Monday, 18 November 2019

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தும் ,மீலாதும்

கைர் முகல்லித் வஹாபிகள் போன்று , தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் சங்கைமிகு ரபீயுல் அவ்வல் மாதம் கொண்டாடி  மகிழும் கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களின்  மீலாத் ஷரீபை பித்அத் ,அனுமதியில்லாத செயல் என்ற கொள்கை கொண்டவர்களே .

ஆனால் இன்று சமீபகாலமாக தமிழக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  மீலாத் குறித்த தமது போலி நாடகத்தை இணைய வெளிகளில் (பதிவு தளங்கள் , முகநூல் ,வாட்சாப் போன்றவற்றில் ) நடத்தி வருகின்றனர் . தாங்களும் , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் போன்று மீலாத் கொண்டாடுபவர்கள் தாம் . தங்களின் மீது சுமத்தப்படும் வீண் பழி இது என்றும் , அத்துடன் தங்களின் வழக்கமான பல்லவியான பரேல்விகளின் அபாண்டமான அவதூறு என்றும் .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் முன்னோடிகள் மீலாத் பற்றி என்ன எழுதியுள்ளனர் , இதுநாள் வரை  தேவ்பந்தி தப்லீக் கொள்கை பரப்பும் அவர்களது மத்ரஸாக்களின் பத்வாக்கள் என்ன என்றும் ஆதாரங்களுடன் பார்ப்போம் .

உலகெங்கிலும் ரபீயுல் அவ்வல் மாதம் பரவலாக ஒதப்படுவது புர்தா ஷரீப் , பர்சன்ஜி மவ்லித்,மங்கூஸ் மவ்லித் ,ஹரீரி மவ்லித்    மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்த இறைநேசர்கள் கோர்வை செய்த மவ்லித் .தமிழகத்தில் பரவலாக ஒதப்படுவது ஸுப்ஹான மவ்லித்   ஆகும் . இதில் பெருமானார் صلى الله عليه و سلم அவர்களின் ஜனனத்தை குறிக்கும் பகுதியை ஓதும் பொழுது கியாம் நிலையில் எழுந்து நின்று சங்கை செய்வதும் , கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களும் , இறைநேசர்களும் , மலக்குமார்களும் ஹாலிராகின்றார்கள் என்பதும் அஹ்லுஸ் ஸுன்னத்  வல் ஜமாத்தினர் தம் நம்பிக்கை . 

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் முன்னோடி , இந்திய வஹாபியிசத்தின் மூலம் இஸ்மாயில் திஹ்லவி ஹாழிர் , நாளிர் நம்பிக்கை பற்றி தமது தக்வியத்துள் ஈமான் , நூல் பக்கம் 8ல் 

                                 

" அல்லாஹ்விற்கு இடைபொருளாக இருப்பவர் ஹாழிர் , நாளிர் என்றும் , அவர்  விவகாரங்களில் விவாதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்றும் நம்பிக்கை கொள்பவர் ஷிர்க்கில் உள்ளார் . அந்த இடைப்பொருள் நபிமார்களோ ,வலிமார்களோ ,மலக்குகளோ ,ஜின்களோ என்று எதுவாக இருந்தாலும் அதில் வேறுபாடு இல்லை . இத்தகைய செயலில் ஈடுபடுபவர் காபிர் - அவர் நபிமார்களோ ,வலிமார்களோ ,ஷுஹதாக்கள் , ஷைகுமார்கள் , ஜின்கள் என யாரைக் கொண்டு தேடினாலும் சரியே " 


தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் மற்றோர் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 41 ல் 

"மவ்லித் பித்அத் ,கியாம் நிலையில் எழுத்து நிற்பது  பித்அத்  "  என்று எழுதியுள்ளார் . 

இனி காலம் ,காலமாக பொய்யும் ,புரட்டும் மட்டுமே பேசி மக்களை ஏமாற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரது மற்றோரு வரலாற்றுத் திரிபு தாங்கள் இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களது மஸ்லக்கை சார்ந்தவர்கள்  என்று பேசித் திரிவது . ஆனால் இந்த முனாஃபிக்குகளுக்கும்  ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களது மஸ்லக்குக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பது அன்னார் தம் குடும்பத்தினரும் , அவர்களது ஸில்ஸிலா என்னும் ஞான வழிப்பாட்டை ஏற்று நடப்பவர்களும் இன்று வரை நமக்கு உணர்த்தி வருகின்றார்கள் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 50 ல் 



கேள்வி: ஷரீயத்திற்கு மாற்றம் இல்லாத வகையில் நடத்தப்படும் மவ்லித் ,உரூஸ் நிகழ்வுகள் - உதாரணமாக இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் நடத்தியது போன்று ; அவ்வாறானதை நீங்கள் அனுமதிக்கப்பட்டது என்று கூறுகின்றீர்களா , இல்லையா ? இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள்  உண்மையாகவே வ்லித் ,உரூஸ் மஜ்லிஸ்கள் நடத்தினார்களா ? 

பதில் : மவ்லித் நிகழ்வை கொண்டாட ஓர் கூட்டத்தை ஏற்பாடு செய்வது - அது ஷரீயத்திற்கு மாற்றம் இல்லாத வகையில் நடத்தப்படுவதாக இருந்தாலும் , ஆனால் அது விழாவாகவும் ,மக்களை அழைப்பதுமாகவும் ( இஹ்திமாம் , ததயி)  இருப்பதால் , இக்காலத்தில் அவ்வாறு செய்வது சரியல்ல . உரூஸ் நிகழ்வுக்கும் இதே பதிலே . பல விஷயங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டதாக ( முபாஹ் )  ஆக இருந்தது , ஆனால் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது . மவ்லித் ,உரூஸ் மஜ்லிஸ்கள் இத்தகைய ஒன்றுதான் .


நமக்கு உண்டாகும் கேள்வி சிராஜுல் ஹிந்த் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள்  மவ்லித் அல்லது உரூஸ் மஜ்லிஸ்களில் எவ்வாறு கலந்து கொண்டனர்  - மக்கள் கூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் , அல்லது ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதியில் அவர்களை ஒன்றுகூட அழைக்காமல் ? தேவ்பந்த் மத்ரஸாவில் எந்த ஒரு நிகழ்வும்  மக்கள் கூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் , அல்லது ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதியில் அவர்களை ஒன்றுகூட அழைக்காமல் நடக்கின்றதா என்ன ? குப்ரான மாற்று மத சாமியார்களை தேவ்பந்தில் மேடையேற்றி அவர்களிடம் ஞானம் பெறும் நிகழ்வுகள் கூட இவ்வாறு தான் தேவ்பந்தில் நடைபெற்றதா ? ஷரீயத்தை கடுமையாக பின்பற்றுபவர்கள் என்று வாய் சவடால் விடும்  தேவ்பந்தி உலமாக்கள் இதை கண்டிப்பார்களா ?



https://www.indiatoday.in/latest-headlines/story/ramdev-charms-deoband-crowd-59988-2009-11-04

  சிராஜுல் ஹிந்த் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் இவை குறித்து ஆட்சேபம் தெரிவித்த மவ்லவி அப்துல் ஹக்கீம் பஞ்சாபி என்பவருக்கு பதில் அளிக்கும் விதமாக எழுதினார்கள் :

Zubdatu’n Nasāyiĥ_Page 17,36,42


" எதைக் கொண்டு விமர்சனம் செய்கின்றாரோ அதைப் பற்றிய விமர்சிப்பவரின் அறியாமையே விமர்சனத்தின் காரணம் . ஷரீயத்தின் சட்டதிட்டங்களைக் கொண்டு எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை தவிர வேறு எதையும் யாரும் கடமையான செயலென கூற இயலாது . ஆம் , ஸாலிஹான முஸ்லிம்களின் கபூரை ஜியாரத் செய்து , நல்லமல்கள் செய்து அதன் மூலம் பரக்கத்தை பெற்று , குர்ஆன் ஓதி ,துஆ செய்து அதன்பின்னர் உணவு அல்லது இனிப்பு வகைகளை பகிர்வது முஸ்தஹபான ஓர் காரியம் , அறிஞர்களின் இஜ்மா பிரகாரம் நன்மையான செயல் . உரூஸ் என்று நாள் குறிப்பது ,ரூஹ் இப்பூவுலகை(தார் அல் அமல் )  பிரிந்து  வெகுமதியின் உலகை(தார் அல் தவாப் )   அடைந்ததை  நினைவு கூறும் பொருட்டே அன்றே அல்லாமல் வேறில்லை . அதனை எந்த ஒரு நாளிலும் செய்யலாம் , அது வெற்றிக்கும் , இரட்சிப்புக்கும் காரணமாகும் செயல் தான் ."

[நூல் - ஜுப்ததுன்  நஸாயிஹ் ,பக்கம் 42 ] 

ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 72 ல் 

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களும் ,அவர்களது தகப்பனார் ஷாஹ் அப்துர் ரஹீம் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களும் மவ்லித் மஜ்லிஸ்கள் நடத்தியதாக 'துர் அல் தாமீன் 'நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதையும்  , இமாம் ஸுயூத்தி رضي الله عنه‎ அவர்களும் அதனை ஏற்றமிகு செயல் ( முஸ்தஹ்சின் ) என்று தமது 'ஹுஸ்ன் அல் மகாசித்  'நூலில்   குறிப்பிடப்பட்டுளதையும் மேற்கோளிட்டு கேள்விளையாளர் மவ்லித் பற்றி வினவுகின்றார் .

திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்து , தாம் நெருக்கடியில் சிக்கியதை அறிந்த  ரஷீத் அஹ்மத் கங்கோஹி , ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களை பித்அத்தி என்றும்  சொல்ல முடியாது,  மவ்லித் ஆகுமானது என்று தனது வஹாபிய கொள்கைக்கு மாறாகவும் சொல்ல முடியாது என்பதால் ,மேலோட்டமாக பட்டும்படாமல் இந்த இடத்தில் தமது கருத்தை பதிவிடுகிறார் .

 ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் மவ்லித் மஜ்லிஸ்கள் ஆகுமானது என்றும் கண்மணி நாயகம் صلى الله عليه و سلم  அவர்களின் பிறப்பை குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதே மவ்லித் மஜ்லிஸ்களின் நோக்கம் என்பதே உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயம் என்று கூறினாலும் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது முடிவில் தடுமாறவில்லை .


"  வெகுமதியை எந்த நாளிலும் எத்தி வைப்பது ஆகுமானது ,ஷரீயத்தில் அதற்கு என்று குறிப்பிட்ட எந்த நாள் , நேரம் தான் என்பது கிடையாது . மேலும் அதனை பிறந்த நாளிலோ அல்லது மறைந்த நாளிலோ எத்தி வைப்பதும் ஆகுமானது . எனவே குறிப்பிட்ட நாளில் தான் நிகழாத வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல் , ஏதாகிலும் ஒரு நாளில் செய்தால் , மற்றும் வெகுமதியை கொடையளிக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்தால் ,அத்தகைய நிகழ்வில் எந்த தீங்கும் இல்லை . இப்படி ஒரு செயலை அனைவரும் அனுமதிக்கப்பட்ட ஒன்றெனவே கூறுவர் . ஷாஹ் அப்துல் ரஹீம் அவர்களின் செயல்முறையும் இதன் அடிப்படையிலேயே நிகழ்ந்தது , இதனை ஒரு ஆதாரமாக நம் காலத்தில் நடக்கும் பித்அத்திற்கு எடுக்க இயலாது .

மேலும் , நிகழ்வில் உணவை  அளித்தது நன்மையை தேடிக் கொள்ளும் பொருட்டிலே தான் ;ஏனெனில் அதுகூட நாயகத்துடன் உண்டான தொடர்பின் காரணமாக ( என்று தான் மேற்கோளில் உள்ளது ), கண்மணி நாயகம் அவர்களின் பிறப்பை குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ அல்லது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் மவ்லித் ஒருங்கிணைப்பு மஜ்லிஸ் என்றோ இல்லை . எனவே மவ்லித் கொண்டாட எந்த ஆதாரமும் இல்லை . மேலும் ஸுயூத்தி அவர்களது காலத்தில் நமது காலத்தில் உள்ள பித்அத்துகள் இல்லை . ஸுயூத்தி அவர்களது மகாஸித் பற்றி மேலும் அறிய பராஹீனே காத்தியாவை பார்க்கவும் . அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் "


ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 90 ல் 


மவ்லித் கொண்டாடுவதன் அனுமதி பற்றியும் , ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி  رضي الله عنه‎ அவர்கள் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது பற்றியும் கேள்வியாளர் வினவுகின்றார் ; ஆனால் இது ரஷீத் அஹ்மத் கங்கோஹியை ஈர்க்கவில்லை :



மவ்லித் மஜ்லிஸ்கள் குறித்த விரிவான ஆய்வுகளுக்கு பராஹீனே காத்தியா நூலினை பார்க்கவும் . ஸுபியாக்கள் ,ஷெய்குமார்களது,முன்னோடி அறிஞர்கள் ஆகியோரது  சொல் ,செயல்  ஆதாரமாக ஏற்க இயலாது .

நாயகம் அவர்களது சொல் ,செயல் மற்றும் முஜ்தகித் இமாம்களின் கருத்துக்களையே ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும் .


ஆனால் இதே தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் , அவர்களின் மீது  'ஹுஸாமுல் ஹரமைன் 'பத்வா   சங்கைமிகு மக்கா ,மதீனா உலமாக்கள் வழங்கியதும் , என்ன செய்தார்கள் .

கலீல் அஹமத் அம்பேட்வி ' அல் முஹன்னத்' நூலில் மவ்லித் பற்றி என்ன எழுதி  பத்வா கேட்டார் ?  இந்நிலையில் வாசகர்கள் ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 50 ல்  எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறை பாருங்கள் .

மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி தானே கேள்விகளைக் கேட்டு ,அதற்கு தேவ்பந்திகளின் நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் என்ன என்பதை தமது பதிலாக எழுதியுள்ளார் .

கேள்வி எண் 21: [அல் முஹன்னத் ]


      " நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் அது குற்றம்(கபீஹ்),பித்அத்,ஹராம் என்று  சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "

இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி கடுகளவு நேர்மையுடைய ஒரு தேவ்பந்தியாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்,

 " ஆமாம்,எங்களின் ஸ்தாபகர் இஸ்மாயில் திஹ்லவி இம்மாதிரியான கொண்டாட்டங்களை முஷ்ரிக்கான நடைமுறை என்கின்றார் .எங்களின் ஷைகு ரஷீத் அஹ்மத் அனைத்து மெளலித் வைபவங்களையும் அனுமதியில்லாதது என்று தனது நூல்களிலும்,பத்வாக்களிலும் கூறியுள்ளார்.நாமும் இம்மாதிரியான மெளலித் விழாக்கள் ஹிந்துக்கள் தங்களின் கடவுள் கிருஷ்ணனை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா போன்று என்று கூறியுள்ளோம் "(பதாவா ரஷீதியா ,பராஹீனே காத்தியா )

இந்த பதிலை கலீல் அஹமத் தனது அல் முஹன்னதில் எழுதியிருந்தால் எத்துணை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அதில் கையொப்பமிடுவார்கள் !!

ஆனால்,கலீல் அஹ்மத், வஹ்ஹாபி பித்னா எவ்வாறு அரபுலகில் வேகமாக பரவி வந்ததையும், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த சத்திய உலமாக்கள் அதை எதிர்த்து வந்ததையும் அறியும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார் .

கலீல் அஹ்மத் அல் முஹன்னதில் என்ன எழுதினார் என்று அறியும் முன் தேவ்பந்திகளின் மற்றொரு அறிஞரான அன்வர் ஷாஹ் காஷ்மீரி(இறப்பு 1933) மெளலித் பற்றி என்ன எழுதினார் என்று பார்ப்போம்
Anwar Shah Kashmiri

وأحدثه صوفي في عهد سلطان إربل سنة ( 600 ) ، ولم يكن له أصل من الشريعة الغراء
العرف الشذي شرح سنن الترمذي - (2 / 82 مؤسسة ضحى للنشر والتوزيع)
"அது சுல்தான் இப்ரில் காலத்தைச் சார்ந்த ஸூபி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இதற்கு நமது தூய்மையான ஷரீயத்தில் எந்த ஆதாரமும் இல்லை " 

இனி,மெளலானா கலீல் அஹமதுவின் பதில் அல் முஹன்னதில் என்ன என்பதைப் பார்ப்போம் .


"எந்த ஒரு முஸ்லீமுக்கும் பெருமானார் صلى الله عليه و سلم அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் யாரும் பெருமானார் அவர்களின் செருப்பைப் பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியைப் பற்றி பேசுவதையோ கூட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் தொடர்புடைய எல்லா சம்பவங்களையும் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் பேசுவது அழகான ஒரு செயலாகும் இன்னும் எங்களிடத்தில் அது 'முஸ்தகப் '.அது பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியோ அல்லது அன்னாரின் கனவுகளைப் பற்றி பேசி பிறப்பைக் கொண்டாடுவது எங்களிடத்தில் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு செயலாகும்" .

ஆக கலீல் அஹ்மத் அரபுலகை சார்ந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்களை திருப்திபடுத்தும் பொருட்டு இந்த பதிலை அல் முஹன்னதில் எழுதினார் என்பது திண்ணம் .

மேலும் சில வரிகளுக்கு பின் அவர் எழுதுகிறார் ,

"நாம் பெருமானாரின் மெளலித் பற்றி பேசுவதற்கு எதிரானவர்கள் அல்லர் ,ஆனால் அதில் கலந்து விட்ட தவறான விஷயங்களுக்கு எதிர்ர்பாக உள்ளோம் .உதாரணமாக நீங்கள் இந்தியாவில் உள்ள மெளலித் மஜ்லிஸ்களில் ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் (மவ்து ) பேசப்படுகின்றன ,ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த சபைகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர் , மின்விளக்குகளும் தேவையற்ற வீண் விரயங்களும் நடைபெறுகின்றன,இதில் கலந்து கொள்வது  'வாஜிப்' என்று சொல்கின்றனர் ,கலந்து கொள்ளாதவர்களை விமர்சிக்கின்றனர் .இதுவெல்லாம் போக இன்னும் பல ஷரீயத்திற்கு மாற்றமான பல்வேறு விஷயங்கள் எல்லா மெளலித் மஜ்லீஸிலும் நீக்கமற நிறைந்துள்ளன ".


இது அல் முஹன்னதில் உள்ள  பொய்களின் முதல் ஆரம்பம் !

இத்தகைய இரட்டை நாவுள்ள  முனாஃபிக்குகளைப் பற்றித்தான் , திருமறை கூறும் ஸுரா அல் முனாஃபிகூனின் சமகால சாட்சியம் இவர்கள்தான் .

தேவ்பந்த் மத்ரஸாவின் மீலாத் பற்றிய பத்வா




தமிழகத்திலுள்ள தேவ்பந்தி தப்லீக் மத்ரஸாக்களும்  தமது தாய் மத்ரஸாவை பின்பற்றி மீலாத் கூடாது என்று பத்வா அளித்துள்ளனர். அவை காஷிஃபுல் ஹுதா (சென்னை ), அன்வாருல் உலூம் (திருச்சி ),மளாஹிருல் உலூம் (சேலம்),  தற்சமயம் தேவ்பந்தி தப்லீக் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழகத்தின் தாய் மத்ரஸா பாக்கியாத்துஸ் ஸாலிகாத் (வேலூர் ) . இவை மீலாத்திற்கு எதிராக பத்வா வெளியிட்டுள்ளனர் .

இதனை மவ்லானா சலீம் சிராஜி ஹழ்ரத் (முதல்வர் , ஜாமியா நாஸிருஸ்ஸுன்னா ,சென்னை ) அவர்கள் தமது "தப்லீக் ஓர் ஆய்வு "நூலில் ஆவணப்படுத்தியுள்ளனர் .


அத்துடன் இந்த  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் , மவ்லித் நிகழ்வுகளை மடை மாற்றும் விதமாக Seerah Conference , தமிழில் வரலாற்று நூற்களை படியுங்கள் என்று இலைமறை காயாக தமது வஹாபிய சித்தாந்தந்தை புகுத்துகின்றனர் . இவை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை ,ஆனால் இவற்றை குறிப்பாக ரபீயுல் அவ்வல் மாதத்தில் மீலாத் சமயத்தில் சொல்வது இவர்களின் விஷமத்தனமேயாகும் .




 















காசுக்காக , தாம் வகிக்கும் பதவிக்காக , சமுதாய நிர்ப்பந்தத்தின் காரணமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஒரு சில இடங்களில் மீலாத் நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் ,  தமிழக முஸ்லிம்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது ஈமானுக்கு நலம் ! 


Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 11 November 2019

பிரிவினையின் கால அட்டவணை


Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 26 October 2019

ஷியாக்களின் மீதான தேவபந்திகளின் பாசம்

தேவ்பந்திகளின்  மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை பொறுத்தமட்டில் அண்ணலெம் பெருமான் அவர்களின் உத்தம தோழர்களை சாபமிடுபவன் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடமாட்டான் ! 

பாகிஸ்தான் பதிப்பு  : 


ரஷீத் அஹ்மத் கூறுகின்றார் ;

" உரூஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஒருவர் கட்டாயம் (இல்திசாம் )என்று கருதி செய்தாலும் அல்லது விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் சரி, உரூஸ் கொண்டாடுவது பித்அத் ,அனுமதியில்லாத செயல் . தேதி குறிப்பிட்டு ஜியாரத்தில் ஒன்று கூடுவது பாவம் , அதில் வேறு விஷயங்கள் இல்லாவிட்டாலும் கூட (கவ்வாலி ,ஸமா ) . பெருமானாரின் ஸஹாபாக்களை யாரேனும் தக்ஃபீர் செய்தால் ,அவன் சபிக்கப்பட்டவன் ,அத்தகைய நபரை இமாமத் செய்ய அனுமதிக்க கூடாது . இன்னும் அவன் தன்னுடைய இந்த பெரும் பாவம் (கபீரா குனாஹ் ) காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடமாட்டான் . அன்புடைய முஹம்மத் யஹ்யா ,ஸலாம் . என்னிடம் இல்முல் கைப் பற்றி 2-3 நூற்கள் உள்ளன . இன்னும் பராஹீனே காத்தியா நூலும் இல்முல் கைப் பற்றியும் ,உரூஸ் பற்றியும் கையாள்கிறது . "

இந்திய பதிப்பு 1: 




இந்திய பதிப்பு 2: 




சமீபத்திய பதிப்பு (திரிக்கப்பட்டது ) : 




இது பழைய பாதிப்புகளைப் போன்றே பதில்கள் உள்ளன .எனினும் வெளியேறிவிட மாட்டான் என்பது திரிக்கப்பட்டுள்ளது . 

" உரூஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஒருவர் கட்டாயம் (இல்திசாம் )என்று கருதி செய்தாலும் அல்லது விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் சரி, உரூஸ் கொண்டாடுவது பித்அத் ,அனுமதியில்லாத செயல் . தேதி குறிப்பிட்டு ஜியாரத்தில் ஒன்று கூடுவது பாவம் , அதில் வேறு விஷயங்கள் இல்லாவிட்டாலும் கூட (கவ்வாலி ,ஸமா ) . பெருமானாரின் ஸஹாபாக்களை யாரேனும் தக்ஃபீர் செய்தால் ,அவன் சபிக்கப்பட்டவன் ,அத்தகைய நபரை இமாமத் செய்ய அனுமதிக்க கூடாது . இன்னும் அவன் தன்னுடைய இந்த பெரும் பாவம் (கபீரா குனாஹ் ) காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடுவான்  . அன்புடைய முஹம்மத் யஹ்யா ,ஸலாம் . என்னிடம் இல்முல் கைப் பற்றி 2-3 நூற்கள் உள்ளன . இன்னும் பராஹீனே காத்தியா நூலும் இல்முல் கைப் பற்றியும் ,உரூஸ் பற்றியும் கையாள்கிறது . "

ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஷியாக்களை காபிர் என்று கருதியவர் அல்லர் 

"
ஷியாக்களை காபிர் எனக் கருதுவோர் அவர்களின் மைய்யத்தை துணியால் சுற்றி ,கபரில் அடக்கம் செய்வர் . ஷியாக்களை பாஸிக் என்று கருதுபவர் ,அவர்களின் மரித்த உடலுக்கு முறையான இஸ்லாமிய சடங்குகளை செய்வர் . நான் அவர்களை தக்ஃபீர் செய்வது இல்லை "

இன்னும் ,  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஸஹாபாக்களை ஒரு முஸ்லீம் சாபமிட்டால் அவன் பாவியாவான் (அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவிடமாட்டான் ) 


"அபூ ஸுஃப்யான் மற்றும் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் .இன்னும் இக்ரிமா அவர்கள் பல ஜிஹாதுகளில் கலந்து கொண்டார்கள் . அஸத் அல் காபாவில் எழுதப்பட்டுள்ளது , ஸஹாபாக்களை அவமரியாதை செய்பவன் பாஸிக்   . " 
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 23 October 2019

அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா

அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா 

Anwar-e-Satia Dar Bayan-e-Molood Wa Fatiha


                                                  [download link: PDF]


ஆசிரியர் : அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  (மறைவு  1318 ஹிஜ்ரி )  

ஆரம்பகால கல்வி :  அல்லாமா ரஹ்மத்துல்லா கீரான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  (மத்ரஸா ஸவ்லாதியாவின் நிறுவனர்  ,மக்கா முக்கரமா  ,மறைவு 1308 . மவ்லானா அஹ்மத் அலி முஹத்திஸ் ஸஹரான்பூரி  , மவ்லானா ஷைகு முஹம்மத் தான்வி , முஹம்மத் காஸிம் நானோத்வி .

மேற்படிப்பு :  சத்ர் அல் ஸுதுர் மவ்லானா முப்தி சத்ருத்தீன் ஆஸர்தா  திஹ்லவி .
கவிதை  :  மிர்சா அஸதுல்லாஹ் கான் காலிப் திஹ்லவி .  'பே-தில்'   என்று புனைபெயர் (தகல்லுஸ்  ) சூட்டிக் கொண்டார் .

ஆன்மீக ஆசான் : ஷைக் அல் மஷாயிக் மவ்லானா இம்தாதுல்லாஹ் பாரூக்கி ஜிஷ்தி தான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  (மறைவு  1317 ஹிஜ்ரி ) . இன்னும் தனது ஷைகிடம் இஜாஸத்தும் ,கிலாபத்தும் பெற்றார்கள் . அன்னாரின் ஷெய்கு அவர்களும் இன்னும் பல கலீபாக்கள் இருந்தனர்  .அவர்களுள் சிலர் : மவ்லானா லுத்புல்லாஹ் அலிகரி (மறைவு 1334 ஹிஜ்ரி ) , மவ்லானா அஹ்மத் ஹசன் கான்பூரி (மறைவு 1322 ஹிஜ்ரி ) , முஹம்மத் காஸிம்   நானோத்வி  (மறைவு 1297), ரஷீத் அஹ்மத் கங்கோஹி (மறைவு 1322) , அஷ்ரப் அலி தான்வி (மறைவு 1362)   .

இறுதியாக குறிப்பிடப்பட்ட மூவர் வழிதவறிவர்களாகி , தமது ஆன்மீக வழிகாட்டியாகிய  ஷெய்கு  இம்தாதுல்லாஹ்  ஜிஷ்தி  முஹாஜிர் மக்கி رحمه الله  அவர்களின் போதனைகளுக்கு மாற்றாக நடந்தனர் .

மறைவு : அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله   அவர்கள் மிராத் என்னும் ஊரில் , ஹிஜ்ரி 1318ல்  துனியாவை விட்டும் மறைந்தனர் .


படைப்புகள் :  1. நூரே ஈமான் (கவி)  , 2 .சல்ஸபில்  (கவி)  , 3.ராஹத் ஏ குலூப் , 4 .பஹார் ஏ ஜன்னத் , 5 .மல்ஹர் ஏ ஹக் , 6. ஹம்த் ஏ பாரி , 7.  அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா , 8. தாஃபி அல் அவ்ஹாம் பீ மஹ்பில்   கைர் அல் அனாம் , 9. கவ்ல் அல் நபி பி தஹ்கீக் அஸ்ஸலாமு அழைக்க அய்யுஹன் நபி  . 


அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா  நூல் எழுதப்பட்டதன் வரலாற்று பின்னணி : 


 தேவ்பந்தின் உலமாக்களும் ,கைர் முகல்லிதுகளும் இணைந்து நான்கு பக்க பத்வா ஒன்றை ஹிஜ்ரி  1302ல் (1884) வெளியிட்டனர் (ஹாஷ்மி பிரஸ் , மிராத் ) . இந்த சிறிய கையேடு  , " பத்வா மவ்லூத் வ உரூஸ் வகைறா " என்னும் தலைப்பிட்டு வெளிவந்தது . அந்த பத்வா மீலாத் கொண்டாடுவதை பித்அத் என்றும் ,வழிகேடு என்றும் கூறியது .

இந்த பத்வாவுக்கு ஒப்புதல் அளித்தவர்கள், மூன்று கைர் முகல்லித் அறிஞர்கள் ; ஹாபிதுல்லாஹ் , ஷரீப் ஹுசைன் , மற்றும் இலாஹி பக்ஷ் மற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின்  அறிஞர்கள் ;  முஹம்மத் யாகூப் ( மத்ரஸா தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் ) ,முஹம்மத் மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி , முஹம்மத் அப்துல் ஹாலிக் தேவ்பந்தி , ரஷீத் அஹ்மத் தேவ்பந்தி.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்து , மற்றுமொரு 24 பக்க பத்வா மீலாத் கொண்டாடுவதை மறுத்து வெளியிடப்பட்டது . அதனுடன் முன்னர் வெளியிடப்பட்ட நான்கு பக்க பத்வாவும் இந்த புதிய கையேட்டில் இணைக்கப்பட்டது .

இந்த பத்வாக்கள் முஸ்லிம்களிடையே குழப்பத்தையும் , ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தின .அப்பகுதியில் இருந்த  பெரும்பாலான முஸ்லிம்கள், ஷைக் அல் மஷாயிக் மவ்லானா இம்தாதுல்லாஹ் பாரூக்கி ஜிஷ்தி தான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  அவர்களின் மாணவர்களாகவும் , முரீதுகளாகவும் இருந்தனர் . 

கால சூழ்நிலைகளின் காரணமாக ஷைக் இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் மக்கா முகர்ரமாவிற்கு ஹிஜ்ரி 1276ல்(1859)  ஹிஜ்ரத் செய்தனர் . எனவே முஸ்லிம்கள் ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்களது நெருங்கிய கலீபா ,அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்களின் உதவியை நாடினர் .

எனவே இப்பெருந்தகை தமது கடமையை நிறைவேற்றும் பொருட்டு , 'அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா'  என்னும் நூலை எழுதி ஆதாரமற்ற ஆட்சேபனைகளுக்கு பதில் அளித்தார் . இந்த புத்தகம் பதிப்பித்து சில நாட்களில் ,எல்லா பிரதிகளும் விநியோகிக்கப்பட்டன . இந்நூல் பல்வேறு தரப்பினரால் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு , அநேகர் உள்ளங்களில் ஈடில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .

தேவ்பந்தின் தப்லீக் ஜமாத்தின்  அறிஞர்களும் நூலினை படித்தார்கள் ,அது தங்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிடும் என்றும் அறிந்தனர் . அவர்கள் அந்நூலுக்கு மறுப்பாக , 'அல் பராஹீனே காத்தியா அலா தலாம் அல் அன்வார் அல் ஸாத்தியா ' என்னும் நூலினை எழுதினர் . இந்த நூலினை ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதி , அதனை தனது மாணவர் கலீல் அஹ்மத் சஹரான்பூரியின்(மறைவு 1346 ஹிஜ்ரி )  பெயரில் வெளியிட்டார்.

al-Barāhīn al-Qaţi’ah

ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,மீலாத் ,உரூஸ்  பித்அத் ,அனுமதியல்லாத செயல் என்று கூறியதுடன் மட்டுமல்லாது அதற்கப்பாலும் எல்லை மீறி , மீலாதை கொண்டாடும் இஸ்லாமியர் காபிர்களை விடவும் மோசமானவர்கள் என்று குறிப்பிட்டார் . இது மட்டுமல்ல , அவர் அதற்கு மேலும் சென்று , தனது  நூலில் மேற்கோள் காட்டியவை :

1. அல்லாஹ் பொய் சொல்லவது  சாத்தியம்  (பக்கம் 10 )

2. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஓர் சாதாரண மனிதர் (பக்கம் 12)

3.நாயகம் அவர்களின் ஞானத்தை விடவும் ,ஷைத்தானுக்கும் ,மலக்குல் மவ்த்துக்கும் அதிகமான ஞானம் உண்டு .இன்னும் ஷைத்தானின் ஞானத்தை பற்றிய ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளது ,எனினும் இத்தகைய ஆதாரங்கள் நாயகம் அவர்களின் பேரில்  இல்லை .இன்னும் இவ்வாறு ஷைத்தானின் ஞானம் பற்றி நம்பிக்கை கொள்வது ஷிர்க் அல்ல , ஆனால் நாயகம் அவர்களின் பேரில் நம்பிக்கை கொள்வது ஷிர்க் . (பக்கம் 120 ) .

4.கண்மணி நாயகம் அவர்களுக்கு தமது அந்திம நிலை என்னவென்று தெரியவில்லை . (பக்கம் 121 )

5. நாயகம் அவர்கள் உர்து மொழியை தேவ்பந்தின் அறிஞர்களிடம் கற்றார்கள் . (பக்கம் 63 )  

மேலும் இந்நூல் அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்களை சாபமிடுவதை கொண்டே நிரப்பினர் .

மறுபுறம் , 'அன்வார் ஏ ஸாதியா ' நூல் ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்களை அடைந்தது . அந்நூலை முழுவதும் படித்த பின்னர் 
ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் தமது ,முரீதும் ,கலீபாவுமான முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்களது பணியை பாராட்டி கடிதம் எழுதினார்கள் . ( 22 ஷவ்வால் ,ஹிஜ்ரி 1302 / 1886 தேதியிடப்பட்டது ) .


 ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் 'அன்வார் ஏ ஸாதியா ' நூலின் இரண்டாம் பதிப்பில் கடுமையான சொற்பிரயோகத்தை தவிர்க்குமாறும் ,தமக்கு மேலும் பல பிரதிகள் அனுப்புமாறும் கூறினர் .

இதனால் ஹிஜ்ரி 1306ல் , அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்கள் கடுமையான சொல்லாடலை தவிர்த்து புத்தகத்தை பதிப்பிட்டார்கள் . அதனை பின்னர் பல பகுதிகளுக்கும் அனுப்பினார்கள் .

தமது கலீபாக்களுக்கு இடையே வேறுபாடுகள் வெடிப்பதைக் கண்ட ,ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் , முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்கிய ,இவ்வேறுபாடுகளைக் களைய ஓர் கையேட்டினை வெளியிட்டார்கள் .


Faysal-e-Haft Mas’alah

'பைஸ்லா ஹப்த் மஸ்அலா' என்னும் அந்த நூல் ஏழு சர்சைக்குள்ளான விஷ்யங்களைப் பற்றியது : 

1. மீலாத் 
2.பாத்திஹா 
3.உரூஸ் ,ஸமா 
4.யா ரஸூலல்லாஹ் என்று அழைப்பது 
5.இரண்டாவது ஜமாஅத் 
6.இம்கான் ஏ நதீர் 
7.இம்கான் ஏ கித்ப் 

 'பைஸ்லா ஹப்த் மஸ்அலா' என்னும்  நூல்  கிடைக்கப்பெற்றதும் , தேவ்பந்தி அறிஞர்கள் அதனை தீயில் இட்டு கொழுத்தி விட்டு ,தங்களது ஆன்மீக வழிகாட்டியாகிய  ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்களது கொள்கைகளுக்கு எதிராக வழிகெட்டு சென்றனர் .

இந்த சம்பவம்  பற்றிய ஓர் பதிவு தமிழகத்தில் இந்த தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் போலி தரீக்காவை சேர்ந்த ஆரணி பாவா என்ற கமாலுத்தீன் பாகவி எழுதிய 'தேவ்பந்தின் 200 வருட இறைநேசர்கள் 'என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது .   .  

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களுக்கு 'அல் பராஹீனே காத்தியா ' நூல் கிடைக்கப்பெற்றதும் அவர்கள் அறைகூவல் இட்டனர் . மவ்லானா குலாம் தஸ்தகீர் குஸுரி ,கலீல் அஹ்மத் அம்பேத்வியை முனாஜாராவிற்கு அழைத்தார்கள் .

இந்த முனாஜாரா ஹிஜ்ரி 1306ல் ஷவ்வால் மாதம் , பஹவல்பூரில் நடைபெற்றது . தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இந்த விவாதத்தில் மண்ணை கவ்வினர் . அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள்  'கலீல் அஹ்மத் அம்பேத்வியும் ,அவரது சக  அறிஞர்களும் வஹாபிகள் என்றும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் விலகியவர்கள் என்றும் ' முடிவு செய்யப்பட்டது .

மேற்சொன்ன விவாதம் பற்றிய சம்பவங்களும் , குறிப்புகளும் 'தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல் ' என்று ஓர் நூல் வடிவில் பதிவு செய்யப்பட்டது . 
Taqdīs al-Wakīl ‘An Tawhīn al-Rashīd wa al-Khalīl


                                                  [download link: PDF]

'அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா'   நூலுக்கு ஒப்புதல் அளித்த சமகால அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் :

1.அபுல் ஹஸனாத் மவ்லானா அப்துல் ஹை லக்னவி பிரங்கி மஹல்லி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1304) 

2. மவ்லானா பைஜூல் ஹசன் சஹரான்பூரி (மறைவு ஹிஜ்ரி 1304) 

3.மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1308) 

4.மவ்லானா முப்தி முஹம்மத் இர்ஷாத் ஹுசைன் முஜத்திதி ராம்பூரி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1311) 

5.மவ்லானா குலாம் தஸ்தகீர் குஸுரி(மறைவு ஹிஜ்ரி 1315) 

6.ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   (மறைவு ஹிஜ்ரி 1317) 

7.தாஜுல் புஹுல் மவ்லானா அப்துல் காதிர் பதாயூனி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1319)   

8.மவ்லானா வகீல் அஹ்மத் ஹனஃபி சிக்கந்தர்புரி (மறைவு ஹிஜ்ரி 1322) 

9.மவ்லானா முஹம்மத் பாரூக் அப்பாஸி சார்யகோடி (மறைவு ஹிஜ்ரி 1327)  

10.மவ்லானா அபூ முஹம்மத் அப்துல் ஹக் ஹக்கானி திஹ்லவி (மறைவு ஹிஜ்ரி 1335) 

11.மவ்லானா முஹம்மத் அப்துல் மஜீத்  பிரங்கி மஹல்லி (மறைவு ஹிஜ்ரி 1340) 

12.இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி பரேல்வி رحمه الله   (மறைவு ஹிஜ்ரி 1340) 


 




Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 21 March 2019

மவ்லவி காஸிம் நானோத்வியும் ,தக்தீருன் நாஸ் நூலும் - 2

காஸிம் நானோத்வி எழுதிய  தக்தீருன் நாஸ் மூலநூலின் சில பதிவுகள்

"முதலில் , காத்தமுன் நபி என்பதன் அர்த்தத்தை நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் . பொது மக்களுக்கு , நபிகள் நாயகம் அவர்கள் காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் என்னெவென்றால் , நபிகள் நாயகம் அவர்களின் காலம் பிற நபிமார்களுக்குப் பின்னால் என்பதும் , இறுதி நபி என்பதுமாகும் . எனினும் புரிந்து கொள்ளுபவர்களுக்கு (ஞானமுள்ளவர்கள் ) முதல் அல்லது இறுதி நபியாக இருப்பதில் எந்த மென்மையும் இல்லை என்று உணர்ந்துள்ளனர் . "

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 4,5 ] 

தேவ்பந்தி தப்லீக் பிர்காவிற்கு கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்கள் இறுதி நபியாக இருப்பதில் எந்த மேன்மையும் ,சிறப்பும் இல்லை என்று கொள்கை கொண்டுள்ளனர் .  

தேவ்பந்திகளினால் நடத்தப்படும் இணையம் /முகநூல் /வாட்சாப் குழுக்களில் அவர்களின் முன்னோடிகளைப் பற்றி பேசினால் அதற்கு மறுப்பும் ,நீக்கமும் செய்கின்றவர்கள் ,    கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்களை நிந்தனை செய்த தமது முன்னோடிளை புகழ்பவர்களை நெஞ்சம் நிறைந்து நேசிப்பர் . என்னே முனாஃபிக் தனம் ! 

அல்லாஹ் سبحانه و تعالى கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்களையும் ,ஏனைய நபிமார்களையும்  நேசித்து , அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்தொடபர்களை நேசம் கொள்ள நமது இதயங்களை திறப்பானாக ! ஆமீன் ! 


"நபிமார்கள் தங்களது உம்மத்துகளை விட சிறந்தவர்களாகவும் , உயர்ந்தவர்களாகவும் இருப்பது ஞானத்தில் மட்டுமே . அமல்கள் என்று வரும் போது உம்மத்தினர் சிலசமயம் நபிமார்களுக்கு சரிசமமான அந்தஸ்தையும் சிலசமயம் அதை விடவும் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றனர் ".  

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 7 ] 

மேற்கூறிய மொழிபெயர்ப்பை வாசித்த பின் தவ்பா செய்து ,ஷஹாதத்  சொல்லிவிடவும் . எத்தகைய ஈமானை பறிக்கும் செயல் ! 

இனி தேவ்பந்திகளிடம் இது பற்றி கேட்டால் ,அவர்கள் இதை எவ்வாறெல்லாம் நியாயப் படுத்துவார்கள் தெரியுமா .  அவர்களின் மோசடியான கூற்று , நபிகள் நாயகம் தமது 40 வது வயதில் தான் அமல்களை ஆரம்பித்தார்கள் . இனி முஸ்லிமான ஒரு சிறுவன் தனது 5 வயதில் திக்ர் செய்ய ஆரம்பித்தால் , அவன் அமல்களில்  நபிமார்களையும் முந்தி விடுவான் . நவூது பில்லாஹ் !

" நபிகள் நாயகம் அவர்களது சமகாலத்தில்,எங்கோ ஓரிடத்தில்  வேறு ஒரு நபி  இருப்பதாக நாம் கருதினாலும் ,அது நபிகள் நாயகம் காத்தமுன் நபி என்பதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது . "

தேவ்பந்திகளே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ,உங்களது நெருங்கி உறவுகளைப் பற்றி தவறாக கற்பனை செய்தால் , ஏற்றுக்கொள்வீர்களா?

ஆனால் ஸய்யிதுல் அன்பியா  கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்கள்  மீது எவ்வாறு அனுமானம் கொள்ள முடிகின்றது ?

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 18  ] 

" எதிர்காலத்தில் வேறு ஏதேனும் ஒரு நபி வருவதாக நாம் கருதினால் ,அது நபிகள் நாயகம் அவர்கள் இறுதி நபி (கத்மியத் முஹம்மதி ) என்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது ".

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 34  ] 

இவர்கள் உருவாக்க முயன்ற கருத்துருவாக்கம் என்ன என்று மணி அடிக்கின்றதா ?

இந்த பதிவையும் ,இதற்கு முன்னர் தமது முன்னோடிகளைப் பற்றி என்ன கூறினார்கள் என்று முந்தைய பதிவிலும் வாசித்துப் பாருங்கள் இஸ்லாமிய அன்பர்களே !

இரண்டையும் தொடர்புபடுத்தி , தமது முன்னோடிகளுக்கு எந்த வாசலை திறக்க எத்தனித்தார்கள் என்பதை அறியுங்கள் . ஆனால் அவர்களை எல்லாம்  முந்திக் கொண்டு சபிக்கப்பட்ட குலாம் அஹமத் காதியானி  அந்த வாசலின் வழியே நுழைந்தான் .

காதியானிகள் கத்தமே நுபுவ்வத் பற்றி கூறுபவற்றை , தேவ்பந்தின் நிறுவனர் காஸிம் நாணோத்வி கூறுவதுடன் ஒப்பிடுப் பாருங்கள்    








Related Posts Plugin for WordPress, Blogger...

மவ்லவி காஸிம் நானோத்வியும் ,தக்தீருன் நாஸ் நூலும் - 1


கத்மே நுபுவ்வத் குறித்து தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகள் என்ன ?
இது விஷயமாக தேவ்பந்திகள் இயற்றிய நூற்கள் கூறுவது என்ன ?


    
மவ்லவி காசிம் நாணோத்வி தேவ்பந்தி தப்லீகி பிர்காவின் முன்னோடிகளில் ஒருவர் . தாருல் உலூம் தேவ்பந்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் . இவர் "தக்தீருன் நாஸ் " என்னும் நூலில் எழுதிய குப்ரியத்தான கொள்கைகளால் மக்கா ,மதீனா  ஷரீஃபை சார்ந்த 30க்கும் மேற்பட்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களாலும் ,இந்தியாவைச் சார்ந்த 268 உலமாக்களாலும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்டார் .


அந்த நூலில் மவ்லவி காஸிம் நானோத்வி எழுதுகிறார் : -

பொதுவான பாமர மக்களின் சிந்தனை காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நபிகள் நாயகம் அவர்களின் காலம் முன் சென்ற நபிமார்களின் காலத்திற்கு பின்னால் என்பதும் ,அவர்கள் தான் இறுதி நபி என்பதும் என்று எண்ணுகின்றனர் . எனினும் மதிநுட்பமுடைய அறிஞர்களின் கருத்து என்னவென்றால் முந்தியோ ,பிந்தியோ இருப்பதில் எந்த சிறப்பும் இல்லை .

ஒருவேளை நாயகம் அவர்களுக்குப் பின் ஒரு நபி பிறந்தாலும் , அதைக் கொண்டு காத்தமுன் நபி என்று இருப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது . எனவே நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் வேறு கிரகத்திலோ அல்லது இதே கிரகத்திலோ  ஒரு நபி இருந்தாலோ அது எந்த வேறுபாட்டையும் உண்டாக்காது .

மவ்லானா முஹம்மத் பாஸில் என்பாருக்கு எழுதிய ஓர் கடிதத்தில் ,காஸிம் நாணோத்வி எழுதுகிறார் : -

காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நேர்கோட்டில் பொருள் கொள்பவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்களின் காலம் எல்லா நபிமார்களின் காலத்திற்கு தூதுத்துவத்திற்குப் பிந்தியது என்றும் அவர்களுக்கு பின்னர் வேறு யாரும் நபியாக வர முடியாது என்பதாம் . எனினும் நீங்கள் அறிவீர்கள் இதைக் கொண்டு தனிப்பட்ட புகழோ ,தீங்கோ ஏதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் .

பின்வரும் பதிவுகளை வாசிக்கும் முன்னர் காஸிம் நோனோத்வியின்    இந்த 
கூற்றை உங்கள் சிந்தையில் ஏற்றுங்கள் .

காசிம் நானோத்வியின் கப்ரை பற்றி :   

" தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் பொறுப்புதாரி மவுலானா ரஃபீயுத்தீன் சாஹிப் அவர்களின் கஷ்ப் ஆகிறது , தேவ்பந்த் மதர்ஸாவின் நிறுவனர்  மவுலானா காஸிம் நாணோத்வியின் கப்ர் ஒரு நபியின் கப்ரினுள் அமைந்துள்ளது என்பதாம் ." 

[முபஷ்ஷிராத் , பக்கம் 36,  தாருல் உலூம் தேவ்பந்த் வெளியீடு ]     


ஸவானெஹ் காஸிமி என்பது தேவ்பந்தின் புகழ்பெற்ற அறிஞர் , மவ்லானா முனாஜிர் ஹசன் கீலானி என்பரால் எழுதப்பட்ட நூல் காசிம் நாணோத்வியின் சுயசரிதை நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது . 

அதில் கூறப்பட்டுள்ளது , 

" ஒரு முறை மவ்லானா காஸிம் நாணோத்வி தம்முடைய ஞானாசிரியர் ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களிடம் , நான் தஸ்பீஹ் செய்ய உட்காரும் போதெல்லாம் மிகுந்த சிரமத்தை உணருகின்றேன் . உன்னுடைய இதயத்திலும் ,நாவிலும் நூறு டன் எடையுள்ள கற்களை யாரோ சுமத்தியது போன்றும் ,சர்வமும் முடங்கியது போன்றும்  உணருகின்றேன் . 

அதற்கு ஹாஜி சாஹிப் அவர்கள் கூறினார்கள் :

இது வஹீ அருளப்படும் போது நபிகள் நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை போன்ற ஓர் நுபுவ்வத்தின் ஆசீர்வாதங்களில் ஒன்று . அல்லாஹ் உம்மை நபிமார்களின் வேலைக்கு தேர்வு செய்துள்ளான் " 

[நூல் - ஸவானெஹ் காஸிமி , பாகம்  1, பக்கம் 259 ]

அதன் உர்து ஆக்கம் , 

"யே நுபுவ்வத் கா ஆப் கா கல்ப் பர் பைஜான் ஹோதா ஹை ,அவ்ர் யே வஹ்  சிக்ள் ஹை ஜோ ஹுஜுர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் கோ வஹி கி வக்த் மௌஸூஸ் ஹோதா தா , தும் சே ஹக் தஆலா ஒ காம் லேனா ஹை ஜோ நபியோ சே லியா ஜாதா ஹை " .



அர்வாஹெ ஸலாசா என்னும் நூல் ,புகழ்பெற்ற தேவ்பந்த் உலமாக்களின்  கூற்றுகளையும் , சம்பவங்களையும் கையாள்கிறது . அதை எழுதியவர்கள் அமீர் ஷாஹ் கான் மற்றும் மவ்லானா ஜாஹிர் ஹசன் கசூரி . மவ்லவி அஷ்ரப் அலி தான்வி அதற்கு ஹாஷியா எழுதியுள்ளார் . அது தேவ்பந்திகளிடம் வரலாறு மற்றும் படிப்பினை பெறுவதற்கு என்று புகழ்பெற்ற நூல் . அதனை ஹகாயாதே அவ்லியா , அஸ்லாபே தேவ்பந்த் , ஷஹான் தில்லி என்றும் வேறு பெயர்களில் வெளிவந்துள்ளது .

அதில் எழுதப்படுள்ளது ,

'ஹழ்ரத் ரஷீத் அஹமத் கங்கோஹி தமது மாணவர் மவ்லானா முஹம்மது யஹ்யா காந்தள்வியிடம் ஷாமி நூலில் ஓர் பத்வாவை பார்வையிட சொன்னார்கள் . மவ்லானா முஹம்மது யஹ்யா  காந்தள்வி அந்த குறிப்பிட்ட பத்வா நூலில் இல்லை என்று பதில் அளித்தார்கள் . மவ்லானா  ரஷீத் அஹமத் கூறினார்கள் இது எவ்வாறு சாத்தியம் ? நூலை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்கள் . அந்த நூல் ரஷீத் அஹ்மத் சாஹிப் அவர்களின் முன் கொண்டு வரப்பட்டது . 

அது சமயத்தில் ஹழ்ரத் ரஷீத் அஹ்மத் அவர்கள் தமது பார்வையை கிட்டத்தட்ட இழந்து விட்டார்கள் . அவர்கள் அந்த நூலை எடுத்து , மூன்றில் இரண்டு பங்கு பக்கங்களை வலதுபுறமும் , ஒரு பங்கு பக்கங்களை இடப்புறமும் திருப்பி ,ஒரு பக்கத்தை எடுத்தார்கள் . இடப்பக்கதத்தின் அடியில் பார்க்குமாறு கூறினார்கள் .அந்த பத்வா அங்கு காணப்பட்டது . எல்லோரும் வியந்து போனார்கள் . ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் ,' என் நாவில் இருந்து தவறான ஒரு சொல்லும் வராது  என்று அல்லாஹ் எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளான் '  என்று கூறினார்கள் 

[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]
   
இது முடிவல்ல . இதன் விளக்கவுரையில் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி பின்வருமாறு எழுதியுள்ளதை காணுங்கள் ,

' இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு சம்பவமாக இருக்கலாம் ,ஆனால் விஷயம் அவ்வாறல்ல . அது மவ்லானா ரஷீத் அஹ்மத் அவர்களுடைய கஷ்ப் , இல்லையெனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தி இருக்க மாட்டர்கள் .


உங்களுக்கு நினைவூட்டுகின்றேன் ,

" நபிகள் நாயகம் அவர்கள் மறைவான ஞானம் உள்ளது என்று நம்பிக்கை கொள்வது தெளிவான ஷிர்க் "

[ நூல் - பத்வா ரஷீதிய்யா ,ரஷீத் அஹ்மத் கங்கோஹி ]

இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

" ஒரு நாள் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் (ஜோஷ் ) காணப்பட்டார்கள் . தஸவ்வுரே ஷெய்கு என்பது பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது . அவர்கள்  ,'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் . 
 
'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

அப்போது ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' மூன்றாண்டு காலமாக ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் முகம் எனது கல்பிலே இருந்தது ,அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி  மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' பல்லாண்டுகளாக நபிகள் நாயகம் என்னுடை கல்பிலே இருந்தார்கள் , அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' . (அடிக்குறிப்பு : கான் சாஹிப் எத்தனை ஆண்டுகள் என்று கூறியது நினைவில்லை ) .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி இன்னும்   மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ஆனால் அவர் அமைதியாக இருந்தார் .மக்கள் கேட்ட பொழுது , அதை விட்டு விடுங்கள் என்றார் .
[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]

ரஷீத் அஹ்மத் கங்கோஹி  என்ன சொல்ல விரும்பவில்லை என்பது விளங்குகின்றதல்லவா !

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது கல்பில் நபிகள் நாயகம் அவர்களே  நிறைந்திருந்ததாக கூறினார் . நாயகத்தின் நூர் அல்லது திருமுகம் என்று கூறவில்லை .  அப்படியானால் நாயகம் அவர்களின் சங்கைமிகு ரவ்ளா ஷரீப் காலியாக இருந்ததா ?

ஏனெனில் அஷ்ரப் அலி தான்வி எழுப்பியுள்ள கேள்வி தான் அது

' மவ்லித் மஜ்லிஸ்கள் பல இடங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றால் , நாயகம் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் ,எங்கு செல்ல வேண்டாம் என்று எவ்வாறு முடிவு செய்வார்கள் '.
[ நூல் - பத்வா இம்தாதியா , பாகம் 4, பக்கம் 58 ] 


ஆஷிக் இலாஹி மீரடி தேவ்பந்தி சிந்தனைப் பள்ளியின் நபர் . அவர் எழுதிய நூல் தான்  'தஸ்கிரதுர் ரஷீத்' .   அது 2 பாகங்களாக வெளிவந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சரிதையை கூறும் நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது .

மவ்லானா ஆஷிக் இலாஹி மீரடி  ,பல முறை ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறியதைக் கூறியுள்ளதாக எழுதுகிறார் ,

' கேளுங்கள் ! சத்தியம் என்பது ரஷீத் அஹ்மத்தின் நாவில் இருந்து வருவது தான் . நான் இக்காலத்தின் வழிகாட்டியும் , இரட்சிப்பும் (ஹிதாயத் வ நஜாத் )  என்னை பின்தொடர்வதை(இத்திபா )  அன்றி இல்லை என்று சாட்சியமளிக்கின்றேன் . '

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  17 ]


 இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

ஆஷிக் இலாஹி மீரடி , ஆக்ராவைச் சேர்ந்த முன்ஷி முனீர் அஹ்மத்தின்   கனவை  விவரிக்கின்றார் .

' கங்கோஹ் நகரில் ஓர் ஷியா இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை நான் கனவில் கண்டேன்,அவனது கட்டைவிரலை பற்றிக் கொண்டேன்  . அவன் பயந்து நடுங்கி , என்ன வேண்டும் உனக்கு என்றான் . நான் மரணித்திற்குப் பின் உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டேன் . அவன் மிகக் கடுமையான வேதனையில் உள்ளதாகவும் , தாம் ஒரு முறை நோய்வாய் பட்டு இருக்கையில் , மவ்லானா ரஷீத் அஹ்மத் தன்னை காண வந்ததாகவும் , தமது உடலின் எந்த பாகத்தையெல்லாம் மவ்லானா தொட்டார்களோ ,அவை எல்லாம் வேதனையை விட்டும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார் . அதன் பின்னர் நான் விழித்தெழுந்து விட்டேன் . '


[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  324  ] 

இது போன்று மற்றோரு சம்பவமும் அதே நூலில் கூறப்படுள்ளது ,

' மவ்லானா இஸ்மாயிலின் ஒரு பணியாள் இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை யாரோ ஒருவர் கனவில் கண்டார் . அவனது முழு உடலும் தீயில் வெந்து கொண்டிருந்தது , உள்ளங்கையைத் தவிர . அவனை கனவில் கண்ட நபர் மரணித்திற்குப் பின்  உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டார் .அவர் கூறினார் தாம் செய்த கெட்ட அமல்களுக்காக தண்டனை அனுபவிப்பதாகவும் , தமது உள்ளங்கையைத் தவிர தமது முழு உடலும் தீயில் வெந்து போவதாகவும் கூறினார் . தமது உள்ளங்கையைக் கொண்டு மவ்லானா இஸ்மாயிலின் பாதங்களைத் தொட்டதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாகவும் , 'நாம் அந்த உள்ளங்கையை எரிப்பதைக் கொண்டும் வெட்கப்படுகின்றோம் ' என்று சொல்லப்பட்டதாகவும் கூறினார் '.

இவ்விரு சம்பவங்களை மீண்டுமொருமுறை வாசித்து , ஸஹீஹ் புஹாரியில் உள்ள ,தமது அடிமை துவைபாயை உரிமையிட்ட அபூலஹபின் ஹதீதை   நினைவில் கொள்க !

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இத்தகைய நம்பிக்கைகளை கொண்டிருப்பது அவர்களின் சுய முடிவு .

ஆனால் இதே கூட்டத்தினர் , நமது ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் முஸ்தபா صلى الله عليه و سلم அவர்கள் பற்றி தமது நூற்களில் எழுதியுள்ளவற்றை சீர்தூக்கி ஆய்வு செய்து பாருங்கள் ! 

 


Related Posts Plugin for WordPress, Blogger...