வஹாபிய கொள்கையுடைய தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் தமது பல்வேறு வெளிரங்கமான அமல்களால் தாங்களும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தான் என்று அப்பாவி இஸ்லாமியரைக் குழப்பித் திரிகின்றனர்.
மார்க்கம் கற்றறிந்த உலமாக்களை ஏமாற்றும் வித்தை ஒன்றையும் தங்கள் கைவசம் வைத்துள்ளனர் . அது தான் தஸவ்வுப் என்னும் சூபியாக்கள்,மஷாயிகுமார்களின் சத்திய வழிமுறை.
தேவ்பந்தி வாஹாபிகளின் மூல முன்னோடிகளின் அனைத்து தரீக்கா சில்சிலாவும் இருவகையாக வந்துள்ளன. ஒருவர் சையத் அஹ்மத் பரேலி , மற்றோர் ரஷீத் அஹ்மத் கங்கோகியும்,அஷ்ரப் அலி தானவி.
இதில் சையத் அஹ்மத் பரேலி சிராஜுல் ஹிந்த் அஷ்ஷாஹ் அப்துல் அஜீஜ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அன்னாரிடத்தில் ஆறு மாத காலம் கல்வி பயின்று கிலாபத்தும் பெற்றார் .பின்னர் வழிதவறிய கொளிகையினால் அஷ்ஷைகு அப்துல் அஜீஜ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்களால் சில்சிலாவில் இருந்து நீக்கப்பட்டு கான்காஹ்வில் இருந்து விரட்டப்பட்டார் . இவரின் மாணவர் தான் இஸ்மாயில் திஹ்லவி .
முழு விபரம் அறிய இங்கு காண்க .
மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியும்,அஷ்ரப் அலி தானவியும் அல்லாமா அஷ்ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பைஅத்தும் , கிலாபத் பெற்றவர்கள் .
இவர்கள் வஹாபிய வழிகெட்ட கொள்கைகள் மூலம் இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் பித்னா ஏற்பட்டபொழுது அன்னார் எழுதிய நூல் 'பைஸ்லா ஹப்த் மஸ்லா ' .இதில் அன்னார் மௌலித் ,இஸ்திகாதா ,வஸீலா ஆகிய விஷயங்களில் தேவ்பந்திகளின் வஹாபிய கொள்கைக்கு மறுப்பாக எழுதியுள்ளார்கள் .
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை போதித்த, வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றுக் கொண்டு அவர்களின் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமாக செயல்பட்டுக் கொண்டிருந்து குருத் துரோகம் செய்துவிட்டார்கள்.
அறுந்து போன குரு-சிஷ்யன் தொடர்பு:
இது மட்டுமல்ல. ஹஜ்ரத் ஹாஜி சாகிபின் கிதாபான 'ஹஃப்த் மஸ்அலா' இவர்களின் கையில் கிடைத்த போது அதை எரித்து விட்டார்கள். மக்கள் இவர்களை எதிர்த்துக் கூச்சல் போட்டார்கள். இவர்களுக்கும் ஹாஜி சாஹிபுக்கும் இடையேயுள்ள 'நிஸ்பத் – தொடர்பு நீங்கி விட்டது' என்று பறை சாட்டினார்கள். எனினும் இவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. [ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 168]
இதைப் பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும் .
இனி ஷைகு ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நடைமுறை என்னவென்று காண்போம் .
ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'ஷமாயிலே இம்தாதியா' நூலில் கூறுகிறார்கள் ,
அன்னார் மௌலானா ஜலாலுதீன் ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய மஸ்னவி ஷரீபுக்கு கத்தம் செய்கிறார்கள் . தேவ்பந்திகளோ குரான் கத்தம் செய்வதை எதிர்க்கிறார்கள் .
மேலும் எழுதுகிறார்கள் , " மௌலிதின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கும் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதை ஏன் மற்றவர்கள் எதிர்கின்றார்கள் . மக்கள் தங்கள் இல்லத்திற்கு வரும் விருந்தாளியை எழுந்து சென்று வரவேற்கவில்லையா ? அப்படியானால் மௌலிதின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கும் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது ??? "
ஆனால் இங்கு தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் மௌலிதை மறுப்பதோடு மட்டுமல்லாமல் , பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் சம்பவம் வரும் போது கியாம் என்னும் எழுந்து நின்று சங்கை செய்வதையும் எதிர்க்கின்றார்கள் . இவர்களா அஹ்லுஸ் சுன்னத் ஜமாத்தின் சத்திய சீலர்கள் . அல்ல , இவர்கள் தரீகத்தின் போர்வையில் உள்ள வஹாபிய வேஷதாரிகள் !!!
No comments :
Post a Comment