Friday, 19 September 2025

தேவ்பந்திகளும் வஹாபிகளும்

தேவ்பந்தி இல்யாசி தப்லீக் ஜமாத்தின் முன்னோடியான மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா வில் வஹாபிசத்தின் நிறுவனர் இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமீமீ பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்,

" முஹம்மது இப்னு அப்துல் வஹாப் என்பவர் வஹாபி என்றழைக்கப்படுகின்றார்.அவர் நல்ல மனிதர்.அவர் ஹன்பலி மத்ஹபை பின்பற்றியவர் என்று சொல்லப்படுகின்றது. அவர் பித்அத்துகளையும் ,இணைவைத்தலையும் வெறுத்தார்." 

" முஹம்மது இப்னு அப்துல் வஹாபின் ஆதரவாளர்கள் வஹாபிகள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்களது கொள்கைகள் மிகவும் சிறப்பானவை." 

[ 📕 பதாவா ரஷீதியா ,பக்கம் 292] 

இதனைப் பின்பற்றி தேவ்பந்திகளின் பத்வா வழங்கும் தளமும் மறுபதிப்பு செய்துள்ளனர்,

 பதில் மொழிபெயர்ப்பு : அப்துல் வஹாப் நஜ்தியின் ஆதரவாளர்கள் தான் வஹாபிகள் எனப்படுவோர்.அப்துல் வஹாப் நஜ்தி ஹன்பலி மத்ஹபை பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்தவர்.சில விஷயங்களில் நமது முன்னோடிகளான ஷாஹ் இஸ்மாயில் ஷஹீதிற்கும் ,அவருக்கும் இடையே முரண்பாடுகள் உண்டு.அவர்களைக் குறித்து நாம் நல்லவிதமாக எண்ணம் கொள்ள வேண்டும்.அவர்களைக் குறித்து கெட்ட விதமாக பேசக்கூடாது .

தமிழக ஜமாத்துல் உலமா உலமாக்கள் தமது பயான்களிலும்,இணையதளங்களிலும் வஹாபிகள் என்று கூறிக் கொண்டே வழகெட்ட கொள்கையுடைய தேவ்பந்திகளை ஆதரிப்பது ,தமது கையால் தமது கண்ணை தாமே குத்துவது போல தான் முடியும் !  
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment