Thursday, 21 March 2019

மவ்லவி காஸிம் நானோத்வியும் ,தக்தீருன் நாஸ் நூலும் - 1


கத்மே நுபுவ்வத் குறித்து தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகள் என்ன ?
இது விஷயமாக தேவ்பந்திகள் இயற்றிய நூற்கள் கூறுவது என்ன ?


    
மவ்லவி காசிம் நாணோத்வி தேவ்பந்தி தப்லீகி பிர்காவின் முன்னோடிகளில் ஒருவர் . தாருல் உலூம் தேவ்பந்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் . இவர் "தக்தீருன் நாஸ் " என்னும் நூலில் எழுதிய குப்ரியத்தான கொள்கைகளால் மக்கா ,மதீனா  ஷரீஃபை சார்ந்த 30க்கும் மேற்பட்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களாலும் ,இந்தியாவைச் சார்ந்த 268 உலமாக்களாலும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்டார் .


அந்த நூலில் மவ்லவி காஸிம் நானோத்வி எழுதுகிறார் : -

பொதுவான பாமர மக்களின் சிந்தனை காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நபிகள் நாயகம் அவர்களின் காலம் முன் சென்ற நபிமார்களின் காலத்திற்கு பின்னால் என்பதும் ,அவர்கள் தான் இறுதி நபி என்பதும் என்று எண்ணுகின்றனர் . எனினும் மதிநுட்பமுடைய அறிஞர்களின் கருத்து என்னவென்றால் முந்தியோ ,பிந்தியோ இருப்பதில் எந்த சிறப்பும் இல்லை .

ஒருவேளை நாயகம் அவர்களுக்குப் பின் ஒரு நபி பிறந்தாலும் , அதைக் கொண்டு காத்தமுன் நபி என்று இருப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது . எனவே நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் வேறு கிரகத்திலோ அல்லது இதே கிரகத்திலோ  ஒரு நபி இருந்தாலோ அது எந்த வேறுபாட்டையும் உண்டாக்காது .

மவ்லானா முஹம்மத் பாஸில் என்பாருக்கு எழுதிய ஓர் கடிதத்தில் ,காஸிம் நாணோத்வி எழுதுகிறார் : -

காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நேர்கோட்டில் பொருள் கொள்பவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்களின் காலம் எல்லா நபிமார்களின் காலத்திற்கு தூதுத்துவத்திற்குப் பிந்தியது என்றும் அவர்களுக்கு பின்னர் வேறு யாரும் நபியாக வர முடியாது என்பதாம் . எனினும் நீங்கள் அறிவீர்கள் இதைக் கொண்டு தனிப்பட்ட புகழோ ,தீங்கோ ஏதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் .

பின்வரும் பதிவுகளை வாசிக்கும் முன்னர் காஸிம் நோனோத்வியின்    இந்த 
கூற்றை உங்கள் சிந்தையில் ஏற்றுங்கள் .

காசிம் நானோத்வியின் கப்ரை பற்றி :   

" தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் பொறுப்புதாரி மவுலானா ரஃபீயுத்தீன் சாஹிப் அவர்களின் கஷ்ப் ஆகிறது , தேவ்பந்த் மதர்ஸாவின் நிறுவனர்  மவுலானா காஸிம் நாணோத்வியின் கப்ர் ஒரு நபியின் கப்ரினுள் அமைந்துள்ளது என்பதாம் ." 

[முபஷ்ஷிராத் , பக்கம் 36,  தாருல் உலூம் தேவ்பந்த் வெளியீடு ]     


ஸவானெஹ் காஸிமி என்பது தேவ்பந்தின் புகழ்பெற்ற அறிஞர் , மவ்லானா முனாஜிர் ஹசன் கீலானி என்பரால் எழுதப்பட்ட நூல் காசிம் நாணோத்வியின் சுயசரிதை நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது . 

அதில் கூறப்பட்டுள்ளது , 

" ஒரு முறை மவ்லானா காஸிம் நாணோத்வி தம்முடைய ஞானாசிரியர் ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களிடம் , நான் தஸ்பீஹ் செய்ய உட்காரும் போதெல்லாம் மிகுந்த சிரமத்தை உணருகின்றேன் . உன்னுடைய இதயத்திலும் ,நாவிலும் நூறு டன் எடையுள்ள கற்களை யாரோ சுமத்தியது போன்றும் ,சர்வமும் முடங்கியது போன்றும்  உணருகின்றேன் . 

அதற்கு ஹாஜி சாஹிப் அவர்கள் கூறினார்கள் :

இது வஹீ அருளப்படும் போது நபிகள் நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை போன்ற ஓர் நுபுவ்வத்தின் ஆசீர்வாதங்களில் ஒன்று . அல்லாஹ் உம்மை நபிமார்களின் வேலைக்கு தேர்வு செய்துள்ளான் " 

[நூல் - ஸவானெஹ் காஸிமி , பாகம்  1, பக்கம் 259 ]

அதன் உர்து ஆக்கம் , 

"யே நுபுவ்வத் கா ஆப் கா கல்ப் பர் பைஜான் ஹோதா ஹை ,அவ்ர் யே வஹ்  சிக்ள் ஹை ஜோ ஹுஜுர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் கோ வஹி கி வக்த் மௌஸூஸ் ஹோதா தா , தும் சே ஹக் தஆலா ஒ காம் லேனா ஹை ஜோ நபியோ சே லியா ஜாதா ஹை " .



அர்வாஹெ ஸலாசா என்னும் நூல் ,புகழ்பெற்ற தேவ்பந்த் உலமாக்களின்  கூற்றுகளையும் , சம்பவங்களையும் கையாள்கிறது . அதை எழுதியவர்கள் அமீர் ஷாஹ் கான் மற்றும் மவ்லானா ஜாஹிர் ஹசன் கசூரி . மவ்லவி அஷ்ரப் அலி தான்வி அதற்கு ஹாஷியா எழுதியுள்ளார் . அது தேவ்பந்திகளிடம் வரலாறு மற்றும் படிப்பினை பெறுவதற்கு என்று புகழ்பெற்ற நூல் . அதனை ஹகாயாதே அவ்லியா , அஸ்லாபே தேவ்பந்த் , ஷஹான் தில்லி என்றும் வேறு பெயர்களில் வெளிவந்துள்ளது .

அதில் எழுதப்படுள்ளது ,

'ஹழ்ரத் ரஷீத் அஹமத் கங்கோஹி தமது மாணவர் மவ்லானா முஹம்மது யஹ்யா காந்தள்வியிடம் ஷாமி நூலில் ஓர் பத்வாவை பார்வையிட சொன்னார்கள் . மவ்லானா முஹம்மது யஹ்யா  காந்தள்வி அந்த குறிப்பிட்ட பத்வா நூலில் இல்லை என்று பதில் அளித்தார்கள் . மவ்லானா  ரஷீத் அஹமத் கூறினார்கள் இது எவ்வாறு சாத்தியம் ? நூலை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்கள் . அந்த நூல் ரஷீத் அஹ்மத் சாஹிப் அவர்களின் முன் கொண்டு வரப்பட்டது . 

அது சமயத்தில் ஹழ்ரத் ரஷீத் அஹ்மத் அவர்கள் தமது பார்வையை கிட்டத்தட்ட இழந்து விட்டார்கள் . அவர்கள் அந்த நூலை எடுத்து , மூன்றில் இரண்டு பங்கு பக்கங்களை வலதுபுறமும் , ஒரு பங்கு பக்கங்களை இடப்புறமும் திருப்பி ,ஒரு பக்கத்தை எடுத்தார்கள் . இடப்பக்கதத்தின் அடியில் பார்க்குமாறு கூறினார்கள் .அந்த பத்வா அங்கு காணப்பட்டது . எல்லோரும் வியந்து போனார்கள் . ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் ,' என் நாவில் இருந்து தவறான ஒரு சொல்லும் வராது  என்று அல்லாஹ் எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளான் '  என்று கூறினார்கள் 

[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]
   
இது முடிவல்ல . இதன் விளக்கவுரையில் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி பின்வருமாறு எழுதியுள்ளதை காணுங்கள் ,

' இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு சம்பவமாக இருக்கலாம் ,ஆனால் விஷயம் அவ்வாறல்ல . அது மவ்லானா ரஷீத் அஹ்மத் அவர்களுடைய கஷ்ப் , இல்லையெனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தி இருக்க மாட்டர்கள் .


உங்களுக்கு நினைவூட்டுகின்றேன் ,

" நபிகள் நாயகம் அவர்கள் மறைவான ஞானம் உள்ளது என்று நம்பிக்கை கொள்வது தெளிவான ஷிர்க் "

[ நூல் - பத்வா ரஷீதிய்யா ,ரஷீத் அஹ்மத் கங்கோஹி ]

இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

" ஒரு நாள் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் (ஜோஷ் ) காணப்பட்டார்கள் . தஸவ்வுரே ஷெய்கு என்பது பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது . அவர்கள்  ,'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் . 
 
'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

அப்போது ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' மூன்றாண்டு காலமாக ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் முகம் எனது கல்பிலே இருந்தது ,அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி  மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' பல்லாண்டுகளாக நபிகள் நாயகம் என்னுடை கல்பிலே இருந்தார்கள் , அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' . (அடிக்குறிப்பு : கான் சாஹிப் எத்தனை ஆண்டுகள் என்று கூறியது நினைவில்லை ) .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி இன்னும்   மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ஆனால் அவர் அமைதியாக இருந்தார் .மக்கள் கேட்ட பொழுது , அதை விட்டு விடுங்கள் என்றார் .
[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]

ரஷீத் அஹ்மத் கங்கோஹி  என்ன சொல்ல விரும்பவில்லை என்பது விளங்குகின்றதல்லவா !

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது கல்பில் நபிகள் நாயகம் அவர்களே  நிறைந்திருந்ததாக கூறினார் . நாயகத்தின் நூர் அல்லது திருமுகம் என்று கூறவில்லை .  அப்படியானால் நாயகம் அவர்களின் சங்கைமிகு ரவ்ளா ஷரீப் காலியாக இருந்ததா ?

ஏனெனில் அஷ்ரப் அலி தான்வி எழுப்பியுள்ள கேள்வி தான் அது

' மவ்லித் மஜ்லிஸ்கள் பல இடங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றால் , நாயகம் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் ,எங்கு செல்ல வேண்டாம் என்று எவ்வாறு முடிவு செய்வார்கள் '.
[ நூல் - பத்வா இம்தாதியா , பாகம் 4, பக்கம் 58 ] 


ஆஷிக் இலாஹி மீரடி தேவ்பந்தி சிந்தனைப் பள்ளியின் நபர் . அவர் எழுதிய நூல் தான்  'தஸ்கிரதுர் ரஷீத்' .   அது 2 பாகங்களாக வெளிவந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சரிதையை கூறும் நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது .

மவ்லானா ஆஷிக் இலாஹி மீரடி  ,பல முறை ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறியதைக் கூறியுள்ளதாக எழுதுகிறார் ,

' கேளுங்கள் ! சத்தியம் என்பது ரஷீத் அஹ்மத்தின் நாவில் இருந்து வருவது தான் . நான் இக்காலத்தின் வழிகாட்டியும் , இரட்சிப்பும் (ஹிதாயத் வ நஜாத் )  என்னை பின்தொடர்வதை(இத்திபா )  அன்றி இல்லை என்று சாட்சியமளிக்கின்றேன் . '

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  17 ]


 இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

ஆஷிக் இலாஹி மீரடி , ஆக்ராவைச் சேர்ந்த முன்ஷி முனீர் அஹ்மத்தின்   கனவை  விவரிக்கின்றார் .

' கங்கோஹ் நகரில் ஓர் ஷியா இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை நான் கனவில் கண்டேன்,அவனது கட்டைவிரலை பற்றிக் கொண்டேன்  . அவன் பயந்து நடுங்கி , என்ன வேண்டும் உனக்கு என்றான் . நான் மரணித்திற்குப் பின் உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டேன் . அவன் மிகக் கடுமையான வேதனையில் உள்ளதாகவும் , தாம் ஒரு முறை நோய்வாய் பட்டு இருக்கையில் , மவ்லானா ரஷீத் அஹ்மத் தன்னை காண வந்ததாகவும் , தமது உடலின் எந்த பாகத்தையெல்லாம் மவ்லானா தொட்டார்களோ ,அவை எல்லாம் வேதனையை விட்டும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார் . அதன் பின்னர் நான் விழித்தெழுந்து விட்டேன் . '


[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  324  ] 

இது போன்று மற்றோரு சம்பவமும் அதே நூலில் கூறப்படுள்ளது ,

' மவ்லானா இஸ்மாயிலின் ஒரு பணியாள் இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை யாரோ ஒருவர் கனவில் கண்டார் . அவனது முழு உடலும் தீயில் வெந்து கொண்டிருந்தது , உள்ளங்கையைத் தவிர . அவனை கனவில் கண்ட நபர் மரணித்திற்குப் பின்  உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டார் .அவர் கூறினார் தாம் செய்த கெட்ட அமல்களுக்காக தண்டனை அனுபவிப்பதாகவும் , தமது உள்ளங்கையைத் தவிர தமது முழு உடலும் தீயில் வெந்து போவதாகவும் கூறினார் . தமது உள்ளங்கையைக் கொண்டு மவ்லானா இஸ்மாயிலின் பாதங்களைத் தொட்டதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாகவும் , 'நாம் அந்த உள்ளங்கையை எரிப்பதைக் கொண்டும் வெட்கப்படுகின்றோம் ' என்று சொல்லப்பட்டதாகவும் கூறினார் '.

இவ்விரு சம்பவங்களை மீண்டுமொருமுறை வாசித்து , ஸஹீஹ் புஹாரியில் உள்ள ,தமது அடிமை துவைபாயை உரிமையிட்ட அபூலஹபின் ஹதீதை   நினைவில் கொள்க !

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இத்தகைய நம்பிக்கைகளை கொண்டிருப்பது அவர்களின் சுய முடிவு .

ஆனால் இதே கூட்டத்தினர் , நமது ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் முஸ்தபா صلى الله عليه و سلم அவர்கள் பற்றி தமது நூற்களில் எழுதியுள்ளவற்றை சீர்தூக்கி ஆய்வு செய்து பாருங்கள் ! 

 


Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment