நோக்கம்

Tabligh Deoband Tamil

  
    புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே !

                 
ஸலாத்தும் ஸலாமும் எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீதும்,அவர்தம் உத்தம தோழர்களான ஸஹாபாக்கள் மீதும்,அவர்தம் பரிசுத்த குடும்பத்தினர் மீதும்,தாபயீன்கள்,தபாத் தாபயீன்கள்,ஸித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள்,வலிமார்கள்,மஷாயிகுமார்கள்,
ஸாலீஹீன்கள் மீதும்  என்றென்றும் நிலவட்டுமாக !!!


        பெரும்பான்பையான தமிழக இஸ்லாமியர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா உடையவர்களாகவே இருக்கின்றனர். எனினும் வஹ்ஹாபிய தாக்கம் தமிழகத்தில் 1950களில் மெல்ல நுழைந்தது . தப்லீக் ஜமாஅத்தின் வடிவில் ஆரம்பித்து தேவ்பந்தி,ஜமாத்தே இஸ்லாமி,எஸ்.ஐ.எம்,அஹ்லே ஹதீஸ் ,ஜாக்,நஜாத் ,ஸலபி,தௌஹீத் என்னும் பல வடிவங்களில் தமிழக முஸ்லிம்களிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளது . அல்லாஹ் காப்பாற்றுவானாக !!!

                  இதில் ஏனைய வழிகேடர்களை இனம் கண்ட இஸ்லாமிய சமூகம், தப்லீக் ஜமாத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ளது. அவர்கள் தொழுகைக்கு தானே அழைக்கின்றனர் ,அவர்கள் மார்க்கம் தானே சொல்கின்றனர் என்று எண்ணுகின்றனர் . தப்லீக் ஜமாத்தின் வெளிரங்க அமல்களினால் மக்களின் மதி குழம்பியுள்ளது.இந்த வஹ்ஹாபிய கொள்கையைத்தான் இல்யாஸி தப்லீக்வாதிகள் தவ்ஹீது,கலிமா,தொழுகை,கஷ்த்,சில்லா,ஷப்குஜாரி,அமீர்,

கார்க்கூன்,இஜ்திமா,ஜோடு எனும் போலி  லேபிள்களை ஒட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.           ஆனால் அவர்கள் நோக்கம் என்ன என்பதை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாசே கூறுகிறார் ,


" எனது கருத்துகளை எவரும் விளங்கிக் கொள்ளவில்லை.ஜனங்கள் நினைகிறார்கள் .இது தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று.நான் சத்தியமாக சொல்கிறேன் .இது ஒரு போதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கமல்ல.மாறாக ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவதே இதன் நோக்கம் "                          
                                   [ நூல் : தீனி தஃவத் ,பக்கம் -234 ]மௌலவி இல்யாஸ் பிறிதொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் .
" கலிமாவைச் சொல்லவும்,தொழுகையைச் சரியாகப் பேணச்செய்வதும்  இவ்வியக்கத்தின் தப்லீக் ஜமாத்தின் கருத்தல்ல " 
                             [நூல் : மகாதீபே   இல்யாஸ்,பக்கம் -122]"கலிமா தொழுகையை பற்றிப் போதிப்பதும்,கற்றுக் கொடுப்பதும் ,நமது முழுத்திட்டத்தில் பாலர் பாடத்திற்கு அலீப் ,பே க்கு ஒப்பானதே "
                            [ நூல் : மல்பூஜாத்தே இல்யாஸ்,பக்கம்- 40]இனி இவர்களின் முழுத்திட்டத்தை மௌலவி இல்யாஸ் இவ்வாறு கூருகிறார் ,
"ஹஜ்ரத் மௌலானா அஷ்ரப் அலி தானவி அவர்கள் மிகப்பெரிய வேலை செய்திருக்கின்றார்கள் ,எனது மனம் விரும்புகிறது .கல்வி ,ஞானபோதனை அவர்களுடையதாகவும் ,தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்கட்டும் .ஏனேனில் இவ்வாறு அவர்களுடைய (அஷ்ரப் அலி தானவியுடைய) போதனை விரிவாகி விடும் ."
                            [நூல்:மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -71,72]

மேலும் இவர்கள் தானவியுடைய வஹ்ஹாபிய கொள்கைகளை வெளிப்படுத்தாது ,மறைமுகமாகவும் ,தந்திரமாகவும் போதிக்கின்றனர் என்பதையும் மௌலவி இல்யாஸ் பின்வருமாறு கூறுகின்றார் .
" பொது மக்களிடம் இது விஷயம் கூறலாகாது .எங்கு அவசியமோ அங்கு நமது இரகசியங்களையும் ,நோக்கங்களையும் விளக்குவது பாதகமில்லை "
                            [ நூல்: மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -72]

                  இதில்,மிகவும் வருந்தத்ததக்க விஷயம் மார்க்கம் கற்ற உலமாக்களும் அவர்களை சுன்னத் ஜமாஅத் என்று நம்பி ஏமாறுவது இன்று வரை தொடர்கிறது.பின்னர் பாமர மக்களின் நிலையை என்ன வென்பது ???
         உலக இன்பங்களுக்காக சோடை போனவர்களை பற்றிய கவலை இல்லை,அவர்கள் அல்லாஹ்வின் கேள்வி கணக்கை எதிர் கொண்டே ஆகவேண்டும். எமது ஆதங்கம் எல்லாம் அவர்களை பற்றிய உண்மை முகம் தெரியாமல் இருப்போரை பற்றியே. 

                     சமகால தமிழக உலமா பெருமக்களில் பெருவாரியானோர் தப்லீக் ஜமாத்தின் உண்மை முகத்தை தற்போது தான் உணரத் துவங்கியுள்ளனர்.  ஆனால் வேதனை என்னவெனில் தப்லீக் ஜமாஅத் வஹ்ஹாபிகள் ,தாருல் உலூம்  தேவ்பந்த் அஹ்லுஸ் சுன்னத் என்ற இரட்டை நிலைப்பாடு உங்களையும் குழப்பி சமுதாய மக்களையும் குழப்பும் செயலாகும் .உண்மையை அறியாதவர்கள் தான் இஸ்லாமிய கொள்கைகளான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை ஷிர்க்,குஃப்ர், பித்அத் எனப் பிதற்றித் திரிகிறார்களென்றால்,மார்க்கம் அறிந்த ஸுன்னத் ஜமாத் உலமாக்கள் பலர் கூட உண்மையைக் கூறாது வாய்மூடி இருப்பது தான் விந்தையாக இருக்கின்றது. பஸாது குழப்பதிற்கு அஞ்சி மௌனமாக இருப்பவர்கள் சுயமாகத் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறாவிட்டாலும் அக்கூற்றை மறுத்து முன்னோர்கள் கொடுத்திருக்கும் ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்பையாகிலும் எடுத்துக் காண்பிக்கலாமே.


அதன் காரணமாக அவர்கள் உண்மையை உணர்ந்து நேரான பாதையில் நடக்க அனுகூலமாயிருக்கும். அவர்களது விஷமப் பிரச்சாரத்தில் கற்றோர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தாது கண்மூடித்தனமாயிருப்பது நேர்மையன்று.பேயன் எறியும் கல்லும் அபாயத்தை விளைவிக்குமாகையால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறே விஷமத்தனமான பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி மெய் இன்னதென மக்களுக்கு எடுத்துரைத்துக் காட்ட வேண்டியது மார்க்கம் அறிந்த ஸுன்னத் ஜமாத் உலமாக்களின் கடமையாகும். 


        அண்ணல் அஃலா  ஹஜ்ரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் தாய் மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் இன்று தப்லீக் வஹ்ஹாபிகளால்  உடுரூவல் செய்யப்பட்டுள்ள நிலை ஒன்றே தமிழத்தின் இன்றைய குழப்ப நிலையை விளக்க போதுமானது . அல்லாஹ் இந்த தப்லீக் தேவ்பந்திய வஹ்ஹாபிகளை விட்டும் இஸ்லாமியர்களை காப்பாற்றுவனாக !!!        இதோ தேவ்பந்த் உலமாக்களே தாங்கள் யார் என்று வெளிப்படுத்துகின்றனர் ,மௌலவி ரஷீத் அஹமத் கங்கோஹி கூறுகிறார் , " முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பின்பற்றுவோரை வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படும் . அவர்களது கொள்கைகள் மிகவும் சிறந்தது "
[ நூல் - பதாவா ரஷீதியா  ,வால்யூம் 1, பக்கம் 111 ]தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கும் விதமாக மௌலவி மன்சூர் நுஃமானி கூறுகிறார் , " மேலும் நாங்கள் இங்கே தெளிவாக குறிப்பிடுகின்றோம் நாங்கள் தீவிர வஹ்ஹாபிகள் "
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]மௌலானா முஹம்மத் ஜக்கரியா காந்தலவி கூறுகிறார் , " மௌலவி சாஹிப் , நானோ உங்களை விட பெரிய வஹ்ஹாபி "
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் , " சகோதரரே, இங்கு வஹ்ஹாபிகள் உள்ளோம். இங்கு பாத்திஹா,நியாஜ் என்று எந்த பொருளையும் கொண்டு வராதீர்கள் "
[ நூல் -அஷ்ரபுஸ் சவானெஹ் ,புத்தகம் 1, பக்கம் 45]  தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் வாயிலிருந்தே அவர்கள் யார் என்று விளக்கியபின்னரும், உங்கள் சிந்தையில் தெளிவாகவில்லையாயின் , அல்லாஹ் காப்பாற்றட்டும் !!!      ஒரு முஸ்லிமான அடியானின் அகீதா(கொள்கைகள்) சீர்கெட்டால் அவனது  ஈமான் முறையற்றதாகிறது, மேலும் ஈமான் சரியாக இல்லை என்றால், அவரது அமல்கள்(இஸ்லாமிய செயல்முறைகள்)  பயனற்றதாகிறது. 


இதை விளக்கமாக கூறுவதென்றால் ,
அகீதா ஆன்மா, ஈமான் உடல், அமல் ஆடை ஆகின்றது.நல்ல வலுவான ஈமான் வேண்டுமென்றால், அகீதா சரியான முறையில் அமைய வேண்டும். இதன் காரணமாகவே இத்தளத்தில் நாம் மேற்கோள்காட்டும் இஸ்லாமிய கொள்கையல்லாதவை, முறையான இஸ்லாமிய கொள்கைகளைக் கொண்டு பதிலளிக்கப்படும் .அதை படித்த பிறகு அப்பாவியான முஸ்லிம்கள் அத்தகைய வழிகெட்ட கொள்கைகளை விட்டும் தவ்பா செய்து ,அதை விட்டும் விலகி மன உறுதியோடு நேரான கொள்கையோடு நடக்க வேண்டும்.
வழிகேட்ட கொள்கைகள் குஃப்ருக்கு வழிவகுக்கிறது,அதேசமயம் சரியான அகீதா ஈமானை வலிமைபடுத்துகிறது.  


       இதோ,உங்கள் முன் தப்லீக் ஜமாஅத் பற்றிய எல்லா ஆதாரங்களும் எடுத்து வைக்கபடும்.குரோதமான கண் கொண்டல்லாமல் நீதமான நன்னோக்குடன் இதை வாசியுங்கள்,நீங்களும் பயன் பெற்று மற்றும் நம் சகோதரர்களும் பயன்பெற செய்யுங்கள்.அதன்பின் தப்லீக் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத் இல்லை என்பது அல்லாஹ்  நாடினால் உங்கள் சிந்தையில் தெளிவாகும்.


   "நேரான வழி இன்னதென்று தமக்கு தெளிவான பின்பும்,யார் (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து விசுவாசிகளின் வழியல்லாதவற்றில் செல்கின்றானோ,அவனை நாம் அவன் செல்லலும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு பின்னர் அவனை நரகத்தில் சேர்த்து விடுவோம் .அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டதாகும் . "                அல் குரான் :சூரா 4,வசனம்-115.
     
பின்குறிப்பு :
         இதில் உள்ள பெருவாரியான பதிவுகள் யாவும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் சத்திய சீலர்களான சங்கையான உலமாப் பெருமக்களின் நூல்களில் இருந்தும் ,இணையத்திலும் இருந்தும் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது .

இதன் நோக்கம் தேவ்பந்தி தப்லீக்  ஜமாஅத் பற்றிய அனைத்து வஹாபிய ஆதாரங்களையும் ஒருசேர ஓரிடத்தில் பதிவு செய்வதே அன்றி வேறு எந்த சுயவிளம்பரம் தேடும் எண்ணமும் இல்லை . அல்லாஹ் ஹுதஆலா எல்லாம் அறிந்தவன் !!!இந்த பதிவில் ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது மொழிபெயர்ப்பு பிழைகளோ இருந்தால் வாசகர்களும் , சங்கைக்குரிய உலமாப் பெருமக்களும் சுட்டிக் காட்ட வேண்டுகின்றோம் .அவ்வண்ணமே திருத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம் .

எல்லா நன்மையும் அல்லாஹு தஆலாவின் புறமிருந்து வருகின்றன ,
பிழைகள் அனைத்தும் இந்த சிறியோனின் விளைவுகளால் ஏற்படுகின்றன
.
அந்த வல்லோன் எல்லா வாசகர்களையும் ஆசிர்வதித்து ,உங்களையும்  நம்மையும் அவன் புறமும் அவனின் ஹபீப் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் புறமும் நெருங்கச் செய்வானாக . ஆமீன் .

வல்ல ரஹ்மான் இந்த சிறிய முயற்சியை அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் ஏற்றுக்கொள்வானாக .
யா அல்லாஹ் ! உண்மையை உண்மை என்று நாங்கள் உணர்ந்து அவ்வுண்மையை நாங்கள் பின்பற்றி நடக்கும்படி உணர்த்தி நேர்வழி காட்டியருள் !

பொய்யை பொய் என நாங்கள் உணர்ந்து அப்பொய்யை விட்டு அகன்று நடக்கும்படியாக விளக்கப்படுத்தி நேர்வழி காட்டியருள் !ஆமீன் !!!Related Posts Plugin for WordPress, Blogger...