கொள்கைகள்

தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் : 

                  
               இஸ்மாயில் திஹ்லவி ( மறைவு 1246 ஹிஜ்ரி - 1830 )
                
                காசிம் நானுத்வி       (மறைவு 1297 ஹிஜ்ரி - 1879)
        
                ரஷீத் அஹ்மத் கங்கோஹி ( மறைவு 1323 ஹிஜ்ரி - 1905 )

                கலீல் அஹமத் அம்பேத்வி  ( 1852 - 1927 )
        
               அஷ்ரப் அலி தானவி  ( மறைவு 1392 ஹிஜ்ரி - 1943 )

                      
Darul Uloom Deoband,Qasim Nanotvi

                     தாருல் உலூம் தேவ்பந்த் மௌலவி காசிம் நானூத்வியால் 1866/68 ல் ஸ்தாபிதம்   செய்யப்பட்டது .
                              
Ashraf Ali Thanvi,Elders of Deoband,elders of Tabligh

பஹிஷ்தி ஜேவர் ,தப்சீர் பயானுல் குரான் போன்ற பல நூற்களின் ஆசிரியர் மௌலவி அஷ்ரப் அலி தானவி.இவரின் கொள்கைகள் தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாசை பெரிதும் கவர்ந்தன.
                                            
Moulavi Ilyas Deoband,Ilyasi Tabligh Jamath

மௌலவி இல்யாஸ் தப்லீக் ஜமாத்தினரால் ஹழ்ரத்ஜி என்று அழைக்கப்பட்டார்(மறைவு 1944). இவர் தான் தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபஹரும் முதல் அமீரும் ஆவார். இவர் கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியின் கலீபா ஆவார். அவர் ரஷீத் அஹமத் கங்கோஹியின் கலீபா ஆவார். [ இர்ஷாதுல் முலூக் , ஆங்கில மொழிபெயர்ப்பு ,பக்கம் 12 ]

                                                       Moulavi Yusuf Kandalvi,moulavi usuf kandalvi deobandi

மௌலவி இல்யாஸின் மறைவைத் தொடர்ந்து தப்லீக் ஜமாத்தின் அடுத்த அமீராக அவரது மகன் மௌலவி முஹமது யூசுப் (மறைவு 1965) ஆனார்.அவரைத் தொடர்ந்து இனாமுல் ஹசன் அடுத்த அமீரானார்.தற்சமயம் தப்லீக் ஜமாத்திற்கு அமீர் யாரும் இல்லை ,  அதன் நடவடிக்கைகள் ஒரு ஷூரா (குழுவைக்) கொண்டு இயங்குகிறது.

                                                          Moulavi Zakarriya Deoaband,Fazhayile Amal Zakarriya

மௌலவி ஜக்கர்ரிய்யா ,மௌலவி இல்யாஸின் மருமகன் ஆவார்.பழாயிலே அமல் கிதாபை எழுதியவர்.இவருக்கும் மௌலவி கலீல் அஹ்மத் சஹாரான்பூரி கிலாபத் கொடுத்துள்ளார் [ நூல் - மஷாயிகே சிஷ்தி, ஆங்கில மொழிபெயர்ப்பு ,பக்கம் 307/304-305 ].

கலீல் அஹ்மத் சஹரான்பூரி,ஆஷிக் இலாஹி மீரதி,மௌலானா மஹ்மூதல் ஹசன் தேவ்பந்தி,மௌலானா ஷப்பிர் அஹமத் உத்மானி,மௌலானா அப்துல் ரஹீம் லாஜ்பூரி போன்றோர் பிற தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் உலமாக்கள்.

இவர்கள் எழுதிய சில நூற்கள் :

மௌலவி இஸ்மாயில் திஹ்லவி - தக்வியத்துல் ஈமான்,ஸிராத்தே முஸ்தகீம்
மௌலவி காசிம் நானூத்வி       - தக்தீருன்னாஸ்,ஆபே ஹயாத்,தஸ்பியதுள் அகாயித்            
மௌலவி ரஷீத் அஹ்மத்         - பதாவா ரஷீதியா ,தஸ்கிரதூர் ரஷீத்
மௌலவி கலீல் அஹ்மத்         - பராஹீன் அல் காதியா
மௌலவி அஷ்ரப் அலி தானவி    - ஹிப்ழுள் ஈமான்,ரிசாலாஹ் அல் இம்தாத் 
மௌலவி மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி - அல் ஜஹ்த் அல்மகல்

அஷ்ராபுஸ் சவானெஹ் - அஷ்ரப் அலி தானவியின் வாழ்க்கை வரலாறு , அவரது மாணவர் அஜீஸுல்  ஹசன் எழுதியது .
ஹக்கீமுள் உம்மத்  - அஷ்ரப் அலி தானவியின் வாழ்க்கை வரலாறு ,மௌலானா அப்துல் மஜீத் தர்யாபதி .
ஸவானெஹ் காசிமி - மௌலவி காசிம் நானூத்வி வாழ்க்கை வரலாறு ,மௌலானா முனஸ்ஸிர் அஹ்சன் கிலானி
அல் பத்ர் அஸ் ஸரி இலா பைஜ் அல் பாரி - அன்வர் ஷாஹ் காஷ்மிரி
தப்சீர் புல்காதுல் ஹைரான் - ஹுசைன் அலி வான் பச்ரானி


 மூலநூல் ஆதாரங்களை காண   இங்கே க்ளிக் செய்யவும்


Tablighi Jamaat Akaabir


                          நூல்
                            ஆசிரியர்
          ஹிப்ளுள் ஈமான்
           அஷ்ரப் அலி தான்வி
          பதாவா ரஷீதியா
           ரஷீத் அஹ்மத் கங்கோஹி
          ஆபே ஹயாத்
           முஹம்மத் காஸிம் நானோத்வி
          தக்தீரூன் னாஸ்
           முஹம்மத் காஸிம் நானோத்வி
          பராஹீனே காதியாஹ்
           கலீல் அஹமத் அம்பேத்வி
          தக்வியத்துல் ஈமான்
           ஷாஹ்  இஸ்மாயில் தெஹல்வி
          ஸிராதே முஸ்தகீம்
           ஷாஹ்  இஸ்மாயில் தெஹல்வி
          தப்சீர் புல்காதுள் ஹைரான்
           ஹுசைன் அலி வண் பச்ரனி
          தஸ்பி யாதுள் அகாயித்
    முஹம்மத் காஸிம் நானோத்வி
          ரிஸாலா அல் இம்தாத்
    அஷ்ரப் அலி தான்வி

தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகள் :

1. அல்லாஹுதஆலா பொய் சொல்லுவது சாத்தியம்.
[ ஃபதாவா ரஷீதியா, வால்யூம் 1,பக்கம் 19 ]

2. அல்லாஹுதஆலா தனது படைப்புகள் செய்யும் செயலை முன்னறே அறிந்திருக்க மாட்டான்.படைப்புகள் ஒரு செயலை செய்த பின்னரே அல்லாஹ் அதை அறிகின்றான்.
[ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 157,158]

3. ஷைத்தானும், மலக்குல் மவ்த்தும் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களை விட நிறைய அறிந்துள்ளார்கள்.
[ பராஹீனே காதியா,பக்கம் 51 ,52 ]

4. நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தனது இறுதி முடிவு என்னவென்று தெரியாது , மேலும் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது.
[ பராஹீனே காதியா,பக்கம் 51 ]

5. அல்லாஹுதஆலாவால் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவும்,மறைவான ஞானமும் விலங்குகளுக்கும்,மதழைகளுக்கும்,பைத்தியக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 [ஹிஃப்ஸுல் ஈமான், பக்கம் 7 ]

6. தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதி விட மோசமானது.
[ ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86 ]

7. ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.
[ ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12 ]

8. மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .
[ தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]

9. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம் இருந்து கற்றார்கள்
 [ பராஹீனே காதியா,பக்கம் 26 ]

10. நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் .[ தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58 ]

11. அல்லாஹ் நாடினால்  நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று கோடானு கோடி பேர்களை உருவாக்குவான் . [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16 ]

12.பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59 ]

13.அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.  [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 29 ]

14.இறைத்தூதர்கள் பொய்யை விட்டு தூய்மையானவர்களாக
இருக்க வேண்டிய தேவைஇல்லை .
 [ தஸ் பியதுல் அகாயித்,பக்கம் 25]

15.ஒரு நபியை ஒரு மனிதனைப் போல மட்டும் தான் புகழ வேண்டும் ,இன்னும் அதற்கு குறைவாகவே புகழவேண்டும் .
 [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 35 ]

16.படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும் ,எல்லாரும் இல்ம் என்னும் அறிவற்றவர்களாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள் .
[தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 3]

17.படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும், அல்லாஹ்வின் திருமுன் ஒரு செருப்பு தைக்கும் செம்மானை விட கீழாகவே உள்ளனர் .
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 14]

18.நபிமார்களை தாகூத் (ஷைத்தான்) என்று அழைக்க அனுமதி உள்ளது .[தப்ஸீர் புல்காதுல் ஹைரான் ,பக்கம் 43 ]

19.ஒரு நபிக்கு தனது உம்மதிடம் உள்ள அந்தஸ்து ஒரு கிராம தலைவரைப் போன்று அல்லது நிலக்கிழார் போன்றது.
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 61 ]

20.யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

21.நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது நுண்ணறிவை இழந்து விட்டார்கள் .
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 55 ]

22.உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர் .[தக்தீருன்னாஸ் ,பக்கம் 5 ]

23.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களை ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் இருந்து கீழே விழாமல் ஒரு தேவ்பந்த் உலமா காப்பாற்றினார்.
 [புல்காதுள் ஹைரான் ,பக்கம் 8 ]

24.லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் எந்த கேடும் இல்லை .
 [ரிஸாலா அல் இம்தாத்,பக்கம் 35 சபர் மாதம் 1336 ஹிஜ்ரி  ]

25. மீலாதுந்நபி கொண்டாடுவது இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது போன்றது .
 [பதாவா மீலாத் ஷரீப் ,பக்கம் 8 / பராஹீனே காதியா ,பக்கம் 148 ]

26. நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ  அவை தஜ்ஜாலி டமும்   உள்ளன. [ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]

27.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பும் எதுவும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது .
 [ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]

28.அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ]

29.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு சகோதரர் என்று அழைப்பது சரியானதே .
 [பராஹீனே காதியா ,பக்கம் 3 ]

30.எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
 [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

31.தரூத் தாஜ் விரும்பத்தக்கதல்ல,இன்னும் அதை ஓதுவதும் கூடாது .[ பழாயிலே தரூத் ஷரீப் ,பக்கம் 73 மற்றும் தஸ்கிரதுர் ரஷீத் பாகம் 2,பக்கம் 117]

32.தேவ்பந்தைச் சார்ந்த ஒரு வலிக்கு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
குளிப்பாட்டி ஹஜ்ரத் பாத்திமா ரலிய்யல்லாஹு அன்ஹு அவர்கள் ஆடை போர்த்திவிட்டார்கள் .
[சிராதே முஸ்தகீம் ,பார்சி பக்கம் 164,உர்து பக்கம் 280 ]

33.மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.
[பதாவா அஷ்ராபியா,பாகம் 2,பக்கம் 58.பதாவா ரஷீதியா பாகம் 2 பக்கம் 144 மற்றும் 150,பாகம் 3 பக்கம் 93,941  ]     

34.காகம் உண்பது ஆன்மீகரீதியாக நன்மைபயக்கும் செயலாகும்.
 [பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 1301 ]

35.வலிமார்களை அல்லாஹ்வின் படைப்புகள் என்று நன்கு உணர்ந்த நிலையிலும் விளிப்பது விலக்கப்பட்டுள்ளது .
 [தக்வியதுல் ஈமான் பக்கம் 7 ]

36.ஜனாஸா தொழுகைக்குப்பின் துஆ ஓதுவது கூடாது .
 [பத்வா ஜமீல் அஹ்மத் தான்வி ,ஜாமிஆ அஷ்ரபியா ,லாகூர் ]

37.ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பரிசுகளையும்,உணவையும்   முஸ்லிம்கள் வாங்குவது கூடும்.
 [ பதாவா ரஷீதியா ,பாகம் 2,பக்கம் 130 ]

38.காபிர்கள் வட்டி பணம் மூலம் வைத்திருக்கும் குடிநீர் பந்தல்களில் முஸ்லிம்கள் தண்ணீர் குடிப்பது கூடும்.
 [பதாவா ரஷீதியா ,பாகம் 3,பக்கம் 113,114 ]

மூலநூல் ஆதாரங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்

                                      அஸ்தக்பிருல்லாஹ் !!!
                      லா ஹவ்ல வலா ஹுவத்த இல்லா பில்லாஹ் !!!

யா அல்லாஹ் உன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் இந்த தேவ்பந்திய வஹாபிய கொள்கைகளை விட்டும் காப்பாயாக !! ஆமீன் !!Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment