Wednesday 21 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய வழிகெடு

இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் :

"அல்லாஹு தஆலா பொய் சொல்லுவது சாத்தியம் "  (அஸ்தக்பிருல்லாஹ் )
 [நூல் - யக் ரோசா பார்ஸி,பக்கம் 17-18 ].
மேலும்  கூறுகிறார் "அல்லாஹ் ஒரு பொய்யனாகயிருப்பது சாத்தியம்,நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மனிதனின் திறன் அல்லாஹ்வின் திறனை விட மேலானது என்று கருதவேண்டும் " .
Yak Roza

Ismail dehalwi Yak Roza Pg 17

Ismail dehalwi Yak Roza Pg 18


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"நீங்கள் தொழுகையின் போது உங்கள் மனைவியுடன் கூடுவது அல்லது தீய சலனமுடைய விபச்சார சிந்தனை கொள்வது நல்லது மேலும் ஷைகுமார்களையோ அல்லது ஒரு நல்லடியாரையோ அல்லது அது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவு வருவதைக்  காட்டிலும் கீழானது"
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம்  உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,லாகூர் பதிப்பகம் ]

இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"தொழுகையின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவில்  மூழ்கி இருப்பதை விட கீழானது" (அஸ்தக்பிருல்லாஹ் )
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,முஜ்தபை தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம்  உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,மாலிக் சிராஜுதீன் சன்ஸ் லாகூர் பதிப்பகம் ]
Siraata e  Mustaqeem Urdu Pg 86


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 

இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"தேவ்பந்திய உலமாவான (சையத் அஹ்மத் பரேல்வி) அவர்களை ஹஜரத் அலி குளிப்பட்டினார்கள் மேலும் ஹஜ்ரத் பாத்திமா அவர்கள் ஆடை மாற்றினார்கள் "
[நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 164, ஹிஜ்ரி 1308,முஜ்தபை தில்லி பதிப்பகம்]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம்  உர்து ,பக்கம் 280,நவம்பர் 1956 ,மாலிக் சிராஜுதீன் சன்ஸ் லாகூர் பதிப்பகம் ]


Siraata e  Mustaqeem Urdu Pg 280



இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் "
[ நூல் - தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58].
"அல்லாஹ் நாடினால்  நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று கோடானு கோடி பேர்களை உருவாக்குவான்"
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16]
 "பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்." (அஸ்தக்பிருல்லாஹ் )
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59]


Taqwiyatul Eeman, page 58-59


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்."
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம்29]
"ஒரு நபியை ஒரு மனிதனைப் போல மட்டும் தான் புகழ வேண்டும் ,இன்னும் அதற்கு குறைவாகவே புகழவேண்டும்"
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 35]
"படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும் ,எல்லாரும் இல்ம் என்னும் அறிவற்றவர்களாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள் ." (அஸ்தக்பிருல்லாஹ் )
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 3]
"ஒரு நபிக்கு தனது உம்மதிடம் உள்ள அந்தஸ்து ஒரு கிராம தலைவரைப் போன்று அல்லது நிலக்கிழார் போன்றது "
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 61, பைஜே ஆம்,சதர் பஜார்,தில்லி பதிப்பகம் ] 
"படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும், அல்லாஹ்வின் திருமுன் ஒரு செருப்பு தைக்கும் செம்மானை விட கீழாகவே உள்ளனர்" (அஸ்தக்பிருல்லாஹ் )
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 14]
"யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது."
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41]
"நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது நுண்ணறிவை இழந்து விட்டார்கள் " (அஸ்தக்பிருல்லாஹ் )
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 55 ]
Taqwiyatul Eeman, page 55


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார்"
[நூல் - தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]
 "அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் "
[நூல் -தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ]

மேற்கூரிய ஆதாரங்கள் தக்வீயதுல் ஈமான் பின்வரும் பதிப்புகளில் காணப்படும்

பாருகி பிரஸ் ,தில்லி  1895.
முஜ்தபை பிரஸ் ,தில்லி 1900.
கான்பூர் பதிப்பு 1905.
தில்லி பதிப்பு 1920.
ஜய்யெத் பிரஸ், 1937.
முஹ்சினி பிரஸ் ,கல்கத்தா 1954.
தேவ்பந்த் பதிப்பு 1976.
சல்பியாஹ் ,வாரணாசி 1986,1987.
பாம்பே பதிப்பு 1987.
ரியாத் பதிப்பு 1990 ( இது ஹஜ்ஜின் போது உர்து பேசும் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது !!! )
முபரக்பூர் பதிப்பு 1997.


முழுமையான ஆதாரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்




                                    அஸ்தக்பிருல்லாஹ் !!!



     
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment