Saturday 31 December 2016

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 1



பித்னாவின் ஆரம்பம்  (ஹிஜ்ரி 1239 - 1823 ஆண்டு ) க்குப்  பின்

வேற்றுமை தோன்றியதன் காரணமும் அதன் ஆரம்பமும் ஓர் சுருக்கமான அறிமுகம் :

Undivided India before partition

சிராஜுல் ஹிந்த் அல் முஹத்தித் ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  [ பிறப்பு .1745  - இறப்பு  1823 ஆண்டு ]


ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித்  திஹ்லவி  (ரலியல்லாஹு அன்ஹு ) [பிறப்பு.1703  - இறப்பு.1762 ஆண்டு ] அவர்களின் மூத்த மகனார் . ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் தமது தந்தையாரின் இறப்பின் பொழுது 17யே வயது  நிரம்பியவர்களாக இருந்தார்கள் .
அவர்கள் தமது தந்தையாருக்குப் பின் ஹதீது ஆசிரியராகப் பொறுப்பேற்று ,பின்னர் டெல்லியின் புகழ்பெற்ற முஹத்தித் ஆக விளங்கி(தமது தந்தையைப் போன்றே ) ,இந்தியாவின் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞராக  விளங்கினார்கள் .

இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு)  அவர்களுக்கு நான்கு ஆண் மக்கள் . அனைவரும் தமது தந்தையாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமது காலத்தின் சிறந்த மார்க்க அறிஞராக  விளங்கினார்கள் .  அவர்களின் பெயர்கள் முறையே ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) , ஷாஹ் ரபீயுத்தீன் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) , ஷாஹ் அப்துல் காதிர்  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) மற்றும் ஷாஹ் அப்துல் கனி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) .

குறிப்பு : பின்குறிய மூன்று சகோதரர்களும் தங்களது மூத்த தமையனார் ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாணாக்கர் ஆவர் .

பித்னாவின் ஆரம்பம் 

ஷாஹ் அப்துல் கனி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது .அதற்கு முஹம்மத் இஸ்மாயில் திஹ்லவி என்று பெயரிட்டார் .
Taqwiyatul Iman
                                                         
 அந்த குழந்தை வாலிபன் ஆனதும்  ஓர் நூல் எழுதினான் . அதன் பெயர் " தக்வியத்துள் ஈமான் " .  இந்த நூல் முதன் முதலில் அச்சில் வெளியான ஆண்டு 1825 .அது முதல்  இந்தியாவில் பிரிவினையின் நெருப்பை கொளுத்தி விட்டது .

 இஸ்மாயில் திஹ்லவியின் ஆசிரியர் செய்யித் அஹ்மத் ரேபரேலி [பிறப்பு.1786 - இறப்பு.1831 ஆண்டு ]

இவர் ஷாஹ் வலியுல்லாஹ் மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹும்  அஜ்மயீன் ) ஆகியோரின்  நெறிமுறைகளின்படி நடந்த உண்மையான மாணவர் அல்ல .தமது ஆசிரியர்கள் கற்றுத் தந்த போதனைகளை விட்டும் வெகுதூரம்   விலகிச் சென்றார் . இவரதும் ,இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை மறுத்து ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு)  தமது கருத்தை பதிவு செய்துள்ளார்கள் .

Anwar-e-Aftab-e-Sadaqat

[ஆதாரம்  - நூல்  : அன்வார் ஏ அப்தாப் ஏ ஸதகாத் , பக்கம் 617-620, கரீம் ப்ரெஸ் ,லாகூர் , முஹம்மத் காஜி பஜ்லே அஹ்மத் லூதியான்வி நக்சபந்தி முஜத்திதி ] 

இந்தியாவில் முஸ்லிம்களின் மத்தியில் வேற்றுமைகளும் , பித்னாவும் உருவானதன் மூல காரணம் இந்த இஸ்மாயில் தெஹ்லவி .

Grave of Ismail Dehlawi Wahabi

முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி அல் தமிமீயின்  "கிதாபுத் தவ்ஹீத் " நூலின் உர்து மொழிபெயர்ப்பு தான் " தக்வியத்துள் ஈமான் " .

இஸ்மாயில் திஹ்லவியின் கொள்கைகளும் ,போதனைகளும் 

முகம்மது காசிம் நானோத்வி [மறைவு - ஹிஜ்ரி 1297 - 1879ஆண்டு ]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஸஹ்ரான்பூர் மாவட்டத்தில் தேவ்பந்த்  என்னும் ஊரில் ஒரு அரபி மதரஸாவை ஸ்தாபிதம் செய்தார் . தமது மாணவரும் ,வஹாபிய கொள்கையுடையவருமான ரஷீத் அஹ்மத் கங்கோஹி [மறைவு - ஹிஜ்ரி 1323/1905 ஆண்டு ] உடன் இணைந்து இஸ்மாயில் தெஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை தமது மதரஸாவில் பயிலும் மாணவருக்கு போதிக்கலானார் .

இந்த தேவபந்தி மதரசாவின் வஹாபிய கொள்கைகள் பின்னர் அஷ்ரப் அலி தானவியால் [மறைவு -ஹிஜ்ரி 1362 / 1943 ஆம் ஆண்டு ] முன்னெடுக்கப்பட்டது .

எனவே இஸ்மாயில் தெஹ்லவியை இந்திய துணைக்கண்டத்தில் வஹாபிஸத்தின் தந்தை என்று அழைத்தால் அது மிகையாகாது . இநதிய இஸ்லாமிய சமூகத்தில் மார்க்க கொள்கை வேற்றுமைகளுக்கும் ,பித்னாக்களுக்கும் மைய புள்ளி இஸ்மாயில் தெஹ்லவி .

மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி 'மஜல்லா அஹ்லே ஹதீத் ' 
பத்திரிக்கையின் ஆசிரியர் 1973ல்  கூறுகின்றார் , தம்மை பொறுத்தவரை ,165 ஆண்டுகளுக்கு முன்பு ,பஞ்சாப் அம்ரித்சரின் இஸ்லாமிய சமூகம் ,இன்று 'பரேல்வி ' என்று அழைக்கப்படும் மக்களின் அதே கொள்கைகளைத் தான் கொண்டிருந்தனர் . இன்னும் முஹம்மது ஜாபர் தான்சேரியை பொறுத்தமட்டில் ,200 ஆண்டுகள் முன்பு வரை ஒருங்கிணைந்த பஞ்சாபில் வஹாபிகளின் எந்த அடையாளமும் இல்லை அல்லது இஸ்மாயில் தெஹ்லவியின் கொள்கைகளை பின்பற்றுவோரும் இல்லை  .

 [குறிப்பு : வட இந்தியாவை பொறுத்தவரை ஜியாரத் செய்து வலிமார்களிடம் உதவி தேடினால் நீங்கள் பரேல்வி . மேற்கூறிய இருவரும் அஹ்லே ஹதீத் என்னும் மத்ஹபை பின்பற்றாத வஹாபிகள்  . ]

 மவ்லானா செய்யித் அஹ்மத் பிஜ்நோரி காசிமி அவர்கள் கூறுகின்றார்கள் ,

Photobucket

"வெட்கக்கேடான விஷயம் என்னெவெனில் இந்த புத்தகம் [தக்வியத்துள் ஈமான் ] காரணமானாக சுமார் 20 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய முஸ்லிம்களில் ,தொண்ணூறு சதவீதம் ஹனபிக்கள் , இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு போனார்கள் "
[நூல் -அன்வாருல் பாரி , பக்கம் 107, நஸீருல் உலூம் , பஜ்னுர் ]

ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் மாணாக்கரில்   இஸ்மாயில் தெஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை கடுமையாக எதிரத்தவர்கள்  முஹக்கிக் அல் அஸர் அல்லாமா     பஜ்லே ஹக் கைராபாதி , மவ்லானா மெஹபூப் அலி தெஹ்லவி, முஃபதி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ்  மற்றும் இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி [மறைவு - ஹிஜ்ரி 1340 - 1921ஆம்  ஆண்டு ]  அவர்களின் ஷெய்கும் ,முர்ஷிதுமான  அல்லாமா அஷ்ஷைகு ஷாஹ் ஆலே ரஸூல் மெஹ்ரார்வி ஆகியோர் ஆவர்  ,










Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 24 December 2016

ஷாஹ் வலியுல்லாஹ்வின் இஸ்திகாதா

வஹாபிய தேவ்பந்தி தப்லீக்  ஜமாத்தின் மற்றோரு வேடிக்கையான மோசடிக் கூற்றுகளில் ஒன்று தாங்கள் இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு) அவர்களின் மஸ்லக்கைச் சார்ந்தவர்கள் என்பதாம் .

இனி  இந்த வஹாபிய பிர்காவின்  முன்னோடிகள் கூறுவதைப்  பாருங்கள்

இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் :
Taqwiyatul Iman Ismail Dehlavi Wahabi

எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
 [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,

"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]  

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு) அவர்கள் எழுதிய நூல் " அத்யாப் அல் நக்ஹம் பீ மத்ஹி  ஸய்யிதில்  அரபி வல் அஜம் " .
இது நான்கு அரபுக் கஸீதாக்களும் அவற்றின் விளக்கங்களை பார்சியில் உள்ளடக்கியதும் ஆகும் . இதை அன்னாரின் முரீது முஹம்மத் அமீன் காஷ்மீரி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அன்னார் எழுதினார்கள் .
இதில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ) அவர்களை விளித்து தவஸ்ஸுல் ,இஸ்திகாதா ,இஸ்தினாத் போன்ற மார்க்கம் அனுமதி அளித்த செயல்களை செய்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் .

* தமது முதல் கஸீதா ஸஹாபா தோழர் ஸவாத் இப்னு காரிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இயற்றிய அரபிக் கசீதாவை போல் இருப்பதாகக் கூறும்
ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு)  அவர்கள் ,இந்த கவிதையை பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து அதன் விளக்கத்தை பார்சியில் எழுதினார்கள் .இந்த விளக்கவுரை முடிவுற்ற ஆண்டு 24 ரபீயுத்தானீ  1156 (17 ஜூன் 1743ஆம்  ஆண்டு )

* இரண்டாவது கஸீதா 'ஹம்ஜியா' , கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'ஹம்ஜா'வில் முடியும் . இது 1157/1745 ஆம் ஆண்டும் ,விளக்கவுரை 1762 ஆம் ஆண்டும் முடிவுற்றது .

* மூன்றாவது 'தாயியா ' .  கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'தா' வில்  முடியும் .இது  மஃ ரிபா உடைய விளக்கங்கள் கொண்டவை .

* நான்காவது 'லாமியா'. கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'லா மில்  முடியும் .

வஹாபிய தேவ்பந்தி தப்லீக்  ஜமாத்தின் மீது மிகப்பெரும் பலாவை இறக்கியுள்ளார்கள் .

                                       
                                         
atyab al-nagham fi mad'Hi sayyidi'l arabi wa'l ajam



எல்லாம் வல்ல நாயன் நம்  உயிரினும் மேலான கண்மணி நாயகம் ﷺ  அவர்களின் பொருட்டால் காப்பானாக ! ஆமீன் !
Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 1 November 2016

தேவ்பந்தி பிர்காவின் வஹாபிய வேர்கள்

இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமது காலத்தில் எத்தகைய கொள்கையடையவனாக இருந்தான் , எவ்வாறு சத்திய உலமாக்கள் அவனை எதிர்த்தனர்,இன்னும் எத்தகைய அக்கிரமங்களை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் என்பதை அக்காலத்தில் மக்கா முஃப்தியாக விளங்கிய அல்லாமா அஷ்ஷைகு செய்யத் அஹ்மத் பின் ஜைனி தஹ்லான் அல் மக்கி அல் ஷாபியீ  (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் எழுதிய "பித்னத்துல் வஹாபியா " என்னும் நூலை வாசிப்பவர்கள் பளிங்கு கண்ணாடி போல் விளக்கம் பெறுவர் .

Fithnathul Wahabiya

Fithnathul Wahabiya

தங்களையும் அஹ்லுஸ் சுன்னா எனப் போலியாக தாவா செய்யும் இந்த தப்லீக் தேவ்பந்தி ஜமாத்தின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதிய பத்வாக்களின் தொகுப்பு  " பத்வா ரஷீதியா ".

Fatwa Rasheediya

Fatwa Rasheediya,Page 273

இதில் பக்கம் 273ல்  தமது வஹாபிய விசுவாசத்தை தெளிவாக விளக்குகிறார் 

கேள்வி:
            வஹாபிகள் எனப்படுவோர் யார் ? அப்துல் வஹாப் நஜ்தியின் நம்பிக்கைகள் என்ன ? அவர்எந்த மத்ஹபை சார்ந்தவர் இன்னும் எந்த மாதிரியான நபர் ? இன்னும் நஜ்தைச் சார்ந்த இம்மக்களுக்கு அஹ்லுஸ் ஸுன்னாவுக்கும் என்ன வித்தியாசம் ?

பதில் :

      முஹம்மது இப்னு அப்துல் வஹாபை பின்பற்றுவோருக்கு வஹாபிகள் என்றழைக்கப்படும் ,இன்னும் அவர்களின் கொள்கைகள் மிகச் சிறந்தவை மற்றும் அவர்கள் ஹன்பலி மத்ஹபை சார்ந்தவர்கள்.எனினும் அவர்  கடின சுபாவமானவர் ,அவரைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நல்லவர்கள் என்றாலும் அதில் எல்லை மீறியவர்களால் சேதமே . இன்னும் அவர்களின் எல்லா நம்பிக்கைகளும் நம்பத்தகுந்தவையே . இனி அமல்களில் உள்ள வேறுபாடு என்பது ஹனபி ,ஷாபியீ ,மாலிகி ,ஹன்பலி ஆகியவை போலதான் .
As-Sawa'iq al-ilahiyya fi'r-raddi ala'l-wahhabiyya


இனி இப்னு அப்துல் வஹாபின் உடன் பிறந்த சகோதரர் ஷைகு சுலைமான் இப்னு அப்துல் வஹாப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) தமது நூல் "அஸ் சவாயிக் அல் இலாஹியா பி ரத்தில் வஹாபியா"வில்  தமது இளைய சகோதரன் அப்துல் வஹாப்  நஜ்தியை வழிகேடன் என்றும் ஹதீது ஷரீபில் உள்ள கர்னுஷ் ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டது இவனைத் தான் என்று குறிப்பிடுகிறார் .

இனியாவது இல்யாஸி தப்லீக் தேவ்பந்திகள் தமது வஹாபிய விசுவாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளட்டும் . 




Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 31 August 2016

அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் எனும் தேவ்பந்தி மதரஸா

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் முன்னோடி நிறுவனர் இஸ்மாயில் திஹ்லவி ,

இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் :

Yek Roza Pg 17

Yek Roza Pg 18


"அல்லாஹு தஆலா பொய் சொல்லுவது சாத்தியம் "  (அஸ்தக்பிருல்லாஹ் ) 
 [நூல் - யக் ரோசா பார்ஸி,பக்கம் 17-18 ].
மேலும்  கூறுகிறார் "அல்லாஹ் ஒரு பொய்யனாகயிருப்பது சாத்தியம்,நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மனிதனின் திறன் அல்லாஹ்வின் திறனை விட மேலானது என்று கருதவேண்டும் " .

இந்த வஹாபிய பிர்காவின் மற்றோரு முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,

இவர் கூறுகிறார் ,

Fatawa Rasheediya Vol 1 Pg 18,19

" அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் "
[ பதவா ரஷீதியா வால்யூம் 1,பக்கம் 18,19,20 ]

"அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் "
"அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் "
"அல்லாஹ் ஏற்கனவே பொய் உரைத்திருகின்றான் "

[ பதவா ரஷீதியா பாகம் 1, பக்கம் 20 மற்றும் தக்தீசுல் கதீர் பக்கம் 79 ]

தமது முன்னோடிகளின் கொள்கையை தவறாது இது நாள் வரை பின்பற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் உலமாக்கள் ,தமது நச்சுக் கருத்தை பாமர இஸ்லாமியரிடம் இன்றளவும் பரப்பி வருகின்றனர் என்பதற்கு பின்வரும் பத்வா   ஆதாரம் !!! 

இதே கருத்தை தான் தமிழகத்தில் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் ஆகப் பெரிய உலமாவான (??) மவ்லவி கலீல் அஹ்மது கீரனூரி மன்பஈ தேவ்பந்தி தமது "தப்லீக் ஜமாஅத் பற்றிய குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் " என்ற மொழி பெயர்ப்பு நூலில் எழுதி வைத்து சப்பை கட்டு கட்டியுள்ளார் .  இன்ஷா அல்லாஹ் அதைப் பற்றி தனி பதிவில் விளக்குவோம் . 

Jamia Binoria Pakistan

Jamia Binoria Pakistan



வல்ல ரஹ்மான்  அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் நம்மை இந்த வஹாபிய பித்னாவை விட்டும் காப்பாற்றுவானாக .ஆமீன் 

Related Posts Plugin for WordPress, Blogger...

Monday 22 August 2016

சுவர்க்க நகைகள்

தேவபந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கையாவும் மவ்லவி அஷ்ரப் அலி தானவி உடைய கொள்கையை அமுல்படுத்துவதே என்பது தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் மவ்லவி இல்யாஸின் ஆசையும் ,லட்சியமும் என்பதை பின்வாறு விளக்குகிறார் ,

"ஹஜ்ரத் மௌலானா அஷ்ரப் அலி தானவி அவர்கள் மிகப்பெரிய வேலை செய்திருக்கின்றார்கள் ,எனது மனம் விரும்புகிறது .கல்வி ,ஞானபோதனை அவர்களுடையதாகவும் ,தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்கட்டும் .ஏனேனில் இவ்வாறு அவர்களுடைய (அஷ்ரப் அலி தானவியுடைய) போதனை விரிவாகி விடும் ."

                            [நூல்:மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -71,72]

இனி மவ்லவி அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய வழிகெட்ட கொள்கைகளை ஓர் தனி பதிவில்  இங்கு விரிவாக விளக்கி உள்ளோம் .


தமிழகத்தில் தப்லீக் ஜமாத்தை அதன் ஆரம்ப காலங்களில் நிலை நிறுத்த வேலை செய்தவர்கள் லால்பேட்டை மதரஸா நிறுவனர் அமானி ஹஸ்ரத் என்று அறியப்பட்டவர்கள் . அதே போல் தென் தமிழகத்தில் திருநெல்வேலி முன்னேற்றம் புக் டிப்போ உரிமையாளர் மவ்லவி அபுல் ஹசன் நூரி ,பேட்டை ரியாளுள் ஜினான் அரபிக் கல்லூரி ஆசிரியர் கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஆகியோர் அந்த வேலையை செய்தனர் .
Bahishthi Zewar

தேவபந்தி தப்லிக் ஜமாத்தினரால்  தமது பிர்காவின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று அறியப்பட்ட  மவ்லவி அஷ்ரப் அலி தானவி எழுதிய நூல் 'பிஹிஷ்தி ஜேவர் '  . இந்த  நூலை திருச்சியைச் சார்ந்த தி.எஸ் .எ.ரசூல் என்பவர் தமிழில் 'சுவர்க்க நகைகள்' என  மொழிபெயர்த்து மேற்படி உலமாக்களிடம் ஒப்பம் பெற்று மவ்லவி அபுல் ஹசன் நூரி அவர்களின் முன்னேற்றம் புக் டிப்போ பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார் .
சுவர்க்க நகைகள்




























நூலில் ஷிர்க் ,குப்ர் ,பித் அத் சம்பந்தமான கொள்கை விளக்கம் அளிக்கும் இடத்தில் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி உடைய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்துக்கு மாற்றமான வஹாபிய கொள்கையை மொழி பெயர்த்து வெளியிட்டனர் .

இனி மேற்படி உலமாக்கள் ஒன்றும் அறியாத பாமரர் அல்ல .அக்காலத்தில் மார்க்க கல்வியில் சிறந்து விளங்கியவர்களாக அறியப்பட்டவர்கள் . இனி அவர்கள் இந்த வஹாபிய கொள்கைகளை இன்று உள்ள (போலி) தவ்ஹீத் ஜமாத் அப்படியே ஏற்றுக் கொள்வர் .இன்னும் சொல்லப்போனால் ஏதோ இன்று உள்ள (போலி) தவ்ஹீத் ஜமாத் , இந்த கொள்கைகளை கற்றுக் கொண்டதே இந்த தேவ் பந்த் தப்லீக் ஜமாத் உலமாக்களிடமோ என்று எண்ணுமளவு அப்படி ஓர் ஒற்றுமை . தேவ் பந்த் மஸ்லக் படி நடக்கும் சென்னையில் உள்ள காஷிஃபுல் ஹு தா மதரசா ஏன் இன்று உள்ள (போலி) தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பீ .ஜெ  விற்கு ஆரம்ப காலங்களில் ஆதரவளித்தது ஏன் என  இப்போது விளங்கும் என்று எண்ணுகின்றேன் .

சுவர்க்க நகைகள் நூல் மொழி பெயர்ப்பாளர் திருச்சியைச் சார்ந்த தி.எஸ் .எ.ரசூல் . இவரின் முழு பெயர் செய்யத் அப்துர் ரஸுல் ,இவர் தான் தப்லீக் ஜமாத்தின் அநேக கொள்கை விளக்க நூல்களை தமிழில் எழுதிய பன்னூலாசிரியர் (!) திருச்சி குலாம் ரசூல்  . இவர் பெயர் மாற்றியதன் பின்னணி நகைப்புக்குரியது  .

சுவர்க்க நகைகள் நூல் வெளிவந்ததும் தமிழ்கத்தில்  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  உலமாக்களிடம் சலசலப்பு . எனினும் நூலுக்கு ஒப்புதல் அளித்தவர் மாநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர்  என்பதால்  பல பேர் அதற்கு மறுப்பு எழுத தயங்கிய நிலையில் , காயல் பதி தந்த காமில் வலி ஷைகுனா வ முர்ஷிதுனா அல் ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷாஹ் அப்துல் காதிர் ஆலிம் நூரி சூஃபி ஸித்தீக்கி காதிரியில் காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் ) அவர்கள் தாம் படித்து சனது வாங்கிய மத்ரசாவின் ஆசிரியர்கள் ஒப்புதல் வழங்கியது என்றெல்லாம் இன்றைய கால உலமாக்கள் தங்களது ஆசிரியர்களுக்கு எதிராக உண்மை பேசாது வாய் மூடி மெளனம் சாதிப்பது போல் அல்லாமல் , சிறிதும் தயங்காமல் சத்தியக் கொள்கையை நிலை நாட்ட அதற்கு மறுப்பு எழுதினார்கள் .
சுவர்க்க நகைகளா அல்ல நரக விலங்குகள்

அந்த நூல் " சுவர்க்க நகைகளா அல்ல நரக விலங்குகள் " . சுவர்க்க நகைகள் நூலுக்கு மறுப்பு ஆணித்தரமாக வழங்கி வாதிகளின் வாயை அடைத்தனர் ஸூபி ஹழ்ரத் காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் ) . அஷ்ரப் அலி தான்வியின் வஹாபிய கொள்கை பிரகாரம் சுவர்க்க நகைகள் நூலின் ஆசிரியர் அப்துர் ரசூல் எனப்பெயர் உள்ளதால் முஷ்ரிக் ஆகிப் போனார் என்று விளக்கிய பொழுது பன்னூலாசிரியர் (!) பேந்த பேந்த முழித்து தமது பெயரை குலாம் ரசூல் என்று மாற்றினார் அந்த அறிவுஜீவி  .

உர்துவில்  10 பாகங்களாக உள்ள மூல நூலை தமிழில் 25 பாகங்களாக வெளியிடுவதாக கூறிய பதிப்பக உரிமையாளர்  மவ்லவி அபுல் ஹசன் நூரி ,மறுப்பை கண்டதும் இத்துடன் முடித்துக் கொண்டார் .

  "சுவர்க்க நகைகளா அல்ல நரக விலங்குகள் " நூலை பதிவிறக்கம்செய்க 


இதில் மாபெரும் குளறுபடி என்னவென்றால் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி உடைய வாழ்க்கை வரலாறில் அவர் தம்மை தசவ்வுப் உடைய ஷைகாக காட்டிக் கொள்வதால் பல உலமாக்கள் மதிமயங்கி வழித்தவறிவிடுவர் .

அவர் கூறியது போன்ற கொள்கையை தசவ்வுப் உடைய மாபெரும் ஷெய்குமார்களான கவ்துல் அஃலம் அவர்களோ ,சுல்தானுல் ஆரிபீன் அவர்களோ ,குத்புல் அக்தாப் ஷாதுலி நாயகம் அவர்களோ ,குத்புல் ஹிந்த் கவாஜா நாயகம் அவர்களோ , ஷாஹ் வலியுல்லாஹ்  அவர்களோ இன்னும் உலகில் இதுவரை தோன்றிய காமிலான வலிமார்களோ ,அவ்வளவு ஏன் அவரது ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களோ கூறியதாக ஓர் வரலாற்றுப் பதிவு உண்டா ????
அவரது ஷைகு எழுதிய ஹப்த் மஸ்லா நூலைப் பற்றி இங்கு காண்க  .

மாறாக அவரது கொள்கை ஒத்துப் போவது யாருடன் இப்னு தைமிய்யா ,இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி , இஸ்மாயில் தெஹ்லவி  ஆகியோருடனும் அவரைப் பின்தொடருபவர்களுடனும் தான் .

இவரின் ஷிர்க் ,குப்ர் ,பித் அத்   கடுமையாக எதிர்க்கும் கொள்கையால் (???)  இவருக்கு வஹாபி என்ற பட்டமும் ,காபிர் பட்டமும் வழங்கியதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர் . எனினும் தமிழகத்தில் உள்ள சில போலி தரீக்காக்கள் அஷ்ரப் அலி தான்வியை வலி என்று தாவா செய்து தமது தப்லீக் தேவ்பந்தி விசுவாசத்தைக் காட்டுகின்றனர் .இனி அவர்கள் அஷ்ரப் அலி தானவி கூறியது உண்மை என ஒப்புக் கொண்டால் அவர்கள் மீது ஷிர்க் ,குப்ர்  உடைய பத்வா பாயும்  . மதில் மேல் பூனையின் நிலை தான் !

இனி இந்த நூலில் உள்ளது போல் அஷ்ரப் அலி தான்வியின் கலீபாக்கள் தமிழகத்தில் இருந்தால் அவர்கள் என்ன கொள்கை போதிப்பார்கள், என்ன தசவ்வுப் உடைய விளக்கம் அளிப்பார்கள் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது . ஏற்கனவே தமிழகத்தில் ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் ஸில்ஸிலாவை ஆரணி பாவா (???) என்று கமாலுத்தீன் பாகவி பரப்பி உள்ளார் .இஸ்மாயில் திஹ்லவியின் ஆசிரியர்  செய்யத் அஹ்மத் ரேபரேலியின் ஸில்ஸிலாவை நூரி ஷாஹ் தரீக்காவாசிகள் எனப்படுவோர்  பரப்பி வருகின்றனர் . இவர்கள் என்ன   கொள்கை,தசவ்வுப் உடைய விளக்கம்  அளித்து வருகின்றார்கள் என்பது பளிங்கு கண்ணாடி போல் விளங்குகின்றது  .


வல்லோன் அல்லாஹ் தனது ஹபீபின் பொருட்டால் காமிலான ஷெய்குமார்களைக் கொண்டு ஸவாதே ஆஜம் என்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் சத்திய கொள்கையில் நம் அனைவரையும் நிலைத்திருக்கச் செய்வானாக ! ஆமீன் ! பிஜாஹி செய்யதில் முர்சலீன்  !


Related Posts Plugin for WordPress, Blogger...