Monday 10 November 2014

ஹுஸாமுல் ஹரமைன்


           வடஇந்தியாவில் அஃலா  ஹஜ்ரத் என்று அழைக்கப்படும் இமாமே அஹ்லுஸ் சுன்னத் இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி )  [1856-1921] அவர்கள் அரபியில் 'ஹுஸாம் அல் ஹரமைன் அலா முன்ஹிர் குப்ர் வல் மைன்' என்னும்  சத்திய சன்மார்க்கத்தை பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆய்வு நூலை எழுதினார்கள்.

Hussam al Haramain Fatwa
 

           இந்தியாவில் 1857ல் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்க்கை சீரழிந்த பொழுது அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மார்க்கத்தை பிளவுவடுத்தும் சதியில் பல இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு எதிரான இயக்கங்கள் தோன்றின . இவற்றின் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிடத்தக்க இஸ்லாமிய உலமாக்கள் சிலர் முஸ்லிம் மக்களிடையே இவற்றை பிரபலபடுத்த முக்கியப் பங்காற்றினர்.
அத்தகைய உலமாக்கள் அறிவிளிகலாகவும் ,உலக இன்பங்களுக்கு சோடை போனவர்களாகவும் இருந்தனர். பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியவர்களாக, அவர்களின் இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு எதிரான அந்த வழிகெட்ட கொள்கையை  பிரபல்யபடுத்த அவர்களின் ஆதரவை நாடியது.

      இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி )  அவர்கள் இத்தகையோரின் வழிகேடுக்கு எதிராக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையில் சிறிதும் சமரசம் செய்யாமல் பல்வேறு நூற்களை ஆதாரப்பூர்வமாக எழுதினார்கள் .

       மெளலவி முஹம்மது இஸ்மாயில் திஹ்லவி எழுதிய நூலான 'தக்வியத்துள் ஈமான்' முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி எழுதி நூலான 'கிதாபுத் தொளஹீத்' என்பதை ஒட்டி எழுதப்பட்டது.இந்த நூலில் இஸ்மாயில் திஹ்லவி வேண்டுமென்றே ரிஸாலத்தையும் ,பெருமானார் அவர்கள் காத்தமுன் நபி என்பதை வேண்டுமென்று புறக்கணித்து எழுதியுள்ளார் .

இதன் பின் 1874ல் தேவ்பந்த் மதரசாவைச் சார்ந்த மெளலவி காசிம் நானுத்வி 'தஹ்தீருன் நாஸ்' என்னும் நூலை எழுதினார்.அதைப் போலவே 1887ல் மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி 'பராஹீனே காத்தியா' என்னும் நூலை எழுதினார். பின்னர் 1901ல் மெளலவி அஷ்ரப்   அலி தானவி 'ஹிப்ழுள் ஈமான்' என்னும் நூலை எழுதினார். மெளலவி ரஷீத் அஹமத் கங்கொஹியும் 'பதாவா ரஷீதியா' என்னும் விரிவான நூலை எழுதினார் . இந்த வரிசையில் குலாம் அஹ்மத் காதியானி எழுதிய 'குத்பத் ஏ குலாமியா'  மற்றும் பல நூற்களில் தன்னை நபி என்று வாதிட்ட நூற்களும் சேரும் .இந்த எழுத்துக்கள் எல்லாம் இஸ்லாமிய கோட்பாடுகளின் அடித்தளத்தை அழிக்க முனைகிறது .

    உண்மையில் இமாம் அஹ்மத் ரிழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி
 இந்த துரோகங்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க தன்னை அர்ப்பணிக்கத்தார்கள் மற்றும்
உண்மையான இஸ்லாமியக் கொள்கைகளுக்கு ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பபை தமது மறுப்புக்களிலும்,நூற்களிலும் வழங்கினார். 1905ல் தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்ற ஹிஜாஸ் சென்ற இமாம் அவர்கள் சங்கைக்குரிய மக்கா,மதீனாவைச் சார்ந்த உலமாக்களிடம் 'அல் முதாமத் அல் முஸ்தனத்' என்ற ஒரு வரைவு ஆவணத்தை ஹிஜ்ரி 1323ல் வழங்கினார்கள் .   இமாம் அஹ்மத் ரிழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜாஸ் உலமாக்களின்  அறிவார்ந்த கருத்துக்களைச்  சேகரித்து  அவற்றை சுருக்கமாகத் தொகுத்து அரபு மொழியில் 'ஹுஸாமுல் ஹரமைன்' என்று தலைப்பிட்டார்கள். 

   இந்த தொகுப்பு சங்கைக்குரிய ஹிஜாஸ் மாகாணத்தின் 33 உலமாக்களின் (20 பேர் மக்காவைச் சார்ந்தவர்கள் ,13 பேர் மதீனாவைச் சார்ந்தவர்கள்) தீர்ப்புகளை உள்ளடக்கியது.அவர்கள் அனைவரும் தமது தீர்ப்புகளை இந்த பிரிவுகள் அனைத்தும் நிராகரிப்புக்கு வழிவகுக்கும் என்ற ஒருமித்தகருத்தின் அடிப்படையில் கொடுத்தார்கள். தேர்ச்சிபெற்ற அந்த தகுதிவாய்ந்த மக்கா,மதீனாவின் உலமாக்கள் மிகக் கவனத்துடன் பார்வையிட்டு மேற்கண்டபடி மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி மற்றும் மேற்குறிப்பிட்ட தெவ்பந்தீய தப்லீக் உலமாக்களை இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்கள் என்று பத்வா வெளியிட்டனர் .

    அதுமட்டுமின்றி அன்று இருந்த இஸ்லாமிய அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்தவர்களை மேற்படி நபர்களை ஷரீயத்தின் படி தண்டிக்கவும் குற்றஞ்சுமத்தி தண்டிக்கவும் அறிவுறுத்தினார். இந்தியா திரும்பிய பின் இந்த பத்வா ஹிஜ்ரி 1324ல் 'ஹுஸாம் அல் ஹரமைன் அலா முன்ஹிர் குப்ர் வல் மைன்'  என்று வெளியிடப்பட்டது .

       வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பத்வா அரபியிலும்,உர்துவில் அன்னாரின் மருமகனும் ,கலீபாபும் ஆன மெளலவி ஹஸ்னைன் ரிழா கான் பரேல்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டும் இந்தியாவில் வெளியிடப்பட்டது . 

                       1906ல் ஹுஸாமுல் ஹரமைன் வெளிவந்த பொழுது அப்பொழுது இஸ்லாமிய ஆட்சி புரிந்து வந்த உஸ்மானியப் பேரரசு தனது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது  . சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் உஸ்மானி (1842-1918AD/1258-1336AH) அப்பொழுதைய ஆட்சியாளர் , மக்காவின் ஆளுநராக செய்யத் அலி பாஷா பின் அப்துல்லாஹ் அபு அவ்ன் [இறப்பு 1991] ,அவரைத் தான் இமாம் அஹ்மத் ரிழா கான் சந்தித்தார் . மதீனாவின் ஆளுனராக இருந்தவர் சமி பாஷா பாரூக்கி .

                      1916/1334ல் உஸ்மானியப் பேரரசு வீழ்ந்தது ,அதன் பின் மக்காவின் உஸ்மானியப் பேரரசின் ஆளுனராக இருந்த செய்யத் ஹுசைன் பின் அலி ஹாஷிமி (1854-1931AD/1270-1350AH) சுதந்திரப் பிரகடனம் செய்து தனது ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசத்தை மம்லகாத் ஏ ஹாஷிமியா ஹிஜாஸ் என்று நிறுவினார் . இவர்தான் தற்பொழுதைய ஜோர்தானிய மன்னர் இரண்டாம் செய்யத் அப்துல்லாஹ் வின் மூதாதையர் .
1924/1343ல் நஜ்தைச் சார்ந்த அல் சவூத் இந்த ஹாஷிமிய அரசை கைப்பற்றி சவூதி அரேபியா என்று இணைத்தார் .இன்று வரை இந்த நிலையே நீடிக்கிறது .

33 உலமாக்களின் பெயர் விபரம் பின்வருமாறு :

1. அஷ்ஷைகு முஹம்மது சயீது பின் முஹம்மது ஸலாம் பா புஸைல் , மக்கா முகர்ரமாவின் ஷாபிஈ முப்தி , (1829-1912AD/1245-1330AH).

2.  அஷ்ஷைகு  அஹ்மத் பின் அப்துல்லாஹ் அபுல் கைர் மீற்தாத் , ஷைகுல் குத்பா மஸ்ஜிதுல் ஹரம்,(1843-1916AD/1259-1335AH) .

 3. அஷ்ஷைகு  முஹம்மது ஸாலிஹ் பின் சாதிக் கமால், ஹனபி முப்தி,மக்கா முகர்ரமா, (1847-1914AD/1263-1332AH).

4. அஷ்ஷைகு  அலி பின் சாதிக் கமால், முதர்ரிஸ் ஹரம் ஷரீப்,காஜி ஜித்தா,மக்கா முகர்ரமா (1837-1917AD/1253-1335AH).

5.அஷ்ஷைகு  மெளலானா ஷாஹ் முஹம்மது அப்துல் ஹக் அலஹாபாதி முஹாஜிர் மக்கி, மக்கா முகர்ரமா (1836-1915AD/1252-1333AH).

6.அஷ்ஷைகு  செய்யத் முஹம்மத் மர்ஸூகி அபூ ஹுசைன் பின் அப்துர் ரஹ்மான் ஹுசைனி,நாயிப் காஜி,மக்கா முகர்ரமா,
 (1867-1946AD/1284-1365AH).       
 
7. அஷ்ஷைகு  உமர் பின் அபூபக்கர் பாஜுனைது, ஷாபிஈ முப்தி,மக்கா முகர்ரமா,(1857-1935AD/1274-1354AH).

8. அஷ்ஷைகு  முஹம்மது ஆபிதீன் பின் ஹுசைன் மாலிகி , மாலிகி முப்தி, மக்கா முகர்ரமா,(1859-1923AD/1275-1341AH).

9.அஷ்ஷைகு  முஹம்மது அலி பின் ஹுசைன் மாலிகி ,மாலிகி முப்தி, மக்கா முகர்ரமா,(1870-1948AD/1287-1367AH).

10. அஷ்ஷைகு  முஹம்மது ஜமால் பின் முஹம்மது அமீர் பின் ஹுசைன் மாலிகி ,மக்கா முகர்ரமா ,(1868-1930AD/1285-1349AH).

11. அஷ்ஷைகு  அஸ்அத் பின் அஹ்மத்,முதர்ரிஸ் தரம் ஷரீப்,மக்கா முகர்ரமா ,(1863-1919AD/1280-1338AH).

12. அஷ்ஷைகு  அப்துர்ரஹ்மான் பின் அஹ்மத்,மத்ரசா ஸல்வாதியா தலைமை உலமாக்களில் ஒருவர், மக்கா முகர்ரமா ,(1866-1918/1283-1337AH).

13. அஷ்ஷைகு மெளலானா அஹ்மத் பின் முஹம்மது ஜியாவுத்தீன் பெங்காலி காதிரி ஜிஸ்தி,முதர்ரிஸ் ஹரம் ஷரீப்,மத்ரஸா அஹ்மதியா ,மக்கா முகர்ரமா .

14. அஷ்ஷைகு முஹம்மத் பின் யூசுப் கியாத்,நிறுவனர் மத்ரசா கியாத் கைரியா,மக்கா முகர்ரமா .

15.அஷ்ஷைகு முஹம்மது ஸாலெஹ் பின் முஹம்மத் பா பஸல்,மக்கா முகர்ரமா ,(1860-1914AD/1277-1333AH).

16. அஷ்ஷைகு அப்துல்கரீம் பின் ஹம்ஸா தாகிஸ்தானி ஹாஷ்மி நஜி,முதர்ரிஸ் ஹரம் ஷரீப் மத்ரசா தாவூதியா,மக்கா முகர்ரமா ,(1851-1920AD/1267-1338AH).

17. அஷ்ஷைகு முஹம்மது ஸயீது பின் முஹம்மது யமனி,ஷாபியீ இமாம் மற்றும் முதர்ரிஸ் ஹரம் ஷரீப் ,மக்கா முகர்ரமா ,(1854-1936AD/1270-1354AH).

18. அஷ்ஷைகு முஹம்மது ஹாமித் பின் அஹ்மத் பின் அவ்ஸ் ஜதவி,முதர்ரிஸ் ஹரம் ஷரீப் ,மக்கா முகர்ரமா ,(1860-1923AD/1277-1342AH)   .

19. அஷ்ஷைகு உத்மான் பின் அப்துஸ்ஸலாம் தாகிஸ்தானி,முதர்ரிஸ் மற்றும் கதீப் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1853-1907AD/1269-1325AH).

20.  அஷ்ஷைகு செய்யித் முஹம்மத் சயீத் பின் முஹம்மது மக்ரீபி,மாலிகி முப்தி  மற்றும் முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா.

21. அஷ்ஷைகு முஹம்மது பின் அஹ்மத் உமரி வஸ்தி,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1863-1946AD/1280-1365AH)       .

22. அஷ்ஷைகு செய்யித் அப்பாஸ் பின் முஹம்மத் ரிழ்வான்,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1877-1928AD/1293-1346AH).

23. அஷ்ஷைகு உமர் பின் ஹம்தான் மஹ்ரிஸி,பேராசிரியர் மத்ரஸா ஸல்வாதியா மற்றும் மத்ரஸா பழாஹ் ஏ மக்கா மற்றும் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1875-1949AD/1291-1368AH). 

24. அஷ்ஷைகு செய்யித் அஹ்மத் பின் இஸ்மாயில் பர்சான்ஜி ,ஷாபியீ முப்தி,இமாம் கதீப் மற்றும் முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா, (1843-1916AD/1259-1335AH).

25. அஷ்ஷைகு அப்துல் காதிர் தெளபீக் ஷல்பி,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா,(1878-1950AD/1295-1369AH).

26. அஷ்ஷைகு செய்யித் இஸ்மாயில் பின் கலீல்,தலைமை பதிப்பாளர்,மக்தபா ஹரம் ஷரீப்,மக்கா முகர்ரமா, (இறப்பு .1911AD/1329AH)  .

27.அஷ்ஷைகு முஹம்மது யூசுப் ஆப்கானி,முதர்ரிஸ் மத்ரஸா ஸல்வாதியா,மக்கா முகர்ரமா.

28. அஷ்ஷைகு  முஹம்மது தாஜுத்தீன் பின் முஸ்தபா இல்யாஸ்,முப்தி அஹ்னாப், மதீனா முனவ்வரா.

29. அஷ்ஷைகு செய்யித் அஹ்மத் அல் ஜஸைரி,மாலிகி முப்தி, மதீனா முனவ்வரா.

30. அஷ்ஷைகு கலீல் பின் இப்ராஹீம் கர்தூபி,முதர்ரிஸ் மஸ்ஜிதுன் நபவீ,மதீனா முனவ்வரா.

31. அஷ்ஷைகு செய்யித் முஹம்மத் பின் முஹம்மத் ஹபீப் திதாவி,மதீனா முனவ்வரா.

32. அஷ்ஷைகு முஹம்மத் பின் முஹம்மத் சோசி கியாரி,முதர்ரிஸ்,மதீனா முனவ்வரா.

33. அஷ்ஷைகு முஹம்மத் உஸைர் வஸீர்,மதீனா முனவ்வரா.

பத்வாவை ஆன்லைனில் வாசிக்க மற்றும்  பதிவிறக்கம் செய்ய :-


அரபியில்            https://archive.org/details/HussamulHaramainArabic                  

தமிழில்                https://archive.org/details/HusaamulHaramainFatwaTamil

உர்துவில்            https://archive.org/details/HussamulHaramainFatwaUrdu

ஆங்கிலத்தில்   https://archive.org/details/HussamUlHaramainEnglish

      
  

 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment