Tuesday 22 April 2014

வஹாபிய வரலாறு -1

இந்த தளம் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகளை அம்பலப்படுத்தும் தளம் ஆதலால் ,யார் இந்த வஹாபிகள் அவர்தம் கொள்கைகள் என்ன ,அவர்தம் முன்னோடிகள் யார் என்று அறிவது ஒரு தெளிவைத் தரும் . வஹாபிய வரலாற்றுச் சுருக்கம் பின்வருமாறு.

இப்னு தைமியா

Ibn Taymiyyahs Grave


          வஹாபிகளுக்கு இமாம் ஆனவர் ஷைகு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தி என்பவர்.இவருக்கு முன்பே அந்த நவீன கொள்கைகளை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தியவர் இப்னு தைமியா என்பவர்.
இவரின் முழுப் பெயர் அஹ்மது  இப்னு அப்துல் ஹலீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபி அல்  காஸிம் இப்னு தைமியா, தகியத்தீன் அபு அல் அப்பாஸ் இப்னு ஷிஹாப்பத்தீன் இப்னு மஜ்த் அல் தீன் அல் ஹர்ரனி அல்  திமிஷ்கி அல் ஹன்பலீ (661-728).
                                இவர் ஹிஜ்ரி ஏழாம் நூற்றண்டு தம்மை ஹன்பலீ மத்ஹபுடையவர் என்று சொல்லிக் கொண்டு வெளிப்பட்டார் .ஆரம்ப காலத்தில் மார்க்க ஞானங்கள் கற்று கல்வியில் தேர்ந்த அவர் காலத்தின் சூரியன் என்று புகழப்பட்டார் . ஆனால் காலம் செல்ல செல்ல மார்க்க கொள்கைகளில் தடம்புரண்டார்.அகக் கண் குருடரானார். இறைவனால் இதயத்திலும் செவியிலும் முத்திரையிடப்பட்டார்.
                     இவர் இயற்றிய பல நூல்களில் "சிராத்துல் முஸ்தகீம்"  என்பதும் ஒன்று. இதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,அஹ்லெ பைத்துகள்,சஹாபாக்கள்,இமாமே முஜ்தஹித்,வலிமார்கள் போன்றோரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார். இமாம்களின் இஜ்மாவுக்கு முரணாக மார்க்கச் சட்டங்களை இயற்றியுள்ளார்.
         இதுபற்றி இவரை கண்டனம் செய்தும்,சபித்தும் அவரது சமகால உலமாக்களான ஷைகுல் இமாம் முஹம்மது பாஸீ, குத்வத்துல் முஹத்திஸீன் ஷைகு இப்னு ஹஜர் மக்கி,ஷைகுல் முஹத்திஸீன் இஜ்ஜு
த்தீன் ஜமா,ஷாரிஹ் சஹீஹ் புஹாரி,ஷைகுல் மஷாயிக் அஹமத் கஸ்த்தலானி ,ஷைகுல் இஸ்லாம் தகியுத்தீன் சுப்கீ ரஹீமஹுல்லாஹு

போன்றோரும்,இன்னும் பல பெரியோர்களும் எழுதியுள்ளார்கள்.
       இவரது வரம்பு மீறிய அநியாயத்தை பொறுக்க முடியாத மிஸ்ரு அரசாங்கம் இவரை பலமுறை சிறையில் அடைத்தது.முடிவில் ஷாம் தேச அரசு இவரை கைது செய்து ,திமிஷ்க் சிறையில் சாகும்  வரை அடைத்தது .இவர் ஹிஜ்ரி 728ல் இறந்தார்.

வலிமார்களின் கப்ருகளை தரைமட்டமாக்க வேண்டும் என கூப்பாடு போடும் வஹாபிகள் தங்களின் வஹ்ஹாபிய மூல குருவான இப்னு தைமியாவின் கப்ர் இருக்கும் நிலையை மேலே உள்ள படத்தில் காணலாம் . இப்னு தைமியாவின் கப்ர்  பராம்கெஹ் நகர் அருகில் டமாஸ்கஸ் பல்கலைக்கழகம் வளாகத்தில் சில நிர்வாக கட்டிடங்களுக்கு இடையில் புதர்களுக்கும் குப்பைகளுக்கும் இடையில்  உள்ளது  !!!  
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment