தாருல் உலூம் தேவ்பந்த் மௌலவி காசிம் நானூத்வியால் 1866/68 ல் ஸ்தாபிதம் செய்யப்பட்டது .
காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிமார்கள் அப்பட்டமான பொய்கள் உரைப்பதை விட்டும் தூய்மையானவர்களாகவும் ,பாவங்களை விட்டும் அப்பாவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" (மஆதல்லாஹ்)
[ நூல் - தஸ்பியத் உல் அகாயித் ,பக்கம் 25,பதிப்பாளர்கள் சையத் மாலிக் குதுப்கானா அஜீஸியா தேவ்பந்த் ]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]
காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"வெளிப்படையான அமல்கள் மூலம் ஒரு சராசரி முஸ்லிம் நபியை விட உயர்ந்த அந்தஸ்துக்கு செல்ல முடியும். "
[ நூல் -தக்தீருன்னாஸ் ,பக்கம் 5]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று."
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]
காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு நபி வந்தால் அல்லது அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் என்று அனுமானம் செய்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "[நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 25 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]
"உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர்"
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]
காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ அவை தஜ்ஜாலிடமும் உள்ளன."
[ நூல் - ஆபே ஹயாத் ,பக்கம் 169, பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தில்லி 1355 ஹிஜ்ரி,1936 ]
காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிமார்கள் தனது உம்மத்தை விட அறிவில் மட்டுமே மேலானவர்கள்,ஆனால் அமல்களில் ,சில சமயம் உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமானவர்களாகவும் ,மேலும் எப்போதாவது அமல்களில் முந்தியவர்களாகவும் காணப்படுகின்றனர்"
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் மக்தபா பைஸ் நசத் ஜாமி மஸ்ஜித் ,தேவ்பந்த் மற்றும் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]
தக்தீருன் நாஸ் நூலில் உள்ள மேலும் சில வழிகெட்ட கொள்கைகள்
No comments :
Post a Comment