Posts Plugin for WordPress, Blogger...

Monday 10 November 2014

ஹுஸாமுல் ஹரமைன்


           வடஇந்தியாவில் அஃலா  ஹஜ்ரத் என்று அழைக்கப்படும் இமாமே அஹ்லுஸ் சுன்னத் இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி )  [1856-1921] அவர்கள் அரபியில் 'ஹுஸாம் அல் ஹரமைன் அலா முன்ஹிர் குப்ர் வல் மைன்' என்னும்  சத்திய சன்மார்க்கத்தை பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆய்வு நூலை எழுதினார்கள்.

Hussam al Haramain Fatwa
 

           இந்தியாவில் 1857ல் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்க்கை சீரழிந்த பொழுது அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மார்க்கத்தை பிளவுவடுத்தும் சதியில் பல இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு எதிரான இயக்கங்கள் தோன்றின . இவற்றின் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிடத்தக்க இஸ்லாமிய உலமாக்கள் சிலர் முஸ்லிம் மக்களிடையே இவற்றை பிரபலபடுத்த முக்கியப் பங்காற்றினர்.
அத்தகைய உலமாக்கள் அறிவிளிகலாகவும் ,உலக இன்பங்களுக்கு சோடை போனவர்களாகவும் இருந்தனர். பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியவர்களாக, அவர்களின் இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு எதிரான அந்த வழிகெட்ட கொள்கையை  பிரபல்யபடுத்த அவர்களின் ஆதரவை நாடியது.

      இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி )  அவர்கள் இத்தகையோரின் வழிகேடுக்கு எதிராக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையில் சிறிதும் சமரசம் செய்யாமல் பல்வேறு நூற்களை ஆதாரப்பூர்வமாக எழுதினார்கள் .

       மெளலவி முஹம்மது இஸ்மாயில் திஹ்லவி எழுதிய நூலான 'தக்வியத்துள் ஈமான்' முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி எழுதி நூலான 'கிதாபுத் தொளஹீத்' என்பதை ஒட்டி எழுதப்பட்டது.இந்த நூலில் இஸ்மாயில் திஹ்லவி வேண்டுமென்றே ரிஸாலத்தையும் ,பெருமானார் அவர்கள் காத்தமுன் நபி என்பதை வேண்டுமென்று புறக்கணித்து எழுதியுள்ளார் .

இதன் பின் 1874ல் தேவ்பந்த் மதரசாவைச் சார்ந்த மெளலவி காசிம் நானுத்வி 'தஹ்தீருன் நாஸ்' என்னும் நூலை எழுதினார்.அதைப் போலவே 1887ல் மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி 'பராஹீனே காத்தியா' என்னும் நூலை எழுதினார். பின்னர் 1901ல் மெளலவி அஷ்ரப்   அலி தானவி 'ஹிப்ழுள் ஈமான்' என்னும் நூலை எழுதினார். மெளலவி ரஷீத் அஹமத் கங்கொஹியும் 'பதாவா ரஷீதியா' என்னும் விரிவான நூலை எழுதினார் . இந்த வரிசையில் குலாம் அஹ்மத் காதியானி எழுதிய 'குத்பத் ஏ குலாமியா'  மற்றும் பல நூற்களில் தன்னை நபி என்று வாதிட்ட நூற்களும் சேரும் .இந்த எழுத்துக்கள் எல்லாம் இஸ்லாமிய கோட்பாடுகளின் அடித்தளத்தை அழிக்க முனைகிறது .

    உண்மையில் இமாம் அஹ்மத் ரிழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி
 இந்த துரோகங்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க தன்னை அர்ப்பணிக்கத்தார்கள் மற்றும்
உண்மையான இஸ்லாமியக் கொள்கைகளுக்கு ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பபை தமது மறுப்புக்களிலும்,நூற்களிலும் வழங்கினார். 1905ல் தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்ற ஹிஜாஸ் சென்ற இமாம் அவர்கள் சங்கைக்குரிய மக்கா,மதீனாவைச் சார்ந்த உலமாக்களிடம் 'அல் முதாமத் அல் முஸ்தனத்' என்ற ஒரு வரைவு ஆவணத்தை ஹிஜ்ரி 1323ல் வழங்கினார்கள் .   இமாம் அஹ்மத் ரிழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜாஸ் உலமாக்களின்  அறிவார்ந்த கருத்துக்களைச்  சேகரித்து  அவற்றை சுருக்கமாகத் தொகுத்து அரபு மொழியில் 'ஹுஸாமுல் ஹரமைன்' என்று தலைப்பிட்டார்கள். 

   இந்த தொகுப்பு சங்கைக்குரிய ஹிஜாஸ் மாகாணத்தின் 33 உலமாக்களின் (20 பேர் மக்காவைச் சார்ந்தவர்கள் ,13 பேர் மதீனாவைச் சார்ந்தவர்கள்) தீர்ப்புகளை உள்ளடக்கியது.அவர்கள் அனைவரும் தமது தீர்ப்புகளை இந்த பிரிவுகள் அனைத்தும் நிராகரிப்புக்கு வழிவகுக்கும் என்ற ஒருமித்தகருத்தின் அடிப்படையில் கொடுத்தார்கள். தேர்ச்சிபெற்ற அந்த தகுதிவாய்ந்த மக்கா,மதீனாவின் உலமாக்கள் மிகக் கவனத்துடன் பார்வையிட்டு மேற்கண்டபடி மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி மற்றும் மேற்குறிப்பிட்ட தெவ்பந்தீய தப்லீக் உலமாக்களை இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்கள் என்று பத்வா வெளியிட்டனர் .

    அதுமட்டுமின்றி அன்று இருந்த இஸ்லாமிய அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்தவர்களை மேற்படி நபர்களை ஷரீயத்தின் படி தண்டிக்கவும் குற்றஞ்சுமத்தி தண்டிக்கவும் அறிவுறுத்தினார். இந்தியா திரும்பிய பின் இந்த பத்வா ஹிஜ்ரி 1324ல் 'ஹுஸாம் அல் ஹரமைன் அலா முன்ஹிர் குப்ர் வல் மைன்'  என்று வெளியிடப்பட்டது .

       வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பத்வா அரபியிலும்,உர்துவில் அன்னாரின் மருமகனும் ,கலீபாபும் ஆன மெளலவி ஹஸ்னைன் ரிழா கான் பரேல்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டும் இந்தியாவில் வெளியிடப்பட்டது . 

                       1906ல் ஹுஸாமுல் ஹரமைன் வெளிவந்த பொழுது அப்பொழுது இஸ்லாமிய ஆட்சி புரிந்து வந்த உஸ்மானியப் பேரரசு தனது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது  . சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் உஸ்மானி (1842-1918AD/1258-1336AH) அப்பொழுதைய ஆட்சியாளர் , மக்காவின் ஆளுநராக செய்யத் அலி பாஷா பின் அப்துல்லாஹ் அபு அவ்ன் [இறப்பு 1991] ,அவரைத் தான் இமாம் அஹ்மத் ரிழா கான் சந்தித்தார் . மதீனாவின் ஆளுனராக இருந்தவர் சமி பாஷா பாரூக்கி .

                      1916/1334ல் உஸ்மானியப் பேரரசு வீழ்ந்தது ,அதன் பின் மக்காவின் உஸ்மானியப் பேரரசின் ஆளுனராக இருந்த செய்யத் ஹுசைன் பின் அலி ஹாஷிமி (1854-1931AD/1270-1350AH) சுதந்திரப் பிரகடனம் செய்து தனது ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசத்தை மம்லகாத் ஏ ஹாஷிமியா ஹிஜாஸ் என்று நிறுவினார் . இவர்தான் தற்பொழுதைய ஜோர்தானிய மன்னர் இரண்டாம் செய்யத் அப்துல்லாஹ் வின் மூதாதையர் .
1924/1343ல் நஜ்தைச் சார்ந்த அல் சவூத் இந்த ஹாஷிமிய அரசை கைப்பற்றி சவூதி அரேபியா என்று இணைத்தார் .இன்று வரை இந்த நிலையே நீடிக்கிறது .

33 உலமாக்களின் பெயர் விபரம் பின்வருமாறு :

1. அஷ்ஷைகு முஹம்மது சயீது பின் முஹம்மது ஸலாம் பா புஸைல் , மக்கா முகர்ரமாவின் ஷாபிஈ முப்தி , (1829-1912AD/1245-1330AH).

2.  அஷ்ஷைகு  அஹ்மத் பின் அப்துல்லாஹ் அபுல் கைர் மீற்தாத் , ஷைகுல் குத்பா மஸ்ஜிதுல் ஹரம்,(1843-1916AD/1259-1335AH) .

 3. அஷ்ஷைகு  முஹம்மது ஸாலிஹ் பின் சாதிக் கமால், ஹனபி முப்தி,மக்கா முகர்ரமா, (1847-1914AD/1263-1332AH).

4. அஷ்ஷைகு  அலி பின் சாதிக் கமால், முதர்ரிஸ் ஹரம் ஷரீப்,காஜி ஜித்தா,மக்கா முகர்ரமா (1837-1917AD/1253-1335AH).

5.அஷ்ஷைகு  மெளலானா ஷாஹ் முஹம்மது அப்துல் ஹக் அலஹாபாதி முஹாஜிர் மக்கி, மக்கா முகர்ரமா (1836-1915AD/1252-1333AH).

6.அஷ்ஷைகு  செய்யத் முஹம்மத் மர்ஸூகி அபூ ஹுசைன் பின் அப்துர் ரஹ்மான் ஹுசைனி,நாயிப் காஜி,மக்கா முகர்ரமா,
 (1867-1946AD/1284-1365AH).       
 
7. அஷ்ஷைகு  உமர் பின் அபூபக்கர் பாஜுனைது, ஷாபிஈ முப்தி,மக்கா முகர்ரமா,(1857-1935AD/1274-1354AH).

8. அஷ்ஷைகு  முஹம்மது ஆபிதீன் பின் ஹுசைன் மாலிகி , மாலிகி முப்தி, மக்கா முகர்ரமா,(1859-1923AD/1275-1341AH).

9.அஷ்ஷைகு  முஹம்மது அலி பின் ஹுசைன் மாலிகி ,மாலிகி முப்தி, மக்கா முகர்ரமா,(1870-1948AD/1287-1367AH).

10. அஷ்ஷைகு  முஹம்மது ஜமால் பின் முஹம்மது அமீர் பின் ஹுசைன் மாலிகி ,மக்கா முகர்ரமா ,(1868-1930AD/1285-1349AH).

11. அஷ்ஷைகு  அஸ்அத் பின் அஹ்மத்,முதர்ரிஸ் தரம் ஷரீப்,மக்கா முகர்ரமா ,(1863-1919AD/1280-1338AH).

12. அஷ்ஷைகு  அப்துர்ரஹ்மான் பின் அஹ்மத்,மத்ரசா ஸல்வாதியா தலைமை உலமாக்களில் ஒருவர், மக்கா முகர்ரமா ,(1866-1918/1283-1337AH).

13. அஷ்ஷைகு மெளலானா அஹ்மத் பின் முஹம்மது ஜியாவுத்தீன் பெங்காலி காதிரி ஜிஸ்தி,முதர்ரிஸ் ஹரம் ஷரீப்,மத்ரஸா அஹ்மதியா ,மக்கா முகர்ரமா .

14. அஷ்ஷைகு முஹம்மத் பின் யூசுப் கியாத்,நிறுவனர் மத்ரசா கியாத் கைரியா,மக்கா முகர்ரமா .

15.அஷ்ஷைகு முஹம்மது ஸாலெஹ் பின் முஹம்மத் பா பஸல்,மக்கா முகர்ரமா ,(1860-1914AD/1277-1333AH).

16. அஷ்ஷைகு அப்துல்கரீம் பின் ஹம்ஸா தாகிஸ்தானி ஹாஷ்மி நஜி,முதர்ரிஸ் ஹரம் ஷரீப் மத்ரசா தாவூதியா,மக்கா முகர்ரமா ,(1851-1920AD/1267-1338AH).

17. அஷ்ஷைகு முஹம்மது ஸயீது பின் முஹம்மது யமனி,ஷாபியீ இமாம் மற்றும் முதர்ரிஸ் ஹரம் ஷரீப் ,மக்கா முகர்ரமா ,(1854-1936AD/1270-1354AH).

18. அஷ்ஷைகு முஹம்மது ஹாமித் பின் அஹ்மத் பின் அவ்ஸ் ஜதவி,முதர்ரிஸ் ஹரம் ஷரீப் ,மக்கா முகர்ரமா ,(1860-1923AD/1277-1342AH)   .

19. அஷ்ஷைகு உத்மான் பின் அப்துஸ்ஸலாம் தாகிஸ்தானி,முதர்ரிஸ் மற்றும் கதீப் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1853-1907AD/1269-1325AH).

20.  அஷ்ஷைகு செய்யித் முஹம்மத் சயீத் பின் முஹம்மது மக்ரீபி,மாலிகி முப்தி  மற்றும் முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா.

21. அஷ்ஷைகு முஹம்மது பின் அஹ்மத் உமரி வஸ்தி,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1863-1946AD/1280-1365AH)       .

22. அஷ்ஷைகு செய்யித் அப்பாஸ் பின் முஹம்மத் ரிழ்வான்,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1877-1928AD/1293-1346AH).

23. அஷ்ஷைகு உமர் பின் ஹம்தான் மஹ்ரிஸி,பேராசிரியர் மத்ரஸா ஸல்வாதியா மற்றும் மத்ரஸா பழாஹ் ஏ மக்கா மற்றும் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1875-1949AD/1291-1368AH). 

24. அஷ்ஷைகு செய்யித் அஹ்மத் பின் இஸ்மாயில் பர்சான்ஜி ,ஷாபியீ முப்தி,இமாம் கதீப் மற்றும் முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா, (1843-1916AD/1259-1335AH).

25. அஷ்ஷைகு அப்துல் காதிர் தெளபீக் ஷல்பி,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1878-1950AD/1295-1369AH).

26. அஷ்ஷைகு செய்யித் இஸ்மாயில் பின் கலீல்,தலைமை பதிப்பாளர்,மக்தபா ஹரம் ஷரீப்,மக்கா முகர்ரமா, (இறப்பு .1911AD/1329AH)  .

27.அஷ்ஷைகு முஹம்மது யூசுப் ஆப்கானி,முதர்ரிஸ் மத்ரஸா ஸல்வாதியா,மக்கா முகர்ரமா.

28. அஷ்ஷைகு  முஹம்மது தாஜுத்தீன் பின் முஸ்தபா இல்யாஸ்,முப்தி அஹ்னாப், மதீனா முனவ்வரா.

29. அஷ்ஷைகு செய்யித் அஹ்மத் அல் ஜஸைரி,மாலிகி முப்தி, மதீனா முனவ்வரா.

30. அஷ்ஷைகு கலீல் பின் இப்ராஹீம் கர்தூபி,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா.

31. அஷ்ஷைகு செய்யித் முஹம்மத் பின் முஹம்மத் ஹபீப் திதாவி,மதீனா முனவ்வரா.

32. அஷ்ஷைகு முஹம்மத் பின் முஹம்மத் சோசி கியாரி,முதர்ரிஸ்,மதீனா முனவ்வரா.

33. அஷ்ஷைகு முஹம்மத் உஸைர் வஸீர்,மதீனா முனவ்வரா.

பத்வாவை ஆன்லைனில் வாசிக்க மற்றும்  பதிவிறக்கம் செய்ய :-


அரபியில்            https://archive.org/details/HussamulHaramainArabic                  

தமிழில்                https://archive.org/details/HusaamulHaramainFatwaTamil

உர்துவில்            https://archive.org/details/HussamulHaramainFatwaUrdu

ஆங்கிலத்தில்   https://archive.org/details/HussamUlHaramainEnglish

      
  

 
Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 4 November 2014

கப்ரின் மண்ணின் மூலம் உதவி தேடுதல்

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் அவர்களின் மூலமாகவோ அல்லது இறைநேசர்களின் மூலமோ ஒரு முஸ்லிம் உதவி தேடினால் அதைப் பற்றிய  தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கை


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,

எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால் குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் . [நூல்- தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "

[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 

இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் முன்னோடிகளில் ஒருவரான மெளலவி அஷ்ரப் அலி தானவி தனது நூலான அர்வாஹே ஸலாசா வில் பின்வருமாறு எழுதுகிறார் ,

Arwahe Salasa

Arwahe Salasa PAGE NO. 322-323



" மெளலானா மொய்னுத்தீன் சாஹிப் அவர்கள் மெளாலானா யாகூப் சாஹிப் அவர்களின் மூத்த மகன் ஆவார் . அவர் என்னிடம் மெளாலானா யாகூப் சாஹிப் அவர்கள் இறந்த பின் நடந்த ஒரு கராமத்தை கூறினார் . அவர் கூறினார் ,ஒரு பனிக் காலத்தின் போது நானோத் நகரைச் சார்ந்த மிக அதிகமான மக்கள் ஒரு வகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் . யாரெல்லாம் மெளலானா (யாகூப்) அவர்களின் கபுரில் இருந்து மண் எடுத்து (தமது உடலில் )கட்டினார்களோ அவர்கள் எல்லாம் குணமடைந்தனர்[மிட்டீ லே ஜாகர் பாந்த் லேதா உஸே ஹீ ஆராம் ஹோ ஜாதா  ] .

மக்கள் கபுரில் இருந்து எந்த அளவு மண் எடுக்க ஆரம்பித்தார்கள் என்றால் ,நான் ஒவ்வுருமுறை மண் கொண்டு வந்து நிரப்பும் பொழுதும் அது உடனே கபுரில் இருந்து எடுக்கப் பட்டுவிடும் .நான் கபுரில் மீண்டும் மீண்டும் வந்து மண்ணால் நிரப்புவதைக் கொண்டு வெறுத்துவிட்டேன் . எனவே நான் அவரின் கபுருக்கு சென்று கூறினேன் , 'நீங்கள் இந்த கராமத்தை நிகழ்த்துகின்றீர்கள் ,நானோ இதனால் துன்பத்தில் உள்ளேன் . நினைவில் கொள்ளுங்கள் இனி யாராகிலும் மண் எடுத்துச் சென்று குணமடைந்தால் நான் உங்கள் கபுரை இப்படியே விட்டு விடுவேன் . அதன் பின் மக்கள் உங்கள் கப்ரின் மீது தங்கள் செருப்புகளால் நடந்து செல்லக் கூடும் . அதன் பின்னர் யாருக்கும் கபுரின் மண் மூலம் குணம் அடையவில்லை "

[ நூல் - அர்வாஹே ஸலாசா ,பக்கம் 322-323,அஷ்ரப் அலி தானவி ]

மெளலானா முஹம்மது யாகூப் [ஹிஜ்ரி 1283/1866 ] தேவ்பந்த் வந்து அதன் நாஜிர் ஆக இருந்தவர் . மெளலவி அஷ்ரப் அலி தான்வி,மெளலவி  மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி ,மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி போன்றோர் இவரிடம் பயின்ற மாணவர்கள் .

என்னே தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் முரண்பாடு !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Monday 3 November 2014

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கலிமா

அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,

" லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவதால் எந்த கேடும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35,சபர் மாதம் 1336 ஹிஜ்ரி ,ரூதத் ஏ முனாஜிரா கேயா,அல் புர்கான் வால்யூம் 3,பக்கம் 85 ]

"லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் ஷரீயத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லை "
Al Imdaad

Risala al Imdaad ,page 35,Safar 1336

[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35, சபர் 1336, பதிப்பாளர்கள் இம்தாத் உல் மதாபே தானாபவன் ]

அறிவார்ந்த இஸ்லாமிய சமூகமே இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் வெளிரங்க அமல்களைக் கண்டு உங்கள் ஈமானை இழந்து விடாதீர் .

அவர்கள் நோக்கம் என்ன என்பதை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாசே கூறுகிறார் ," எனது கருத்துகளை எவரும் விளங்கிக் கொள்ளவில்லை.ஜனங்கள் நினைகிறார்கள் .இது தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று.நான் சத்தியமாக சொல்கிறேன் .இது ஒரு போதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கமல்ல.மாறாக ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவதே இதன் நோக்கம் "
[ நூல் : தீனி தஃவத் ,பக்கம் -234 ]


இனி இவர்களின் முழுத்திட்டத்தை மௌலவி இல்யாஸ் இவ்வாறு கூருகிறார் ,
"ஹஜ்ரத் மௌலானா அஷ்ரப் அலி தானவி அவர்கள் மிகப்பெரிய வேலை செய்திருக்கின்றார்கள் ,எனது மனம் விரும்புகிறது .கல்வி ,ஞானபோதனை அவர்களுடையதாகவும் ,தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்கட்டும் .ஏனேனில் இவ்வாறு அவர்களுடைய (அஷ்ரப் அலி தானவியுடைய) போதனை விரிவாகி விடும் ."
[நூல்:மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -71,72]

மேலும் இவர்கள் தானவியுடைய வஹ்ஹாபிய கொள்கைகளை வெளிப்படுத்தாது ,மறைமுகமாகவும் ,தந்திரமாகவும் போதிக்கின்றனர் என்பதையும் மௌலவி இல்யாஸ் பின்வருமாறு கூறுகின்றார் .
" பொது மக்களிடம் இது விஷயம் கூறலாகாது .எங்கு அவசியமோ அங்கு நமது இரகசியங்களையும் ,நோக்கங்களையும் விளக்குவது பாதகமில்லை "
[ நூல்: மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -72]


இத்தகைய வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம்மை அவன் ஹபீபின் பொருட்டால் காப்பானாக !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 1 November 2014

ஷரஹ் அல் ஷிபாவில் தேவ்பந்திகளின் மோசடிகள்

இமாம் முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி [இறப்பு ஹிஜ்ரி- 1014] அவர்கள் எழுதுகிறார்கள் ,

"  வீட்டில் யாரும் இல்லை என்றால் 'அஸ்ஸலாமு அலா அல் நபிய்யி வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு ' என்று கூறுங்கள் ,ஏனெனில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ரூஹ் என்னும் ஆன்மா முஸ்லிம்களின் வீட்டில் உள்ளது ( ஐ லி அன்ன ரூஹஹு அல் ஸலாமுன் ஹாழிருன் பி புயூத்தி அஹ்லல் இஸ்லாம் ) "

[நூல்- ஷரஹ் அல் ஷிபா,வால்யூம் 2,பக்கம் 118,தாருல் குதூப் அல் இல்மியா ,லெபனான் ]
Sharah al- Shifa

Sharah al- Shifa, Vol.2, p.118

இமாமே அஹ்லுஸ் ஸுன்னாஹ் முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இந்த கூற்று தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் வஹாபிய கொள்கைக்கு எதிரானதால் ,தேவ்பந்திகளின் முதன்மையான மோசடியாளர் மௌலவி சர்பராஸ் சப்தார் கான் (குஜ்ரான்வலா,பாகிஸ்தான் ) அரபி வாசகத்தை உர்துவில் மொழிபெயர்க்கும் பொழுது எழுதுகிறார் ,

"கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ரூஹ் என்னும் ஆன்மா முஸ்லிம்களின் வீட்டில் உள்ளது என்று கருதி  'அஸ்ஸலாமு அலா அல் நபிய்யி வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு '  என்று கூறுவது (கூடாது),மாறாக 'அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்' என்று கூற வேண்டும் அதன் பொருள் எல்லா நபிமார்களும் ,மலக்குகளும்   "

[நூல்- முல்லா அலி காரி அவ்ர் மஸ்லா இல்ம் கைப் வ ஹாழிர் வ நாழிர்,பக்கம் 36,பதிப்பாளர்கள் மக்தபா சப்தாரியா ,குஜ்ரன்வாலா ,பாகிஸ்தான் ]
 
Mulla Ali al- Qari aur masla ilm ghayb wa hazir wa nazir

Mulla Ali al- Qari aur masla ilm ghayb wa hazir wa nazir, p.36



இந்த தேவ்பந்தி தப்லீக் மெளலவி அரபி வாசகத்தை மூல நூலில் உள்ளபடியே எழுதி ,மொழிபெயர்ப்பில் கூறுவது ஆகும் என்பதற்கு பதிலாக கூறுவது கூடாது என்று அடைப்புக்குறிக்குள் போட்டு அதன் அர்த்தத்தை முழுவதுமாக மாற்றியுள்ளார் !!!

இது மட்டும் தனது வஹாபிய கொள்கைக்கு போதாது என்று கருதிய காரணத்தால் தனது மற்றொரு நூலில் அரபி வாசகத்திலேயே மோசடி செய்துள்ளார் .

மெளலவி சர்பராஸ் கான் தேவ்பந்தி எழுதுகிறார் ,

" லா லி அன்ன ரூஹஹு அல் ஸலாமுன் ஹாழிருன் பி புயூத்தி அஹ்லல் இஸ்லாம் ,இதை இவ்வாறு மொழிபெயர்க்கிறார் , கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ரூஹ் என்னும் ஆன்மா முஸ்லிம்களின் வீட்டில் உள்ளது என்னும் கருத்து சரியானதல்ல "

[நூல் - தப்ரீத் அல் நவாழிர் ,பக்கம் 167-168, பதிப்பாளர்கள் மக்தபா சப்தாரியா ,குஜ்ரன்வாலா ,பாகிஸ்தான்]  


Tabrid al-Nawazir

Tabrid al-Nawazir, p.167 and 168



'லா' என்னும் அரபி பதத்தை இமாம் முல்லா அலி காரி அவர்களின் மூல நூலில் மோசடியாக சேர்த்து ,அதன் மூலம் இமாம் அவர்களின் கருத்துக்கு நேர் எதிரான கருத்தை புகுத்தி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பால் நேசமும்,கண்ணியமும் வைப்பதை விட்டும் உள்ள தனது  வெறுப்பை வெளிப்படுத்துகிறார் .


மோசடிகளிலே மிகவும் தரங்கெட்ட செயலை செய்த பின்னர் இந்த தேவ்பந்தி தப்லீக் வஹாபி தனது மோசடியை உண்மையாக்கும் விதமாக " சில மூல பிரதிகளில் லா என்னும் பதம் காணப்படவில்லை " என்று எழுதுகிறார் .
Tabrid al-Nawazir


இந்த மோசடியாளர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்கும் வண்ணம் ஷரஹ் அல் ஷிபாவின் மூலப் பிரதியையோ அல்லது ஒரு அச்சுப் பிரதியையோ கொண்டு வந்து தங்கள் கூற்றை நிரூபிக்க இயலுமா என்று சவால் விடுகின்றோம் ???

உண்மை என்னவேன்றால் ஷரஹ் அல் ஷிபாவின் மூலப் பிரதியிலோ  அல்லது ஒரு அச்சுப் பிரதியிலோ 'லா' என்னும் பதம் கிடையாது !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 31 October 2014

தேவ்பந்த் தப்லீக் ஜமாத் பற்றி தமிழக உலமாக்கள்



Hidayathul Anaam IlaJiyarathil Auliayil Kiram

எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நஜ்தைக் குறிப்பிட்டு , 
“ இங்கு தான் அதிர்ச்சிகளும்,குழப்பங்களும் உண்டாகும். இங்கிருந்து தான் ஷைத்தான் உடைய கொம்பு உதயமாகும்” என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்."
நூல் – ஸஹீஹ் முஸ்லிம் ,பாகம் 2,பக்கம் 393,394. ஸஹீஹ் புஹாரி ,பாகம்  2,பக்கம் 1051, மிஷ்காத் .

அவ்வாறாகவே , சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நஜ்து தேசத்தில் அப்துல் வஹ்ஹாபும் அவருடைய மகன் முஹம்மதும் உண்டாயினர். அவ்விருவரையும் பின்பற்றியவர்கள் தான் மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும் அவரைச் சார்ந்தவர்களும். அக்குழுவினர் இரு பிரிவினராகப் பிரிந்தனர், வெளிரங்கமாகவே தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொண்டவர்கள் ஒரு குழுவினர் ( அஹ்லே ஹதீத் ) . அவர்கள் எந்த மத்ஹபையும் ஏற்று பின்பற்றாதவர்கள். வெளிரங்கத்தில் தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொள்ளாமல் அந்தரங்கத்தில் வஹாபிகளா இருக்கக் கூடியவர்கள் மற்றக் குழுவினர் (தேவ்பந்தி தப்லீக் ஜமாத்) . இவர்கள் ஹனபீ-ஹன்பலி என்று வெளிக்கு மதுஹபுஹளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு முற்றிலும் வஹாபிக் கொள்கைளையே தங்கள் கொள்கைகளாகக் கொண்ட ‘முகல்லிது’ வேடதாரிகள்.

இவர்களில் முந்திய கூட்டத்தாரின் அபாயங்களைவிட பிந்திய இந்தக் கூட்டத்தாரின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவை. ஏனெனில் , இவர்கள் ‘மத்ஹபு’ என்ற போர்வையை போர்த்திக் கொண்டு முஸ்லிம்களை வழிகேட்டில் ஆக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது நயவசகத் தந்திர உபாயத்தினால் ஸூன்னத்து வல் ஜமாத்துடைய நல்ல கொள்கையில் ஆகி இருந்த அனேகர்களை பொல்லாங்குடைய வஹாபியத்தான வழிகேட்டின் அளவில் இழுத்து போட்டும் விட்டனர்.

வஹாபிகளான அவர்களின் கொள்கைக் கூற்றுகளைப் பாருங்கள்:

“ முஹம்மது நபி அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப்  போய்விட்டார்கள். அவர்களுடைய ரவ்ழாவிற்கு ஜியாரத்திற்காகப் போவது ஷிர்க்கு (இணைவைத்தல்) ஆகும்.

யா நபி! யா முஹம்மது !  யா ரசூலல்லாஹ் ! என்று அழைத்துக் கூப்பிடுவது ஷிர்க்காகும். அவ்விதம் அழைத்துக் கூப்பிடுபவர் காபிராக இருப்பார்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிய மாட்டார்கள். தொழுகையில் அவர்களுடைய க்யாபகம் வருவதானது மாடு,கழுதையின் க்யாபகம் வருவதை விட மிகக் கெட்டதாகும். அவர்களுடைய முஃஜிஸாத்துகளை விட சூனியக்காரர்களின் சூனியம் அதிக சக்தி வாய்ந்த்து. அவர்கள் ஷபாஅத்து செய்வார்கள் என்று நம்புவது ஷிர்க்காகும்.

நபிமார்கள்,அவ்லியாக்களின் கப்ரு புத்து(விக்கிரகம்)களுக்கு ஒப்பாகும். அவைகளை தகர்த்து எறிய வேண்டும்.அவர்களுக்கு எத்தகைய சக்தியும் கிடையாது. அவர்கள் பால் வஸீலா தேடுதல் ஷிர்க்காகும்.அவர்களுக்கு நேர்ச்சை செய்வது ஹறாமாகும்.

சகல நபிமார்கள்,ஸஹாபாக்கள்,அவ்லியாக்கள் ஆகியவர்கள் அல்லாஹ்வின் தகுதிக்கு முன் செம்மானை விடக் கீழ்த்தரமானவர்கள்.
மீலாதுன் நபி கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பாகும். 
காதிரிய்யா,ஜிஷ்திய்யா,நக்ஷபந்தியா முதலான தரீக்காக்கள் வழி கேடானவை.

மவ்லித்,பாத்திஹா,கத்தம் முதலானவற்றின் ஷீர்னி(வினியோகப் பொருள்) ஹறாம் ஆகும்.அவ்லியாக்களின் பெயராலும்,மவுத்தானவர்களின் பெயராலும் கத்தம் பாத்திஹா ஓதி அதன் பலனை அவர்கள் பால் ஈஸால் தவாபு செய்வது,பிராமணப் புரோகிதர்கள் அவர்களுடைய வேதத்தை ஓதி சுலோகம் படித்து பிதுர்களுக்கு திதி செய்வது போன்றேயாகும் . “

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். மேற்சொன்னவைகளும் அவை போன்ற தப்புத் தவறான நூற்றுக்கணக்கான கொள்கைகளும்,வஹாபிகளின் வழிகேடான அகீதாக்களாகும். இத்தகைய வழிகெட்டகொள்கைகளின் பால் வஹ்ஹாபிய்யா மொளலானா,மொளலவிகளும் மார்க்கத்தில் மறுமலர்ச்சி காண விரும்புவதாகச் சொல்லிக்கொள்பவர்களும்,தாங்கள் வழிகேட்டில் இருப்பதை அறியாமல்,ஏனைய முஸ்லிம் பெருமக்களை நேர்வழியில் ஆக்க முற்படுவதாக மனப்பால் குடித்துக் கொண்டு வழி கெடுக்க முற்பட்டு இருக்கிறார்கள்.

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் , இபுலீசை நஜ்து தேசத்து ஷைகு உடைய உருவத்திலே காண்பார்கள் “ என்ற விபரம் சரியாகவே இருக்கிறது.

நஜ்து வஹ்ஹாபிஷ் ஷைகுடைய ‘கிதாபுத் தவ்ஹீது’ வின் உர்து மொழி பெயர்ப்பு நூற்களாகிய ‘தக்வியத்துல் ஈமான்,ஸிராத்துல் முஸ்தகீம்,இதுபாத்துத் தவ்ஹீது ‘ போன்ற ஆபாச மலக் குவியல்களிலிருந்து சிலவற்றை பொறுக்கி தவ்ஹீதோ இபாதத் என்ற பெயரில் வடநாட்டு வஹாபி மொளலவியொருவர் உர்துவில் அச்சிட்டுள்ளார். அதை ‘ஏக தெய்வ வணக்கம்’  நாமத்தால் தென்னாட்டு பாக்கவீ ஒருவர் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதை மற்றொரு ‘பீடி மொளலவி’ அச்சிட்டு இலவசமாக வினியோகம் செய்துள்ளார்.

மேலும் ‘ஜியாரத்துல் குபூர்’ அவ்லியாக்களை அவமதிக்காதீர் – ‘மஹான் ஷாகுல் ஹமீது’ ‘ஏக தெய்வ வணக்கம்’ முதலான சில்லறைத் துக்கடாப் பிரசுரங்களை – அதிக விஷமுடைய நச்சரவத்திற்கு நல்ல பாம்பு என்று பெயர் உள்ளது போல- வஹ்ஹாபியத்தின் விஷவித்துகளைக் கொண்ட மேற்சொன்ன நூற்கள் பெயரால் கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டிக் கொண்டு நஜ்து ஷைத்தானிய்யத்தான பணிகளை தென்னாட்டில் செய்து வருகின்றன.இத்தகைய அகீதா கெட்டவர்கள் தங்களை வஹ்ஹாபிகள் என்று சொல்லிக் கொள்வார்களானாலும் பரவாயில்லை.ஆனால் இவர்களோ அவ்வாறு சொல்லாமல் தங்களை ஸுன்னத்து வல் ஜமாத் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். எனவேதான் இவர்களுக்கு எதிர்ப்பும்,மறுப்பும் ஏற்படுகின்றன. உள்ளொன்று புறம் ஒன்றாயிராமல் வெளிக்கும் தங்களை வஹ்ஹாபிகள் என்று பகிரங்கமாக அறிவித்து தங்களது வஹ்ஹாபிக் கொள்கையை இவர்கள் பரப்பினால் இவர்களை யார் ஆட்சேபிக்கப் போகின்றார்கள்.

நூல் – ஹிதாயத்துல் அனாம் இலாஜியாரதில் அவ்லியா இல்கிராம்,பக்கம் 15-18 , ஏழாம் பதிப்பு டிசம்பர் 2008, வெளியீடு சுலைமானியா பப்ளிஷர்ஸ் .

ஆசிரியர் – நாகூர் ஷரீபில் திலகமாய் இலங்குகின்ற குத்புல் மஜீது,பர்துல் வஹீது,ஸையிதுஸ் ஸாதாத்தி  ஸையிதுனா ஸையிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது காதர்வலி கன்ஜபக்ஷ் கன் ஜஸவாயீ ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்களின் பொளத்திர் அல்ஹாஜ் மொளலானா மொளலவி முஹம்மது பாக்கர் சாஹிப் ஆலிம் காதிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, நாகூர் ஷரீப்.

இந்நூலின் முதற்பதிப்பை(1950) சரிபார்த்து சிறப்புரை வழங்கிய மேன்மை தாங்கிய உலமாக்கள்:


1.       காயல்பட்டணம் மஜ்லிசுல் புகாரிஷ் ஷரீபின் முக்கியஸ்தரும்,சிறந்த முப்தியுமான, மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்,நஹ்வி முஹம்மது  இஸ்மாயில் ஆலீம் முப்தி அவர்கள்.

2.       காயல்பட்டணம் மஹ்ளறா அரபிக் கல்லூரியின் ஸதர் முதர்ரிஸும்,பிரபல முஃப்தியுமான மெளலானா,மெளலவி அல்ஹாஜ் முஹியித்தீன் தம்பி ஆலீம் அவர்கள்.

3.       காயல்பட்டணம் பிரபல முஃப்தியும்,ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியருமான மெளலானா,மெளலவி முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் ஸித்திகீ அவர்கள்.

4.       காயல்பட்டணம் ஸாகிபு அப்பா தைக்கா மானேஜரும் புகழுடைய பெரியாருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், பா.சு.முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அஸ்ஸதகலி ஆலீம் அவர்கள்.

5.       காயல்பட்டணம் முத்துவாப்பா வலியுல்லாஹ் அவர்களின் திருப்பேரரும்,பெரியாருமான மெளலானா,மெளலவி, ஸூபி முஹம்மது இஸ்மாயில் லெப்பை ஆலீம் (கொம்பாலீம்) அவர்கள்.

6.       மதராஸ் அரசாங்க காஜி மெளலானா,மெளலவி, அல் ஹாஜ், முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாகிபு அவர்கள்.

7.       குர்ஆன் தப்ஸீர் விரிவுரையாளரும்,பன்னூல் ஆசிரியருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், உத்தமபாளையம் முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் பாக்கவி அவர்கள்.

8.       கொழும்பு அல் ஜாமிஉல் அள்பர் சம்மங்கோடு பள்ளியின் இமாம் மெளலானா,மெளலவி, கிருஷ்ணாப்பட்டணம் அபுல்ஜமால் முஹம்மது  பதுருத்தீன் ஆலிம் நூரி அவர்கள்.

9.       கோட்டாறு மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யது முஹம்மது ஆலிம் (கத்தீபு,ஜும்மா மஸ்ஜித்,சிங்கப்பூர்)

10.   ஹஜ்ரத் மெளலானா,மெளலவி,அல் ஹாஜ் ஷாஹ் சுல்தான் கலீபா சாஹிபு ஷத்தாரி,காதிரி ,அரசாங்க காஜி,நாகூர்.

11.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆலீம் சாகிபு நூரி,ஸத்ரு முதர்ரிஸ் ,காதிரியா மத்ரஸா,நாகூர்.

12.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் அஸ்ஸெய்யது ஹூசைன் சாஹிபு காதிரி, நாகூர்.

13.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் குலாம் தஸ்தகீர் என்னும் நானா ஸாகிபு ,நாகூர்.

14.   மெளலானா,மெளலவி அஸ்ஸெய்யிது அஹ்மது சாகிபு காதிரி,நாகூர்.

15.   மெளலானா,மெளலவி காஜி கத்திபு,அல்ஹாஜ் ஷைகு ஹசன் சாகிபு ஷத்தாரீ,காதிரி ,நாகூர்.

16.    மெளலானா,மெளலவி செய்யிது முஹம்மது அலி சாஹிபு காதிரி என்னும் சின்னதம்பி சாஹிபு,நாகூர்.

17.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யிது முஹ்யித்தீன் சாகிபு காதிரி,நாகூர்.

18.   மெளலானா,மெளலவி,ஹாபிழ் ஷாகுல் ஹமீது,மேலப்பாளையம்.

19.   மெளலானா,மெளலவி முஹம்மது மீறான், மேலப்பாளையம்.

20.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ், ஹாபிழ் முஹ்யித்தீன், மேலப்பாளையம்.

21.   மெளலானா,மெளலவி அஹ்மது முஹ்யித்தீன் ஸித்திக்கீ நூரி,மேலப்பாளையம்.

22.   மெளலானா,மெளலவி அபுல்ஹசன் அலி ஷாதுலி,நூரி,தென்காசி.

23.   மெளலானா,மெளலவி ஹுசைன் முஹம்மது ஆலிம் என்னும் ஆயக்குடி ஸூஃபி ஹஜ்ரத் (மதராஸ் பெரம்பூர் ஜமாலிய்யா அரபி கலாசாலை,தலைமைப் பேராசிரியர்) ஆயக்குடி,பழனி.

24.   மெளலானா,மெளலவி அப்துல் மஜீத் நூரி,ஆயக்குடி,பழனி.

25.   மெளலானா,மெளலவி முஹம்மது அபூஸாலிஹ் ஆலிம் காலங்குடி இருப்பு,கிரிஸ்தியா நகரம்,திருநெல்வேலி.

26.   மெளலானா,மெளலவி முஹம்மது கலீலுர் ரஹ்மான் ஸாகிபு காதிரி,பீஹார்.

27.   மெளலானா,மெளலவி முஹம்மது பஸீஹுத்தீன் சாஹிபு,கவர்மெண்டு காஜி,மதறாஸ்.

28.   மெளலானா,மெளலவி கான் முஹம்மது சாகிபு நூரி,திண்டுக்கல்.

29.   மெளலானா,மெளலவி ஷைகு முஹம்மது இப்னு பீர் முஹம்மது நூரி கோட்டாரீ- பேராசிரியர் ,மத்ரஸா நூருல் இஸ்லாம்,தொடுபுழை,கேரளா.

30.   மெளலானா,மெளலவி ஷைகு அப்துல் காதர் பாகவி இப்னு அல்ஹாஜ் அஷ்ஷைகு அப்துல் மஜீத் காதிரி,பள்ளப்பட்டி.

31.   உலகமெல்லாம் இஸ்லாமை பரப்பும் பணியில் அரும்பெரும் சேவை செய்த உத்தமர்,காதிரிய்யா தரீக்காவின் புகழ் மிக்க ஷைகும்,முர்ஷிதுமான மீரட் ஷாஹ் முஹம்மது அப்துல் அலீம் ஸித்தீக்கி மொளலானா அவர்களது அருந்தவப் புதல்வர் நதர் முஹ்யித்தீன் நூரானி ஸித்தீக்கி காதிரி அவர்கள்.

32.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்  உத்தமபாளையம் முஹம்மது அபூபக்கர் ஆலிம் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் (நாஜிர் ,மத்ரஸத்துல் காதிரிய்யா மஹ்லறா,காயல்பட்டணம் மற்றும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸா,வேலூர்).

33.   இந்தியா ,இலங்கை ஹிஸ்புல்லாஹ் சபையின் தலைவர், மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் ஷைகு அப்துல் காதிர் ஆலிம் ஸித்தீக்கி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.

34.   தமிழ்நாட்டில் பிரபல்ய ஆலிமும் முஃப்தியுமான மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹம்மது தமீம் ஆலிம் ஸாகிபு முஃப்தி அவர்களது அருமைப் புத்திரர் மெளலானா,மெளலவி அபுல்பரகாத் ஸிப்கதுல்லாஹ் ஆலிம் – முதர்ரிஸ் நாஜிர்,மத்ரஸா யூசுபிய்யா அவர்கள்.

35.   காயல்பட்டணம் ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியர் மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் கத்தீபு சாகுல் ஹமீத் ஆலிம் முஃப்தி அவர்கள்.
 
தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் தமிழகத்தில் இஸ்லாமியர் இடையே தலை தூக்கிய ஆரம்ப நாட்களிலேயே,அதாவது 1950 முதல் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் சத்திய உலமாக்கள் தமிழக இஸ்லாமியரை அதன் வஹாபிய கொள்கைகளால் உண்டாகும் வழிகேடை கடுமையாக எதிர்த்து உள்ளனர் என்பதற்கு இதுவே தக்க சான்று.
இன்று வரை எதிர்த்தும் வருகின்றனர் .

இன்ஷா அல்லாஹ் மறுமை வரை எதிர்ப்பர் என்பது திண்ணம்  !!!



       


Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday 26 October 2014

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 8

Related Posts Plugin for WordPress, Blogger...

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 7

Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 25 October 2014

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 6

Related Posts Plugin for WordPress, Blogger...

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 5

Related Posts Plugin for WordPress, Blogger...