Monday, 18 November 2019

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தும் ,மீலாதும்

கைர் முகல்லித் வஹாபிகள் போன்று , தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் சங்கைமிகு ரபீயுல் அவ்வல் மாதம் கொண்டாடி  மகிழும் கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களின்  மீலாத் ஷரீபை பித்அத் ,அனுமதியில்லாத செயல் என்ற கொள்கை கொண்டவர்களே .

ஆனால் இன்று சமீபகாலமாக தமிழக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  மீலாத் குறித்த தமது போலி நாடகத்தை இணைய வெளிகளில் (பதிவு தளங்கள் , முகநூல் ,வாட்சாப் போன்றவற்றில் ) நடத்தி வருகின்றனர் . தாங்களும் , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் போன்று மீலாத் கொண்டாடுபவர்கள் தாம் . தங்களின் மீது சுமத்தப்படும் வீண் பழி இது என்றும் , அத்துடன் தங்களின் வழக்கமான பல்லவியான பரேல்விகளின் அபாண்டமான அவதூறு என்றும் .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் முன்னோடிகள் மீலாத் பற்றி என்ன எழுதியுள்ளனர் , இதுநாள் வரை  தேவ்பந்தி தப்லீக் கொள்கை பரப்பும் அவர்களது மத்ரஸாக்களின் பத்வாக்கள் என்ன என்றும் ஆதாரங்களுடன் பார்ப்போம் .

உலகெங்கிலும் ரபீயுல் அவ்வல் மாதம் பரவலாக ஒதப்படுவது புர்தா ஷரீப் , பர்சன்ஜி மவ்லித்,மங்கூஸ் மவ்லித் ,ஹரீரி மவ்லித்    மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்த இறைநேசர்கள் கோர்வை செய்த மவ்லித் .தமிழகத்தில் பரவலாக ஒதப்படுவது ஸுப்ஹான மவ்லித்   ஆகும் . இதில் பெருமானார் صلى الله عليه و سلم அவர்களின் ஜனனத்தை குறிக்கும் பகுதியை ஓதும் பொழுது கியாம் நிலையில் எழுந்து நின்று சங்கை செய்வதும் , கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களும் , இறைநேசர்களும் , மலக்குமார்களும் ஹாலிராகின்றார்கள் என்பதும் அஹ்லுஸ் ஸுன்னத்  வல் ஜமாத்தினர் தம் நம்பிக்கை . 

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் முன்னோடி , இந்திய வஹாபியிசத்தின் மூலம் இஸ்மாயில் திஹ்லவி ஹாழிர் , நாளிர் நம்பிக்கை பற்றி தமது தக்வியத்துள் ஈமான் , நூல் பக்கம் 8ல் 

                                 

" அல்லாஹ்விற்கு இடைபொருளாக இருப்பவர் ஹாழிர் , நாளிர் என்றும் , அவர்  விவகாரங்களில் விவாதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்றும் நம்பிக்கை கொள்பவர் ஷிர்க்கில் உள்ளார் . அந்த இடைப்பொருள் நபிமார்களோ ,வலிமார்களோ ,மலக்குகளோ ,ஜின்களோ என்று எதுவாக இருந்தாலும் அதில் வேறுபாடு இல்லை . இத்தகைய செயலில் ஈடுபடுபவர் காபிர் - அவர் நபிமார்களோ ,வலிமார்களோ ,ஷுஹதாக்கள் , ஷைகுமார்கள் , ஜின்கள் என யாரைக் கொண்டு தேடினாலும் சரியே " 


தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் மற்றோர் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 41 ல் 

"மவ்லித் பித்அத் ,கியாம் நிலையில் எழுத்து நிற்பது  பித்அத்  "  என்று எழுதியுள்ளார் . 

இனி காலம் ,காலமாக பொய்யும் ,புரட்டும் மட்டுமே பேசி மக்களை ஏமாற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரது மற்றோரு வரலாற்றுத் திரிபு தாங்கள் இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களது மஸ்லக்கை சார்ந்தவர்கள்  என்று பேசித் திரிவது . ஆனால் இந்த முனாஃபிக்குகளுக்கும்  ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களது மஸ்லக்குக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பது அன்னார் தம் குடும்பத்தினரும் , அவர்களது ஸில்ஸிலா என்னும் ஞான வழிப்பாட்டை ஏற்று நடப்பவர்களும் இன்று வரை நமக்கு உணர்த்தி வருகின்றார்கள் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 50 ல் 



கேள்வி: ஷரீயத்திற்கு மாற்றம் இல்லாத வகையில் நடத்தப்படும் மவ்லித் ,உரூஸ் நிகழ்வுகள் - உதாரணமாக இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் நடத்தியது போன்று ; அவ்வாறானதை நீங்கள் அனுமதிக்கப்பட்டது என்று கூறுகின்றீர்களா , இல்லையா ? இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள்  உண்மையாகவே வ்லித் ,உரூஸ் மஜ்லிஸ்கள் நடத்தினார்களா ? 

பதில் : மவ்லித் நிகழ்வை கொண்டாட ஓர் கூட்டத்தை ஏற்பாடு செய்வது - அது ஷரீயத்திற்கு மாற்றம் இல்லாத வகையில் நடத்தப்படுவதாக இருந்தாலும் , ஆனால் அது விழாவாகவும் ,மக்களை அழைப்பதுமாகவும் ( இஹ்திமாம் , ததயி)  இருப்பதால் , இக்காலத்தில் அவ்வாறு செய்வது சரியல்ல . உரூஸ் நிகழ்வுக்கும் இதே பதிலே . பல விஷயங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டதாக ( முபாஹ் )  ஆக இருந்தது , ஆனால் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது . மவ்லித் ,உரூஸ் மஜ்லிஸ்கள் இத்தகைய ஒன்றுதான் .


நமக்கு உண்டாகும் கேள்வி சிராஜுல் ஹிந்த் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள்  மவ்லித் அல்லது உரூஸ் மஜ்லிஸ்களில் எவ்வாறு கலந்து கொண்டனர்  - மக்கள் கூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் , அல்லது ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதியில் அவர்களை ஒன்றுகூட அழைக்காமல் ? தேவ்பந்த் மத்ரஸாவில் எந்த ஒரு நிகழ்வும்  மக்கள் கூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் , அல்லது ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதியில் அவர்களை ஒன்றுகூட அழைக்காமல் நடக்கின்றதா என்ன ? குப்ரான மாற்று மத சாமியார்களை தேவ்பந்தில் மேடையேற்றி அவர்களிடம் ஞானம் பெறும் நிகழ்வுகள் கூட இவ்வாறு தான் தேவ்பந்தில் நடைபெற்றதா ? ஷரீயத்தை கடுமையாக பின்பற்றுபவர்கள் என்று வாய் சவடால் விடும்  தேவ்பந்தி உலமாக்கள் இதை கண்டிப்பார்களா ?



https://www.indiatoday.in/latest-headlines/story/ramdev-charms-deoband-crowd-59988-2009-11-04

  சிராஜுல் ஹிந்த் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் இவை குறித்து ஆட்சேபம் தெரிவித்த மவ்லவி அப்துல் ஹக்கீம் பஞ்சாபி என்பவருக்கு பதில் அளிக்கும் விதமாக எழுதினார்கள் :

Zubdatu’n Nasāyiĥ_Page 17,36,42


" எதைக் கொண்டு விமர்சனம் செய்கின்றாரோ அதைப் பற்றிய விமர்சிப்பவரின் அறியாமையே விமர்சனத்தின் காரணம் . ஷரீயத்தின் சட்டதிட்டங்களைக் கொண்டு எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை தவிர வேறு எதையும் யாரும் கடமையான செயலென கூற இயலாது . ஆம் , ஸாலிஹான முஸ்லிம்களின் கபூரை ஜியாரத் செய்து , நல்லமல்கள் செய்து அதன் மூலம் பரக்கத்தை பெற்று , குர்ஆன் ஓதி ,துஆ செய்து அதன்பின்னர் உணவு அல்லது இனிப்பு வகைகளை பகிர்வது முஸ்தஹபான ஓர் காரியம் , அறிஞர்களின் இஜ்மா பிரகாரம் நன்மையான செயல் . உரூஸ் என்று நாள் குறிப்பது ,ரூஹ் இப்பூவுலகை(தார் அல் அமல் )  பிரிந்து  வெகுமதியின் உலகை(தார் அல் தவாப் )   அடைந்ததை  நினைவு கூறும் பொருட்டே அன்றே அல்லாமல் வேறில்லை . அதனை எந்த ஒரு நாளிலும் செய்யலாம் , அது வெற்றிக்கும் , இரட்சிப்புக்கும் காரணமாகும் செயல் தான் ."

[நூல் - ஜுப்ததுன்  நஸாயிஹ் ,பக்கம் 42 ] 

ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 72 ல் 

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களும் ,அவர்களது தகப்பனார் ஷாஹ் அப்துர் ரஹீம் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களும் மவ்லித் மஜ்லிஸ்கள் நடத்தியதாக 'துர் அல் தாமீன் 'நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதையும்  , இமாம் ஸுயூத்தி رضي الله عنه‎ அவர்களும் அதனை ஏற்றமிகு செயல் ( முஸ்தஹ்சின் ) என்று தமது 'ஹுஸ்ன் அல் மகாசித்  'நூலில்   குறிப்பிடப்பட்டுளதையும் மேற்கோளிட்டு கேள்விளையாளர் மவ்லித் பற்றி வினவுகின்றார் .

திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்து , தாம் நெருக்கடியில் சிக்கியதை அறிந்த  ரஷீத் அஹ்மத் கங்கோஹி , ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களை பித்அத்தி என்றும்  சொல்ல முடியாது,  மவ்லித் ஆகுமானது என்று தனது வஹாபிய கொள்கைக்கு மாறாகவும் சொல்ல முடியாது என்பதால் ,மேலோட்டமாக பட்டும்படாமல் இந்த இடத்தில் தமது கருத்தை பதிவிடுகிறார் .

 ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் மவ்லித் மஜ்லிஸ்கள் ஆகுமானது என்றும் கண்மணி நாயகம் صلى الله عليه و سلم  அவர்களின் பிறப்பை குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதே மவ்லித் மஜ்லிஸ்களின் நோக்கம் என்பதே உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயம் என்று கூறினாலும் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது முடிவில் தடுமாறவில்லை .


"  வெகுமதியை எந்த நாளிலும் எத்தி வைப்பது ஆகுமானது ,ஷரீயத்தில் அதற்கு என்று குறிப்பிட்ட எந்த நாள் , நேரம் தான் என்பது கிடையாது . மேலும் அதனை பிறந்த நாளிலோ அல்லது மறைந்த நாளிலோ எத்தி வைப்பதும் ஆகுமானது . எனவே குறிப்பிட்ட நாளில் தான் நிகழாத வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல் , ஏதாகிலும் ஒரு நாளில் செய்தால் , மற்றும் வெகுமதியை கொடையளிக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்தால் ,அத்தகைய நிகழ்வில் எந்த தீங்கும் இல்லை . இப்படி ஒரு செயலை அனைவரும் அனுமதிக்கப்பட்ட ஒன்றெனவே கூறுவர் . ஷாஹ் அப்துல் ரஹீம் அவர்களின் செயல்முறையும் இதன் அடிப்படையிலேயே நிகழ்ந்தது , இதனை ஒரு ஆதாரமாக நம் காலத்தில் நடக்கும் பித்அத்திற்கு எடுக்க இயலாது .

மேலும் , நிகழ்வில் உணவை  அளித்தது நன்மையை தேடிக் கொள்ளும் பொருட்டிலே தான் ;ஏனெனில் அதுகூட நாயகத்துடன் உண்டான தொடர்பின் காரணமாக ( என்று தான் மேற்கோளில் உள்ளது ), கண்மணி நாயகம் அவர்களின் பிறப்பை குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ அல்லது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் மவ்லித் ஒருங்கிணைப்பு மஜ்லிஸ் என்றோ இல்லை . எனவே மவ்லித் கொண்டாட எந்த ஆதாரமும் இல்லை . மேலும் ஸுயூத்தி அவர்களது காலத்தில் நமது காலத்தில் உள்ள பித்அத்துகள் இல்லை . ஸுயூத்தி அவர்களது மகாஸித் பற்றி மேலும் அறிய பராஹீனே காத்தியாவை பார்க்கவும் . அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் "


ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 90 ல் 


மவ்லித் கொண்டாடுவதன் அனுமதி பற்றியும் , ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி  رضي الله عنه‎ அவர்கள் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது பற்றியும் கேள்வியாளர் வினவுகின்றார் ; ஆனால் இது ரஷீத் அஹ்மத் கங்கோஹியை ஈர்க்கவில்லை :



மவ்லித் மஜ்லிஸ்கள் குறித்த விரிவான ஆய்வுகளுக்கு பராஹீனே காத்தியா நூலினை பார்க்கவும் . ஸுபியாக்கள் ,ஷெய்குமார்களது,முன்னோடி அறிஞர்கள் ஆகியோரது  சொல் ,செயல்  ஆதாரமாக ஏற்க இயலாது .

நாயகம் அவர்களது சொல் ,செயல் மற்றும் முஜ்தகித் இமாம்களின் கருத்துக்களையே ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும் .


ஆனால் இதே தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் , அவர்களின் மீது  'ஹுஸாமுல் ஹரமைன் 'பத்வா   சங்கைமிகு மக்கா ,மதீனா உலமாக்கள் வழங்கியதும் , என்ன செய்தார்கள் .

கலீல் அஹமத் அம்பேட்வி ' அல் முஹன்னத்' நூலில் மவ்லித் பற்றி என்ன எழுதி  பத்வா கேட்டார் ?  இந்நிலையில் வாசகர்கள் ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 50 ல்  எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறை பாருங்கள் .

மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி தானே கேள்விகளைக் கேட்டு ,அதற்கு தேவ்பந்திகளின் நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் என்ன என்பதை தமது பதிலாக எழுதியுள்ளார் .

கேள்வி எண் 21: [அல் முஹன்னத் ]


      " நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் அது குற்றம்(கபீஹ்),பித்அத்,ஹராம் என்று  சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "

இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி கடுகளவு நேர்மையுடைய ஒரு தேவ்பந்தியாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்,

 " ஆமாம்,எங்களின் ஸ்தாபகர் இஸ்மாயில் திஹ்லவி இம்மாதிரியான கொண்டாட்டங்களை முஷ்ரிக்கான நடைமுறை என்கின்றார் .எங்களின் ஷைகு ரஷீத் அஹ்மத் அனைத்து மெளலித் வைபவங்களையும் அனுமதியில்லாதது என்று தனது நூல்களிலும்,பத்வாக்களிலும் கூறியுள்ளார்.நாமும் இம்மாதிரியான மெளலித் விழாக்கள் ஹிந்துக்கள் தங்களின் கடவுள் கிருஷ்ணனை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா போன்று என்று கூறியுள்ளோம் "(பதாவா ரஷீதியா ,பராஹீனே காத்தியா )

இந்த பதிலை கலீல் அஹமத் தனது அல் முஹன்னதில் எழுதியிருந்தால் எத்துணை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அதில் கையொப்பமிடுவார்கள் !!

ஆனால்,கலீல் அஹ்மத், வஹ்ஹாபி பித்னா எவ்வாறு அரபுலகில் வேகமாக பரவி வந்ததையும், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த சத்திய உலமாக்கள் அதை எதிர்த்து வந்ததையும் அறியும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார் .

கலீல் அஹ்மத் அல் முஹன்னதில் என்ன எழுதினார் என்று அறியும் முன் தேவ்பந்திகளின் மற்றொரு அறிஞரான அன்வர் ஷாஹ் காஷ்மீரி(இறப்பு 1933) மெளலித் பற்றி என்ன எழுதினார் என்று பார்ப்போம்
Anwar Shah Kashmiri

وأحدثه صوفي في عهد سلطان إربل سنة ( 600 ) ، ولم يكن له أصل من الشريعة الغراء
العرف الشذي شرح سنن الترمذي - (2 / 82 مؤسسة ضحى للنشر والتوزيع)
"அது சுல்தான் இப்ரில் காலத்தைச் சார்ந்த ஸூபி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இதற்கு நமது தூய்மையான ஷரீயத்தில் எந்த ஆதாரமும் இல்லை " 

இனி,மெளலானா கலீல் அஹமதுவின் பதில் அல் முஹன்னதில் என்ன என்பதைப் பார்ப்போம் .


"எந்த ஒரு முஸ்லீமுக்கும் பெருமானார் صلى الله عليه و سلم அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் யாரும் பெருமானார் அவர்களின் செருப்பைப் பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியைப் பற்றி பேசுவதையோ கூட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் தொடர்புடைய எல்லா சம்பவங்களையும் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் பேசுவது அழகான ஒரு செயலாகும் இன்னும் எங்களிடத்தில் அது 'முஸ்தகப் '.அது பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியோ அல்லது அன்னாரின் கனவுகளைப் பற்றி பேசி பிறப்பைக் கொண்டாடுவது எங்களிடத்தில் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு செயலாகும்" .

ஆக கலீல் அஹ்மத் அரபுலகை சார்ந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்களை திருப்திபடுத்தும் பொருட்டு இந்த பதிலை அல் முஹன்னதில் எழுதினார் என்பது திண்ணம் .

மேலும் சில வரிகளுக்கு பின் அவர் எழுதுகிறார் ,

"நாம் பெருமானாரின் மெளலித் பற்றி பேசுவதற்கு எதிரானவர்கள் அல்லர் ,ஆனால் அதில் கலந்து விட்ட தவறான விஷயங்களுக்கு எதிர்ர்பாக உள்ளோம் .உதாரணமாக நீங்கள் இந்தியாவில் உள்ள மெளலித் மஜ்லிஸ்களில் ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் (மவ்து ) பேசப்படுகின்றன ,ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த சபைகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர் , மின்விளக்குகளும் தேவையற்ற வீண் விரயங்களும் நடைபெறுகின்றன,இதில் கலந்து கொள்வது  'வாஜிப்' என்று சொல்கின்றனர் ,கலந்து கொள்ளாதவர்களை விமர்சிக்கின்றனர் .இதுவெல்லாம் போக இன்னும் பல ஷரீயத்திற்கு மாற்றமான பல்வேறு விஷயங்கள் எல்லா மெளலித் மஜ்லீஸிலும் நீக்கமற நிறைந்துள்ளன ".


இது அல் முஹன்னதில் உள்ள  பொய்களின் முதல் ஆரம்பம் !

இத்தகைய இரட்டை நாவுள்ள  முனாஃபிக்குகளைப் பற்றித்தான் , திருமறை கூறும் ஸுரா அல் முனாஃபிகூனின் சமகால சாட்சியம் இவர்கள்தான் .

தேவ்பந்த் மத்ரஸாவின் மீலாத் பற்றிய பத்வா




தமிழகத்திலுள்ள தேவ்பந்தி தப்லீக் மத்ரஸாக்களும்  தமது தாய் மத்ரஸாவை பின்பற்றி மீலாத் கூடாது என்று பத்வா அளித்துள்ளனர். அவை காஷிஃபுல் ஹுதா (சென்னை ), அன்வாருல் உலூம் (திருச்சி ),மளாஹிருல் உலூம் (சேலம்),  தற்சமயம் தேவ்பந்தி தப்லீக் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழகத்தின் தாய் மத்ரஸா பாக்கியாத்துஸ் ஸாலிகாத் (வேலூர் ) . இவை மீலாத்திற்கு எதிராக பத்வா வெளியிட்டுள்ளனர் .

இதனை மவ்லானா சலீம் சிராஜி ஹழ்ரத் (முதல்வர் , ஜாமியா நாஸிருஸ்ஸுன்னா ,சென்னை ) அவர்கள் தமது "தப்லீக் ஓர் ஆய்வு "நூலில் ஆவணப்படுத்தியுள்ளனர் .


அத்துடன் இந்த  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் , மவ்லித் நிகழ்வுகளை மடை மாற்றும் விதமாக Seerah Conference , தமிழில் வரலாற்று நூற்களை படியுங்கள் என்று இலைமறை காயாக தமது வஹாபிய சித்தாந்தந்தை புகுத்துகின்றனர் . இவை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை ,ஆனால் இவற்றை குறிப்பாக ரபீயுல் அவ்வல் மாதத்தில் மீலாத் சமயத்தில் சொல்வது இவர்களின் விஷமத்தனமேயாகும் .




 















காசுக்காக , தாம் வகிக்கும் பதவிக்காக , சமுதாய நிர்ப்பந்தத்தின் காரணமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஒரு சில இடங்களில் மீலாத் நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் ,  தமிழக முஸ்லிம்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது ஈமானுக்கு நலம் ! 


Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment