Tuesday, 4 November 2014

கப்ரின் மண்ணின் மூலம் உதவி தேடுதல்

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் அவர்களின் மூலமாகவோ அல்லது இறைநேசர்களின் மூலமோ ஒரு முஸ்லிம் உதவி தேடினால் அதைப் பற்றிய  தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கை


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,

எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால் குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் . [நூல்- தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "

[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 

இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் முன்னோடிகளில் ஒருவரான மெளலவி அஷ்ரப் அலி தானவி தனது நூலான அர்வாஹே ஸலாசா வில் பின்வருமாறு எழுதுகிறார் ,

Arwahe Salasa

Arwahe Salasa PAGE NO. 322-323



" மெளலானா மொய்னுத்தீன் சாஹிப் அவர்கள் மெளாலானா யாகூப் சாஹிப் அவர்களின் மூத்த மகன் ஆவார் . அவர் என்னிடம் மெளாலானா யாகூப் சாஹிப் அவர்கள் இறந்த பின் நடந்த ஒரு கராமத்தை கூறினார் . அவர் கூறினார் ,ஒரு பனிக் காலத்தின் போது நானோத் நகரைச் சார்ந்த மிக அதிகமான மக்கள் ஒரு வகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் . யாரெல்லாம் மெளலானா (யாகூப்) அவர்களின் கபுரில் இருந்து மண் எடுத்து (தமது உடலில் )கட்டினார்களோ அவர்கள் எல்லாம் குணமடைந்தனர்[மிட்டீ லே ஜாகர் பாந்த் லேதா உஸே ஹீ ஆராம் ஹோ ஜாதா  ] .

மக்கள் கபுரில் இருந்து எந்த அளவு மண் எடுக்க ஆரம்பித்தார்கள் என்றால் ,நான் ஒவ்வுருமுறை மண் கொண்டு வந்து நிரப்பும் பொழுதும் அது உடனே கபுரில் இருந்து எடுக்கப் பட்டுவிடும் .நான் கபுரில் மீண்டும் மீண்டும் வந்து மண்ணால் நிரப்புவதைக் கொண்டு வெறுத்துவிட்டேன் . எனவே நான் அவரின் கபுருக்கு சென்று கூறினேன் , 'நீங்கள் இந்த கராமத்தை நிகழ்த்துகின்றீர்கள் ,நானோ இதனால் துன்பத்தில் உள்ளேன் . நினைவில் கொள்ளுங்கள் இனி யாராகிலும் மண் எடுத்துச் சென்று குணமடைந்தால் நான் உங்கள் கபுரை இப்படியே விட்டு விடுவேன் . அதன் பின் மக்கள் உங்கள் கப்ரின் மீது தங்கள் செருப்புகளால் நடந்து செல்லக் கூடும் . அதன் பின்னர் யாருக்கும் கபுரின் மண் மூலம் குணம் அடையவில்லை "

[ நூல் - அர்வாஹே ஸலாசா ,பக்கம் 322-323,அஷ்ரப் அலி தானவி ]

மெளலானா முஹம்மது யாகூப் [ஹிஜ்ரி 1283/1866 ] தேவ்பந்த் வந்து அதன் நாஜிர் ஆக இருந்தவர் . மெளலவி அஷ்ரப் அலி தான்வி,மெளலவி  மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி ,மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி போன்றோர் இவரிடம் பயின்ற மாணவர்கள் .

என்னே தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் முரண்பாடு !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment