Thursday 1 May 2014

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் - 2

ஹதீஸ் எண் 11
  பின்னர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (எங்களை நோக்கி) இறுதிகாலத்தில் ஒரு கூட்டம் வெளிப்படும்.இவனும்(துல் குவைஸரா) அவர்களைப் போன்றவனே.அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்.ஆனால் அவை அவர்களது உதட்டளவோடு நின்றுவிடும்.அவர்கள் வில்லில் இருந்து வெளிப்படும் அம்பினைப் போல் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவர்.தலையைச் சிரைத்திருப்பது அவர்களது முக்கிய அடையாமாகும்.அவர்கள் கூட்டங்கூட்டமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருப்பர்.அவர்களின் இறுதிக் கூட்டம் தஜ்ஜாலுடன் இருக்கும்.நீங்கள் அவர்களை சந்திக்க நேருமாயின் அவர்கள் பிறப்பிலும்,குணஒழுக்கத்திலும் மிகமோசமான நடப்பாளர்களாக அவரகளைப் பெற்றுக் கொள்வீர்கள் எனக்கூறினர்.

அ-ர்: ஹஜ்ரத் ஷரீக் இப்னு ஷிஹாப் ரலியல்லாஹு அன்ஹு நூல்:மிஷ்காத்,பக்கம்-309.

 குறிப்பு:
       பனூ ஹனீஃப் என்ற கோத்திரத்தாருக்கு பனூ தமீம் என்னும் மற்றோர் பெயரும் இருக்கின்றதென்பதை தேவ்பந்திகளின் தலைவர் ஒருவர் கூரிடக் கேட்டோம். மேலும் இப்பூவுலகில் இறைவனின்  அருட்கொடைகளான நீதி,நேர்மை,நெறி,நியாயம்,கண்ணியம் போன்றவைகளின் தொகுப்பாளரான நபிகள் நாதருக்கே நியாயத்தை போதிக்க வந்த ‘ துல் குவைஸரா’ என்ற நயவஞ்சகன் பனூ தமீம் பரம்பரையில் வந்தவன் என்பதை ஹதீஸ் எண் 9 நமக்கு விளக்கிக் காட்டுகின்றது.
    இன்னும் அண்ணல் நபிகளாரையே நோக்கி ‘அல்லாஹ்விற்கு அஞ்சி நியாயமாக நடந்து கொள்ளுங்கள்’ எனக் கூறியோர் அக்காலத்திலேயே இருக்கும் பொழுது,இன்று பெருமானாரின் வாரிசுகளாக திகழும் சத்திய உலமாக்களையும்,வலிமார்களையும் குறை கூறுவோர் இக்காலத்தில் இருப்பதைக் கண்டு வியப்பெய்த வேண்டிய தேவையே இல்லை.
   மேலும் ஹதீஸ் எண் 7 முதல் 11 வரை உள்ளவற்றிலிருந்து அண்ணல் நபி நாதருக்கு விரோதியாக் இருந்த குலத்தார் பற்றியும்,அக்குலத்தலைவர் பற்றியும் அறிந்து கொள்ளப்படுவதுடன்,இறுதிக் காலத்தில் தோன்றும் கூட்டமும் இவர்களது பாரம்பரியத்திலிருந்தே வெளிப்படும் என விபரிக்கப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்க ஒன்று .

ஹதீஸ் எண் 12
         அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர், ‘வருங்காலத்தில் என் சமூகத்தாரது மத்தியில் பிரிவினைவாதங்களும்,கருத்து மோதல்களும் உருவாகும்.அதில் ஒரு கூட்டத்தாரது சொற்கள் மிக அழகாகவும்,கவர்ச்சியாயும்,ஆனால் அவர்களது செயல் மோசமாகவும்,வழிதவறவைக்கக்கூடியதாகவும் இருக்கும்.அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள் ஆனால் அவர்கள் தொண்டைக்கு குழிக்குகீழே இறங்காது. நாணை விட்டுச் செல்லும்அம்பைப் போல அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவர்.அம்பு மீண்டும் நாணை நோக்கி திரும்பி வந்தாலும் வரலாம்.ஆனால் அவர்கள் மார்க்கத்தின் பால் திரும்பவே மாட்டார்கள்.
      அவர்கள் பிறப்பிலும்,நடைமுறை செயல்களிலும் மகாமோசமானவர்களாக இருப்பர். குரானின் பக்கமும்,மார்க்கத்தின்  பாலும் வருமாறு மக்களை அழைத்திடுவர்.ஆனால் அவர்களுக்கும் மார்க்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது.யார் அவர்களுடன் போராடுவாரோ,அவர் அல்லாஹ்விற்கு மிக நெருங்கியவராக இருப்பார்.அவர்களது அடையாளம் என்ன ? இறைத் தூதரே ! அந்த நபித்தோழர்கள் வினவிட,மொட்டை அடித்திருப்பது அவர்களின் அடையாளமாகும் என்பதாக நபிகள் திலகம் நவின்றனர்.
அ-ர்: அபூ ஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத் பக்கம்:308

ஹதீஸ் எண் 13:
       இந்த ஹதீஸை அறிவிப்பவர் ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.ஹதீஸைக் குறிப்பிடும் முன் அவர்கள் கூறுகின்றனர்,”அல்லஹ்வின் மீதாணையாக வானத்திலிருந்து பூமியில் வீழ்வது எனக்கு இலகுவானதே, ஆனால் நபிகள் நாதர் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பொய்யை இட்டுக்கட்டுதல் எனக்கு மிக மிக கடினமான ஒன்றாகும் எனக் கூறி அதன்பின் கீழ்காணும் ஹதீஸை அறிவிக்கின்றனர்.
       இறுதிக்காலத்தில் தெளிந்த ஞஆனமில்லாத வாலிபர்களைக் கொண்ட கூட்டமொன்று வெளிப்படும். அவர்கள் வெளித்தோற்றத்தில் சிறந்தமுறையில் பேசுவர்.ஆனால் அவர்களின் ஈமான் தொண்டைக் குழிக்குகீழே இறங்காது.வில்லை விட்டும் விரைந்தோடும் அம்பினைப்போல் இவர்கள் மார்க்கத்தைவிட்டும் வெளியேறிவிடுவர் என்பதாக அண்ணல் நபிகளார் நவின்றதை நான் செவியேற்றேன்.
      அ-ர்: ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு நூல்:புஹாரி பாகம்:2 பக்கம் 1024

குறிப்பு:
     நானிலம் சிறக்க வந்த நபிகள் பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அறிவித்த அனைத்தையும் மனம்,வாக்கு,காயம் ஆகியவைகளால் முழு மனதுடன் நம்பிக்கைக் கொள்வது தான் ஈமான் ஆகும்.நாவினால் மொழிவது மட்டும் ஈமான் ஆகாது.ஆதலால் மேற்கூறப்பட்ட ஹதீஸில்,இறுதிக்காலத்தில் தோன்றும் இக்கூட்டத்தினரது ஈமான் வாயள்வில் தான் இருக்குமேயன்றி,உண்மையில் அவர்கள் விசுவாசிகளாக இருக்கமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

ஹதீஸ் எண் 14:
     இறுதிக் காலத்தில் எங்கு நோக்கிலும் புழு புச்சிகளைப் போன்று முல்லாக்கள்(போலி அறிஞர்கள்) திரிவார்கள்.உங்களில் எவராவது அக்காலத்தை அடையப் பெற்றால் அல்லாஹ்விடம்,அவர்களைவிட்டும் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்”
அ-ர் : அபூ உமாமத்துல் பாலிஹி ரலியல்லாஹு அன்ஹு நூல்:ஹூலிய்யா ஷரீஃப்

ஹதீஸ் எண் 15
  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முஸ்லிம்களை நோக்கி) மக்களிடையே இப்படியும் ஒரு காலம் வரும்.அக்காலத்தில் உலக சம்பந்தமான விஷயங்களே பள்ளிவாயில்களில் பேசப்படும்.அத்தகைய ஓர் காலத்தை நீங்கள் பெற்றுக்கொண்டால் அவர்களுடன் (கலந்து) அமர வேண்டாம். அவர்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவனாக் இருக்கிறான்.
அ-ர்:ஹஜ்ரத் ஹசன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு நூல்:மிஷ்காத்

ஹதீஸ்களின் சுருக்கம்:
           இந்த ஹதீஸ்கள் ஒரு சாதாரண சமூகத் தலைவரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அல்ல. மாறாக இப்பிரபஞ்சத்தில் இது வரை நடந்த,நடந்து கொண்டுள்ள,நடக்கப் போகின்ற அனைத்தும் யாரால் வடிவமைக்கப்படுகின்றதோ, அந்த வல்லோனான அல்லாஹ்வினால் அவனது திருத்தூதரான நபிகள் நாதருக்கு விளக்கிக் காண்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளாகும்.கிழக்கில் தோன்றும் ஆதவன் ஒரு வேளை திடீரென தனது இயக்க நியதியை மாற்றிக்கொண்டு மேற்கிலிருந்து உதித்தாலும் உதிக்கலாம்.ஆனால் நபிகளாரது நாவினின்றும் வெளிப்பட்ட வார்த்தைகள் எக்காலத்திலும்,எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் மாறவே மாறாது.மாறவும் முடியாது.
  அவ்வாறு மாறிவிடும் பட்சத்தில் அவர்களால் யார் மூலம் நமக்கு இவ்வாறு எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டதோ,அந்த இறைவனையே நாம் நிராகரிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். ஏன் தெரியமா ? நபிகளாருக்குத் தெரிந்த பிற்காலத்தில் நடைபெறப்போகும் மறைவான விஷயங்கள் அனைத்தும், அல்லாஹ்வினால் நபிகளாருக்கு அறிவிக்கப்பட்டவைகளாகும்.இது பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது,
  “இதுவரை உலகில் நடந்த,நடக்கின்ற,நடைபெறப்போகின்ற நிகழ்வுகள் எல்லாவற்றையும் இறைவன் எனக்கு மிஃராஜ் என்னும் விண்ணேற்றப் பயணத்தின் போது அறிவித்துத் தந்துவிட்டான்” என்று கூறியுள்ளனர்.
ஆகையால் அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகின் இறுதி நாள்வரை நிகழவிருக்கும் குழப்பங்களைப் பற்றியும்,அக்குழப்பங்களை தோற்றுவிக்கக் கூடியவர்களைப் பற்றியும்,அவர்கள் எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களாயிருப்பர் என்பதை பற்றியும் தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி இனங்காட்டி தந்துவிட்டனர் என்பதை “அபூதாவூத் “ என்னும் ஹதீஸ் கிரந்தத்திலிருந்து அபூஹுதைபா ரலியல்லாஹு அன்ஹூவின் அறிவிப்பைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பதினைந்து ஹதீஸ்களும் உலகின் இறுதிக்காலத்தில் தோன்றும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரைப் பற்றியே அறிவித்துத் தருபவைகளாக இருப்பதை கொஞ்சம் ஊன்றி கவனித்தால் தெரிய வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment