Thursday 24 April 2014

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் -1


குழப்பத்தின் திசை அறிவித்தல்:

ஹதீஸ் எண் 1
 அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்,அன்னை ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டு முற்றத்தில்ச் நின்றவாறு கிழக்கு திசை நோக்கி சுட்டிக்காட்டி,அங்கிருந்து தான் (மார்க்கத்தில்) குழப்பம் உருவாகும்.அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு வெளிக்கிளம்பும் என இரண்டுஅல்லது மூன்று முறை சொன்னார்கள்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு , நூல்:முஸ்லிம் பாகம் 2,பக்கம்-394 .

ஹதீஸ் எண் 2
  அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒருமுறை கிழக்குத்திசை நோக்கி,குழப்பம் அங்கிருந்து தான் உருவாகும். அங்கிருந்து தான் குழப்பம் உருவாகும். அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு வெளிக்கிளம்பும் என்று சொன்னார்கள்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் பாகம் 2,பக்கம்-393 .

ஹதீஸ் எண் 3
      அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்திலிருந்து அண்ணல் நபியவர்கள் வந்தனர்.வந்தவர்கள், கிழக்கு திசையை சுட்டிக்காட்டி,நிராகரிப்பின் அடித்தளம் இங்குதான் உள்ளது. ஆம் ! ஷைத்தானின் கொம்பு இங்கிருந்துதான் வெளிக்கிளம்பும் எனக் கூறினர்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் பாகம் 2,பக்கம்-394 .

ஹதீஸ் எண் 4
    கிழக்குத் தேசத்திலிருந்து சிலர் வெளிப்படுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவர்.ஆனால் அது அவர்களது தொண்டை குழிக்குக் கீழே இறங்காது.வில்லை விட்டு அம்பு விரந்து ஓடுவதைப்போல் அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.வில்லை விட்டுச் சென்ற அம்பு வில்லை நோக்கி வந்தாலும் வரலாம்.ஆன்னல் அவர்கள் மார்க்கத்திற்கு திரும்பமாட்டார்கள். அவர்களது அடையாளம் மொட்டையாகும் என நபிகளார் நவின்றனர்.
அ-ர் : அல்லாமா தஹ்லான் ரஹிமஹுல்லாஹு
நூல் : அத்துரருஸ் ஸனிய்யா,பக்கம்-49.

ஹதீஸ் எண் 5
        கிழக்குத் திசையிலிருந்து சில மனிதர்கள் தோன்றுவார்கள்.அவர்கள் குரானை ஓதுவார்கள்.ஆனால் அது, தொண்டை குழிக்குக் கீழே இறங்காது. அவர்கள் அமிழ்த்தப்பட அமிழ்த்தப்பட வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களின் இறுதிக்கூட்டம் தஜ்ஜாலுடன் இணைந்திருக்கும்.
நூல் : அத்துரருஸ் ஸனிய்யா,பக்கம்-50.

கிழக்குத் திசை எந்த இடம் ?

         அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒருமுறை எங்களிடையே உரை நிகழ்த்திய பொழுது,”இறைவா ! எங்களுக்காக எமது எமன் ஷாம் தேசத்திற்கு அருள் புரிவாயாக. இறைவா! எங்களுக்காக எமது எமன் ஷாம் தேசத்திற்கு எனப் (பிரார்த்தித்த) போது,அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் சிலர்,இறைத்தூதரே! எங்களின் நஜ்து(இன்றைய ரியாத்) க்கும் என்றனர். (அவர்களின் கோரிக்கையை பொருட்படுத்தாது மீண்டும் நபிகளார்) இறைவா ! எங்களின் ஷாம் தேசத்திற்கும், எமன் தேசத்திற்கும் அருள் புரிவாயாக! எனப் பிரார்த்தித்தனர்.அப்போதும் அவர்கள் இறைத்தூதரே ! எங்களின் நஜ்துக்கும் என்றனர். மூன்றாம் முறையாக நபிகள் நாதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ அங்கு தான் திடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும். ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் (அத்தகைய இடத்திற்கு நான் எவ்வாறு பிரார்த்திப்பேன் ? ) எனக் கூறினர்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புஹாரி,பாகம் 2,பக்கம் 1051.

குறிப்பு :
1.”கர்னுஷ் ஷைத்தான்” என்ற அரபி வாக்கியத்திற்கு பொதுவாகவே ஷைத்தானின் கொம்பு என்று தான் பொருள் கொள்ளப்படும். ஆனால் தேவ்பந்த் வஹாபிகளுடைய ‘மிஸ்பாஹ்’ என்னும் அரபி அகராதி நூலில் ஷைத்தானின் ஆலோசனைக்கு உட்பட்டவன் என்பதாய் பொருள் தரப்பட்டிருக்கிறது.
2.மதீனாவின் கிழக்குத் திசையில் உள்ள நஜ்த் என்னும் தேசம் நன்மையும் அபிவிருத்தியும் அடையும் தகுதி வாயிந்த இடமல்ல என்பதை மேலே விவரிகப்பட்டுள்ள ஆறு ஹதீஸ்களும் நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகின்றன, ஏனெனில் அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் துஆ என்னும் நல்லாசியை இழந்த இடம் நஜ்து தேசம் ஆகும். ஆகையால் அங்கு ஒரு போதும் நன்மை விளையாது மாறாக நபிகள் நாதரின் எச்சரிக்கைப்படி திடுக்கங்களும்,குழப்பங்களும் தான் உருவாகும்.
3.மேலும் அத்தகைய குழப்பங்களுக்கும்,திடுக்கங்களுக்கும் காரணமாக அமையப்போகும் ஒரு ஷைத்தானின் கொம்பு நிஷ்கயம் தோன்றியே தீரும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
4. பின்னும் அங்கிருந்து உருவாகி வெளிப்படப்போகும் குழப்பங்கள் உலகின் நாலாபுறமும் விரைவாக பரவிவிடும் எனபதை ’கர்னுஷ் ஷைத்தான்’ அன்னும் அரபி வாக்கியம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் அரபி மொழியில் மிகவிரைவாக பரவும் ஒன்றுக்குத் தான் ‘கர்ன்’ அன்பதாகக் கூறுவர். உதாரணமாக அதிகாலையில் உதிக்கும்  சூடியனது ஒளிக்கதிகள் மிக வேகமாக உலகின் நாலாபாகங்களிலும் பரவி விடுவதால், அதற்கு ‘கர்னுஷ் ஷம்ஸ்’ அன்று சொல்லப்படுகிறது.
5.அடுத்து ‘கர்ன்’ என்ற அரபி சொல்லுக்கு ‘காலம்’ என்ற ஒரு பொருளும் இருக்கின்றது. இதில் ‘கர்னுஷ் ஷைத்தான்’ என்று அண்ணல் நபிகளார் சொன்ன வாக்கியத்திற்கு காலம் என்ற பொருல் கொள்ளப்படுமாயின், ஷைத்தனுடைய காலம் அங்கிருந்து தான் வெளியாகும் என்ற விளக்கம் கிடைக்கிறது.ஆக நபிகளாரின் துஆ மறுக்கப்பட்ட நஜ்திலிருந்து தான் ஷைத்தனுடைய காலம் துவங்கும் என்பதை நபிகளார் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.

நஜ்த் வஹாபிகளின் பாரம்பரியம்

ஹதீஸ் எண் 7
      எனக்கு நபித்துவம் அருளப்பட்ட துவக்க காலக் கட்டத்தில் பல குலத்தாரிடமும்,நான் இறைவனின் தூதரென்றும்,எனது நபித்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் எடுத்துரைத்தேன்.அப்பொது பனூஹனீபா குலத்தார் கூறிய பதிலைவிட மிகமிக வெறுக்கத்தக்க அருவருப்பான பதிலை வேரு எந்த குலத்தாரிடமும் நான் கேட்கவில்லை என அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கள் கூறினார்கள்.
நூல்: அத்துரருஸ் ஸனிய்யா, பக்கம் 52.
குறிப்பு:
      தேவ்பந்திய வஹாபிகளின் இயக்கமான தப்லீக் ஜமாத்தை சார்ந்த ‘மஸ்வூத் ஆலிம் நத்வி’ என்பவர் பனூ ஹனீபா குலத்தார்க்கு பனூதமீம் என்று மற்றோர் பெயருண்டு எனக் குறிப்பிடுகிறார்.

ஹதீஸ் எண் 8
      அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் மூன்று கோத்திரத்தாரை வெறுத்தார்கள். அவர்கள் ஸகீப்,பனூ ஹனீபா,பனூ உமைய்யாவாகும்.
அ-ர் : இம்ரான் பின் ஹுசைன் ரலியல்லாஹு நூல்: திர்மிதீ.

ஹதீஸ் எண் 9
    நாங்கள் அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கலின் திருச்சமூகத்தில் அமர்ந்திருந்தோம்,காரூண்ய நபி கனீமத்துப் (யுத்தத்தில் கிடைத்த) பொருட்களை பங்கீடு செய்து கொண்டிருந்தனர்.அப்போது பனூ தமீம் (பனூ ஹனீபா)  குலத்தாரைச் சார்ந்த துல்குவைஸரா என்பான் அண்ணலாரிடம் வந்து, முஹம்மதே! நியாயமாக பங்கீடு செய்யும் ! என்றான். உடனே நபிகளார் உனக்கு நாசமுண்டாகட்டும் ! நானே நியாயமாக நடக்கவில்லையென்றால் இவ்வுலகில் வேறு யார் தான் நியாயமாக நடப்பர் ? நான் நியாயமாக நடந்து கொள்ளாமலிருப்பின்(இன்னேரம்) நீ கைசேதக்காரனாகவும்,நஷ்டவாளியாகவும் ஆகியிருப்பாய் எனக்கூறினர்.இதைக்கண்ட உமர் ரலியல்லாஹு அவர்கள்,இறைவனின் திருத்தூதரே ! இவனை வெட்டியெறிய எனக்கு அனுமதி தாருங்கள் எனக்கேட்க, இவனை விட்டு விடுங்கள்.இவனுக்கு சாதகமாக் ஒரு கூட்டமே இருக்கிறது.அவர்களின் தொழுகையும் நோன்பையும் உங்களில் ஒருவர் கண்டால்,அவர் ;தனது தொழுகை நோன்பு போன்றவற்றை மிக அற்பமாகக் கருதுவார்.அவர்கள் குர்ஆனை ஓதுவர் ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது.அவர்கள் வில்லை விட்டும் அம்பு விரைந்தோடுவதைப் போன்று இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவர் எனப் பெருமானார் நவின்றனர்.
அ-ர் : அபூ ஸயீதில் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு நூல்:மிஷ்காத் ,பக்கம் 535/புஹாரி,பாகம் 2,பக்கம்1024.

ஹதீஸ் எண் 10:
    குழி விழுந்த கண்களும்,புடைத்த நெற்றியும்,அடர்ந்த தாடியும்,உப்பிய கன்னமும்,மொட்டைத் தலையும் கொண்ட அடையாளமுள்ளவன் அண்ணல் நபிகளாரின் திருச்சமூகத்தில் வந்து “ முஹம்மதே ! அல்லாஹுவை அஞ்சிக் கொள்ளும்” என்றிட அதற்கு நபிகளார், நானே அல்லாஹுவிற்கு அஞ்சாது மாறு செய்தால் பின் எவர் தான் அல்லாஹ்வை அஞ்சுவர் ? இறைவன் இப்புவியிலுள்ளோர்க்கு என்னை அமீனாக ஆக்கியுள்ளான்.ஆனால் நீ என்னை ஆமீனாக ஏற்றுக் கொள்ளவில்லை எனக்கூறினர்.
     அப்போது அங்கிருந்த நபிதோழர்களில் ஒருவர் நபிகளாரை நோக்கி,இறைவனின் திருதுதரே ! இவனைக் கொன்றொழிக்க எனக்கு அனுமதி வழங்குங்கள் என வேண்டிட அதை விட்டும் அவரை வள்ளன் நபி விலக்கினர்.சிறிது நேரத்திற்கு பின் அந்த் முனாஃபிக் சென்றதும்,”இதோ இவனின் சந்ததியின்றும் ஒரு கூட்டம் வெளிப்படும்.அவர்கள் குர்ஆனை ஒதுவர்.ஆனால் அது அவர்களது தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது. அவர்கள் வில்லை விட்டும் அம்பு விரைந்தோடுவதைப் போன்று இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுடன், இஸ்லாமியர்களுடன் போர் புரிவர். ஆனால் காஃபிர்களுக்கு துணைபுரிவர் என்பதாக நபிகள் நாதர் நவின்றனர்.
நூல்:மிஷ்காத் பக்கம் 535.
 










Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment