Friday 23 May 2014

கலீல் அஹமத் அம்பேட்வியின் வஹாபிய வழிகேடு


மௌலவி கலீல் அஹ்மத் கூறுகிறார்,
Baraheen-e-Qatiah, pg 278, lines 13, 14

"ஈமானே கிஸ்ப் என்பதன் அர்த்தம் இதுதான்,அல்லாஹுதலாவிற்கு பொய் சொல்லும் அதிகாரம் உள்ளது,எனினும் இது நடக்காது "
[ நூல் - பராஹீனே காதியா,பக்கம் 278 ]   
"அல்லாஹ் பொய் சொல்லுவான் மேலும் இது விஷயமாக எழும் கேள்விகள் தற்போது எழுபவை அல்ல, இதற்கு முன்னர் வாழ்ந்த உலமாக்கள் மத்தியிலும் இது விவாதப் பொருளாகயிருந்தது."
[ நூல் - பராஹீனே காதியா,பக்கம் 6]
"ஷைத்தானும் மலக்குல் மவ்த்தும்,பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அறிவிமிக்கவர்கள் "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 51 -52, பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365]
"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தனது இறுதி முடிவு என்னவென்று தெரியாது , மேலும் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது"
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 51,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365 ]
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம்  இருந்த தொடர்பின்மூலம் கற்றார்கள் "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 26,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365 ]

கலீல் அஹமத் எழுதுகிறார் ,
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உங்களின் சகோதரர் என்று அழைப்பது நியாயமானதே "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 3 -6 ]
"மீலாதுந்நபி கொண்டாடுவது இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது போன்றது "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 148,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365]

கலீல் அஹ்மத் கூறுகிறார்,
" ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து ஆகியோருடைய நிலையை பார்த்த பின்னர் அவர்கள் ஆழமான அறிவுடையவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம் மேலும் இது குரான் ஹதீஸ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குரான் ஹதீஸ் ஆதாரம் இல்லாமல் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  அதேபோன்ற ஆழமான அறிவுடையவர்கள் என்று பகுத்தறிவின் மூலம் நிரூபனம் செய்வது தவறான் எண்ணம்.அவ்வாறு செய்வது ஷிர்க் அல்லாமல் வேறு எந்தவிதமான ஈமான் ?"
[ நூல் - பராஹீனே காதியா,பக்கம் 148,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365]

                                                 
                                         அஸ்தக்பிருல்லாஹ்  !!!


 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment