இஸ்லாமிய புத்தகங்களை திரித்து எழுதும் அவர்களின் நடைமுறையை தொடர்ந்து,தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இப்போது அவர்களின் தலைவர்களுள் ஒருவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை திரித்துள்ளனர்!
மௌலவி அஷ்ரப் அலி தானவி எழுதிய நூல் நஷ்ர் உத் தீப் பி திக்ரில் நபிய்யில் ஹபீப். இந்த புத்தகத்தில் உள்ள சில கருத்துகளைக் கொண்டு தேவ்பந்திகள் சங்கடத்தில் உள்ளனர். ஏனெனில் அந்த கருத்துகள் அவர்களின் வஹாபிய முழக்கத்திற்கு எதிராக உள்ளது.
அல்லாமா முஹம்மத் அலி முஸ்தபா அவர்கள் நஷ்ர் உத் தீப் புதிய பதிப்பில்(தாருல் இஷாஅத் ,கராச்சி,பாகிஸ்தான் ) தேவ்பந்திகளின் இந்த மோசடிகளை கண்டுபிடித்துள்ளார் . இங்கே இரண்டு புனைவுகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்த திரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் பணி தாருல் கிதாப் ,தேவ்பந்த் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .
மோசடி 1
அஷ்ரப் அலி தான்வி தேவ்பந்தி நஷ்ர் உத் தீப்-பின் முன்னுரையில் எழுதுகிறார் , " ஹிஸ்ன் ஏ ஹஸீன் நூலின் முன்னுரையில் எழுதப்பட்டதாவது புர்தா ஷரீபின் ஆசிரியர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் .எல்லா மருத்துவ உதவிகளும் வீணான நிலையில் அவர் பரக்கத்தை எதிர்பார்த்து புர்தா ஷரீபை இயற்றினார் .அவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் பாக்கியம் பெற்றார் . பெருமானார் அவர்கள் அவர் மீது தனது கையால் தடவினார்கள் , அவர் உடனே குணமடைந்தார் "
[ நூல் - நஷ்ர் உத் தீப் , பக்கம் 2 ]
அல்லாமா முஹம்மத் பின் முஹம்மத் அல் ஜஸ்ரி அல் ஷாபியி (இறப்பு 833 ஹிஜ்ரி ) தமது நூலான
ஹிஸ்ன் ஏ ஹஸீன் -ல் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்கள் . இது பெருமானார் அவர்கள் தாஃபிஇல் பலாஇ வல் வபாயி வல் கஹ்த்தி வல் மரளி வல் அலம் (இயற்கை சீற்றங்கள், நோய், வறட்சி, வியாதிகள் மற்றும் கவலைகளை விட்டும் விலக்குபவர் ) என்பது நிரூபணமாகிறது.
தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தின் மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி, தரூத் தாஜ் ஓதுவது கூடாது ஏனெனில் அதில் உள்ள தாஃபிஇல் பலாஇ வல் வபாயி வல் கஹ்த்தி வல் மரளி வல் அலம் ஷிர்க்கான வார்த்தைகள் என்று தமது பத்வாவில் கூறியுள்ளார் .
[ நூல் - பத்வா ரஷீதியா, கிதாப் அல் இல்ம்,பக்கம் 169,தாருல் இஷாஅத் ]
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் பல அறிஞர்கள் இந்த பத்வாவுக்கு எதிராக எழுதியுள்ளனர் .இன்ஷா அல்லாஹ் அதை பின்னர் விரிவாக காண்போம் .
எப்போதெல்லாம் இது விஷயமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்திடம் விவாதிக்கப் பட்டதோ அப்போதெல்லாம் அவர்களுக்கு மௌலானா அஷ்ரப் அலி தானவி தமது நூலிலேயே இதை எழுதியுள்ளார் என்று அவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது .
இந்த ஆதாரங்களை எதிர்கொள்வது தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது . அவர்கள் இந்த முன்னுரையை தமது புதிய பதிப்பில் இருந்து நீக்கி விட்டனர் .
மோசடி 2
அத்தியாயம் 21ல் அஷ்ரப் அலி தானவி அரபியில் ஒரு கவிதையை எழுதி அதற்கான விளக்கத்தை உர்துவில் கொடுத்துள்ளார் .
அந்த கவிதை இவ்வாறு ஆரம்பிக்கிறது " தஸ்தகிரீ கிஜியே மேரே நபி, கஷ்மா காஷ் மே தும் ஹி ஹோ மேரே நபி "
[ நூல் - நஷ்ர் உத் தீப் , அத்தியாயம் 21, பக்கம் 194 ]
அதன் பொருள் " உதுவுங்கள் பெருமானே ! சிரமம் உண்டாகும் போது நீங்கள் மட்டுமே உதவ முடியும் ".
அது ஒரு நீளமான கவிதை மேலும் அஷ்ரப் அலி தானவி இஸ்திகாதா செய்து வந்தார் என்பதும் தெளிவாகும். இந்த ஆதாரம் தேவ்பந்தி தப்லீக் வாஹாபிகளிடம் இஸ்திகாதா அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று விளக்க அளிக்கப்பட்டது.
தேவ்பந்தி வாஹாபிகளின் கொள்கையின்படி இஸ்திகாதா ஷிர்க் என்பதால் , தங்களின் முன்னோடிகளில் ஒருவரான அஷ்ரப் அலி தனவியை முஷ்ரிக் என்று அழைக்க விரும்பாததால் , அவர்கள் இந்த முழு கவிதையும் புதிய பதிப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் .
No comments :
Post a Comment