தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் இஸ்லாமியரைக் குழப்புவதற்காக தங்களது மஸ்லக் (கடைபிடிக்கும் வழிமுறை) ஷைகுல் ஹிந்த் அஷ்ஷாஹ் அஷ்ஷைகு ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களது வழிமுறைதான் என்று வாய் வலிக்கக் கூறி நாங்களும் அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாஅத் தான் எனப் பிதற்றித் திரிவர் .
தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகள் :
1. எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால் குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் . [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]
2 . பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59 ]
3.மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.[பதாவா அஷ்ராபியா,பாகம் 2,பக்கம் 58.பதாவா ரஷீதியா பாகம் 2 பக்கம் 144 மற்றும் 150,பாகம் 3 பக்கம் 93,941 ]
இனி ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் நடைமுறை வஸீலா,இஸ்திகாதா,இஸ்திஆனா ,இஸ்தம்தாத் உர்ஸ்,கந்தூரி ,மௌலித்,நேர்ச்சை, ஆகிய விஷயங்களில் என்னவாக இருந்தது என்பதை கீழே தக்க ஆதாரங்களுடன் காண்போம் .
நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன்
ஆசிரியர் - ஷைகுல் ஹிந்த் அஷ்ஷாஹ் அஷ்ஷைகு ஷாஹ்
வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி )
நூல் விளக்கம் - அன்னாரின் தகப்பனார் அஷ்ஷாஹ் அஷ்ஷைகு அப்துர் ரஹீம் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது வரலாற்றைக் கூறும் நூல் .
1. ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதுகிறார்கள் , " எனது தந்தையின் ஷைகு சையத் அப்துல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி இறந்த போது , எனது தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் உடல் சுகவீனம் காரணமாக அன்னாரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள இயலவில்லை . பின்னர் சில நாட்கள் கழித்து உடல் சீரானதும் சையத் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்ட ஒரு நபரை அழைத்துக் கொண்டு சென்றார்கள். கபரஸ்தானை அடைந்ததும் அந்த நபருக்கு சையத் அப்துல்லாஹ் அவர்களின் மஜார் எதுவென்று குழப்பம் உண்டானது . அவர் ஒரு கபூரைச் சுட்டிக்காட்டினார் .
ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள் அந்த கபூரின் அருகே அமர்ந்து குரான் ஷரீப் ஓதத் துவங்கினார்கள் . அப்போது திடீரென மற்றொரு கபூரில் இருந்து இவ்வாறு சத்தம் வந்தது ' எனது கபூர் இங்கு உள்ளது .எனினும் இப்போது முந்த வேண்டாம் ,அங்கு ஓதி முடித்த பின் வரவும்' . பின்னர் எனது தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள் சையத் அப்துல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கபூரின் அருகில் அமர்ந்து குரான் ஓதலானார்கள் . அன்னாரின் கிராஅத்தில் ஏற்பட்ட சிற்சில தவறுகளை சையத் அப்துல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் திருத்தினார்கள் "
[ நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம் 57 ]
2. " சில சமயங்களில் காஜா குர்து ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காஜா பாகிபில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் உர்ஸ் விழாவை எடுத்து நடுத்துவார்கள். எனது தந்தையார்
பல்வேறு சமயங்களில் மக்கள் காஜா குர்து ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு உதவுவதை விவரித்துள்ளார்கள் .சிலர் 'நான் அரிசி வழங்க பொறுப்பேற்கின்றேன் ', என்பர் சிலர் 'நான் இறைச்சி வழங்க பொறுப்பேற்கின்றேன்', என்பர் , மேலும் சிலர் ' நான் கவ்வாலி ஏற்பாடு செய்ய பொறுப்பேற்கின்றேன் ' என்பர் . "
குறிப்பு : காஜா காஜா குர்து ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காஜா பாகிபில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மகனும் ,கலீபாவும் ஆவார்கள் . காஜா பாகிபில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இமாமே ரப்பானி முஜத்தித் அல் பதானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஷைகு ஆவார்கள்.
சிந்தை தெளிவடைந்தோருக்கு வலிமார்களின் உர்ஸ் வைபவம் ஏதோ தற்கால நடைமுறை அல்ல என்பது விளங்கும் . இன்னும் பல்வேறு கிதாபுகளில் இதற்கு முன்னரும் உர்ஸ் ,கந்தூரி நடைபெற்றதற்கான எண்ணற்ற ஆதாரங்ககள் உள்ளன.
இன்னும் இதில் உள்ள முக்கிய குறிப்பாகிறது, மக்கள் உர்ஸ் வைபவத்தின் போது கவ்வாலி ஏற்பாடு செய்துள்ளனர் . உர்ஸ்,கந்தூரியின் போது ஸமா வாசிப்போரை கவ்வாலிகள் எனப்படும் . இமாமே ரப்பானி முஜத்தித் அல் பதானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் 'மக்தூபாத்' நூலிலும் ஸமாவை அனுமதித்து எழுதியுள்ளார்கள் . இன்னும் டாதா கஞ்ச் ஹுவேரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய நூலான 'கஷ்ப் அல் மக்ஜூப்' ல் இமாம் ஜுனைத் பகுதாதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸமா கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள் .
3. ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதுகிறார்கள் , " எனது தந்தையார் அவர்கள் கூறுவார்கள் ,அவர்கள் காஜா பேரங் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கலீபாக்களுள் ஒருவரை
கண்டுள்ளார்கள் . அன்னார் மிகவும் வயது குன்றியவர்களாக இருந்தார்கள் எனினும் அவர்களின் முகத்தில் நூரானியத் ஓளி வீசிக் கொண்டிருந்தது . அன்னார் 'ஷைகி' என்று பிரபலமாக அறியப்பட்டார்கள் . அவர்கள் உர்ஸ் வைபவம் நடத்துபவர்களாக இருந்தார்கள் . நான் அதில் ஆறு- ஏழு வயதிருக்கும் போது கலந்து கொண்டிருக்கிறேன் ."
[ நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம் 82 ]
4. ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதுகிறார்கள் , " எனது தந்தையாருக்கு ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உர்ஸ் வைபவம் நடத்தும் போது உணவு சமைக்க தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை. அந்த உணவைக் கொண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரூஹுக்கு நியாஸ்(நேர்ச்சை ) செலுத்த நாடினார்கள் . எனவே உலர்ந்த பருப்புகளையும்,வெல்லத்தையும் எடுத்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரூஹுக்கு நியாஸ்(நேர்ச்சை ) செலுத்தினார்கள் .
அன்று இரவு கனவில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் பல விஷயங்கள் வழங்கப்படுவதாகவும் அதில் இந்த உலர்ந்த பருப்புகளையும்,வெல்லத்தையும் வழங்கப்படுவதாகவும் கண்டார்கள் . பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கண்டு மகிழ்ச்சியுற்று ,இதில் இருந்து சிறிதளவை எடுத்து ஸஹாபாக்களிடம் பகிர்ந்து அளிப்பதைக் கண்டார்கள் ".
மேலும் எழுதுகிறார்கள் , " இது போன்ற பலரைக் கொண்டு இம்மாதிரியான சம்பவங்கள் விவரிக்கப்படுள்ளது என்றாலும் உணமையென்னவேனில் இந்த சம்பவம் என் தந்தையிடம் நிகழ்ந்தது"
ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி எத்துணை பெருமையுடன் இச்சம்பவத்தை விவரிக்கிறார்கள் என்று காணுங்கள் !!!. இந்த தேவ்பந்தி தப்லீக் வாஹாபிகளோ மீலாத் கூடாது என்பதுடன் அவர்களின் கூட்டத்தாரை மௌலித் வைபவங்களை விட்டும் தவிர்க்கச் சொல்கின்றனர் . என்னே இவர்களின் மஸ்லக் ???
[ நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம் 106 ]
5. ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தந்தையார் ஒரு விருந்து உண்ண சென்ற சம்பவத்தை எழுதுகிறார்கள் , " திடீரென ஒரு பெண்மணி ஒரு தட்டில் இனிப்பு சோறுடன் வந்து கூறினால் தான் தனது கணவர் வீடு திரும்பினால் மக்தூமல்லாஹ் தியா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தர்காவில் உள்ள ஏழைகளுக்கு இனிப்பு சமைத்து வழங்குவதாக ஒரு மன்னத் (இறைவன் மீது சத்தியம் செய்வது) செய்துள்ளதாக கூறினாள் . அவள் மேலும் சில மக்கள் இரவின் இந்த நேரத்தில் கூட, தர்காவில் தற்போது இருந்தால் தனது நசர் நிறைவேறும் என்று தான் இறைவனிடம் வேண்டியதாகக் கூறினாள் ."
ஆக மன்னத் (இறைவன் மீது சத்தியம்) செய்வது, தர்காவில் ஏழைகளுக்கு உணவு வழங்குதல் ஷாஹ் அப்துர் ரஹீம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் ஆகுமானதாக இருந்தது .
[ நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம் 112 ]
6. ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுகிறார்கள் , " எனது தந்தையார் ஷைகுல் அக்பர் முஹியத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் . அவர்கள் கூறுவார்கள் 'புஸுஸல் ஹிகம்' முழுவதையும் குரான்,ஹதீஸ் கொண்டு என்னால் விளக்க முடியும் என்று "
[ நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம் 181 ]
No comments :
Post a Comment