Thursday 29 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் மீது வழங்கப்பட்ட பத்வா



            மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதுகிறார்கள் ,

"             மௌலானா முஹம்மத் இஸ்மாயில் தெஹ்லவி ஷஹீத் , மௌலானா முனவ்வருத்தீனின் வகுப்புத் தோழர். ஷாஹ் அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மறைவுக்குப் பின்,அவர் (இஸ்மாயில் திஹ்லவி ) தக்வியதுள் ஈமான் ,ஜிலா உல் அய்னய்ன் ஆகிய நூல்களை எழுதிய போதும் , அவரது கொள்கைகள் நாடெங்கும் பரவிய போது, எல்லா மார்க்க அறிஞர்களும் அதற்கு எதிராக ஒன்று திரண்டனர். அவர்களில் இந்த நூற்களை வெகுவாக எதிர்த்து,இதற்கு எதிராக பல நூற்களை எழுதியவர்கள் மௌலானா முனவ்வருத்தீன் அவர்கள்.
ஹிஜ்ரி 1240ல் தில்லி ஜாமியா மஸ்ஜிதில் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் நடைபெற்றது. இந்த நூற்களின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து உலமாக் களிடமும் பத்வா கேட்கப்பட்டு , பின்னர் ஹரம் ஷரீபில் இருந்தும் ஒன்று கேட்கப்பட்டது.

                  மௌலானா முனவ்வருத்தீன் ஆரம்ப காலத்தில் இஸ்மாயில் திஹ்லவியையும் அவரது மருமகன் மௌலானா அப்துல் ஹை மற்றும் அவர்களை பின்பற்றுவோரை சமாதானப்படுத்த முயன்றார் ,மேலும் அவர்களை சம்மதிக்க வைக்க அனைத்து வழிமுறைகளையும் முயற்சி செய்தார் என்பது அவரது எழுத்துகளில் புலனாகிறது.எனினும் , அவரது அனைத்து முயற்சிகளும் எந்த  பலனளிக்கவில்லை என்ற போது, மௌலானா முனவ்வருத்தீன் விவாதிக்கவும்,மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தார். தில்லி ஜாமியா மஸ்ஜிதில் அந்த பிரசித்தி பெற்ற விவாதம் எற்பாடு செய்யப்பட்டது, ஒரு பக்கம் இஸ்மாயில் திஹ்லவியும் மௌலானா அப்துல் ஹையும் , மற்றொரு பக்கம் மௌலானா முனவ்வருத்தீனும் தில்லியைச் சார்ந்த அணைத்து உலமாக்களும். "

 [ நூல் - ஆசாத் கி கஹானி ,பக்கம் 48,மக்தபா கலீல் ,உர்து பஜார்,லாகூர்,மௌலானா அப்துர் ரஜ்ஜாக் மலீஹ் ஆபாதி ]

மவ்லானா மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா முஹம்மது மூசா பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்), முப்தி சத்ருத்தீன் ஆசுர்தாஹ்(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்),மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ,மவ்லானா அஹ்மத் சய்யத் நக்ஷபந்தி திஹ்லவி,மவ்லானா ரஷீத்துத்தீன் திஹ்லவி,மவ்லானா கைருத்தீன் திஹ்லவி,ஹகீம் சாதிக் அலி கான் திஹ்லவி(மசீஹ் உல் முல்க் ஹகீம் அஜ்மல் கான் னின் பாட்டனார்),மவ்லானா சய்யத் அஷ்ரப் அலி குல்ஷன் ஆபாதி,மவ்லானா முக்லிசுர்ரஹ்மான் சத்காமி,மவ்லானா கலந்தர் அலி ஜுபைரி பானிபட்டி இன்னும் எண்ணற்ற அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் உலமாக்கள் இந்த புதிய வஹாபிய நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை தங்கள் பேச்சிலும், எழுத்திலும் எதிர்த்தார்கள்.

அவர்கள்  அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் சத்திய கொள்கைகளைப் பாதுகாக்க தங்களின் அறிவின் மூலமும் ,நடவடிக்கைகளின் மூலமும் இந்த உன்னத ஜிஹாதில் பங்கேற்றனர்.

தக்வியதுள் ஈமான் கிதாபைப் பற்றி மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி பின் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடத்தில் மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ அவர்கள் ஏழு கேள்விகள் கேட்டார்கள். இந்த கேள்வி விடை தொகுப்பு தஹ்கீக் அல் ஹகீகா என்று பெயரில் பம்பாயில் இருந்து 1267 ஹிஜ்ரியில் வெளிவந்துள்ளது . அதில் உள்ள மூன்று விடைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

 மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி அவர்கள் எழுதுகிறார்கள்,

"   தக்வியதுள் ஈமான் பற்றிய முதல் கேள்விக்கான விடையாவது, நான் அதை தப்வியதுள் ஈமான் என்று அழைக்கிறேன்,நான் அதை மறுத்து
முஈதுல் இமான்ப் என்று ஒரு தனிக்கட்டுரை எழுதியுள்ளேன். இஸ்மாயிலின் புத்தகம் நமது குடும்ப மரபுகளுக்கு எதிரான மட்டுமின்றி நபிமார்கள்,ரசூல்மார்கள் கூறிய தவ்ஹீதுக்கும் எதிராக இருக்கிறது.ஏனெனில் நபிமார்கள் மற்றும் ரசூல்மார்கள் அனுப்பப்பட்டது மக்களுக்கு கற்பித்து அவர்களை தவ்ஹீதின் வழியில் நடத்தவே.எனினும் இந்த புத்தகத்தில் தவ்ஹீதோ அல்லது நபிமார்களின் சுன்னத்தை கூறும் எந்த அடையாளமும் இல்லை.எந்த விஷயங்களை எல்லாம் இவர்கள் ஷிர்க், பித்அத் என்று கூறி மக்களுக்கு கற்பிக்கிறார்களோ அவற்றை எல்லாம் நபிமார்களோ அல்லது அவர்களை பின்பற்றியவர்களோ அவ்வாறு கூறவில்லை.இல்லை ,அவர்களிடத்தில் ஆதாரம் இருந்தால் , அவரை பின்பற்றுவோரை நம்மிடம் சமர்ப்பிக்க சொல்லுங்கள்.

நான்காம் கேள்விக்கான விடையாவது, வஹாபியின்(இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி)  புத்தகம் உரையாகவும், தக்வியதுள் ஈமான் அதன் வர்ணனை போன்றும் உள்ளது. ஐந்தாம் கேள்வியின் விடையாதெனில் ,ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் .இந்த புத்தகத்தை பற்றி அவர்கள் கேள்வி பட்ட பொது,அவர்கள் கூறினார்கள் தாம் மட்டும் நோய்வாய்படவில்லையாயின் , இந்த புத்தகத்திற்கு துப்னா இத்னா அஷரியா போன்று ஒரு மறுப்பு எழுதியிருப்பேன் என்றார்கள்.

அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நான் (ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி) நான் தக்வியதுள் ஈமான் என்ற வர்ணனைக்கு எழுதிய மறுப்பு ,அதன் உரை நூலான (கிதாபுத்  தவ்ஹீத்) க்கும் மறுப்பாக அமைந்தது.எனது தந்தை ஷாஹ் ரபியுத்தீன் அவர்கள் இந்த நூலை(தக்வியதுள் ஈமான்) பார்க்கவில்லை எனினும் ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் அதைக் கண்டு , நிரகரித்தபொழுது நான் இதற்கு மறுப்பு எழுத ஆரம்பித்தேன்  "

[ நூல் - அன்வர் ஏ அப்தாப் ஏ சதாகத் ,பக்கம் 617-620,கரீம் பிரஸ் ,லாகூர்,முஹம்மத் காதி பஜ்லே அஹ்மத் லுத்யான்வி ]

இமாம் பஜ்லே ஹக் கைராபாதி ரஹ்மாதுள்ளஹி அலைஹி அவர்கள் இஸ்மாயில் திஹ்லவியின் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை எதிர்த்து தஹ்கீக் அல் பத்வா பி இப்தல் அல் தக்வா என்ற நூலை எழுதினார்கள் .இஸ்மாயில் திஹ்லவியின் மீதும் அவரது நூலான தக்வியதுள் ஈமான் மீதும் குப்ர் பத்வா வெளியிடப்பட்டது. அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த 17 முண்ணனி உலமாக்களால் கையெழுத்திடப்பட்டது .

அதன் ஸ்கேன் கீழே உள்ளது.

Fatwa on Ismail Dihlawi
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa


Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
 
 

                         
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment