ஃபத்வாக்கள்

தப்லீக் ஜமாத் நிறுவனர், அவர்தம் குருநாதர்கள் மற்றும் தப்லீக் ஜமாத் பற்றி கொடுக்கப்பட்டுள்ள மார்க்க தீர்ப்புகள் :

தீன் பணி செய்கிறோம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு கபடத் தனமாக தீனோர்களை வழிகெடுக்கும் தப்லீக் ஜமாத்தின் போர்வையை கிழித்தும்,போலி வேஷத்தை கலைத்தும் பல கோணங்களிலிருந்து ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மறுப்பு பத்வாக்கள் ,கண்டனங்கள் வெளியிட்டு வந்துள்ளனர் .இந்த ஃபத்வாக்கள் கொடுத்தவர்கள் எல்லாம் மிகவும் சாமானியர்கள் அல்ல. இவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்காக பாடுபட்ட இறைநெசர்கள் என்பது யாவரும் அறிந்ததே .

  அந்த ஆணித்தரமான பத்வாக்களின் தொகுப்பு பின்வருமாறு .

1.  ஹிஜ்ரி 1336ல் பர்ரத் மின் கஸ்வரா என்ற தலைப்பில் அல் ஆலிமுல் அல்லாமா அப்துல் அழீம் ஸித்தீகி காதிரி மீரட் மௌலானா அவர்கள் அஷ்ரஃப் அலி தானவியை(இல்யாஸின் குருவை) “காஃபிர்” என்று ஃபத்வா வெளியிட்டுள்ளார்கள்.

2. மக்கா மதீனாவிலுள்ள 34 மாபெரும் உலமாக்களின் கையொப்பங்கள் சிறப்புரைகளொடு “ஹுஸாமுல் ஹரமைன் அலா மன் ஹரில் குப்றிவல்மைன் “ என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1324ல் குலாம் அஹமது காதியானி, ரஷீத் அஹமது கங்கோஹி, கலீல் அஹமது அம்பேட்டி,அஷ்ரஃப் அலி தானவி ஆகியொர்கள் காஃபிர்கள் என்று ஃபத்வா வெளிவந்துள்ளது.

3. ஷம்ஷுல் உலமா,குத்புல் அவ்லியா,இமாமுல் ஃபுகஹா முஹம்மது அப்துல்லாஹில் குராஸானி ஜிஷ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அஸ்ஸுயுபுல் பாரிகா அலாரு ஊசில் பாசிகா” என்ற தலைப்பில் இஸ்மாயில் திஹ்லவியை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்திருக்கிரார்கள்.

   இந்த ஃபத்வாவை மக்கா முகர்ரமா,மதினா முனவ்வராவில் உள்ள சங்கைக்குரிய 12 உலமாக்கள் சரி கண்டு சிறப்புரை வழங்கியுள்ளார்கள்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நான்கு மத்ஹபுகளுக்குரிய  மக்கா முஃப்தியும்,சங்கைமிகு புஹாரி ஷரிஃபின் “அபூர்வ துவா” கோர்வையாளரும்,ஷாதுலியா தரீக்காவைச் சார்ந்தவர்களுமான அல்லாமா ஸெய்யித் அஹ்மத் இப்னு ஜெய்னி தஹ்லானி ஷாதுலி ரஹ்மதுல்லாஹி ஆவார்கள்.

4. கீழக்கரை சங்கைக்குரிய பெரியார் அல் ஆலிமுல் அரூஸ் அல்லாமா ஸெய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் ‘மஙஆனி’ யில் 177-178 பக்கங்களில் இஸ்மாயில் திஹ்லவியை முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றிய வழிகெட்ட மடையன் என்று எழுதியுள்ளர்கள். அதேபோன்று ‘ஹதியா ஷரீபிலும்’ வந்துள்ளது.

5. இந்தியாவின் பல பாகங்களிலுள்ள சங்கைக்குரிய 268 உலமாக்கள் “அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா” என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காஃபிர்கள்,முர்தத்துகள் என்று மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345ல் வழங்கியுள்ளார்கள்.

6. ஹிஜ்ரி 1372ல் மௌலானா மௌலவி முஹம்மது மஹ்பூப்
அலிகான் லக்னவி அவர்கள் “அல்அதாபூல் பஸ்  அலாரஸி
இல்யாஸ் (இல்யாஸ் தலைக்கு கொடிய வேதனை) என்ற தலைப்பில்
இல்யாஸ் காபிர் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். இதை இந்தியாவிலுள்ள 45 உலமாக்கள் சரிகண்டு கையொப்பம் இட்டுள்ளனர்.

7. வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வரும் சென்னை மாநில ஜமாஅத்துல்உலமா சபை நிரந்தர கௌரவ தலைவருமான மௌலானா மௌலவி அல்லாமா முப்தியுல் அஃலம் ஷெய்கு ஆதம் ஹழரத் அவர்களும், மேற்படி கல்லூரி பேராசிரியர்கள் அனைவர்களும்,தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரி நாயிபு முப்தி மௌலானா மௌலவி மஸ்ஊத் அஹ்மத் சாஹிப் அவர்களும், லக்னோ ஆலிய்யா நிஜாமிய்யா அரபிக் கல்லூரி முப்தி மௌலானா முஹம்மது அப்துல் காதிர் சாகிப் அவர்களும், தமிழ்நாடு அரசு காஜி மௌலானா மௌலவி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹழரத் அவர்களும் பெங்களூர் ஹக்கானிய்யா அரபிக் கல்லூரி முப்தி மௌலானா மௌலவி அபுல்கமால் முகம்மது ஹபீபுல்லா பாகவி,நத்வீ அவர்களும் இல்யாஸ் தப்லீக் ஜமா அத்தை எதிர்த்து 1956ல் கொடுத்த பத்வாக்களின் தொகுப்பு “பதாவா ஆலிய்யா” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.            
செய்தி: மறுமலர்ச்சி வார இதழ்

8. இந்தூர் சிட்டி மௌலானா மௌலவி முப்தி அபுல் ஜமீல் முஹம்மது ரிள்வானுர் ரஹ்மான் சாகிபு ஹனவி, பாரூகி அவர்கள்,ஜராதீமுல் வஹ்ஹாபிய்யா பில் ஜமா அத்தித் தப்லீகிய்யா என்ற தலைப்பில்    ஒருநூல் 1954ல் தப்லீகை எதிர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

9. உத்திரபிரதேசம் பாந்தா தாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி முப்தி பீர்ஜாதா செய்யித் மள்ஹர் ரப்பானி அவர்கள் “தப்லீக் ஜமாஅத் கியோஹே” என்ற தலைப்பில் 1962ல் இல்யாஸ் தப்லீகை எதிர்த்து நூல் வெளியிட்டுள்ளார்கள்.    

10. பரேலி ஆலி ஜனாப். மௌலானா மௌலவி ஸீபிஷாஹ் அஜீஸ் அஹ்மது சாகிபு அவர்கள் இஸ்மாயில் திஹ்லவி எழுதிய “தக்வியத்துல் ஈமான்” என்ற நூலுக்கு மறுப்பாக “ இஸ்லாஹே தப்வியத்துல் ஈமான்” என்ற நூலை எழுதியுள்ளார்கள்.

11. தமிழ்நாடு அரசு பிரதம காஜி மௌலானா மௌலவி அல்லாமா முப்தி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹழரத் அவர்கள் தப்லீக் ஜமாஅத்கீ அஸலியத் என்ற தலைப்பில் இல்யாஸ் தப்லீகை எதிர்த்தும்,அதில் சேரக்கூடாது என்றும் 1970ல் தீர்ப்பளித்துள்ளார்கள்.இந்த ஃபத்வாவின் கடைசிப் பக்கத்தில் தப்லீக் ஜமாத்தை எதிர்த்து ஃபத்வா கொடுத்த இந்தியாவின் முக்கிய நகரங்களின் சங்கையான 21 உலமாக்களின் பெயர்கள் வரையப்பட்டுள்ளது.

12. பீகார் மௌலானா அர்ஷதுல் காதிரி ஹழ்ரத் அவர்கள் தப்லீக் ஜமாத் என்ற தலைப்பில் இல்யாஸ் தப்லீக் ஜமாத்தை எதிர்த்து 1971ல் நூல் வெளியிட்டார்கள்.

13. சமஸ்த கேரள ஜம்யத்துல் உலமா சபை ஃபத்வா கமிட்டியரால் தப்லீக் ஜமாத்தின் சகல நூல்களையும் ஆராய்ந்து  தீர்வு கண்டு இந்த இல்யாஸின் தப்லீக் ஜமாதில் சேரக்கூடாது என்று 1965ல் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இந்த தீர்மானம் 10-11-1965 “சந்திரிகா” இதழில் வந்துள்ளது.

14. வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி,காயல்பட்டணம் மஹ்லரத்துல் காதிரியா அரபிக் கல்லூரி,முன்னாள் முதல்வரும் கண்ணியமிக்க மௌலான மௌலவி முஃப்தி பி.ஏ.முஹம்மது அபூபக்கர் கிப்லா ஹலரத் அவர்கள் 12-8-1971ல் நல்ல விளக்கமாக தப்லீக்கை எதிர்த்து ஃபத்வா கொடுத்துள்ளார்கள். இது முஸ்லீம் முரசு இதழ் 1972,ஜனவரி,பிப்ரவரி,மார்ச் இதழ்களில் வந்துள்ளது.

15. இலங்கை கஹட்டோவிட்டையில் சமாதியுற்றிலங்கும் சங்கைகுரிய மௌலான ஷெய்கு அப்துல்லா பாதிப் ரஹிமஹுல்லாஹு அலஜருல் காஸி என்ற நூல் பக்கம் 176ல் இஸ்மாயில் திஹ்லவி தான் விரும்பியவாரு குராஆனுக்கு தப்பாக அர்த்தம் செய்பவன் என்றும்,முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றியவன் என்றும் எழுதியுள்ளார்கள்.

16. ஓரிஸ்ஸாவின் சிங்கம் என புகழப்படும் காதிரீயா தரீகாவின் ஷெய்குமான மதிப்பிற்குறிய ஹாஜி முஃப்தி மௌலானா மௌலவி ஹபிபுர் ரஹ்மா ஹழரத் அவர்கள் ஓர் ஃபத்வாவை இல்யாஸ் தப்லீகை எதிர்த்து உர்துவில் வெளியிட்டிருப்பதோடு,நாடெங்கும் தப்லீகின் முக்மூடியை கிழித்தெறிந்தார்கள்.

17. தேவ்ப்ந்த் கொள்கையுடைய உலமாக்கள் பின்னால் தொழுவது கூடாது என்ற ஃபத்வா ஒன்று பாகிஸ்தான் கராச்சியிலிருந்து வெளிவரும் “டெய்லி முஷாவத்” என்ர தினசரியில் 30-7-79 வெளியிடப்பட்டது.

18. தப்லீக் இயக்க ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் சகலரும் அவ்வியக்கத்தை நிறுவுவதில் ஒத்துழைத்து சமீபகாலம் வரை தப்லீக் ஜமாத்தினரால் போற்றப்பட்டு வந்தவருமான மௌலான இஹ்த்திஷாமுல் ஹஸன் காந்தலவி என்பவர் மனம் மாறி அவ்வியக்கத்தின் அந்தரங்கள் பற்றி சில ரகசியங்களை வெளியிட்டு “வழமையல்லாத வழிகெடுக்கும் நடைமுறை” (பித்அத் தேளலாலத்) என்று வர்ணித்து இருப்பதாக தெரிகிறது.  – முஸ்லிம் முரசு,செப்டம்பர் 1971.

19. காயல்பட்டிணம் கண்ணியத்திற்குறிய மௌலானா,மௌலவி அல் ஆலிமுல் ஃபாழில் ஷெய்கு அப்துல் காதிரி நூரிய்யி ஸித்தீகி ஸூஃபி அவர்கள் 1) இள்ஹாருள் ஹக்    2)தப்லீக் என்றால் என்ன        3)தப்லீக் ஜமாத்தை பற்றிய உலமாக்க்ளின் உண்மை ஃபத்வா       4)புலியைக் கண்டு ஓட்டம்        5)அல் முஹன்னதின் அண்டப்புளுகு        6)தப்லீக் ஜமாத்தில் வஹ் ஹாபியத்தின் விஷக்கிருமிகள்             6)சுவர்க்க நகைகளா அல்ல,அது நரக விலங்குகள்       7)தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு என்று தப்லீக் ஜமாத் பற்றி எதிர்த்து பல நூல்கள் வெளியிட்ட்டுள்ளார்கள்.

20. சிங்கப்பூரில் “அறிவுச்சுடர்” என்ற தமிழேடு தப்லீக் இயக்கத்தின் வஹ் ஹாபியக் கொள்கையை அம்பலபப்படுத்தியுள்ளது.துருக்கிலிருந்து இஸ்லாமிய நூல்களை வெளிடும் ஒரு நிறுவனம்,தப்லீக் ஜமாத் பற்றியும்,அதன் தலைவர்களையும்,அவரின் குருமார்களையும் “காஃபிர்கள்” என்று ஃபத்வாக்களை மேற்கோள்காட்டி தக்க ஆதாரத்தோடு,வழிகெட்ட கூட்டங்களில் தப்லீக் இயக்கமும் ஒன்று,அதில் சேரக்கூடாது என்று “தெ ரிலிஜீயஸ் ரிஃபார்மஸ் இன் இஸ்லாம்” நூல் ,பக்கம் 206ல் சுட்டிக்காட்டியுள்ளது.

21. ஹக் வ பாதில் கி ஜ்ங்க்” ஆசிரியர் மௌலனா மௌலவி ஹாஃபிழ் காரி அபூநஸர் ஷாஹ் இனாயத் ரஸூல் முஹம்மது உமர் ஸாஹிப் காதிரி ஜிஸ்தி லக்னவி அவர்கள்.

22. அதாபுஸ்ஸதிது” ஆசிரியர் முபாரக்பூர் மௌலானா மௌலவி முஃப்தி ஹாஃபிழ் அப்துல் அஜீஸ் ஸாகிபு கிப்லா அவர்கள்.

23. ரிஸாலா –தப்ஹீமுல் முஃத்ற்” சரிகண்டு கையெழுத்திட்ட 38 பேர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் 1) சென்னை அல்லாமா முஃப்தி முஹம்மது ஸிப்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள் 2) அல்லமா முஃப்தி முஹம்மது இர்தழா அலிகான்(ஆசிரியர்-நபாயிஸ்) அவர்கள்.

24. “ஹக் வ பாதில்கி பஹ்சானா “ ஆசிரியர் முழபர்பூர்- ஹழ்ரத் அல்லாமா முஃப்தி முஹம்மது அப்துல் கலாம் சாஹிபு ஹஸன் காதிரி அவர்கள்.

25. “தப்லீக்-ஏ-தோகா” ஆசிரியர் மௌலனா மௌலவி முஹம்மது மன்ஸூர் அலி கான் காதிரி ரிஸ்வி அவர்கள்.

26. “ஏந்தல் நபி அவர்கள் எச்சரிக்கிறார்கள்” ஆசிரியர் மௌலவி முஹம்மது லுக்மான் அஜீஸி ,மதுரை அவர்கள்.

27. “அத்தங்கீது – அலத்தங்கீது” ஆசிரியர்கள் வேலூர்,பெங்களூர் உலமாப் பெருமக்கள்.

28. “தப்லீக் அசாயித்-அவுர்-உலமாகெ ஃபத்வா” ஆசிரியர் டி.பி.முஹம்மது உதுமான் ரப்பானி நாழிமி அவர்கள்.

29. “அல் ஜபனுத்தானவி அலாகுல்லியத்துல் தானவி” ஆசிரியர் மௌலவி முஃப்தி காரி முஹம்மது அஹ்மது ரிழாகான்.

30. “தப்லீக் ஜமாத்-கி-ஹகீக செஹ்ரா” ஆசிரியர் மௌலவி செய்யது அஸ்மத் பாஷா சாஹிபு.

31. “இல்யாஸி ஜமாத்” ஆசிரியர் கான்பூர் அல்லாமா முஃப்தியுல் அஃழம் ஷாஹ் ரிபாகத் ஹுஸைன் ஆலிம் அவர்கள்.

32. “தப்லீக் ஜமாத்-அஹாதீத்க-ரொஷினிமே” ஆசிரியர் மௌலவி அர்ஷத் காதிரி.

33. “தப்லீக் ஜமாத்-க-பரீப்” ஆசிரியர் அல்லாமா முஃப்தி துராபுல் ஹக் சாஹிபு அவர்கள்.

34. “இம்தியாசுல் ஹக்" ஆசிரியர் லாஹுர் மௌலானா முஃப்தி ராஜ்குலாம் முஹம்ம்து அவர்கள்.

35. “அகீதா உலமாயி தேவ்பந்த்" ஆசிரியர் மௌலானா மௌலவி ஷாஹ் அப்துல் அஜீஸ் முராதாபாத் அவர்கள்.

36. “தப்லீக் ஜமாத்கா ஆயீனா-மௌலானா இல்யாஸ்கா ஆயீனா” ஆசிரியர் மௌலானா மௌலவி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஆலிம் முஃப்தி பாகவி-நத்வி காதிரி வேலூர் அவர்கள்.

37. “ரத்தே தக்வித்துல் ஈமான்” ஆசிரியர் மௌலானா மௌலவி முஃப்தியல் அஃழம் பத்ருத்தீன் சாகிபு கிபுலா ரிஜ்வி மும்பாய் அவர்கள்.

38. 'ஹிதாயத்துல் அனாம் அலா ஜியாரத்தில் அவ்லியாயே கிராம் '- அல்ஹாஜ் மௌலானா மௌலவி முஹம்மது பாக்கர் சாஹிப் ஆலிம் காதிரி (நாகூர் ஷரீப்) .மேற்கண்ட நூலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 35 உலமாக்கள் சரிபார்த்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.



இஸ்லாமிய சகோதரர்கள் இல்யாஸி தப்லீக் ஜமாதின் திருட்டுத்தனத்தையும், ஆலிம்கள் என்னும் வேஷத்தையும் தெரிந்து கொள்வதற்கும் இந்த ஆதாரங்கள் போதுமானவையாக இருக்கும் என்று நம்புகிறோம் .



 இன்ஷாஅல்லாஹ். இன்னும் அநேக ஆதாரங்களும்,  நூல்களும் இன்ஷாஅல்லாஹ் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.



   நாம் யாவரும் இந்த வழிகெட்ட கூட்டதிலிருந்து தவிர்த்து நேரான வழியில் நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!





Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment