அல் முஹன்னத் அலா அல் முபன்னத் என்னும் நூல் அல் தஸ்திகத் லி தாப் அல் தல்பிஸாத் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நூல் இந்திய துணைக்கண்டத்தில் முதன்முதலில் ஹிஜ்ரி 1325(1907)ல் வெளியிடப்பட்டது.
அல் முஹன்னத் எழுதப்பட்டதின் பிரதான நோக்கம் அரபுலகைச் சார்ந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களிடையே தேவ்பந்திகள் வஹ்ஹாபிகள் அல்ல என்று நிரூபணம் செய்வதற்கே !!!
அல் முஹன்னத் மெளலவி கலீல் அஹ்மத் சஹரான்பூரி(மறைவு 1346 ஹிஜ்ரி/1927) என்ற தேவ்பந்திகளின் முன்னோடிகளால் மக்களை ஏமாற்றவும் ,தேவ்பந்திகளின் நூற்களில் உள்ளவற்றை மறைத்தும் எழுதப்பட்டது. அல் முஹன்னதைக் கொண்டு போலி பெருமை பேசும் தேவ்பந்திகள் அதில் கையொப்பமிட்ட அறிஞர்களின் பட்டியலை மட்டும் தான் தருவார்கள்.அவர்களிடம் எவ்வளவு கேட்டாலும் கேட்டாலும் அதில் கையொப்பமிட்ட அறிஞர்களின் கருத்துகளை நம்மிடம் காண்பிக்க வெட்கி மறுத்துவிடுவார்கள் .
இந்த நிலையை இங்கு காணுங்கள்
இன்னும் தேவ்பந்திகள் அந்த நூலை அதன் மூல வடிவத்தில் எவ்வாறு அரபுலக இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் சமர்ப்பிக்கப் பட்டதோ அவ்வாறே மக்களிடையே சமர்ப்பிக்க வேண்டும்,அதாவது அதன் கேள்வி,பதில் வடிவத்தில். அதன் மூலம் அனைவரும் உண்மையை அறிய முடியும் .
முதலில்,தேவ்பந்தி முன்னோடிகளில் ஒருவரான மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி தனது 'பதாவா ரஷீதியாவில்' மெளலூது பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம் .
"எந்த மெளலித் சபைகள் ஷரீயத்திற்கு புறம்பான செயல்களை விட்டும் தூய்மையாக இருந்தாலும்,முன்னெச்சரிக்கை காரணமாக,மக்கள் அதில் கலந்து கொள்வது தற்காலத்தில் ஆகாத செயலாகும் "
கேள்வி :
ஒரு மெளலித் சபையில் பலவீனமான அல்லது ஜோடிக்கப்பட்ட சம்பவங்களை விட்டும் விலக்கி ஆதாரப்பூர்வமான சம்பவங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டு நடைபெற்றால் அதில் கலந்து கொள்வதற்கு அனுமதி உள்ளதா ?
பதில் :
இதில் கலந்து கொள்வதற்கு வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
[நூல் - பதாவா ரஷீதியா ,வால்யூம் 2,பக்கம் 131]
மெளலித் சபைகள் நடத்துவது எந்த நிலையிலும் அனுமதி இல்லை
[நூல்- பதாவா ரஷீதியா ,வால்யூம் 2,பக்கம் 96]
கேள்வி :
வலிமார்களின் 'உரூஸ்' என்னும் கந்தூரி வைபவத்தில் குர்ஆன் மட்டுமே ஓதி இனிப்பு வழங்கப்பட்டால் அதில் கலந்து கொள்வதற்கு அனுமதி உள்ளதா ?
பதில்:
எந்த உரூஸ்,மெளலித் மஜ்லீஸ்களிலும் கலந்து கொள்வதற்கு அனுமதியில்லை மேலும் எல்லாவிதமான உரூஸ்,மெளலித் மஜ்லீஸ்களும் அனுமதியல்லாதவையாகும்.
[நூல்- பதாவா ரஷீதியா ,வால்யூம் 3,பக்கம் 143]
மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.
[நூல் - பதாவா ரஷீதியா,பாகம் 2 பக்கம் 144 -150,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநேஹ்ரி மஸ்ஜித் டில்லி ,ஹிஜ்ரி 1352,1933ம் வருட பதிப்பு ]
[நூல் - பதாவா ரஷீதியா ,பாகம் 3 பக்கம் 93,941 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநேஹ்ரி மஸ்ஜித் டில்லி ,ஹிஜ்ரி 1351,1932ம் வருட பதிப்பு ]
இனி அல் முஹன்னதில் உள்ள தேவ்பந்தி மோசடிகள் பின்வருமாறு
தேவ்பந்திகளின் இந்த பத்வாவை வாசித்த சுன்னத் வல் ஜமாஅத் அன்பர்களே,இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி அல் முஹன்னதில் எவ்வாறு உண்மைகளை உருக்குலைத்தார் என்று பார்ப்போம் .
அல் முஹன்னதில் உள்ள கேள்விகளைக் கேட்டது அரபு அறிஞர்கள் அல்ல என்பதை வாசகர்கள் நினைவில் கொள்க !!!
மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி தானே கேள்விகளைக் கேட்டு ,அதற்கு தேவ்பந்திகளின் நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் என்ன என்பதை தமது பதிலாக எழுதியுள்ளார் .
கேள்வி எண் 21: [அல் முஹன்னத் ]
" நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் அது குற்றம்(கபீஹ்),பித்அத்,ஹராம் என்று சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "
இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி கடுகளவு நேர்மையுடைய ஒரு தேவ்பந்தியாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்,
" ஆமாம்,எங்களின் ஸ்தாபகர் இஸ்மாயில் திஹ்லவி இம்மாதிரியான கொண்டாட்டங்களை முஷ்ரிக்கான நடைமுறை என்கின்றார் .எங்களின் ஷைகு ரஷீத் அஹ்மத் அனைத்து மெளலித் வைபவங்களையும் அனுமதியில்லாதது என்று தனது நூல்களிலும்,பத்வாக்களிலும் கூறியுள்ளார்.நாமும் இம்மாதிரியான மெளலித் விழாக்கள் ஹிந்துக்கள் தங்களின் கடவுள் கிருஷ்ணனை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா போன்று என்று கூறியுள்ளோம் "(பதாவா ரஷீதியா ,பராஹீனே காத்தியா )
இந்த பதிலை கலீல் அஹமத் தனது அல் முஹன்னதில் எழுதியிருந்தால் எத்துணை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அதில் கையொப்பமிடுவார்கள் !!
ஆனால்,கலீல் அஹ்மத், வஹ்ஹாபி பித்னா எவ்வாறு அரபுலகில் வேகமாக பரவி வந்ததையும், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த சத்திய உலமாக்கள் அதை எதிர்த்து வந்ததையும் அறியும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார் .
கலீல் அஹ்மத் அல் முஹன்னதில் என்ன எழுதினார் என்று அறியும் முன் தேவ்பந்திகளின் மற்றொரு அறிஞரான அன்வர் ஷாஹ் காஷ்மீரி(இறப்பு 1933) மெளலித் பற்றி என்ன எழுதினார் என்று பார்ப்போம்
وأحدثه صوفي في عهد سلطان إربل سنة ( 600 ) ، ولم يكن له أصل من الشريعة الغراء
العرف الشذي شرح سنن الترمذي - (2 / 82 مؤسسة ضحى للنشر والتوزيع)
"அது சுல்தான் இப்ரில் காலத்தைச் சார்ந்த ஸூபி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இதற்கு நமது தூய்மையான ஷரீயத்தில் எந்த ஆதாரமும் இல்லை "
"அது சுல்தான் இப்ரில் காலத்தைச் சார்ந்த ஸூபி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இதற்கு நமது தூய்மையான ஷரீயத்தில் எந்த ஆதாரமும் இல்லை "
இனி,மெளலானா கலீல் அஹமதுவின் பதில் அல் முஹன்னதில் என்ன என்பதைப் பார்ப்போம் .
"எந்த ஒரு முஸ்லீமுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் யாரும் பெருமானார் அவர்களின் செருப்பைப் பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியைப் பற்றி பேசுவதையோ கூட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் தொடர்புடைய எல்லா சம்பவங்களையும் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் பேசுவது அழகான ஒரு செயலாகும் இன்னும் எங்களிடத்தில் அது 'முஸ்தகப் '.அது பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியோ அல்லது அன்னாரின் கனவுகளைப் பற்றி பேசி பிறப்பைக் கொண்டாடுவது எங்களிடத்தில் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு செயலாகும்" .
ஆக கலீல் அஹ்மத் அரபுலகை சார்ந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்களை திருப்திபடுத்தும் பொருட்டு இந்த பதிலை அல் முஹன்னதில் எழுதினார் என்பது திண்ணம் .
மேலும் சில வரிகளுக்கு பின் அவர் எழுதுகிறார் ,
"நாம் பெருமானாரின் மெளலித் பற்றி பேசுவதற்கு எதிரானவர்கள் அல்லர் ,ஆனால் அதில் கலந்து விட்ட தவறான விஷயங்களுக்கு எதிர்ர்பாக உள்ளோம் .உதாரணமாக நீங்கள் இந்தியாவில் உள்ள மெளலித் மஜ்லிஸ்களில் ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் (மவ்து ) பேசப்படுகின்றன ,ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த சபைகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர் , மின்விளக்குகளும் தேவையற்ற வீண் விரயங்களும் நடைபெறுகின்றன,இதில் கலந்து கொள்வது 'வாஜிப்' என்று சொல்கின்றனர் ,கலந்து கொள்ளாதவர்களை விமர்சிக்கின்றனர் .இதுவெல்லாம் போக இன்னும் பல ஷரீயத்திற்கு மாற்றமான பல்வேறு விஷயங்கள் எல்லா மெளலித் மஜ்லீஸிலும் நீக்கமற நிறைந்துள்ளன ".
இது அல் முஹன்னதில் உள்ள பொய்களின் முதல் ஆரம்பம் !
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த எந்த மார்க்க அறிஞரும் மெளலித் மஜ்லிஸை 'வாஜிப்'
என்று கூறியதும் கிடையாது,அதில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து இருப்பதும் கிடையாது .இப்பொழுதும் இன்றைய நவீன யுகத்தில் பெருவாரியான மீலாத் விழாக்கள் இரவில் நடைபெறும் பொழுது ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர் .காலையில் நடைபெறும் விழாக்களில் பல்வேறு உலமாப் பெருமக்களின் பயான்கள் நடைபெறுவதையும் கண்கூடாகப் பார்க்கின்றோம் .
அப்படியானால் சில நூறு ஆண்டுகள் முன் கலீல் அஹ்மத் கூறியது போல் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து இருப்பதை யோசித்துப் பாருங்கள் ???
இனி தேவ்பந்தின் ஒரு பத்வாவைக் காண்போம் .
கேள்வி :
" நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி கண்டிக்கத்தக்க(முஸ்தக்பாஹ்) ஒன்று என்றும் அது தீய தடை செய்யப்பட்ட பித்அத்(அல் பித்அத் அல் ஸய்யியாஹ் அல் முஹர்ரமாஹ் ) என்று சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "
[இது விஷயமாக ரஷீத் அஹ்மத் கங்கொகியும் ,அன்வர் ஷாஹ் கஷ்மீரியும் கூறியதை நினைவில் கொள்க ]
பதில் :
"எந்த ஒரு முஸ்லீமும் கூறாத ஒன்றை நாங்கள் ஒரு போதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ மட்டுமல்ல ,இன்னும் பெருமானார் அவர்களின் புனித செருப்பில் கிளம்பும் தூசியோ பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியின் சிறுநீரையோ பற்றி பேசுவதையோ கூட ஷரீயத்தின் படி கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் அது தீய தடை செய்யப்பட்ட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் குறைந்த அளவு தொடர்புடைய சம்பவங்களை பற்றி பேசுவது மிகவும் விரும்பத்தக்க பரிந்துரைக்கப்பட்ட செயல்(அஹப் அல் மன்துபத் ) இன்னும் அது மிகப் பெரும் விரும்பத்தக்க செயலாகும்(அலா அல் முஸ்தஹப்பத் ).
இன்னும் எங்களிடத்தில் பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நினைவு கூறுவதோ அல்லது அன்னாரின் புனித திருமுகத்தையோ,நடப்பது,நிற்பது,உட்காருவது,உறங்குவது அல்லது அன்னாரின் புனித சிறுநீரைப் பற்றியோ நினைவு கூறுவது என்பதானது எங்களின் தெளிவான ஆய்வு நூலான 'பராஹீனெ காத்தியா'வில் கூறியது போன்றும் மற்றும் எங்களது பல்வேறு மஷாயிகுமார்களின் பத்வாக்களில் உள்ளது போன்றும் ,உதாரணத்திற்கு மவ்லானா அஹ்மத் அலி அல் முஹத்தித் அல் சஹாரான்பூரி ஷாஹ் முஹம்மது இஷாக் திஹ்லவியின் மாணவர் மற்றும் முஹாஜிர் மக்கி அவர்களது பத்வாவை நாம் எங்கு குறிப்பிடுகின்றோம் ,இதன் மூலம் இவை இது விஷயமாக உள்ள எங்களது பிற பத்வாகளுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகும் .
அவர்களிடத்தில் மீலாத் விழாவைக் குறித்து கேட்கப்பட்டது ,இது எந்த முறையில் அனுமதிக்கப் பட்டது எந்த முறையில் அனுமதி இல்லை என்று ?
அவர்கள் பின்வருமாறு பதில் உரைத்தார்கள் ,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித பிறப்பை வலுவான ஆதாரங்களைக் கொண்டும் ,கடமையான வழிபாடுகள் அல்லாத
காலங்களிலும்,ஸஹாபிகளின் வழிமுறைக்கு மாற்றமில்லாத்தும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று தலைமுறைகளைச் சார்ந்த ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமில்லாத்தும்,ஷிர்க் பித்அத் போன்றவற்றை விட்டு அகன்றதும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் கூற்றான "நானும் என் தோழர்களும் உள்ளது போல்" என்பதற்கு ஆதரமாக விளங்கிய ஸஹாபிகளின் நடைமுறைகளுக்கு எதிராகவும் இல்லாமல் ,ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகிய
மஜ்லிஸில் நினைவு கூறுவது, நன்மைகளும் பரக்கதுகளும் அடைய ஒரு காரணமாகும்.
மேலும் இதை நடத்த உள்ள ஓர் நிபந்தனை இந்த மஜ்லிஸை தூய எண்ணத்துடனும் ,நேர்மையுடனும் மேலும் இவை முழுமையான நல்ல நினைவுகூர்தலில் உள்ளடக்கியது என்று நம்பிக்கை கொள்ளுதல்
(ஜும்லாத் அல் அத்கர் அல் ஹஸனஹ் அல் மந்தூபஹ் ), மேலும் குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு தடையில்லாமல் இருத்தல் .இவ்வாறு இருக்கும் பொழுது இத்தகைய ஒரு மெளலித் மஜ்லீஸை சட்டவிரோதம் (கைர் மஷ்ரூ ) என்றோ பித் அத் என்றோ எந்த முஸ்லிமும் கூற முடியாது .
பத்வா முடிவுற்றது .
இதைக் கொண்டு நாங்கள் மீலாத் விழாவை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை ,மாறாக இத்தகைய மெளலித் மஜ்லீஸுகளில் நடைபெறும் அருவருப்பான செயல்களையே,நீங்கள் இந்தியாவில் காண்பது போல் ,ழயீபான அல்லது மோசடியான நிகழ்ச்சிகளைக் பயான்களில் கூறுவது ,
ஆண்பெண் இருபாலாரும் மறைவின்றி கலத்தல் ,ஆடம்பரமாக விளக்குகளைக்
கொண்டு அலங்கரித்தல் ,இவை கடமையானது என்று நம்பிக்கை கொள்ளுதல் ,இத்தகைய மஜ்லிஸில் கலந்து கொள்ளாதவர்களை இழிவுபடுத்துதல் ,அவமதித்தல் ,பெரும்பாலும் ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகியிருக்காத மஜ்லிஸ் ஆகியவற்றையே நாம் பகிரங்கமாகக் கண்டிக்கின்றோம் .
அவற்றிக்கு மற்றாக ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகிய
மஜ்லிஸில் நினைவு கூறுவதை நாம் அருவருப்பு என்றோ பித்அத் என்றோ கூறவில்லை .
எப்படி இந்த அசிங்கமான நம்பிக்கையை ஒரு முஸ்லீமைக் கொண்டு சந்தேகிக்கப்படும் ?எனவே இந்த பண்புகளை எங்களிடத்தில் சாற்றியவர்கள் ஏமாற்றும் பொய் சிந்தனையாளர்களின் கண்டுபிடிப்புகள் ( அல்லாஹ் உயர்வான அந்த ரப்பு அவர்களை இழிவுபடுத்துவானாக,இன்னும் கடலிலும் நிலத்திலும் ,மென்மையான மற்றும் கடினமான நிலத்தில் அவர்களை சபிப்பானாக )
[ நூல் - அல் முஹன்னத் அலா அல் முபன்னத் யானி அகாயிதே உலமாயே அஹ்லுஸ் ஸுன்னாஹ் தேவ்பந்த் ,பக்கம் 60-63 ]
மெளலிதுக்கு எதிரானவர்கள் ,அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த முஸ்லிம்களை அறியாமையில் இருப்பதாக
பிதற்றுகிறார்கள் .
செளத் ஆப்ரிக்காவில் உள்ள வஹாபிகள் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் பின்வருமாறு கூறியுள்ளனர் ,இந்தியாவில் மெளலித் மஜ்லீஸ் நடைபெறும் பொழுது திரைக்கு பின்னால் ஒரு பெண்,தன் மடியில் குழந்தையுடன் அமர்ந்திருப்பால் ,சிறிது நேரத்தில் குழந்தையைக் கிள்ளும் போது அதன் அழுகுரலைக் கேட்டு மக்கள் கியாமில் எழுந்து நிற்பர் .அதாவது பெருமானாரின் பிறப்பை குறிப்பதாக எண்ணிக் கொண்டு .
வாசகர்களே இது ஒரு கடைத்தெடுந்த பொய் ,இந்த கூற்றைக் கூறியவர் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்படுவது நிதர்சனம் .
இந்த வஹாபிகள் சுன்னத் வல் ஜமாத்தினரை எந்த அளவு வெறுக்கின்றனர் என்றால் தமது விருப்பத்தை நிறைவேற்ற இந்த அளவுக்கு பொய் புரட்டுகளை புனைவர் .
இது அல் முஹன்னதில் உள்ள ஒரு கேள்விக்கான பதில் தான் ( கேள்வி எண் 21).
ஏனைய பிற கெள்வி பதில்களும் இம்மாதிரியான பொய் புரட்டுகளால் நிரம்பியது தான் .
அல் முஹன்னதின் மூல பிரதியை வாங்கி படியுங்கள் ,அப்பொழுது தெரியும் இவர்களின் கொள்கைகளுக்கும் அல் முஹன்னதிலும் உள்ள வேறுபாடுகள் !!!
No comments :
Post a Comment