Tuesday 8 September 2015

தேவ்பந்திகளின் முர்ஷித் ஏ குல் அவர்களின் நம்பிக்கை !

அஷ்ஷைகு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி ) ஒரு காமிலான ஸூபியாகவும் ,வலியாகவும் இருந்தவர்கள் . அன்னார் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் எல்லா அகீதா,கொள்கைகள் ,நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்டு இருந்தனர் என்பது ,அவரது பல்வேறு நூல்களின் மூலமாக திண்ணமாக விளங்கும் . தேவ்பந்தி முன்னோடிகளான மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோரும் அவரிடம் தமது வஹாபிய கொள்கைகளை மறைத்து முனாபிக்தனமாக பைஅத் ,கிலாபத் பெற்றனர் . இதன் மூலம் பாமர மக்களை தாங்களும் தஸவ்வுப் உடைய மக்கள் என்று ஏமாற்றுவதற்காக !

 தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் உலமாக்கள் யா நபி ,முஷ்கில் குஷா,நூரே குதா என்றழைப்பது ஷிர்க் ,குப்ர் என்கின்றனர் . இனி அவர்களின் முர்ஷிதே குல் ,பீரோ முர்ஷித் ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி ) அவர்களின் நம்பிக்கை என்னவென்பதை அவரது நூற்களில் காணலாம் !







 இனி தேவ்பந்தியாக்கள் தங்களது முர்ஷித் ஆகிய ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் மீதும் இதே ஷிர்க் ,குப்ர் உடைய பத்வாவை வெளியிடுவார்களா ??? அதை மக்களிடையே பகிரங்கப்படுதுவார்களா ??? 

அதே போன்று அவரிடம் கிலாபத் பெற்றவர்களான அஷ்ரப் அலி தானவி ,ரஷீத் அஹமத் கங்கோஹி நம்பிக்கை அவர்களின் முர்ஷிதுக்கு மாற்றமாக இருப்பதால் ,அவர்களின் பை அத் ,கிலாபத் அந்த சில்சிலாவில் எவ்வாறு தொடர முடியும் ???

பதில் தருவார்களா தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் ????

Related Posts Plugin for WordPress, Blogger...