தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் 'ஹக்கீமுள் உம்மத்' அவரது வாழ்க்கை முழுவதும் பணத்தை நேசித்தார் !
அவர் கூறினார் , " என்னிடம் 10,000 ருபாய் இருந்தால் நான் அதை மக்களிடம் விநியோகித்திருப்பேன் , மக்கள் தானாக வஹாபிகளாகி விடுவர் "
[ நூல்- அல் இபாததுல் யௌமியா ,மௌலவி அஷ்ரப் அலி தானவி ]
ஆனால் அவரின் மரணத் தருவாயில் அவரது இறுதி சாசனம் என்னவாக இருந்தது ?
அவரது சுயசரிதையில் வாசித்து தெரிந்து கொள்ளலாம் .
மௌலவி அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
" நான் இறந்த பிறகு எனது (முதல்) மனைவியைப் பார்த்துக் கொள்ளுங்கள் . இருபது நபர்கள் தலா ஒரு ருபாய் பங்களித்து நான் இறந்த பின் எனது மனைவிக்கு கொடுக்க வேண்டும் ...
இந்த எளிமையான மனிதன் கடந்த ரமழானில் 1334 ஹிஜ்ரியில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தேன். அவருக்கும் மாதம் இருபது ருபாய் வருமாறு ஏற்பாடு செய்யுங்கள் அல்லது பத்து ருபாய் ஆனாலும் சரிதான் . நீங்கள் என் மரணத்திற்கு பிறகு ,என் இரு மனைவிமாருக்கும் மாதாந்திரம் பதினைந்து ரூபாய் விநியோகிக்க முடியும் என்றாலும் சரிதான் ! "
ஆக இது தான் தனது நூலான ஹிப்ளுள் ஈமானில் பின்வருமாறு கூறிய மௌலவி அஷ்ரப் அலி தானவி அந்திம நிலை ,
'அல்லாஹுதஆலாவால் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவும்,மறைவான ஞானமும் விலங்குகளுக்கும்,மதழைகளுக்கும்,பைத்தியக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.'
[ஹிஃப்ஸுல் ஈமான், பக்கம் 7 ]
தனது இழிவான கருத்துகளாலும் ,பெருமானார் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவமரியாதை செய்தததினாலும்,மக்கா மதீனாவைச் சார்ந்த 33 இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாலும் ,இந்தியாவைச் சார்ந்த 268 இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாலும் அஷ்ரப் அலி தானவியின் மீது குப்ர் பத்வா வழங்கப்பட்டது .
No comments :
Post a Comment