ரஹீத் அஹமத் எழுதுகிறார்,
" அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் என்பதன் அர்த்தம் என்னவென்றால் பொய் சொல்லும் தன்மை அல்லாஹ்வின் அதிகாரத்திற்குள் உள்ளது,அர்த்தமென்னவென்றால் அல்லாஹ்வால் காபிர்களுக்கு என்ன தண்டனைகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதோ,அவன் அதற்கு மாற்றமாக செய்ய அதிகாரம் கொண்டுள்ளான்,அவன் இதை செய்யமாட்டான் என்றாலும்....
சாத்தியம் என்பதன் அர்த்தம் நிச்சயம் நடக்கும் என்பதல்ல,அனால் நடக்கலாம் என்பதே. ஆதலால் மார்க்க அறிஞர்கள்,இஸ்லாமிய உலமாக்களின் நம்பிகையாகிறது பொய் சொல்லுவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதே என்பதாகும் "
[ பதவா ரஷீதியா வால்யூம் 1,பக்கம் 20, பதிப்பாளர்கள் குதுப்கானா ரஹீமியா தில்லி மற்றும் ஜய்யத் பார்கி பிரஸ் தில்லி ]
" அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் "
[ பதவா ரஷீதியா வால்யூம் 1,பக்கம் 18,19,20 ]
"அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் "
"அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் "
"அல்லாஹ் ஏற்கனவே பொய் உரைத்திருகின்றான் "
[ பதவா ரஷீதியா பாகம் 1, பக்கம் 20 மற்றும் தக்தீசுல் கதீர் பக்கம் 79 ]
மௌலானா ரஷீத் அஹமத் தனது பத்வாவில் கூறுகிறார் ,
"பக்கம் 97 ல்- இதனால் இதன் மூலம் ஊர்ஜிதமாகிறது பொய் உரைப்பதென்பது அல்லாஹுதஆலாவிற்கு சாத்தியம் "
ரஷீத் அஹமத் கூறினார்,
"ரஹ்மத்துல் ஆலமீன் என்னும் பதம் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக தொடர்புடையது அல்ல.,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கப்படும்"
[ பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 12 ]
"ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,உம்மதுகளையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம் "
[பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 12 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் தில்லி 1352 ]
"மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்"
[பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 144-150 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் 1352 ஹிஜ்ரி ]
[பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 93-94 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் 1351 ஹிஜ்ரி ]
"காகம் உண்பது நன்மைபயக்கும் செயலாகும் ஷபே பராத் அன்று உண்ணும் நேர்ச்சையால் எந்த நியாயமும்மில்லை "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 130]
ரஷீத் அஹமத் கூறினார்,
"ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பிரசாதம் முஸ்லிம்கள் உண்பது கூடும்,எனினும் பாத்திஹாவின் போது வழங்கப்படும் நேர்ச்சை உணவுகளை உண்பது கூடாது "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 123]
"சுத்தமாக இருந்தால் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவரின் இல்லத்தில் சமைத்த உணவை உண்பது கூடும் , என்பது கியார்வீன் ஷரீப் (கௌதுல் அஃழம் அவர்களின் ஈசாலே சவாப் )போது வழங்கப்படும் உணவுகளை உண்பது ஹராம் "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 130]
"ஒரு ஹிந்துவின் வட்டி பணத்தில் வைத்திருக்கும் தண்ணீர் பந்தலில் முஸ்லிம்கள் தண்ணீர் குடிப்பது கூடும், எனினும் ஒரு முஸ்லிம் முஹர்ரம் மாதத்தில் இமாம் ஹுசைன் அவர்களின் நினைவாக தண்ணீர் பந்தல் அமைத்து அதன் மூலம் தண்ணீர் அருந்துவது ஹராம் "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 112,113]
"ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பரிசுகளையும்,உணவையும் முஸ்லிம்கள் வாங்குவது கூடும் மற்றும் நன்மை தரக்கூடியது "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 123,பதிப்பகம் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் 1352 ஹிஜ்ரி ]
ரஷீத் அஹமத் பராஹீனே காத்தியா 51 பக்கத்தில் கூறுகிறார் கலீல் அஹ்மத் புத்தகம் பாக்கியம் போருந்தியவொன்று மேலும் தான் அதை பைத் ஐனி இஸ்லாம் என்னும் தரத்தில் வைத்துள்ளதாக கூறுகிறார் .
தச்கிரதூர் ரஷீத் பாகம் 2, பக்கம் 100 படிக்க தவறாதீர் !!!
No comments :
Post a Comment