இஸ்மாயில் திஹ்லவி எழுதிய பார்ஸி நூல் இஜா உல் ஹக் . அதில் அவர் கூறுகிறார் ,
"வஹ்ததுல் வுஜூத் மற்றும் வஹ்ததுல் ஷுஹூத் இரண்டும் பித்அத் "
[ வாசகர்களின் கவனத்திற்கு தஸவ்வுப்- பையும் விட்டு வைக்காத இந்த வஹாபிய தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினரின் சிஷ்தி சப்ரி சில்சிலா வஜூதி சில்சிலா . இந்த வஹாபிய தப்லீக் ஜமாஅத் தரீக்காக்களில் எவ்வாறு ஊடுருவியுள்ளனர் என்பதை பின்னர் விளக்குவோம் ]
இஸ்மாயில் திஹ்லவி மேலும் கூறுகிறார் ,
"அல்லாஹ் நேரத்தை விட்டும் காலத்தை விட்டும் திசைகளை விட்டும் தேவையற்றவன் என்று நம்புவது பித்அத் மேலும் அல்லாஹ் ஹுதஆலாவின் பரிசுத்த லிகா என்னும் தரிசனத்தை நியாயத் தீர்ப்பு நாளில் திசையில்லாமல் பார்க்கலாம் என்று நம்புவது பித்அத் "
இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் ,
" ஆயத்தே முதஷ்பிஹாத் வின் தாவீல் செய்வது பித்அத் "
மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி இந்த வஹாபிய கொள்கையுடைய இஸ்மாயில் திஹ்லவியின் அகீதாவை சஹீஹ் அகீதா என்கிறார் . என்னே இவர்களின் வஹாபிய விசுவாசம் !!!
No comments :
Post a Comment