Friday 30 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் போலி ஜிஹாத்


  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் சுயமான கூற்றின்படி இந்திய சுதந்திர போராட்டத்திற்கான பங்களிப்பு அவர்களின் வஹாபிய நிறுவனர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி மற்றும் அவரது ஆசிரியர் சய்யத் அஹ்மத் பரேலி மூலம் தொடங்குகிறது.ஆகவே தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் தமது முன்னோடிகளின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த எந்த வரலாற்று நூல்களை சார்ந்து உள்ளனர் என்று அறிவது அவசியம் .

1) சவானாஹ் அஹ்மதி வா தவ்ரீக் அஜீபா -   சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் : முன்ஷி முஹம்மது ஜாபர் தானேஸ்வரி.

2) ஹயாதே தய்யிபா - சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு . ஆசிரியர் : மிர்சா ஹைராத் திஹ்லவி .

மௌலானா மன்சூர் நுஃமானி அல்  தேவ்பந்தி எழுதுகிறார் ,

" மிர்சா ஹைராத் திஹ்லவிவின் நூலான  ஹயாதே தய்யிபா ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் உண்மையான,நம்பகமான சுயசரிதை "    
[ அல் புர்கான் ,பக்கம் 51,ஹிஜ்ரி 1355]

மவ்லானா ஹசன் அலி நத்வி எழுதுகிறார் ,

" தவ்ரீக் அஜீபா சய்யத் அஹ்மத் பரேலி அவர்களின் வரலாற்றைக்  கூறும் முதன்மையான நூல் , அதன் சய்யத் சாஹிபின் வாழ்க்கையின் பெரும்பான்மையான பகுதிகளைத் தெரிந்து கொள்ளலாம் "
[ சீறத் சய்யத் அஹமத் , பக்கம் 8]

முன்ஷி முஹம்மது ஜாபர் தானேஸ்வரி எழுதுகிறார் ,

" சில வரலாற்று  ஆசிரியர்கள் சய்யத் சாஹிபின் சரிதத்தை மோசமாக படம்பிடித்து காட்டியுள்ளனர்.அவர்கள் அவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிரி போல் சித்தரித்துள்ளனர்.இந்த சந்தேகத்தையும்,மோசடியையும்  நீக்கவும்,மக்கள் உண்மையை உணர வேண்டும் என்று  நான் சய்யத் சாஹிபின் வாழ்க்கையில் இருந்து உண்மைகளை முன்வைக்க முடிவு செய்தேன்.அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்ததில், குறைந்த பட்சம் 20 இடங்களில் ஷரியத் ஆதாரம் மூலம், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாது தன்னைப் பின்பற்றுவோருக்கு அறிவுறுத்தினார் என்பதை தெளிவாக காணலாம் "
[சவானாஹ் அஹ்மதி , பக்கம் 226,ஸ்டீம் பிரஸ் ,லாகூர் ]

இங்கோ சய்யத் அஹ்மத் பரேலியின் வரலாற்றாசிரியர் பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சி செய்யவில்லை என்கிறார் ,தேவ்பந்தின் உலமாக்களோ சய்யத் அஹ்மத் பரெலியை சுதந்திர போராட்ட வீரர் என்கிறார்கள். தங்கள் கூற்றை நிரூபிக்க கேட்டால், அவர்களிடம் வழக்கம் போல் ஒன்றுமே இல்லை ! 


தானேஸ்வரி மேலும் எழுதுகிறார் ,

" இது சய்யத் சாஹிப்  பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒருபோதும் ஜிகாத்துக்கு ஆதரவாக இல்லை என்று தெளிவாகிறது. அவர் இந்த அரசை தம்முடைய சொந்த அரசை போல் நினைத்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் சய்யத் சாஹிப்புக்கு  எதிராக இருந்திருந்தால், பின்னர் சய்யத் சாஹிப்  சீக்கியருக்கு  எதிரான தனது போராட்டத்தில் இந்த அளவுக்கு ஆதரவை பெற்றிருக்க மாட்டார் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் சீக்கியர்களின் செல்வாக்கை  சையத் சாஹிப் குறைக்க  வேண்டும் என்று விரும்பியது. "
[ சவானாஹ் அஹ்மதி , பக்கம் 139 ]

இதோ உங்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு செய்தி !

மௌலானா மன்சூர் நுஃமானி அல்  தேவ்பந்தி எழுதுகிறார் ,

" அவர் பிரிட்டிஷ் அரசுக்கு  எதிராக எந்த ஜிஹாத் பிரகடனமும்  செய்யவில்லை என்பது மிகவும் பிரபலமானது, மாறாக தமது கல்கத்தா அல்லது பாட்னா கூட்டத்தில் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  ஆதரவாக தனது ஒப்புதலை வழங்கினார் மேலும் இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தது  என்று அறியப்படுகிறது  "
 [ அல் புர்கான் ,பக்கம் 78,ஹிஜ்ரி 1355]

"மேலும் அவர் கல்கத்தாவில் தங்கிய பொது இதுவும் நடந்ததும் உண்மை, ஒரு நாள் மௌலானா இஸ்மாயில் திஹ்லவி விரிவுரை கொடுத்து கொண்டிருக்கும் போது, ஒரு மனிதர் மவ்லானவிடம் ஒரு பத்வா கேட்டார் , அது பிரிட்டிஷ் அரசு எதிராக ஜிகாத் அறிவிக்க அனுமதிக்கப்படுமா? மவ்லானா பதில் கூறினார்கள் இந்த முறையான மற்றும் பாரபட்சமற்ற அரசாங்கத்திற்கு எதிராக ஜிகாத் அறிவிப்பது  எந்த வழியிலும் சரியில்லை "
[சவானாஹ் அஹ்மதி , பக்கம் 57 ]

இதே சம்பவம் ஹயாதே தய்யிபாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

"ஒரு நாள் மௌலானா இஸ்மாயில் திஹ்லவி கல்கத்தாவில் வைத்து ஜிகாத் பற்றியும் சீக்கியர்களின் கொடுமைகளைப் பற்றியும் விரிவுரை கொடுத்து கொண்டிருக்கும் போது, குழுமியிருந்தவர்களில் யாரோ ஒருவர் எழுந்து , ' நீங்கள் ஏன் பிரிட்டிஷ் அரசு எதிராக ஜிகாத் அறிவிக்க பத்வா கொடுக்ககூடாது ' என்று கேட்டார் . அவர் கூறினார் , 'அவர்களுக்கு எதிராக ஜிஹாத் எந்த விதத்திலும் வாஜிப் இல்லை.முதலில் நாம் அவர்களின் பாதுகாப்பின்  கீழ் உள்ளோம், இரண்டாவதாக அவர்கள் நமது  மார்க்க  கடமைகளுக்கு எந்த தொந்தரவும்  செய்யவில்லை. நாம் இந்த அரசாங்கத்தின் கீழ் முழு சுதந்திரத்துடன் உள்ளோம்.உண்மையில் இந்த அரசாங்கம் மீதான தாக்குதல் இருந்தால் முஸ்லீம்கள் அந்த எதிரியை போராடுவது பர்ழ்  மேலும் எந்த வகையான துன்பங்களை விட்டும் நமது பிரிட்டிஷ் அரசைக்   காப்பாற்ற வேண்டும்"
[ ஹயாதே தய்யிபா ,பக்கம் 29 , பாரூகி பிரஸ் ,தில்லி ]

"எந்த அடிப்படையில் நாம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஜிகாத் செய்து, நமது ஷரியத் சட்டத்தை  கொன்றுவிட  முடியும்"[சவானாஹ் அஹ்மதி , பக்கம் 57 ]

" லார்ட் ஹாஸ்டிங்க்ஸ் சயீத் அகமது செயல்களை / சாதனைகள் மீது  மிகவும் சந்தோஷமாக இருந்தார்.இரண்டு இராணுவங்களுக்கு இடையே ஒரு கூடாரம் எழுப்பப்பட்டு மூன்று ஆண்கள் மத்தியில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது :அமீர் கான்,லார்ட் ஹாஸ்டிங்க்ஸ்,சயீத் அகமது.சயீத் அகமது சாஹிபிற்கு அமீர் கானை சரியான வழியில் கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்தது "
[ஹயாதே தய்யிபா ,பக்கம் 294  ]  

மௌலானா அபுல் ஹசன் அலி நத்வி எழுதுகிறார்,

" ஒருமுறை சய்யத் சாஹிபும் அவரது ஆதரவாளர்களும் ஒரு படகில் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் ஒரு பிரிட்டிஷ் வீரர் பெரிய கொள்கலன்களில் நிறைய உணவுகளுடன் காத்துக் கொண்டிருந்ததைக் கண்டனர்.அந்த வீரன் கப்பல் அருகில் வந்து 'பாதிரி சாஹிப்' எங்கிருக்கிறார் என்றான்.ஹஜ்ரத் அவர்கள் படகில் இருந்து பதில் அளித்தார்கள் 'நான் இங்கு இருக்கிறேன்' என்று.அந்த பிரிட்டிஷ் வீரன் தனது குதிரையில் இருந்து இறங்கி, தனது தொப்பியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு படகை நோக்கி வந்தான்.நலம் விசாரித்த பின்னர் அந்த பிரிட்டிஷ் வீரன் கூறினான் ,'நான் கடந்த மூன்று நாட்களாக உங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன், எனது ஆட்களையும் உங்கள் கூட்டத்தினரை கண்டுபிடிக்க நியமித்திருந்தேன். அவர்கள் இன்று தாங்கள் இங்கு வருவதாக கூறினர்,எனவே காலை முதல் உங்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன்.சைய்யத் சாஹிப் உணவினைப் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள கட்டளையிட்டார்கள்.உணவு அங்கிருந்தவர்களிடையே பரிமாரப்பட்டது,அந்த பிரிட்டிஷ் வீரன் அங்கு இரண்டு மூன்று மணி நேரம் இருந்து விட்டு பின்னர் விடைபெற்றான்'  " .

[ நூல் - சீறத் சைய்யத் அஹமத் ஷஹீத் ,பக்கம் 190, மௌலானா அபுல் ஹசன் அலி நத்வி ]

புதிரான சில கேள்விகள் ,யாராகிலும் அந்த பிரிட்டிஷ் வீரன் சைய்யத் சாஹிபிற்காக மூன்று நாட்கள் காத்துக் கொண்டிருந்தான் .பிரிட்டிஷ் வீரன் பாதிரியார் எங்கே என்கிறான் .உடன் பதில் வந்தது நான் இங்கு உள்ளேன் என்று ! .ஒரு மௌலானாவை பாதிரி என்று கூப்பிட்டதில் எந்த வித்தியாசமான உணர்வும் இல்லை .

            இதை எல்லாம் மீறி தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி பிரிட்டிஷாருக்கு எதிராக ஜிஹாத் புரிந்தார் என்று பொய் பரப்பிவருகின்றனர்.

சைய்யத் அஹ்மத் பரேலி தனது பணி என்னவென்று கூறுகிறார் ,
" நான் சீக்கியரை எதிர்த்து போராடவும் அவர்களை முடிவுக்கு கொண்டு வரவும் இல்ஹாம் மூலம் ஆசீர்வாதிகப்பட்டுள்ளேன் " 

[ நூல் - சவானெஹ் அஹமதி , பக்கம் 180 ]

மேலும் அவர் கூறுகிறார் ,
" எனது போராட்டம் முஸ்லிம்களுக்கோ ,காபிர்களுக்கோ எதிராக அல்ல. எனது போராட்டம் சீக்கியர்களுக்கு எதிராக .எனக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் எந்த விரோதமும் இல்லை "

"மௌலானா ரஷீத் அஹமத் கங்கோஹீ கூறுகிறார் ஹாபிழ் ஜானி என்னிடம் தான் அந்தக் கூட்டத்தில் ஒருவர் அன்று கூறினார்.சய்யத் சாஹிப் பல அதிசயங்களை நிகழ்த்தினார்கள்.மௌலவி அப்துல் ஹை  லக்னவி,  மௌலவி இஸ்மாயில் திஹ்லவி,மௌலவி ஹுசைன் ராம்பூரி போன்றோரும் அந்தக் கப்பலில் இருந்தனர் . சைய்யத் சாஹிப் தனது முதல் ஜிஹாதை யாகிஸ்தானின் அரசன் முசம்மா யார் முஹம்மது கானுக்கு எதிராக நடத்தினார்கள் . "

[ நூல் - தச்கிரத்தூர் ரஷீத் ,வால்யூம் 2, பக்கம் 270 ]

யார் முஹம்மத் கான் என்ற பெயர் இஸ்லாமிய பெயரா இல்லையா  என்பதை இந்த பதிவைப்  படிப்பவர்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறேன் .
மேலும் அவரது வரலாறில் சைய்யத் அஹ்மத் யுத்த களத்தை விட்டு ஒரு குகையில் சென்று உட்கார்ந்து கொள்கிறார் .அவரது சகாக்கள் அவரைக் கண்டுபிடித்து ஏன் இவ்வாறு யுத்தகளத்தை விட்டு வெளியேறினார் என்று கேட்ட பொழுது ,தாம் இவ்வாறு செய்யுமாறு கட்டளை
இடப்பட்டதாகக் கூருகிறார் !!!.

  ஒரு இடத்தில் இல்ஹாம் மூலம் சீக்கியரை எதிர்ப்பதாகக் கூறுகிறார்,மறுபுறம் யுத்தகளத்தை விட்டு வெளியேறி குகையில் உட்கார்ந்து கொள்கிறார் . என்னே இவரின் ஜிஹாத் !!!

    அதுமட்டுமில்லாமல் இன்றைய காலத்தில் வஹாபிகள் என்ன செய்கிறார்களோ ,அதைத்தான் அவரும் அன்றே செய்து தனது வஹாபிய விசுவாசத்தை வெளிப்படுத்தினார் . முஸ்லிம்களிம்களின் கபுருகளை தரைமட்டமாக்கினார் .

இல்ஹாம் மூலம் சீக்கியரை எதிர்ப்பதாகக் கூறும் சைய்யத் அஹ்மத் தனது முடிவில் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதைக் கீழே  காணலாம் ,

" தன்னுடன் போதிய ஆள் பலம் இருந்த பொது மௌலானா சைய்யத் அஹமத், மௌலவி இஸ்மாயில் திஹ்லவியுடன் கலந்து ஆலோசித்து , குலாம் அலி ரயீஸ் அலஹாபாதி அவர்களின் செல்வாக்குடன் ,அவர் தாம் சீக்கியர்கள் மீது ஜிஹாத் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்குமா என்று  வடமேற்கு பகுதியின் லெப்டினன்ட் ஜெனரல் தெரிவித்தார். ஆளுநர் எமது இறையாண்மையை பாதிக்காதவரை, நாங்கள் கவலைப்படவில்லை என்று பதிலளித்தார் . "

[ஹயாதே தய்யிபா, பக்கம் 302 ]

இது தான் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் நடத்திய ஜிஹாதின் லட்சணம் . பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிய பின் நடத்தும் இந்த ஏவல் வேலையை வலிமார்கள் கூறும் இல்ஹாமுடன் தொடர்புபடுத்தி பொய் பேசும் இவர்களின் வஹாபிய நாக்கு இன்னும் என்னவெல்லாம் பேசும் என்பதை உலமாக்களும் , மக்களும் சிந்திக்க வேண்டும் .  


Hayaathe Tayyibaa




 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment