இந்தியாவில்
வஹாபிகள்
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினுடைய
அடிப்படைக் கொள்கைக்குரிய நாயகர் தான் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள். அவர்களை நம்மைப் போன்ற ஒரு சராசரி மனிதர் என்று , முதன்முதலில்
இந்தியாவில் வெளிப்படுத்திய கூட்டம் இல்யாஸி தப்லீக் ஜமாத்தும் அவர்தம்
அகாபிர்கள்.
பெருமானார்
அவர்களை ஒரு சாதாரண மனிதர் என்று சித்தரிக்கின்ற பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு
நூற்றாண்டுக்கு முன்னால் இந்திய தேசத்தில் ஊடுருவியது.வரலாற்றினுடைய
குறிப்புகளை சற்றே புரட்டினால் இந்த உண்மை விளங்கும்.கி.பி.1815ம் ஆண்டு
இந்தியாவுக்குள் வர்த்தக அமைப்பாக காலடி எடுத்து வைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்
1885ல் இந்த தேசத்தில் மிக பலமாகக் காலூன்றியது.1885க்கு பின்னால் 1910ல் உத்திரபிரதெசம்,ரேபரேலி
என்னும் கிராமத்தில் பிறந்தவர் செய்யத் அஹமத்,சிறுவயதில் தன் பெற்றோரை இழந்து
அநாதையாகி தன் பிழைப்புக்கு வழி தேடி டில்லி மாநகரத்தை நோக்கி வந்தார். வந்தவர்,அவருக்கு
சரியான பிழைப்பு கிடைக்காமல் பல நாட்கள் பசியும் பட்டினியுமாய் அலைந்து, அப்போது
டில்லியில் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடைய மகனார்,
அல்லாமா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடைய
மதரஸாவிலே ஒரு மாணவராக சேர்ந்தார். சில மாதங்கள் மட்டுமே அவருடைய மதரஸாவிலே கல்வி
பயின்ற அவர், அல்லாமா அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடத்தில் பைஅத்தும்
பெற்று முரீதுடைய அந்தஸ்துக்கும் உயர்ந்தவர்.
முரீது கொடுக்கப்பட்ட இவர் தன்னுடைய ஷைகால்
தரீக்காவின் போதனைகள் பயிற்றுவிக்கப்பட்ட போது,அந்த போதனைகளை ஏற்க மறுத்தார்
என்பதோடு அந்த போதனைகளை மிகமோசமாக விமர்சனமும் செய்தார்.ஆறு மாதம் கூட அல்லாமா
அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவ்ர்களுடைய மதரஸாவிலே கல்வி பயிலாத இவர்,
அல்லாமா அப்துல் அஜீஸ் அவர்களுடைய சகோதரியின் மைந்தர்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி என்பவரை
தன்னுடைய சிந்தனைக்கு தோதாக வளைத்து மாற்றினார். அவரோடு மௌலவி அப்துல் ஹை லக்னவி
என்பவரும்,கான்பூரைச் சேர்ந்த கராமத் அலி என்பவரும் இந்த நபரால்
வளைக்கப்பட்டார்கள். இவருடைய போக்கை தெரிந்து கொண்ட அல்லாமா அப்துல் அஜீஸ் திஹ்லவி
அவர்கள், அவரை மதரஸாவிலே இருந்து வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல்,தன்னுடைய
ஸில்ஸிலாவில் இருந்தும் நீக்கினார்கள்.
அங்கிருந்து நீக்கப்பட்ட அவர்,அப்போது
டில்லியில் கூலிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த அப்துல் கரீம் பிண்டாரியின்
கூலிப்படையில் சென்று இணைந்து கொள்கிறார். இந்த கூலிப்படையின் வேலை கூலிக்கு
ஆட்களை கொலை செய்வது,வேலை இல்லாத பொழுது இரவில் கொள்ளை அடிப்பது. பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியவாதிகள் அப்துல் கரீம் பிண்டாரியை வைத்து தான், பிரிட்டிஷ்
அரசாங்கத்துக்கு கட்டுப்படாதவர்களை அடக்கினார்கள்,நிர்பந்தித்தார்கள். இந்த
ரேபரேலியைச் சேர்ந்த செய்யித் அஹ்மத் கான் ,அப்துல் கரீம் பிண்டாரியின்
கூலிப்படையில் ஆறு ஆண்டுகள் ஒரு அங்கமாக இருந்தார்.அப்போது தான்
பிரிட்டிஷாருக்கும் செய்யத் அஹமத் கானுக்கும் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக,பிரிட்டிஷார்
அவரோடு இணந்து முன்னூறு நபர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.மக்கா சென்று
திரும்பியதற்கு பின்னால் செய்யத் அஹமத் கானும்,மௌலவி இஸ்மாயில்
திஹ்லவியும்,அப்துல் ஹை லக்னவியும் இன்னும் அவரோடு இணைந்த பல நபர்களும் டில்லியில்
இருக்கின்ற சிறிய சிறிய மஸ்ஜிதுக்குள்ளெ நுழைந்து அங்கெ பயான் செய்கின்றோம் என்ற
பேரிலே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை முதன்முதலாக நம்மைப் போன்ற ஒரு
சாதாரண மனிதர் என்று கூறினார்கள்.
இந்த கொள்கைக் குழப்பத்தின் துவக்கம்
இந்திய தேசத்தில் 1910க்கு பிற்கு தான் ஏற்பட்டது.இதே பிரச்சனையை தமிழகத்தில் கடந்த
இருபது ஆண்டுகளாக கைர் முகல்லிது
வஹாபிகளான ஜாக்,நஜாத்,தௌகீத்,சலஃபீ,அஹ்லே ஹதீஸ்,ஜமாதே இஸ்லாமி போன்றவர்கள்
பேசிய பொது கொந்தளித்த தமிழ் இஸ்லாமிய சமூகம் ,தமிழ் இஸ்லாமிய உலமா சமூகம் இதை முதலில் வெளிப்படுத்திய
தேவ்பந்த் தப்லிகீ ஜமாத் மீது இன்றும் வாய்மூடி மௌனமாய் இருப்பது வேதனையிலும்
வேதனை .
இந்த கருத்து
மோதலுக்குரிய விஷத்தை இவர்கள் மஸ்ஜிதுகளிலே பிரசங்கம் செய்த போது அப்பாவி மக்கள் திடுக்கிட்டார்கள்.விஷயம் டில்லியிலுள்ள பெரும் பெரும் உலமாக்கள்,முஃப்திகளினுடைய
சிந்தனைக்கும்,கவனத்திற்கும் கொண்டு செல்லப் பட்ட போது,டில்லியிலுள்ள ஜாமியா
மஸ்ஜிதில் தொண்ணூறு உலமாக்கள் திரண்டார்கள்.பெருமானார் அவர்களை ஒரு சாதாரண மனிதர் என்று
பேசும் விஷயத்திற்கு ஆதாரத்தை கேட்ட போழுது அவர்கள்
மழுப்பத்துவங்கினார்கள்,முன்னுக்கு பின் முரணாக உளறினார்கள்.இதனுடைய வெளியீடு
அவர்கள் எந்த மஸ்ஜிதுகளிலும் ஏற்றப்படக்கூடாது, என்பதோடு அவர்கள் வழிகேடர்கள் என்ற
ஃபத்வாவையும் வெளியிட்டார்கள்.
இதே இயக்கம் தரீகத்துல் அஹமதியா என்ற
பெயரிலே மீண்டும் செய்யத் அஹ்மத் கானைக் கொண்டு வெளிவந்தது.மக்கள் அவர்களை புறக்கணித்து,மஸ்ஜிதுகளை
விட்டு விரட்டிஅடித்த போது,பல்வேறு இடங்களில் இவர்கள் கேவலப்படுத்தப்பட்டதற்கு
பின்னால்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவியுடன் இருந்த ஒரு கூட்டம்,அவர்களும் மார்க்கம்
பயின்ற ஆலிம்கள்,இந்த கொள்கையை இந்திய முஸ்லிகளும்,இந்திய இஸ்லாமிய உலமாக்களும்
புறக்கணிக்கின்றனர், எனவே இந்த கொள்கையை தற்சமயத்திற்கு நாம் வெளிப்படையாக பேச
வேண்டாம்,தற்போது இந்த விஷயங்களையெல்லாம் மறைவாக வைத்துக்கொள்வோம்,முதலில்
மனிதர்களை நம் வசமாக ஈர்த்து அவர்களை நம் அபிமானத்திற்கு உரியவர்களாக திருப்பியதற்குப்
பின்னால்,அவர்களிடம் மெல்ல,மெல்ல சன்னச்சன்னமாக தனிமையில் அவர்களுக்கு நாம்
போதிப்போம் என்ற ஒரு கருத்து அவர்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட போது,அந்த கருத்தை
அவர்களிலேயே சிலர் ஏற்க மறுத்தார்கள்.
அவ்வாறு ஏற்க மறுத்தவர்கள் அவர்களில்
இருந்து பிரிந்து டில்லியில் இருந்து வெளியேறி பஞ்சாபை நோக்கி செல்கிறது,அவர்கள்
தான் நவாப் சித்திக் ஹசன் கான் பொபாலைச் சேர்ந்தவர்,காதி வஹீதுஸ்ஸமான் அமிர்தரஸை
சேர்ந்தவர்.இவர்கள் வெளிப்பட்டு இதே வஹாபியக் கொள்கையை நாங்கள் பகிரங்கமாகத் தான்
பேசுவோம்,பெசுவது சரிதான் என்று சொன்னால் அதை ஏன் மக்களிடத்தில் மறைத்து
பெசவேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து பகிரங்கமாக பேசத் துவங்கினார்கள்,அது
மட்டுமல்ல அவர்கள் தங்களுக்குத் தாங்களே ‘அஹ்லே ஹதீஸ்’ என்ற பெயரைச்
சூட்டிக்கொண்டார்கள்.
இந்த நிலையில் வஹாபிய கொள்கையை மறைத்து
பேச வேண்டும் என்று பிரிந்த கூட்டம் செய்யத் அஹ்மத்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி
இவர்களோடு இன்னும் சிலர் சேருகின்றனர்.அவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு நபர் மௌலவி
கலீல் அஹமத் அம்பேட்டி,மௌலவி காசிம் நானூத்வி,மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி. இதில்
மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியும்,மௌலவி அஷ்ரஃப் அலி தானவியும் அல்லாமா முஹாஜிர்
மக்கி ரஹ்மதுல்லாஹி அவர்களிடம் முரீதாகவும்,கலீஃபாக்களாகவும் இருந்தார்கள்.
ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை
மார்க்க கல்வி பயின்ற ஒரு மாணவர் மௌலவி இல்யாஸ் வளர்ந்து வாலிபர் ஆனபொழுது,அவருடைய
சிந்தனைக்குள் இருந்து, கற்பனைக்குள் இருந்து இதே வஹாபிய கொள்கைக்கு உரிய ஒரு
இயக்கம் ஒருவாயிற்று. அந்த இயக்கத்திற்கு அவர்களால் வைக்கப்பட்ட பெயர் தான் ‘தப்லீக்
ஜமாத்’.
நபி அவர்கள் சாதாரன மனிதரில்லை என்று நீங்கள் முதலில் ஆதார்த்தோடு நிரூபித்துவிட்டு அவர்களை பற்றி விளக்கம் கொடுங்க..
ReplyDeleteஎந்த ஒன்றையும் முழுதாக முடிக்கீங்க இல்லையே..