Wednesday 4 June 2014

பழாயிலே அமல் நூலில் உள்ள தேவ்பந்தி மோசடிகள்


  ஆராய்ச்சியாளர்: முஹக்கிக் கலீல் அஹ்மத் ரானா

     தேவ்பந்தி வஹாபிகள் மீண்டும் தமது விஷமத்தை வெளிப்படுத்தியுள்ளனர் !!!          

பழாயிலே அமல் என்ற நூல் தேவ்பந்திகளின் பிரச்சார பிரிவான தப்லீக் ஜமாஅத்தினரால் பயன்படுத்தப்படும் நூல்.இந்த நூலை எழுதியவர்கள் மௌலவி ஜக்கர்ரியா காந்தலவி தேவ்பந்தி (மறைவு 1402 ஹிஜ்ரி).இந்த நூலின் அசலான பெயர் தப்லீகி நிஸாப்.இந்த நூல் பழாயிலே நமாஸ், பழாயிலே தரூத், பழாயிலே ஹஜ் என பல பிரிவுகளை கொண்டது.
பின்னர் தேவ்பந்திகளால்  பழாயிலே அமல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    பழாயிலே நமாஸ் அத்தியாயத்தின் இறுதியில் மௌலவி ஜக்கர்ரியா காந்தலவி எழுதுகிறார் .

" தொழுகையின் முக்கியமான பகுதி திக்ர் ,அதாவது தொழுகையில் குரானை ஓதுவது.இந்த விஷயங்களை முழுமையான கவனம்  இல்லாமல் செய்தால் அது அல்லாஹ்விடம்  பிரார்த்தனை செய்வது என்று ஆகாது. இது  வீண் பேச்சு மற்றும் காய்ச்சலின் போது மக்கள் பேசும் தேவையில்லாத  பேச்சு போன்றது "

[ நூலில் உள்ள உர்து வார்த்தை பிரயோகம்  " யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் அவுர் பக்வாஸ் ஹோத்தி ஹை " ]

கீழே உள்ள ஸ்கேனில் நீல நிறத்தில் அடிக்கொடிட்ட இடத்தில் பக்வாஸ் என்ற வார்த்தை உள்ளது .


Fazaile amal -Moulavi Zakkariya Khandalavi
 
 
 


இந்த விஷயத்தை  முதன்முதலில் முஹக்கிக்  கலீல் அஹ்மத் ராணா கவனித்த போது, அவர்களால்  குர்ஆன் ஓதுவதற்கு பக்வாஸ் (தேவையில்லாத பேச்சு) போன்ற வார்த்தைகளை ஏற்க முடியவில்லை.ஏனெனில் பல சாதாரண மக்கள் அவர்கள் குர்ஆன் ஓதி  தொழும் தொழுகையின் போது அவர்களால் முழுமையான கவனம் செலுத்த இயலாத சூழ்நிலை உள்ளது.

மேலும் நமக்கு மார்க்கம் கற்பித்த முன்னோடிகள் கூறுகின்றனர் ,யாராகிலும் குர்ஆன் ஓதி  தொழும் தொழுகையின் போது அவர்களால் முழுமையான கவனம் செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலும், ஓதுவது குர்ஆன் ஆக இருக்கின்ற காரணத்தால் , நாம் அதை தேவையில்லாத பேச்சு எனக் கூற முடியாது . மேலும் இது அல்லாஹ் வின் வேதமான குர்ஆனுக்கு செய்யும் அவமரியாதை.

இந்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, இந்த முழு மேற்கோள் ஒரு பிரபலமான தேவ்பந்தி மதரஸாவான 'கைருல் மஜாலிஸ் ,முல்தான், பாகிஸ்தான்' க்கு  அனுப்பப்பட்டது.
    
நாம் இந்த மேற்கோள் அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள முழு மேற்கோள் குறிப்பிட்ட பிறகு, நாம் பின்வரும் கேள்வியை கேட்டோம்.

கேள்வியாளர் : முஹம்மத் சப்தார் அலி,புல் அசதாபால்,கான்வால்,பாகிஸ்தான்

பதில்         : பத்வா நம்பர் 33/148 , தேதி 17.11.1421 ஹிஜ்ரி /12 பிப்ரவரி 2001

" இந்த வார்த்தைகள் குர்ஆனுக்கு தெளிவாக அவமரியாதை செய்பவையாக இருக்கின்றன. பகிரங்கமாக தவ்பா செய்ய வேண்டும் .அந்த நபர் தவ்பா செய்யும் வரை அவர் தொழ வைக்க அனுமதிக்கக் கூடாது .முஸ்லீம்கள் இந்த நபரை விட்டும் விலகி இருக்க வேண்டும் . அல்லாஹ் நன்கறிந்தவன் "


அல் ஜவாப் அல் சஹீஹ் (சரியான விடை ) மதரஸாவின் முத்திரை .

முஹம்மத் அபாஉல்லாஹ்
அப்துஸ் ஸத்தார்

ஜாமியா கைர் அல் மதாரிஸ்,முல்தான் .

பத்வா வின் மூலப் பிரதி


Jamia Khair al madaris  Fatwa




 



பின்னர் தேவ்பந்திகளிடம் இந்த வாசகங்கள் அவர்களின் நூலில் இருந்தும்,தேவ்பந்தின் முன்னோடியால் எழுதப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்டவை எனத் தெரிவித்த பொழுது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .

அவர்களின் வஹாபிய ஆசிரியரான மௌலவி ஜக்கர்ரியா காந்தலவி தேவ்பந்தி இந்த பத்வாவில் இருந்து காப்பாற்ற இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் காலம் காலமாக செய்து வரும் மோசடியை அரங்கேற்றினர் .

 பழாயிலே அமல் நூலின் அடுத்த பதிப்பைத் திரித்து, அதில் இருந்து பக்வாஸ் என்ற சொல்லை வாசகத்தில் இருந்து நீக்கினர்.


Fazaile-amal - Fabricated Version


 


பச்சை நிறத்தில் கோடிட்ட இடத்தில் பக்வாஸ் என்ற பதம் இல்லாததை கவனியுங்கள் .திரிக்கப்பட்ட புதிய பதிப்பில் இவ்வாறு உர்துவில் வருகிறது " யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் ஹோத்தி ஹை "

இவ்வாறு திரித்து பதிப்பித்தது மூலம் வஹாபிகள் காலம் காலமாக மக்களை ஏமாற்றும் தங்களின் சுயரூபத்தை வெளிப்படுதியதோது மட்டுமல்ல தாங்கள் உர்து மொழியில் திறனற்றவர்கள் என்பதையும் நிருபித்து உள்ளார்கள் .

  மூல நூலில் உள்ள உர்து வார்த்தை பிரயோகம்  " யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் அவுர் பக்வாஸ் ஹோத்தி ஹை "

உர்து இலக்கணப்படி இதில் ஹிஸ்யான் என்பது ஆண்மை சொல், பக்வாஸ் என்பது பெண்மை சொல், எனவே அதைத் தொடர்ந்து வருவது  ஹோத்தி  ஹை என்னும் பெண்மை சொல். 

புதிய திரித்த பதிப்பில் பக்வாஸ் வார்த்தையை நீக்கிய பின் வருவது
" யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் ஹோத்தி ஹை "
ஆனால் அது ஹோத்தா ஹை என்று வந்திருக்க வேண்டும்,ஏனெனில் ஹிஸ்யான் என்பது ஆண்மை சொல்.


 ஆரம்ப காலம் முதல் இன்று குர்ஆனுக்கு அவமரியாதை செய்வதே இந்த வாஹாபிகளின் கொள்கை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் !!!   அல்லாஹ் முஸ்லிகள் அனைவரையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் தின் பாதையில் நிலைத்திருக்கச் செய்வானாக !!  ஆமீன் !!!
      
   

Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment