Saturday 21 June 2014

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள்



                                    
Gujarat High Court- India

1)      குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் “தாருல் உலூம் ஷாஇ ஆலம்” எனற அமைப்பு ஸுன்னி முஸ்லிம்களின் கலைகூடமாக 1953ல் நிறுவப்பட்டு,அதன் மூலம் ‘தைய்யிபா’  எனும் பத்திரிக்கை வெளியிடப்பட்டு வந்த்து.1968 டிசம்பர் இதழில் காயிரா மாவட்ட கபாட்வாஞ்ச் எனும் ஊரின் ஜும்மா மஸ்ஜிதில் பணியாற்றி வந்த பேஷ் இமாம் ஜனாப் குலாம் ஹுஸைன் தார்ஸோத் அவர்களை “வஹ்ஹாபி தேவ்பந்தி” எனக் குறிப்பிட்டிருந்த்தால்,அவர் கபாட்வாஞ்ச் முதல் வகுப்பு குற்ற இயல் நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் 22-5-65ல் தாக்கல்  செய்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் 1129/69 என்ற நம்பரில் பதிவாக்கப்பட்டது.
             வாத, பிரதிவாதங்கள் நடந்தன.இறுதியாக நீதிபதி கிருஷ்ணபண்டிட் அவர்கள் 27-2-1970ல் தப்லீக் ஜமாத்தினர்களை “தேவ்பந்தி வஹாபி” என்றழைக்கலாம் என்றும்,தப்லீக்காரர்கள் ஸுன்னத் வல் ஜமாத் பள்ளியில் நுழைவது கூடாது என்றும் தீர்ப்புக் கூறினார். மௌலவி குலாம் ஹுசைன் அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் தாக்கல் செய்தும், அது ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.

2)      கர்னாடக மாநிலத்தின் பல்காம் உயர்நீதிமன்றத்தில், பல்காமைச் சார்ந்த காஸிம் N.C.O அவர்களும், அவர்களது மூன்று சகாக்களும் ஜனாப் இப்ராஹீம் தாஜுதீன் அவர்களும் அவர்களது ஷாப்பூர் பள்ளிவாசல் பரிபாலன சபைக்கும் எதிராக தொடுக்கப்பட்ட வழ்க்கின்போது, நீதிபதி பல்கங்காதர், “தப்லீக் ஜமாத் இந்த சகாப்தத்தின் சிருஷ்டியாதலின் அது பொதுஜன சமுதாயத்தின் நம்பிக்கைக்கும்,மனவுறுத்தலுக்கும் உரியதாக இல்லை என்றும்,இதன் கொள்கைகள் முஸ்லீம்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் சந்தேகத்தையும், பிள்வையும் ஏற்படுத்தும் மூல காரணியாகவும் இருப்பதால்,தப்லீக் ஜமாத் கிதாபுகளை பள்ளியில் வாசிப்பதையும்,இஜ்திமா நடாத்துவதையும் தடை செய்கிறேன்” என்று தீர்ப்பு வழங்கினார்.
ஆதாரம் – முஸ்லிம் டைஜஸ்ட் பக்கம் 47,நவம்பர் 1986 – பிப்ரவரி 1987.

3)      13-10-1973ல் சிங்கப்பூர் கோர்ட் பள்ளியினுள் தப்லீக் ஜமாத் பயான் செய்ய தடை விதித்துள்ளது.   


  
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment