Friday 8 August 2014

அஷ்ரப் அலி தானவியின் மாதச் சம்பளம்


 தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் 1947க்கு முன் இரு அரசியல் குழுக்களாகப் பிரிந்திருந்தனர் .முதல் குழுவுக்கு ஷைக் ஹுசைன் தான்த்வி தலைமையெற்றிருந்தார் . அவர் காந்திஜியை முழு மூச்சாகப் பின்பற்றினார் . அவர் கதர் ஆடை அணிபவராக இருந்தார் .மேலும் மரித்தோரை கதர் துணி கொண்டே கபன் ஆடை அணிவிக்க வேண்டும் என்று பத்வாவும் வெளியிட்டார் . இது தான் கதர் ஆடை அணிய வேண்டி வலியுறுத்திய காந்திஜியின் மீது இவர் கொண்ட அன்பின் வெளிப்பாடு !!! இந்த குழு காங்கிரஸ் ஆதரவாளர்கள் .

மற்றொரு குழுவுக்கு ஷைக் ஷப்பிர் அஹ்மத் தலைமை தாங்கினார் . இவர் ஷைக் ஹுசைன் தான்த்வியின் அரசியல் நிலைப்பாடுக்கு எதிராக இருந்தார் . இந்த குழு முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவாக செயல்பட்டது .

இரண்டு குழுக்களுமே தேவ்பந்த் மதரசாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர் . இரு குழுக்களுமே பல முறை சொற் தகராறிலும் ,ஒருவரை ஒருவர் தாக்கி எழுதியும் வந்தனர் .

அவ்வாறு எழுதப்பட்ட ஒரு பதிலில் , அவர்களது சொந்த ஆவணமான 'முகாலாமதுஸ் சதரியன் , பக்கம் 10-11 ல்' பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது ,

" மௌலானா ஷப்பிர் அஹ்மத் தேவ்பந்தி ,தலைவர் ஜமியத்துல் இஸ்லாம் கல்கத்தா, அவர்கள் மௌலானா ஹிப்ழூர் ரஹ்மான் க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் எழுதினார்கள் , மௌலானா அஷ்ரப் லை தானவி இரு தரப்பும் மரியாதை அளிக்கும் நபர் . அவரைப் பற்றி பலர் கூறியுள்ளனர் , அதாவது அவர் மாதம் 600 ருபாய் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பெற்று வந்தார் என்று "

தேவ்பந்திகள்  அவர்களுக்கு மத்தியில் சண்டையிடும் போது அவர்கள் உண்மையை வெளியே சொல்லி விடுகிறார்கள்!

MUKALAMUTUSSADARIAN

MUKALAMUTUSSADARIAN

MUKALAMUTUSSADARIAN


 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment