Friday 19 October 2018

இல்யாஸி தப்லீக் ஜமாத்தும் தேவ்பந்தின் முன்னோடிகளும்

நவீனகால இணையதள இல்யாஸி தப்லீக் ஜமாத்தின் வினோதமான பிரச்சாரம், குப்ரியத்தான  விஷயங்களை எழுதியும் ,பரப்பியும் வந்த இஸ்மாயில் திஹ்லவி , அஷ்ரப் அலி தானவி , ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,காஸிம் நாணோத்வி ,கலீல் அஹ்மத் அம்பேத்வி  போன்றோருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை . அவர்கள் கூறியதற்கு அவர்களே பொறுப்பு .

தப்லீக் ஜமாஅத் இவர்களை ஏற்கவில்லை .நாங்களும் ஸுன்னத் ஜமாத் தான் .அதுவும் பிக்ஹில் ஹனபி ,ஷாஃபி மத்ஹபை பின்பற்றுகின்றோம் . அகீதாவில் அஷ்அரி ,மாதுர்தியாக   உள்ளோம் . இன்னும் சொல்லப்போனால் நாங்கள் தஸவ்வுப் உடைய ஸில்ஸிலா உடையவர்களாக உள்ளோம் . 

தப்லீக் ஜமாஅத் அமல்களை செயல்படுத்தாத நவீன கால இஸ்லாமிய சமூகத்திடையே அதை உயிர்ப்பிக்கவே வந்துள்ளது . இதைக் கொண்டு இன்று எத்தனை அநேகம் பேர்கள் தொழுகையாளிகளாக மாறியுள்ளனர் .எனவே அது தான் அசல் நோக்கம் . தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் வஹாபிகளுக்கு எதிரி என்றல்லாம் பிரச்சாரம் செய்து வருகின்றனர் .

பாமர இஸ்லாமியர் ஒருவர், கேட்பதற்கு மிகவும் எதார்த்தமாக உள்ள விஷயங்கள் தானே என்று எண்ணவும் கூடும் . ஆனால் தேவ்பந்தி முன்னோடிகளுக்கும் ,இல்யாஸி தப்லீக் ஜாமத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை  ஆதாரங்களுடன் விரிவாக காண்போம் .

                                            தப்லீக் ஜமாஅத் 


Mu-hammed Ilyas al-Kandhlawi

தப்லீக் ஜமாத்தின் முதல் அமீர் முஹம்மத் இல்யாஸ் காந்தலவி (மறைவு ஹிஜ்ரி 1362 / 1944 -44 ஆம் ஆண்டு )  - தப்லீக் ஜமாஅத்தின் நிறுவனர் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி(பிறப்பு 1829 ஆம்  ஆண்டு ) 1905ஆம் ஆண்டு மறைந்தார் . இல்யாஸ் காந்தலவி அவரிடம் 1899 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1315) பைஅத் செய்தார்  .

அதன் பின்னர் சில காலம் கழித்து மவ்லவி இல்யாஸ் , மற்றோரு தேவ்பந்தி முன்னோடியான கலீல் அஹ்மத் அம்பேத்வியிடம்  பைஅத் செய்தார் .
மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்'

தேவ்பந்தி பிர்காவின் உலமாவான அபுல் ஹசன் நத்வி ,தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் இல்யாஸ் காந்தலவியின்  வரலாற்றை கூறும் நூலை எழுதியுள்ளார் . அதன் பேர்  'மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்' என்பதாகும் . அந்த நூலுக்கு அணிந்துரை எழுதியவர் மவ்லவி இல்யாஸுடன் ஆரம்ப காலத்தில் பழகியவரும் , அவருடன் மேவாத் நகரில் இணைந்து சுற்றுப்பயணம் செய்தவருமான  மன்ஸுர் நுஃமானி தேவ்பந்தி .

அதில் பல இடங்களில் இல்யாஸ் காந்தலவிக்கும் ,குப்ரான கொள்கையுடைய  தேவ்பந்தி முன்னோடிகளுக்கும் உண்டான நெருங்கிய பந்தத்தை விவரிக்கிறார் .

 இல்யாஸ் காந்தலவியை பற்றி அவரது  தாய் வழி பாட்டி அம்மி பீ பற்றி கூறும் பொழுது '  இல்யாஸ் , நான் புனித ஸஹாபாக்களின் நறுமணத்தை உன்னிடம் நுகர்கின்றேன்  '. சில நேரம் அவரது கையை இல்யாஸின் முதுகின் மீது வைத்தவராக அம்மீ பீ கூறுவார் ,' என்ன விந்தை புனித ஸஹாபா பெரும்மக்களின் உருவத்தை ஒத்தவர்கள் உன்னுடன் நடமாடுதை காண்கிறேன் ? '   
 [ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 4 ] 

ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் நெருக்கம் : 
   
 மவ்லவி இல்யாஸின் மூத்த சகோதரர் முஹம்மது யஹ்யா 1893ஆம் ஆண்டு முதல் ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் இருந்தார் . முஹம்மது யஹ்யா தனது தந்தையின் அனுமதியுடன் இல்யாஸ் 
காந்தலவிக்கு 10 அல்லது  11 வயது இருக்கும் பொழுது 1896 அல்லது 1897 ல் கங்கோஹ்கிற்கு மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் கல்வி கற்க , தம்முடன் அழைத்து வருகின்றார் .

தமது 10 வயதில் வந்த தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் இல்யாஸ் காந்தலவி ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மறைவு வரை 1905 ஆம் ஆண்டு வரை அவருடனே தமது வாலிப காலத்தின் பெரும்பகுதியை கழித்தார் . அவர் மறையும் பொழுது  இல்யாஸ் காந்தலவிக்கு வயது 10 .
 [ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 8,9 ] 


இல்யாஸ் காந்தலவிக்கு , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் உண்டான நெருக்கம் எத்தகைய  உறுதியானது  என்றால் , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி இல்லாமல் அவருக்கு மனச் சாந்தி இல்லை . இல்யாஸ் காந்தலவி அடிக்கடி , பின்னிரவுகளில் உறக்கம் கலைந்து எழுந்து ,ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முகத்தை தரிசனம் செய்த பின்னரே உறங்க செல்வார் . மவ்லானா ரஷீத் அஹமத் கங்கோஹியும் அவரிடம் பிரியமாக இருந்தார் .
 [ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 9 ] 


மவுலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி 1905 ஆம் ஆண்டு மறைந்தார் . மவுலானா இல்யாஸ் ரஷீத் அஹமத் கங்கோஹியின் மரணத் தருவாயில் அவரின் படுக்கை அருகே இருந்து ,ஸுரா யாஸீன் ஓதிக் கொண்டே இருந்தார் . ரஷீத் அஹமதின் மரணத்தைக் கொண்டு மிகவும் வேதனை அடைந்த அவர் , " இரண்டு அதிர்ச்சிகள் எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது . எனது தந்தையின் மரணம் ,மற்றோன்று மவ்லானா ரஷீத் அஹமத் கங்கோஹியின் மரணம் " என்று அடிக்கடி கூறுபவராக இருந்தார் . 
  [ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 11 ] 


தேவ்பந்தின் தொடர்பும் ,கலீல் அஹ்மத் ஸஹ்ரான்பூரியின் தொடர்பும் :

1908ல் மவ்லானா இல்யாஸ் ,தேவ்பந்த் அரபிக் கல்லூரிக்கு சென்று திர்மிதி ,மற்றும் ஸஹீஹ் புஹாரி ஆகியவற்றை மவுலானா மஹமூத் ஹசனிடம் இருந்து கற்றார் . மஹ்மூத் ஹசன் ,மவ்லானா இல்யாசை அவரது ஆசான் ரஷீத் அஹமத் மறைந்து விட்டதால்   ,கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியிடம் சென்று   ஆத்மீக பயிற்சியும் ,அறிவுரையும் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினார் . இதன் பின்னர்  அவர் ஸுலூக் கின் பல்வேறு நிலைகளை கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியிடம் கற்றார் . 
  [ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 11 ] 

ஒரு முறை நான் நோய்வாய்ப்பட்டு ,மிகவும் உடல் நலிவுற்று படியில் கூட நடந்து செல்ல இயலாத நிலையில் இருந்தேன் . மவுலானா கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி தில்லி வந்துள்ளதாக திடீரென அறிவிக்கப்பட்டது . நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக,எனது நோயையும் , சோர்வையும்  மறந்தவனாக  நடந்தே தில்லி சென்றேன் . வழியில் செல்லும் போது தான் அது பற்றிய நியாபகமே வந்தது .
  [ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 12 ] 

மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோயின் ஆத்மீக ஆசான்களுடனும் ,பின்பற்றுபவர்களுடனும் வாடிக்கையாக தொடர்பு கொள்ளும் முறையை மவ்லவி இல்யாஸ் கொண்டிருந்தார் . ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்ப்பூரி மற்றும் அஷ்ரப் அலி தான்வி ஆகியோரை தனது இதயத்தில் ஏற்றி செயல்படுத்துவதாக கூறினார் . அவர்களும் ,அவரின் மீது மிகுந்த அன்பும் ,மரியாதையும் கொண்டிருந்தனர் .
  [ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 12,13 ] 

ஒரு முறை ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்பூரி ,அஷ்ரப் அலி தான்வி ,கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி ஆகியோர் காந்தலா வந்திருந்தனர் . தொழுகையுடைய வக்தில் ,மவ்லவி இல்யாசை இமாமத் செய்யுமாறு கூறினர் . அப்போது குடும்ப நண்பர் ,மவ்லவி பத்ரூல்  ஹசன் " பெரிய பெட்டிகளை இழுப்பதற்கு சின்ன இஞ்சினா " என்று நகைச்சுவையாக வினவினார் . 
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 14 ] 

mazahirul uloom

மழாஹிருல் உலூம் மத்ரஸாவுடன் தொடர்பு : 

1910 ஆம் ஆண்டில் ,மத்ரஸாவின் பெரும்பான்மையான ஆசிரியர்கள் ஹஜ்ஜுக்கு சென்றதால் ,புதிய ஆசிரியர்களை அவர்களுக்கு பகரமாக நியமித்தனர் .அதில் மவ்லவி இல்யாஸும் ஒருவர் . ஹஜ் முடிந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதும் , தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அனைவரும் தங்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர் .மவ்லவி இல்யாஸ் காந்தலவியைத் தவிர .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 14 ] 

மவ்லவி இல்யாஸின் நிக்காஹ் : 

மவ்லவி இல்யாஸ் காந்தலவி தமது தாய் மாமன் மவ்லானா ரவூப் ஹசனுடைய மகளை அக்டோபர் 17,1912 ஆம் ஆண்டு மணந்தார் . மவ்லானா அப்துர் ரஹீம் ராய்பூரி ,அஷ்ரப் அலி தான்வி ,கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி ஆகியோர் அவரின் நிக்காஹ்வில் கலந்து கொண்டனர் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 14 ,15] 
     
மவ்லவி இல்யாஸின் ஹஜ் : 

1915 ஆம் ஆண்டு ,மவ்லவி கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி மற்றும் மவ்லவி மஹ்மூத் அல் ஹசன் ஆகியோர் ஹஜ் செல்ல முடிவு செய்தனர் . இதை அறிந்த மவ்லவி இல்யாஸ் தாமும் அவர்களுடன் இணைந்து ஹஜ் செய்ய நாடினார் . அவ்விருவரின் பிரிவால் இந்திய தேசம் இருளில்  மூழ்கி விடும் என்றும் தம்மால் அவர்களை பிரிந்து ஸஹரான்பூரில் வாழ முடியாதுஎன்றும் எண்ணினார் . அதன் பின்னர் மவ்லவி கலீல்    அஹ்மத் ஸஹரான்பூரி  பயணித்த கப்பலில் உடன் பயணம் மேற்கொண்டு ஹஜ் செய்தார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 15] 

மவ்லானா இல்யாஸ் ஏப்ரல் 1925 ஆம் ஆண்டு ,மவ்லவி கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியுடன் தனது இரண்டாம் ஹஜ்ஜை நிறைவேற்றினார் . அப்போது தான் மதீனாவில் இருக்கும் பொழுது தமக்கு தப்லீக் ஜமாத்தின் முறை இல்ஹாமில் வழங்கப்பட்டதாக கூறுகிறார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 32,33] 

1938 ஆம் ஆண்டு மவ்லவி இல்யாஸ் ,மவ்லானா இஹ்திஸாமுல் ஹசன் ,மவ்லவி முஹம்மத் யூசுப் , மவ்லவி இனாமுல் ஹசன் மற்றும் ஹாஜி அப்துர் ரஹ்மான் ஆகியோருடன் தமது மூன்றாம்  ஹஜ்ஜுக்கு பயணித்தார் . 

இரண்டு வாரங்கள் கழித்து , மார்ச் 14, 1938 ஆம் ஆண்டு மவ்லவி இல்யாஸ் ஹாஜி அப்துல்லாஹ் , அப்துர் ரஹ்மான் மழ்ஹர் மற்றும்    
மவ்லானா இஹ்திஸாமுல் ஹசன் ஆகியோருடன் சவூதி அரேபியாவில் தப்லீக் ஜமாஅத் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வேண்டி சுல்தான் இப்னு சவூதை சந்தித்தார் . மன்னர் அவர்களை சங்கையுடன் வரவேற்றார் .பின்னர் சுமார் நாற்பது நிமிடம் அவர்களுடன் கலந்துரையாடி பின்னர் விடையளித்தார் . 

பின்னர் ஓர் நினைவுப் பத்திரத்துடன் மவ்லானா இஹ்திஸாமுல் ஹசன் ரயீசுல் குஜ்ஜத் (தலைமை காஜி ) யை சந்தித்து பேசினார் . அவரை மரியாதையுடன் வரவேற்ற தலைமை காஜி ,தாம் இந்த திட்டத்தை ஏற்பதாக அறிவித்தாலும் இதற்கு அனுமதி அமீர் பைசல் தான் வழங்க முடியும் என்றார் .

மக்காவில் இருந்த வரை தினமும் , காலையும் ,மாலையும் தப்லீக் ஜமாஅத் பணி நடைபெற்றது .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 42,43] 

வஹாபிய அரசாங்கம் ஜஸீரத்துல் அரபில் உள்ள எத்துணையோ அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்களை வீட்டுச் சிறையில் வைத்ததும் ,அவர்களை முடக்கியதும் நடைபெற்ற இக்காலத்தில் தான் இதுவும் நடைபெற்றது ,விந்தையிலும் விந்தை !!!

ஸஹரான்பூர் மத்ரஸாவும் தப்லீக் ஜமாத்தும்  : 

ஸஹரான்பூர் மத்ரசாவின் ஆசிரியர்கள் மவ்லானா இல்யாஸ் காந்தலவிக்கு நெருக்கமானவர்கள் . ஸஹரான்பூர் மத்ரஸாவின் நிர்வாக  கமிட்டி செயலாளர் மவ்லானா முஹம்மத் ஜக்கரிய்யா  , மவ்லானா அப்துல் லத்தீப் மற்றும் மத்ரஸா நிர்வாகிகள் அடிக்கடி தப்லீக் ஜமாஅத் பணிகளில் மேவாத் நகரில் ஈடுபட்டு , நிஜாமுதீனுக்கு மவ்லானா இல்யாஸ் விரும்பும் போதெல்லாம் வந்தனர் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 57 ]


இன்னும் இந்த நூல் முழுக்க தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் மவ்லவி இல்யாஸ் காந்தலவிக்கும்  ஏனைய தேவ்பந்தின் முன்னோடி உலமாக்களான மவ்லானா மன்ஸுர் நுஃமானி ,மவ்லானா   ஜக்கரிய்யா காந்தலவி , மவ்லவி ஹுசைன் அஹ்மத் மதனி ,தைய்யிப் தேவ்பந்தி ,மவ்லவி இக்ராமுல் ஹசன் ,நத்வத்துல் உலமா ,லக்னோ மதரஸாவுடன் உடைய தொடர்பும் ,நெருக்கமும் பற்றி சிலாகித்து சொல்லப்பட்டுள்ளது .

Nadwatul Ulama


 "தப்லீக் ஜமாத்தில் ,மழாஹிருல் உலூம் ,ஸஹரான்பூர் ,தாருல் உலூம் தேவ்பந்த் , நத்வத்துல் உலமா ,லக்னோவைச் சார்ந்த உலகமாக்களும் ,மாணவர்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படுவதைக் காண முடியும் "    
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 126] 

முத்தாய்ப்பாக தாருல் உலூம் தேவ்பந்தின் பின்வரும் பத்வாய்ப் பாருங்கள் . தப்லீக் ஜமாஅத் தான் தேவ் பந்த் ,தேவ்பந்த் தான் தப்லீக் ஜமாஅத் என்று இரண்டுக்கும் உள்ள தொடர்பை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கு கின்றது .



மவ்லவி இல்யாஸ் காந்தலவி    தப்லீக் ஜமாத் என்று அமைப்பின் நிறுவனர் . அவர் தமது பால்ய காலம் முதல் ,தமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் குப்ர் பத்வா வழங்கப்பட்ட தேவ் பந்தி முன்னோடிகளை தமது ஆசிரியர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களோடு நெருக்கம் காட்டியுள்ளார் .

மட்டுமல்லாது, அவர்களைத் தாம் இதயத்தில் ஏற்றி பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார் . அவர்களின் மறைவுக்குப் பின் தேவ்பந்தின் கொள்கையுடைய அரபிக் கல்லூரிகளின் உலமாக்களுடன் தான் பெரும்பாலும் தொடர்பு வைத்துள்ளார் .  இது ஏதோ எதேச்சையாக நிகழந்த ஒன்றல்ல . மாறாக  தமது வஹாபிய கொள்கையை உலமாக்களிடம் ஏற்றுக் கொண்டு அதைப் பரப்ப உண்டாக்கிய செயல் வடிவம் தான் தப்லீக் ஜமாஅத் .அதற்கு மக்களிடம் எதிர்ப்பு வந்தால் தேவ்பந்தி உலமாக்களின் ஆதரவைக் காண்பித்து ஏமாற்றும் ஏற்பாடே இது.

 தமிழக உலமாக்களின் பெரிய கூட்டமைப்பான ஜமாத்துல் உலமாவோ , மதில் மேல் பூனை என்றும் ,ஆடு பகை குட்டி உறவு என்றும் இரட்டை வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றது .

இடத்திற்கு தகுந்தால் போல் , தப்லீக் ஜமாத் வலிமையாக உள்ள இடங்களில் (திண்டுக்கல் ,மேல்விஷாரம் ,கடலூர்  போன்று )  அதை தூக்கிப் பிடிப்பதும் , அது அல்லாத இடங்களில் ஸுன்னத்  வல் ஜமாத்தின் வெளிப்படையான அமல்களை ஆகும் என்று பேசுவதும் ( மீலாத் ,மவ்லூத் ,ஜியாரத் ,உரூஸ் போன்று )  எள்ளி நகைக்கத்தான் தோன்றுகின்றது .

இன்றைய தகவல் தொழில் நுட்ப காலத்தில் மக்களையே ஏமாற்ற இயலாத நிலையில்  ,அல்லாஹ்வையும் ,அவன் ஹபீப் கண்மணி நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களையும் நாளை எந்த முகத்தோடு சந்திப்பீர்கள் ,உங்களின் கடமையைப் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு எங்கனம் பதில் அளிப்பீர்கள் .

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் ,இல்யாசீ தப்லீகி  தேவ்பந்திகளுக்கும் உ இடையே உள்ள கொள்கை முரண்பாடு தீனுடைய அடிப்படை (தரூரியத் ஏ தீன் )களில் உண்டான முரண்பாடு .

இந்திய வஹாபியிசத்தின் தந்தை இஸ்மாயில் திஹ்லவியின் "தக்வியத்துள் ஈமான் " பற்றிய தேவ்பந்தின் பத்வாய்ப் பாருங்கள் 


இப்னு அப்துல் வஹாப் நஜ்தி அல் தமீமி பற்றிய தேவ்பந்தின் பத்வாய்ப் பாருங்கள் . இப்னு அப்துல் வஹாப் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தைச்  சார்ந்தவனாம் !!!


  

அதை ஏதோ தேவ்பந்தின் உலமாக்களும் ,பரேலி உலமாக்களுக்கும் இடையே உண்டான கருத்து மோதல் , புரிதலில் உள்ள தவறு என்று இன்னும் எத்துணை காலத்திற்கு சப்பை கட்டு கட்டுவீர்கள் .

        
Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 6 October 2018

காஸிம் நாணோத்வியின் தவஜ்ஜு

மவ்லானா முனாஜிர் ஹஸன் ஓர் ஆச்சரியமான சம்பவத்தை விவரிக்கிறார் . ஒரு சிலர் சட்டா மஸ்ஜிதில்(தேவ்பந்த் )  குழுமியிருந்தனர் . மவ்லானா யாகூப் (தேவ்பந்த் மத்ரஸாவின் பொறுப்பாளர் ) அந்த கூட்டத்தில் இருந்தார் . மவ்லானா யாகூப் கூறினார்கள் 

" இன்று காலை தொழுது கொண்டிருக்கும் பொழுது எனது உயிர் மாண்டு விடும் நிலையில் இருந்தது . மக்கள் அவரிடம் என்ன காரணம் என்று வினவினர் ? . அவர் கூறினார் சூரா முஸம்மில் ஓதிய பொழுது ,எனது இதயம் ஓர் விந்தையான சக்தியின் காரணமாக திடீரென இறுகி ,எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேற இருந்தது . ஆனால் எப்படியோ இந்த நிலை சிறிது நேரத்தில் மாறியது .

தொடர்ந்து அவர் கூறினார் ,தொழுகை முடிவுற்றவுடன் இந்த விஷயம் குறித்து ஆழ்ந்து சிந்தித்தேன் . என்னிடம்  சொல்லப்பட்டது அந்த சம்பவம் நடந்த பொழுது மவ்லானா காஸிம் நாணோத்வி மேராத் என்னும் ஊரில் இருந்து என்னை நோக்கி தவஜ்ஜு செய்தார்கள் . இதன் காரணமாக எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேறும் நிலைக்கு சென்று எனக்கு சங்கடம் ஏற்பட்டது .

மேலும் தொடர்ந்து

" எல்லாவற்றையும் அலசி ஆராயும் புத்தி உடையோர் இதனை எங்கனம் புரிந்து கொள்வர்  . தேவ்பந்திற்கும் ,மேராத் நகரங்களுக்கும் இடையே அதிக தொலைவு இருந்தாலும் , இந்த தூரம் தடை ஏற்படுவதற்கு ஓர் காரணமல்ல " . 

சவானெஹ் காசிமி


[ நூல் - சவானெஹ் காசிமி , பாகம்  1, பக்கம் 345 ]

ஆய்வு :  

இந்த விந்தையான சம்பவத்தை எங்கனம் புரிந்து கொள்வது ? இல்யாஸி தப்லீகி தேவ்பந்திகள் விளக்கம் அளிப்பார்கள் என்று எண்ணுகின்றேன் . மவ்லானா யாகூப் மிகவும் உயர்ந்த தரஜா உடையவர் போலும் . தொழுகை முடிந்து ,நடந்த சம்பவம் பற்றி ஆழ்ந்து யோசித்த நொடிப் பொழுதில் ,எல்லாமே அவருக்கு காண்பிக்கப்பட்டது .

சில மாதங்களோ ,சில மணி நேரங்களோ  அல்ல சில வினாடிகளில் வேறு ஓர் ஊரில் இருக்கும் மவுலானா காஸிம் நாணோத்வி தான் இதை செய்தார் என்று அறிந்தார் .

சிறிதேனும் வெட்கம் இருந்தால் தேவ்பந்திகள் தங்களது  தலையை தொங்கிக் கொள்ளட்டும் . இதுதான் தங்கள் பிர்காவின் உலமாக்களை பற்றிய அவர்களின் நம்பிக்கை .

ஆனால் ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் பற்றிய அவர்களது நம்பிக்கை பின் வருமாறு 

" பல விஷயங்களில் ,நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் தவஜ்ஜு செய்தார்கள் ,அவர்கள் கவலையுற்றார்கள் ,அமைதி காத்தார்கள் . இப்க் உடைய சம்பவம் நிகழந்த பொழுது (உம்முல் மூஃமீனின் அன்னை ஆயிஷா رضي الله عنها அவர்கள் மோதிரம் தொலைத்ததும் ,இஸ்லாத்தின் எதிரிகள் அவதூறு பேசியதும் )   ,நாயகம் தவஜ்ஜு செய்தார்கள் எனினும் எதையும் அறிய முடியவில்லை . ஒரு மாதம் கழித்து வஹீ மூலமே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது " 

[ நூல் - ஹிப்ளுள் ஈமான் , பக்கம் 7,அஷ்ரப் அலி தான்வி  ] 

உங்களது பிர்காவின் உலமாக்களை பெருமை பிதற்ற எத்துணை கதைகளை உங்கள் நூற்களில் எழுதியுள்ளீர்கள் . நொடிப்பொழுதில் தவஜ்ஜு செய்யும் உங்களது உலமாக்கள் ???


இல்யாஸி தப்லீகி தேவ்பந்தி வஹாபிகளே ,இன்னும் எத்துணை எத்துணை ஆதாரம் அளித்தால் ,உங்கள் முன்னோடிகள்  கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  மீது அவமரியாதை செய்தனர் என்றும்  ,அவர்களின் சங்கையையும் ,கண்ணியத்தையும் குறைத்தனர் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் ???

மூஃமீன்களே ,நடுநிலை வேஷம் போட்டு உலக ஆதாயம் தேடும் உலமாக்களே , உண்மையில் நாம் நாளை கியாமத் வேளையில் உச்சந் தலையில் சூரியன் அனல் கக்கும் வேளையில் ,இப்பாவிகளுக்கு மன்றாடும் ஷபீயுல் முதனீபீன் தாஹா ரஸூல்   
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ஷபாஅத்தை  யாசிப்பீர்களேயானால் , கண்மணி நாயகத்தை அவமரியாதை செய்யும் முனாஃபிக்களை நேசிப்பதை விட்டும் விலகுங்கள் .

இத்துடன் இஸ்மாயில் திஹ்லவி "தக்வியத்துல்  ஈமான் " நூலில் எழுதியுள்ளதையும் காண்க 

" அல்லாஹ்வையன்றி வேறு யாராகிலும்  மறைவான ஞானம்  உடையவர் என்று நினைத்தாலோ , அல்லது வேறு இடத்தில நடப்பவற்றை அறிகின்றார் என்று நினைத்தாலோ , அவர்கள் சுயமாக அறிந்தார்கள் என்றோ , அல்லது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அறிவிக்கப் பட்டது என்று நம்பிக்கை கொண்டாலும் ,எல்லா நிலையிலும் அது ஷிர்க் "

[நூல் - தக்வியத்துள் ஈமான் , பக்கம் 10 ] 
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 5 October 2018

மன்ஸுர் நுஃமானி தேவ்பந்தி

முஹம்மத் மன்சூர் நுஃமானி தேவ்பந்தி , தப்லீகி தேவ்பந்தி பிர்காவினர் மதிக்கும் இந்தியாவைச் சார்ந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞர் .  இவர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் சம்பல் என்னும் ஊரில் (பிறப்பு -15 ,திசம்பர் , 1905 ஆம் ஆண்டு  / இறப்பு - 4/5 மே ,1997) பிறந்தார் .

[ நூல்- தாருல் உலூம் தேவ்பந்தின் வரலாறு ,பாகம் 2, பேராசிரியர் முர்தாஸ் ஹுசைன் குரைஷி ,தேவ்பந்த் ,இந்தியா   ]
  
மற்றோர் தேவ்பந்தி முன்னோடியான அன்வர் ஷாஹ் காஷ்மீரியின் மாணவரான  இவர், தேவ்பந்தில் 1927ல் பட்டம் பெற்றார் . மேலும் நத்வத்துல் உலமாவின் 4 ஆண்டுகள் பணியாற்றி ,அபுல் ஹஸன் நத்வியின் நெருக்கமான நண்பராக இருந்தார் . 1941ல் ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து ,மவ்தூதி சாஹிபிற்கு அடுத்த நிலையில் 'நாயிப் அமீராக' இருந்தார் . பின்னர் 1942ல் மவ்தூதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஜமாத்தே இஸ்லாமியில் இருந்து விலகினார் .

இறுதியாக இல்யாஸி தப்லீக் ஜமாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் . தாருல் உலூம் தேவ்பந்தின் 'மஜ்லிஸ் ஏ ஷுரா' ,'மஜ்லிஸ் ஏ ஆமிலா ' ஆகியவற்றிலும்  பங்காற்றினார் .

பைஸ்லா குன் முனாஜரா

சமீப காலமாக இல்யாஸி தப்லீகி தேவ்பந்திகள்         மன்சூர் நுஃமானி எழுதிய நூலான 'பைஸ்லா குன் முனாஜரா'  வைக் கொண்டு பெருமை பிதற்றித் திரிகின்றனர் .  இந்த நூலின் பெயரைக் கொண்டு ஏதோ விவாதத்தைப் பற்றிய நூல் என்று மேலோட்டமாகத் தோன்றலாம் .    

ஆனால் நூலாசிரியர் நூலின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகின்றார் (இஸ்மாயில் திஹ்லவி வஹாபிக்கு  ஆதரவு கொடுத்து , புகழ்ந்த பின்னர் )    இந்த நூலானது ,1933ஆம் ஆண்டு லாகூரில் நடைபெறுவதாக இருந்த ஓர் விவாதத்திற்கு தாம் தயார் செய்திருந்த தன்னுடைய பதில்  என்று . காவல் துறையின் தலையீட்டால் விவாதம் நடைபெறவில்லை .

ஹுஸாமுல் ஹரமைன்

அதன் பின்னர் நூலாசிரியர் இந்த பதிலை  இமாம் அஹ்மத் ரிழா கான் ஹனபி மாதுர்தி  காதிரி   رضي الله عنه    அவர்கள்(1856 -1921)  குலாம் அஹ்மத் காதியானி மற்றும் நான்கு தேவ்பந்தி முன்னோடிகளின்  குப்ரியத்தை வெளிக்காட்டி ,சங்கைக்குரிய மக்கா ,மதீனா உலமாக்களின் ஒப்புதலோடு வெளியிட்ட 'ஹுஸாமுல் ஹரமைன் ' நூலுக்கு  மறுப்பாக வெளியிட்டார் .  மன்சூர் நு ஃ மானியின் மேற்கூறிய மறுப்பு என்பது நான்கு தேவ்பந்தி முன்னோடிகளின்  குப்ரியத்தான வாக்கியங்களுக்கு விளக்கம் அளிக்கும் பயனற்ற முயற்சியே அன்றி வேறில்லை . 


முப்தி அஜ்மல் சம்பலி رحمتہ اللہ علیہ  அவர்கள் (1318/1900- 1383/1963)  , 1374/1954 ஆம் ஆண்டு எழுதிய தலைசிறந்த படைப்பான 
" ரத் ஷஹாபே சாகிப்  பர் வஹாபி காய்ப் " என்னும் நூலில் ஹுசைன் டான்டவி  தேவ்பந்திக்கு (1297/1879-1377/1957)  மறுப்பாக மட்டும் இல்லாமல் , மன்ஸுர் நுஃமானி எழுப்பும் சகலவிதமான   விளக்கங்களுக்கும் பதில் அளித்து உள்ளார்கள்  . இந்த தேவ்பந்தி உலமாக்கள் உட்புகுத்திய  எல்லாவிதமான  தந்திரங்களுக்கும் ,தெளிவான பதிலும் ,மறுப்புரையும் வழங்கப்படுள்ளன .

பின்னர் சில ஆண்டுகள் கழித்து ,முப்தி ஷரீப் அல் ஹக் அம்ஜதி 
 رحمتہ اللہ علیہ  அவர்கள்  (1339/1921-1421/2000) , 1409/1988 ஆம் ஆண்டு "ஸுன்னி -தேவ்பந்தி இக்திலாப் கா முன்சீப்பானா ஜாயிஸா " என்னும் நூலை எழுதினார்கள் . 

இந்நூல் 'பைஸ்லா குன் முனாஜரா' நூலில் மன்ஸுர் நுஃமானி  எழுதிய பொய்களையும் ,பித்தலாட்டங்களையும் எடுத்துக்காட்ட இயற்றப்பட்டது . முப்தி ஷரீப் அல்ஹக் அம்ஜதி  رحمتہ اللہ علیہ  அவர்கள் அதில் வரிக்கு வரி மறுப்புரை எழுதியிருந்தார்கள் . 

ஸுன்னி -தேவ்பந்தி இக்திலாப் கா முன்சீப்பானா ஜாயிஸா

Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday 23 September 2018

ரஷீத் அஹ்மத் கங்கோஹிக்காக சமைக்கும் கண்மணி நாயகம்

தலைப்பை கண்டதும் உண்மை மூஃமீன்களின் நெஞ்சம் பதறத் தான் செய்யும் .

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் மற்றோரு பொய் பித்தலாட்டங்களில் ஒன்று ,தமது முன்னோடிகளின் அந்தஸ்தையும் , மதிப்பையும் உயர்த்த எந்த அளவுக்கும் துணிந்து செல்வர் . எந்த அளவிற்கு என்றால்  அது   மூஃமீன்களின்  உயிரினும் மேலான ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் கண்ணியத்தை குறைத்து தங்களின் முன்னோடிகளின் பெருமைகளை மேடையேற்றுவதில் ,பெருமை பீற்றுவதில் ,அகங்காரச் செருக்கில் அவர்களின் உஸ்தாதான இப்லீஸின் அடியொற்றி நடப்பவர்கள் .

" ஒரு முறை ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் ஓர் கனவு கண்டார்கள் . அதில் தமது சகோதரரின் மனைவி தமது விருந்தினர்களுக்கு உணவு சமைப்பதாக கண்டார்கள் . அப்பொழுது நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் வந்து கூறினார்கள் ," இங்கிருந்து எழுந்திருங்கள் . இம்தாதுல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சமைப்பதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல . அவரது விருந்தினர் உலமாக்கள் ,எனவே நானே சமைகின்றேன் " . ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் இக்கனவு மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,அவரிடம் பைஅத் எடுத்ததன் மூலம்  உண்மையானது .ஏனெனில் ஹாஜி சாஹிப் அவர்களிடம் பைஅத் எடுத்த முதல் உலமா அவர்தான் ."


[ நூல்- தஸ்கிரத்தூர் ரஷீத் , பாகம் 1,பக்கம்  75 ,புதிய பதிப்பு ]


ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رضي الله عنه அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த காமிலான ஷெய்கு . கனவு அவர்தானே கண்டார் ,இதில் ரஷீத் அஹ்மத் கங்கோஹியை குற்றம் பிடிப்பது என்ன நியாயம் என்று நினைக்கலாம் . 

தஸ்கிரத்தூர் ரஷீத் நூலானது ரஷீத் அஹமத் கங்கோஹியின் வரலாற்றை கூறும் நூல் .அவரது மகன் மஸுத் அஹ்மத் தின் உத்தரவின் பேரில் ,தேவ்பந்தி முன்னோடிகள் ஆஷிக் இலாஹி மீரடி , அப்துல் காதிர் ராம்பூரி ,மற்று கலீல் அஹ்மத் சஹ்ரான்புரி ஆகியோரின் எழுத்தாலும் முயற்சியாலும் வெளிவந்த நூல் . எண்ணற்ற ஹதீத் நூற்களையே பிறழ்வு செய்த இவர்கள் ,ரஷீத் அஹ்மத் கங்கோஹியை பரிசுத்தப் படுத்த   ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ அவர்கள் மீது இட்டுக்கட்டி உள்ளனர் . 
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹிந்துக்களின் கடவுள் பற்றி ரஷீத் அஹ்மத் கங்கோஹி

ஹிந்துக்கள் வணங்கும் பல்வேறு தெய்வங்களில் ராமரும் ,கிருஷ்ணரும் அடக்கம் . காபிர்களின் கடவுள் நம்பிக்கை இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அதனை இணைவைப்பு என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ,புகஹாக்களும் வரையறுத்துள்ளனர் . 

நாங்களும் தீன் பணி செய்கின்றோம் ,சீர்திருத்தம் செய்கின்றோம் என்று வாய் கூசாமல்  வஹாபிய கொள்கையை பரப்பும் தப்லீக் ஜமாத்தினரின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஹிந்து மதக் கடவுளைப் பற்றி என்ன நம்பிக்கை கொண்டிருந்தார் என்று பாருங்கள் . 

 " ராமரும் , கன்ஹையாவும் நல்லவர்கள் . பின் வந்த மக்கள் தான் அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கினர் " 

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2, பக்கம் 359 
ஆசிரியர் - ரஷீத் அஹ்மத் கங்கோஹி  ] 


இராமனும் ,கிருஷ்ணனும் வரலாற்று நபர்கள் அல்லர் .அவர்கள் இதிகாசங்களிலும் ,புராணங்களிலும் சொல்லப்பட்ட கதை மாந்தர்கள்(மஹாபாரதம் ,இராமாயணம் )  என்று இந்திய வரலாற்று ஆசிரியர்களே பல நூற்கள் எழுதியுள்ளனர் .

இன்னும் 14ஆம் நூற்றாண்டில் துளசிதாஸ் என்பவர் இயற்றிய இலக்கியமே பின்னர் இராம வழிபாட்டுக்கு மூலம் என்றும் சொல்லப்படுகின்றது .
[என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா   ] 

நமது கேள்வி எந்த ஆய்வுமே செய்யாமல் பொத்தாம் பொதுவாக பிற மதத்தினரின் கடவுளருக்கு  வக்காலத்து வாங்கும் தேவ்பந்தி தப்லீகி  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,எத்துணை ஆதாரங்கள் இருந்தும் அல்லாஹு سبحانه وتعالىٰ வையும் , படைப்புகளின் காரணகர்த்தா கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை நிந்தனை செய்தது ஏன் ??? 


  


Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 1 May 2018

நிலைகுலையும் தேவ்பந்தின் அஸ்திவாரம்

நாம் இங்கு காணவிருப்பது தேவ்பந்தின் ஸ்தாபகர்  மவ்லவி காஸிம் நாணோத்வியின் வரலாற்றைக் கூறும்  'ஸவானெஹ் காஸிமி' என்னும்   நூலில் உள்ள ஓர் சம்பவத்தை . இந்த நூலை எழுதியவர் தேவ்பந்தி வஹாபி பிர்காவின் ஆகப் பெரிய அறிஞர் மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி .

தமது ஸ்தாபகருக்கு செய்யும் மரியாதையாக   தாருல் உலூம் தேவ்பந்தின் மூலமே இந்த நூல் வெளியிடப்பட்டது .தேவ்பந்தின் முதல்வரும் ,காஸிம் நாணோத்வியின் பேரருமான  காரி தைய்யப் தமது பெயர் , இந்த நூலில் பதிப்பகத்தார் என்று வருவதை தமது பெரும் பேறாக கருதினார் .

ஸவானெஹ் காஸிமி


     மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி,மற்றோரு தேவபந்த் அறிஞர் மவ்லானா   மஹ்மூதுல் ஹசன் அவர்களின்   மூலமாக ஒரு நிகழ்வை விவரிக்கிறார் ,

" மவ்லானா   மஹ்மூதுல் ஹசன் தேவ்பந்தில் ஓதி கல்வி பயின்று பஞ்சாப் மாகாணம் நோக்கி பயணித்த ஒரு இளம் மவ்லானாவைப் பற்றி சொல்கிறார்

அந்த சிறிய ஊரின் மக்கள் தங்கள் மஸ்ஜிதின் இமாமாக இளம் மவ்லானாவை நியமித்தனர் . அவ்வூர் வாசிகள் வெகு விரைவில் இளம் மவ்லனாவிடம் நன்கு பழகினர் . சில மாதங்கள் கழித்து அவ்வூருக்கு  மற்றோரு மவ்லானா  வந்து ,மார்க்க கல்வி விளக்கம் கொடுத்து ,பயான்கள் செய்ய ஆரம்பித்தார் . அவ்வூர் மக்கள் சிலர் புதிய மவ்லானாவின் பயான்களால் ஈர்க்கப்பட்டனர் . புதிய மவ்லானா அவ்வூர் பள்ளியின் இமாம் பற்றி விசாரிக்க ,அவரிடம் தேவ்பந்த்தில் இருந்து வந்த    இளம் மவ்லானா பற்றி சொல்லப்பட்டது .

தேவ்பந்த் மதரஸா பேரைக் கேட்டதுமே ,புதிதாக வந்த மவ்லானா மிகவும் கோபம் அடைந்தவராக ,இவ்வளவு காலம் தேவ்பந்தி  இமாமின் பின் நின்று தொழுத தொழுகை செல்லாது என்று பத்வா வழங்கினார் .

அவ்வூர்வாசிகள் தாங்கள் இவ்வளவு காலம் தேவ்பந்தின் இமாமிற்கு வீணாக சம்பளமும் வழங்கி தங்கள் தொழுகையையும் வீணாக்கி விட்டோமே என்ற மன சஞ்சலம் உண்டானது .அவர்களில் ஒரு மனிதர் தேவ்பந்தின் இளம் மவ்லானாவை அணுகி 'ஒன்று நீங்கள் இந்த புதிய மவ்லானாவிற்கு மறுப்புரை வழங்குகள் அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் ' என்றார் .

இளம் தேவ்பந்தி மவ்லானா மிக பதற்றமடைந்தார் . தமது குறைவான அறிவின் காரணமாக ,புதிய மவ்லானா தம்மிடம் கலாம் ,தஸவ்வுப் பற்றி நீண்ட பயான்கள் மூலம் விளக்கம் அளித்தால் ,  தமது இந்த இமாமத் வேலை போய் விடும் என்று எண்ணினார் .இதையெல்லாம் எண்ணி பயந்தாலும் விவாதத்திற்கு ஒப்புக் கொண்டார் .

விவாதத்திற்கான இடம் ,நாள் ,நேரம் குறிக்கப்பட்டது . குறிப்பிட்ட நாளில் புதிய மவ்லானா கம்பீரமாக தலைப்பாகை அணிந்தவராக எண்ணற்ற நூற்களுடனும் ,தமது ஆதரவாளர்களுடனும் வந்தார் . ஆனால் இந்த பாவப்பட்ட தேவ்பந்தி மவ்லனாவோ  சோர்வான முகத்துடன் ,நடுங்கிய குரலில் ,மிகவும் பயத்துடன் அல்லாஹ் அல்லாஹ் என்றவாறு வந்தார் .

அந்த இளம் தேவ்பந்தி மவ்லானா , விவாதம் ஆரம்பமாகும் முன் ,முன்பின் அறியாத ஒரு நபர் அவர் அருகில் வந்து அமர்ந்து ,'ஆம் ,உரையைத் துவக்குங்கள் .பயப்படத் தேவையில்லை ' என்றார் . இந்த உத்தரவாதம் வந்தவுடன் தேவ்பந்தி மவ்லவி சற்று ஆறுதலும் ,மன வலிமையையும் பெற்றார் .

இளம் தேவ்பந்தி மவ்லானா அதன் பின் நாவில் இருந்து வந்த சொற்கள் என்னவென்றே தாம் அறியவில்லை என்கிறார் . ஆரம்பத்தில் புதிய மவுலானா சில பதில் அளிக்க முற்பட்டாலும் ,இளம் தேவ்பந்தி மவ்லானா அவரைப் பார்த்த பொழுது ,அந்த புதிய மவ்லானா எழுந்து நின்று அவர் காலடியில் தலையை வைத்து ,தலைப்பாகை சிதறி ,'நீங்கள் இவ்வளவு பெரிய மேதை என்று அறியாமல் பொய் விட்டது . அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள் .நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை .நான் தவறான வழியில் இருந்தேன் ' என்று அழுது புலம்பினார் .

அங்கு நடைபெற்ற அந்த காட்சி விவாதம் ஆரம்பிக்கும் முன் நடந்தவற்றிக்கு முற்றிலும் நேர்மாறானது . இளம் தேவ்பந்தி உலமா தமக்கு உதவ வந்த நபர் அதன்பின் காணாமல் மறைந்து விட்டார் என்கிறார் ."

[நூல் - ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 330-331 ]   

இந்த கதையை விவரித்த பின் மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி அந்த திடீர் நபர் பற்றிய பரம இரகசியத்தை உடைக்கிறார் .அவர் வேறு யாருமல்ல மண்ணோடு மண்ணாக மரணித்து மக்கிப் போன தேவ்பந்தின் ஸ்தாபகர் மவ்லவி காஸிம் நாணோத்வி .

மேற்கூறிய சம்பவத்தின் ஆய்வு :-

     முதலாவதாக , தேவ்பந்தியாக்கள் எத்துணை முழுமனதுடன் மவ்லவி காஸிம் நாணோத்வியின் இல்முல் கைப் (மறைவான ஞானம் ) பற்றி ஒப்புக்கொள்கின்றனர் என்பதைப் பாருங்கள் . எந்தளவுக்கு என்றால் குறிப்பிட்ட இளம் தேவ்பந்தி மவ்லானா தடுமாறுகிறார் ,அவருக்கு இந்த இடத்தில், இன்ன நேரத்தில் உதவி தேவைப்படுகின்றது என்ற அளவுக்கு  மறைவான ஞானம் . உடன் காஸிம் நாணோத்வி அவரை நோக்கி ஓடோடி உதவ செல்கின்றார் .

இரண்டாவதாக , காஸிம் நாணோத்வி தனது கபூரை விட்டு வெளியேறவும் ,விரும்பும் இடத்திற்கு செல்லவும் முடியும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .

மூன்றாவதாக , தேவ்பந்தி உலமாக்கள் தமது மரணத்திற்குப் பின் வந்து தமது ஆதரவாளர்களுக்கு உதவ இயலும் ,எனினும் நபிமார்கள் மற்றும் வலிமார்களை பொறுத்த மட்டில் அவ்வாறு ஒப்புக்கொள்ள இயலாது .

இந்த சம்பவத்தை விவரித்த பின் மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானிக்கு திடீரென வந்த ஞானோதயம் ,தேவ்பந்தியாக்களின் வஹாபிய கொள்கைப் படி ,இவ்வாறான நம்பிக்கையை ஏற்றுக் கொள்வது கிடையாது . மாறாக இத்தகைய கொள்கையை 'முஷ்ரிக்கான கொள்கை ' என்று கூறித்தான் பழக்கம் . ஆக இந்த கதையை எவ்வாறு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜோடிப்பது ? என்பதுதான் .

எனவே இத்தகைய கற்பனைக் கதையை தன்னிடம் கூறிய மவுலானா மஹ்முதுல் ஹசனின் கூற்றை ஒதுக்கித் தள்ளாமல் , தமது முன்னோடியின் அற்புத சக்தியை நிரூபணம் செய்ய தமது தேவ்பந்தி கொள்கையை  குழி தோண்டி புதைத்து விட்டார் .

இஸ்லாமிய பல்வேறு பிரிவுகளின் வரலாற்றையும் ஆராய்வோமானால் ,தேவ்பந்திகளைப் போல் தமது கொள்கையையே காவு  கொடுத்த ஒரு வெட்கம் கேட்ட பிர்கா இருக்காது . இந்த அற்புத சம்பவத்தை கூறிய பின்னர் மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானி  அதற்கு ஒரு விளக்கவுரையும் எழுதியுள்ளார் . உங்களில் ஒரு சிலர் அதை படித்து அதிர்ச்சியும் அடையக் கூடும் !

விளக்கவுரை மொழிபெயர்ப்பு :

            மரணித்த நல் அடியார்களின் ரூஹ் மூலம் உதவி உதவி தேடுதல் (இம்தாத் ) விஷயமாக தேவ்பந்தின் உலமாக்களுடைய நம்பிக்கையானது ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கை போன்றதே . இன்னும் ,அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் வானவர்கள் மனிதர்களுக்கு உதவுவதாகக் கூறியுள்ளான் . பல ஸஹீஹ் ஹதீதுகளில் மிஃராஜ் சம்பவம் குறித்த  அறிவிப்புகளில் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு ஹழ்ரத் மூஸா عَلَيْهَا ٱلسَّلامُ அவர்கள் தொழுகையின் எண்ணிக்கை குறித்த விஷயங்களில் உதவியதாகவும் ,   நாயகம்  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் ஏனைய நபிமார்கள் பலரை சந்தித்ததாகவும்  , நன்மாராயம் பெற்றதாகவும் உள்ளது . எனவே இத்தகைய புண்ணிய ஆத்மாக்கள் அல்லாஹ்வால்  துயரில் இருக்கும் முஸ்லிகளுக்கு உதவ  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதென்றால் ,இதனை குரானின் எந்த ஆயத் அல்லது ஹதீத் மறுக்கின்றது ?

[நூல்-  ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 332,சிவப்பு அடிக்கோடு ]

ஸுப்ஹானல்லாஹ் ! இது தானே சத்தியம் ! மரணித்த நல்லடியார்களின் ஆன்மாவைக் கொண்டு உதவி தேடுதல் சம்பந்தமாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் எத்தகைய கேள்விகளைக் கேட்டோமோ ,அதையே தேவ்பந்தியாக்கள் தங்களை நோக்கிக் கேட்கின்றனர் . இதை குப்ர் ,ஷிர்க் என்று இவ்வளவு காலம் பிதற்றி வந்த தேவ்பந்தியாக்கள் பதில் அளிக்க வேண்டும் . இந்த விளக்கவுரையில்      மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானி இது தான்   அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை என்று ஒப்புக் கொள்கிறார் .

ஆனால் அந்தோ பரிதாபம்  மவ்லானா முனாஸிர் ,தமது முன்னோடி அஷ்ரப் அலி தான்வி ,தமது நூல் ஹிப்ளுள் ஈமான் ,பக்கம் 7ல் “பெருமானார் முஹம்மது صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட மறைவான ஞானம் விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ளது போன்றே மேலும் அதற்கு சமமானதே “  என்று எழுதியுள்ளதை மறந்து விட்டார் .

இன்னும் மவ்லவி ரஷீத் அஹ்மத் "எவரொருவர் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு மறைவான ஞானம் அளிக்கப்பட்டது என்று கூறுவாரோ அவர் முஷ்ரிக் " என்று பத்வா வழங்கியதையும் மறந்து விட்டார் .

இனி அந்த கதைக்கு வருவோம் .

தொடர்ந்து அளிக்கும் விளக்கத்தில் ,

" இன்னும் தெளிவான உண்மை என்னவென்றால் , உலகில் எந்த வகையிலும் உதவி பெறும் ஒரு மனிதன் , அல்லாஹுதாலா தான் இந்த உதவியை தனது படைப்புகள்  மூலம் அளிக்கின்றான் . உதாரணமாக வெளிச்சம் அளிக்கும் சூரியன் , பால் வழங்கும் பசு ,எருது போன்றவை . இது தான் சத்தியமான விளக்கம் ,இதை எவ்வாறு ஒருவர் மறுக்க இயலும் ? " 

இன்னும் தமது இறுதியான விளக்கம் அளிக்கும் நோக்கில் ,மவ்லானா முனாஸிர் எழுதுகிறார் ,


"நாங்கள் இறந்த நல்லடியார்களின் ஆன்மாக்களிடத்தில் உதவி தேடுவதை மறுப்பவர்கள் அல்ல " 

உர்து : புசுற்கோ கீ அர்வாஹ் சே மதத் லேனே கே ஹம் முன்கிர் நஹீ ஹைன் 

[நூல்- ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 332,பச்சை அடிக்கோடு ]

மவ்லானா முனாஸிர் அஹ்மத் தமது முன்னோடி கலீல் அஹ்மத் அம்பேட்வி எழுதிய 'பராஹீனே காத்தியா ' நூலை தமது ஆயுளில் படித்ததே இல்லை போலும் . அதில் கலீல் அஹ்மத் " மலக்குல் மவ்த்தும் ,ஷைத்தானுக்கு உள்ள இல்முல் கைப் குர்ஆன் ,ஹதீத் கொண்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது ,  எனினும் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு அவ்விதமான ஆதாரங்கள் இல்லை என்றும் ,யாராகிலும் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு இல்முல் கைப் உண்டென்று நம்பினால் அவன் ஷிர்க்கில் உள்ளான் " என்று கூறியுள்ளதை பார்க்க வில்லை போலும் . 

உங்கள் கண்களுக்கு புலனாகின்றதா ? மவ்லவி காஸிம் நாணோத்வியின் அமானுஷ்ய சக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படும் பொழுது ,குர்ஆன் ஹதீத் உடைய எல்லா ஆதாரங்களும் கொண்டு வரப்படுகின்றது .  காசிம் நாணோத்வி மனித அற்புதர் என்று நிரூபணம் செய்ய , எல்லாவிதமான தர்க்கங்களும் ,உதாரணங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன , மவ்லவி காசிம் நாணோத்வியின் உயர் அந்தஸ்தை நிரூபிக்க !

ஆனால் ,கைசேதம் ! படைப்பினங்களில் சிறந்த ,அல்லாஹ்வின் ஹபீப் , கத்மே நுபுவ்வத் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்
صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் நிந்தனை செய்யப்படும் பொழுது இவர்கள் ஒருவரும் முன்வரவில்லை !


உங்களின் முன்னோடிகள் தொழுகையில் பெருமானார் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் நினைவு வருவது எருமை  ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விட மோசமானது என்று எழுதிய போது எங்கே போனது குர்ஆனு,ஹதீத் உடைய  இந்த வசனங்கள் ,உதாரணங்கள் ???

உங்களுடைய முன்னோடிகள் கண்மணி நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் இல்முல் கைபை விலங்கினங்களுக்கும் , பைத்தியக்காரர்களுக்கும் ஒப்பிட்ட பொழுது எங்கே சென்றது மிஹ்ராஜ் உடைய ஹதீத் ??? 

அப்பொழுது ஏன் உங்களில் ஒருவரும் 
நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் இல்முல் கைப் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டது , அல்லாஹ் தனது ஹபீப் முஸ்தபா  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு தனது நாட்டத்தினால் மறைவான ஞானங்களை அளிக்கிறான் என்று ஏன் கூறவில்லை ???

இதன் பதில் வெட்ட வெளிச்சமானது . நாம் யாரை நேசிக்கின்றோமோ  ,எதை உண்மை என்று நம்புகின்றோமோ அதற்கு ஆதரவளிப்போம் . மவ்லவி காசிம் நாணோத்வியின் அந்தஸ்து கேள்விக்குறி ஆகும் பொழுது , காசிம் நாணோத்வி தனது மண்ணறையில் இருந்து வெளிவந்து ,நடந்து ,தமது விருப்பத்தின் பேரில் அமர்ந்து எல்லாம் எப்படி ? என்ற கேள்வி எழும் போது "அல்லாஹ் தான் நாடிய ஆன்மாக்களுக்கு பிறருக்கு உதவும் ஆற்றல் அளித்தான் " என்று சொல்லப்பட்டது . 

தமது மாணவர் கஷ்டத்தில் இருப்பது கபூரில் இருக்கும் காசிம் நாணோத்விக்கு எவ்வாறு தெரியும் என்பதற்கு "அல்லாஹ் இந்த ஞானத்தை வழங்கினான் " என்று சொல்லப்பட்டது .


ஆனால் மனவருத்தம் அளிக்கும் விடயம் என்னவென்றால் , சிலர் கண்மணி நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களை நிந்தனை செய்த ,செய்கின்றவர்களை மறுப்பதே இல்லை . எந்த தேவ்பந்தி தப்லீகியிடமும் என்று நாயகம்   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா ? என்று கேளுங்கள் , உங்களிடம் வழங்கப்படும் பதில் ' நாயகம்   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் படைப்பினங்களிலேயே அதிக ஞானம் வழங்கப்பட்டவர்கள் ' என்று .
கண்மணி நாயகம்  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள்  அல்லாஹ்வினால் மறைவான ஞானம் வழங்கப்படடவர்கள் என்ற பதில் வராது .

அவர்கள் இன்று வரை இல்முல் கைப் விடயமாக குர்ஆனின் தெளிவான விளக்கங்களை ஏற்பதில்லை  ,  ஆனால் , 'அல்லாஹ் காசிம் நானோத்வியிடம் ,நீர் இந்த கிராமத்திற்குச் சென்று உங்களது மாணவருக்கு உதவுங்கள் ' என்று கூறப்பட்டுள்ளதை மனமுவந்து ஏற்பார்கள் .

தேவ்பந்தி தப்லீகி வஹாபிகளின் முத்த முதல் முன்னோடி இஸ்மாயில் திஹ்லெவி தனது நூல் 'தக்வியத்துள் ஈமானில் ' எழுதியுள்ளதை இங்கு எடுத்துக் காட்டுவது சாலத் தகும் .

  கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் “
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]   

தேவ்பந்தி தப்லீகி வஹாபிகள் இனி இஸ்மாயில் திஹ்லவியின் நம்பிக்கை தவறென்று அதிகாரப்பூர்வமாக சொல்ல வேண்டும் ,இல்லை என்றால் காசிம் நாணோத்வியின் சம்பவம் ஷிர்க் என்று தீர்ப்பளிக்க வேண்டும் ! உண்மையை உரைப்பார்களா அல்லது வழக்கம் போல் தங்களது முனாபிக் தனத்தை வெளிக்காட்டுவார்களா ???

   



















Related Posts Plugin for WordPress, Blogger...