தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் பிதாமகன் மௌலவி இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் ,
" தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதை விட மோசமானது."
[ நூல் - ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86]
இனி பின்வரும் வாசகங்களை படிப்பீர்களானால் தேவ்பந்தி வஹாபிகளின் இரட்டை நிலைப்பாட்டின் உச்சம் என்னவென்று அறிவீர்கள் .
மௌலானா அப்துல் மஜீத் தைராபாதி,மௌலவி அஷ்ரப் அலி தானவியின் மாணவரும் கலீபாவும் ஆவார் . அவர் 'ஹக்கீமுல் உம்மத்' என்று அஷ்ரப் அலி தானவியின் வாழ்க்கை வரலாறை கூறும் புத்தகத்தை வெளியிட்டார். மௌலவி அப்துல் மஜீத் தனது ஒரு பிரச்னையை அஷ்ரப் அலி தானவிக்கு கடிதமாக எழுதுகிறார். அவர் கூறிய பிரச்சனையும் மௌலவி அஷ்ரப் அலி பதிலும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்ட்டுள்ளது. அதை வாசித்து உண்மையை உணருங்கள்
"தொழுகையில் மன ஒருமைப்பாடு இல்லாத நிலை என்பது ஒரு பழைய பிரச்சினை.அனால் என்னுடைய அனுபவத்தில் தொழுகையில் உங்களை நினைக்கும் போது மன ஒருமைப்பாடு இல்லாத நிலை,சிறிது நேரத்திற்கே ஆனாலும் என்னை விட்டும் விலகியது . இது விஷயமாக, இது சரிதானா என்று எனக்கு ஆலோசனைக் கூறுங்கள்,இல்லையெனில் எதிர்காலத்தில் நான் கவனமாக இருப்பேன் "
[ நூல் - ஹகீமுல் உம்மத் ,பக்கம் 54 ]
இது தான் மௌலவி அப்துல் மஜீத் தைராபாதியின் தனிப்பட்ட பிரச்சனை.இனி மௌலவி அஷரப் அலி தானவியின் பதிலைப் பாருங்கள் ,
"இந்த முறை சரியானதே நீர் யாரிடமும் இதை வெளிப்படுத்தாதவரை "
[ நூல் - ஹகீமுல் உம்மத் ,பக்கம் 54 ]
நான் இதன் தீர்ப்பை சங்கைமிகு வாசகர்களிடத்தில் விட்டு விடுகிறேன். அல்லாஹுவுக்கு அஞ்சுங்கள் மேலும் இதை உங்கள் சிந்தையில் நினைவு கொள்ளுங்கள் , சூரியன் ஒரு பனைமர உச்சியளவு உயரமே இருக்கும் பொழுது, நம் உடல் வியர்த்து வழியும் நேரத்தில் ஒவ்வொரும் ஒரு நபியில் இருந்து மற்றொரு நபியைத் தேடி நாடி ஓடிக் கொண்டிருக்கும் அவ்வேளையில் , செய்யதுல் அன்பியா நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நமக்காக ஷபாஅத் செய்வார்கள் .
வல்ல நாயன் எல்லா முஸ்லிம்களின் இதயத்திலும் தனது ஹபீபின் முஹப்பத்திலேயே தரிபட்டு அதே நிலையிலே மவ்த்தை அனுபவிக்கக் கூடிய பாக்கியத்தை தருவானாக !!!
No comments :
Post a Comment