ஷம்சத்தீன் முஹம்மத் இப்னு அப்துல் ரஹ்மான் அல் சக்ஹாவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) [இறப்பு ஹிஜ்ரி 902] , இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) யின் மாணவர்களில் முதன்மையானவர். அன்னார் மிகச் சிறந்த சட்ட நிபுணராகவும்,வரலாற்றாசிரியராகவும், ஹதீத் கலை வல்லுனராகவும் விளங்கியவர்கள்.
இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அல் கவ்ல் அல் பாதி பி அல் ஸலாத் அலா அல் ஹபீப் அல் ஷபி என்னும் நூலை எழுதினார்கள். அது கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் மீது ஓதும் சலவாத்துகளின் சிறப்புகளை கூறும் நூல்.
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இந்த நூலை உர்துவில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள் .
பதிப்பாசிரியர் - ரசிஉத்தீன் அஹ்மத் பக்ரீ
இதாரா அல் குரான் வ உலூம் அல் இஸ்லாமியா, நசாத் சபீல் சௌக்,கராச்சி,பாகிஸ்தான் .
இந்த மொழிபெயர்ப்பில் பல மோசடிகளும் ,திரிபுகளும் உள்ளன . இங்கே சிலவற்றை காண்போம் .
மோசடி 1
இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அபூபக்கர் பின் முஹம்மத் அவர்களைக் கொண்டு அறிவிகிறார்கள் ," நான் அபூபக்கர் பின் முஜாஹித் அவர்களின் சமீபம் இருக்கையில் ஷைகுல் மஷாயிக் ஷிப்லி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் வந்தார்கள். அபூபக்கர் பின் முஜாஹித் அவர்கள் எழுந்து நின்று,ஷிப்லி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களை ஆரத்தழுவி அவர்களின் முன் நெற்றியில் முத்தமிட்டார்கள் . நான் கூறினேன் ,எஜமானே தாங்களும் பக்தாதைச் சார்ந்த பிற அறிஞர்களும் அவரை பைத்தியக்காரர் என்று கருதும் நிலையில் , ஷிப்லி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுக்கு இவ்வாறு சங்கை செய்யக் காரணம் என்ன ?.
அபூபக்கர் பின் முஜாஹித்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள், "நான் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் எவ்வாறு செய்யக் கண்டேனோ அவ்வாறே செய்துள்ளேன் ".
பின்னர் அவர்கள் நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஷிப்லி அவர்களின் முன் நெற்றியில் முத்தமிட்டதைக் கண்ட தமது கனவை விளக்கினார்கள். நான் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடத்தில் தாங்கள் இந்த அளவுக்கு ஷிப்லி அவர்களின் மேல் பிரியம் வைக்க கராணம் என்ன என்று வினவியபோது ,சாந்த நபி கூறினார்கள் ,ஷிப்லி ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் 'லகத் ஜா அகும் ரசூலுன் மின் அன்புசிகும் ' (குரான் சுரா 9) ஓதி ,பின்னர் 'ஸல்லலாஹு அலைக்க யா முஹம்மத் ,ஸல்லலாஹு அலைக்க யா முஹம்மத்,'ஸல்லலாஹு அலைக்க யா முஹம்மத் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்' என்று ஓதி வந்தார் என்றார்கள் "
[ இந்த குறிப்பை அரபி ஆன்லைன் பிடிஎப் -இல் பக்கம் 173ல் காணலாம் .]
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் மொழிபெயர்ப்பாளர் அவருடைய மொழிபெயர்ப்பில் 'யா' என்ற சொல்லை எடுத்துள்ளார் .ஏனெனில் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய நம்பிக்கை படி யாராகிலும் யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க் .
மோசடி 2
இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் எழுதுகிறார்கள் ," நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத்தையும் ஸலாமையும் சொல்லும் வழக்கத்தை உண்டாக்கியவர்கள் சுல்தான் சலாஹுத்தீன் அல் அய்யூபி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள். ஹாகிம் பின் அஜீஜ் கொல்லப்பட்ட பின் அவரது சகோதரி தமது மகன் மீதும் அதை தொடர்ந்து கலீபாக்களின் மீதும் ஸலவாத் கூறும்படி உத்தரவிட்டார். சுல்தான் சலாஹுத்தீன் இந்த நடைமுறையை நிறுத்தி பாங்கிற்கு பின் நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் கூறும்படி உத்தரவிட்டார்."
மேலும் இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் எழுதுகிறார்கள் ," உண்மையாதெனில் , இந்த நடவடிக்கை ஒரு நல்ல பித்அத்(பித்அத் அல் ஹசனா) மேலும் இதை செய்யும் ஒருவர் இதற்கான நன்மையை பெறுவார் "
[ பக்கம் 192 , அரபி ஆன்லைன் பிடிஎப் பதிப்பு ]
தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் ஹசனா என்ற வார்த்தையை நீக்கி விட்டு வெறும் பித்அத் என்று வைத்துள்ளார். மேலும் அவர் அதைத் தொடர்ந்து வரும் வாசகத்தை அப்படியே முழுமையாக நீக்கி விட்டார்.
இதன் மூலம் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் பாங்கிற்கு பின் சலவாத் சொல்லும் வழத்திற்கு உண்டான ஆதாரத்தை மறைத்து விட முற்படுகின்றனர். இது தான் ஸலவாத் மீது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் காழ்ப்புணர்ச்சி .
மோசடி 3
இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் எழுதுகிறார்கள் ,"ஒரு முறை இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலில் உணர்ச்சியில்லாமல் ஆனது. அவர்களிடம் கூறப்பட்டது நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை நினைத்து கொள்ளுமாறு அவரிடம் சொல்லப்பட்டது . இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் யா முஹம்மத் என்று கூறினார்கள் . அவர்களின் கால் சரியானது "
[ பக்கம் 225, அரபி ஆன்லைன் பிடிஎப் பதிப்பு ]
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் மொழிபெயர்ப்பாளர் இந்த முழு சம்பவத்தையும் நீக்கிவிட்டார் .ஏனெனில் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய நம்பிக்கை படி யாராகிலும் யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க் .
No comments :
Post a Comment