ஆலா ஹஸ்ரத் அவர்களின் பிடரியைப் பிடித்தக் கொடுமை!
முஸ்லீம் பொதுமக்களுக்கு பாக்கியாத் 'முப்தி' ஹஸ்ரத்தின் அறிவிப்பு!!
முஸ்லீம் பொதுமக்களுக்கு பாக்கியாத் 'முப்தி' ஹஸ்ரத்தின் அறிவிப்பு!!
வேலூர் பெரிய முப்தி ஆலிஜனாப் மௌலானா மௌலவி ஷேக் ஆதம் ஹஸ்ரத் (கிப்லா) رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தென்னிந்தியாவில் 'பாகவி' என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பல ஆயிரக்கணக்கான உலமாக்களின் உஸ்தாத் ஆவார்கள்.
நூறு வயதை எட்டி பிடித்துவிட்ட பெரியாரும் இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் இணையற்ற வல்லவருமாகிய ஆலா ஹஸ்ரத் அவர்கள் தமக்கு நேர்ந்த ஒரு துரதிருஷ்டமான சம்பவத்தை மக்கள் தவறாகக் கருதிவிடாமலிருக்க உண்மையை பகிரங்கப்படுத்தக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் அறிக்கையை இங்கு இடம் பெறச் செய்துள்ளோம்.
1960-ம் வருஷம் ஜனவரி மாதம் 5ம் தேதி சில தக்லீக் பிரச்சாரங்களால் மதரஸா பாக்கியத்தில் மிகவும் பயங்கரமான ஓர் சம்பவம் நடந்ததை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய காலத்தில் இங்குள்ள உஸ்தாதுமார்கள் தலையிட்டு அதை தடுத்திராவிட்டால் அதன் விளைவு மிக கோரமாயிருந்திருக்கும்.
விஷயம் யாதெனில், மௌலவி அபுல்ஸூவூது சாஹிப் அவர்கள் மௌலவி ரயீஸுல் இஸ்லாம் சாஹீப் அவர்களுக்கு ஒரு தப்லீக் ஜமாஅத், மதரஸாவைப் பார்ப்பதற்கு வருவதாகவும் ஆகவே அவர்களுக்கு 12டீ அனுப்புகிறேன் தாங்கள் அவ்விடமே இருந்து உபசரிக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். பிறகு 11மணியளவில் ஒரு தப்லீக் ஜமாஅத்தோடு என்னிடத்தில் அவர் வந்தார். அப்போது எனதருகில் மௌலவி ஷெய்க் ஹசன் சாஹிபும்; இருந்தார். அந்த தப்லீக் கோஷடியில் அரபி நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அவர் பெரிய அல்லாமா வென்றும், தப்லீக் கமிட்டியின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்றும், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானித்தபடி பல்வேறு பட்டணங்களுக்கு அனுப்பப்பட்ட ஐந்து ஜமாத்துகளில் ஒரு ஜமாஅத்தின் தலைவரென்றும் மௌலவி அபுஸ்ஸூவூத் அஹமது சாஹிப் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பேச்சினூடே அந்த அரபி தன்னிடம் தப்லீக் சம்மந்தப்பட்ட விஷயத்தையும் கிளப்பினார். அதற்கு ஆதாரமாக குர்அன் ஆயத்து ஒன்றையும் தப்பும் தவறுமாக ஓதினார். தப்லீக் செய்வது முக்கிய, அவசர அவசியமான காரியமென்ற வாதத்தை முரட்டுத்தனமாக பேசி ஸ்தாபிக்க முயன்றார். அவர் வாதங்களை எல்லாம் கேட்டபிறகு அவர் ஓதிய ஆயத்தின் குறிக்கோளென்ன? அது எதற்காக இறக்கப்பட்டது என்ற மார்க்க நுணுக்கம் பற்றி அவரிடம் வினவியபோது, பதில் கொடுக்க யாதுமறியாதவராய் மிகவும் தவறான வழியில் முறை தவறி 'நீ முட்டாள,; கழுதை, குர்ஆன் ஹதீஸைப் பற்றி அறியாதவன், முகல்லித் (இமாமைப் பின்பற்றுபவர்) என்று பிதற்றி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தார்.
இச்சமயத்தில் மௌலவி அபுஸ்ஸுவூத் அஹ்மது சாஹிப் அவர்கள் மௌலவி ஷெய்கு ஹசன் சாஹிப், அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது சாஹிப் மற்றும் இதர கனவான்களும் இருந்தனர். அரபியனின் எந்த அளவு கோபம் உச்சநிலையை அடைந்துவிட்டதென்றால,; என் கழுத்திலும் கையை வைத்து விட்டார். அரபியின் கூச்சலைக் கேட்டு மாணவர்கள் கூடி விட்டார்கள். மாணவர்களின் கோப உணர்ச்சியைக் கண்ட அரபி கலவரமடைந்து விரண்டோடி, மத்ராஸின் எதிரிலுள்ள ஆர்.கே. அப்துல் ஹக் சாஹிபின் வீட்டில் புகுந்து கொண்டார். மௌலவி அபுஸ்ஸுவூத் அஹமதுசாஹிப் மத்ரஸா ஆபீஸ் ரூமில் புகுந்து ஒளிந்துக் கொண்டனர்.
மாணவர்கள் கோபத்தால் மேற்கொண்ட இரண்டு இடங்களையும் சூழ்ந்து கொண்டு 'அரபியனே வெளியே வா' தப்லீகை பற்றி எங்கள் ஹஜ்ரத்திடம் நேரிய முறையில் வாதிடு, இல்லாவிடில் மன்னிப்புக் கோரு' என்று ஒரு மணிநேரமாக கோஷமிட்டு வாதாடினர். இதற்கிடையில் அவ்வரபியை எப்படியும் அங்கு நின்று கொண்டிருந்த கார் மூலம் வீட்டை விட்டு வேற்றிடத்திற்கு அனுப்பிவிட ஆர்.கே. அப்துல் ஹக் முயற்சி செய்தார். இந்நிலையில் அங்கிருந்த சில உஸ்தாதுமார்களும் மத்ரஸாவின் நிர்வாகஸ்தர்களில் சிலரான ஆலிஜனுப் ஆர். ஆப்துல் கப்பார் சாஹிப், முஹம்மது இஸ்ஹாப் சாஹிப், படேல் அப்துல்ஸலாம் சாஹிப் இதர சில உள்ளுர் வாசிகளும் குறுக்கிட்டு நிலையை கட்டுக்கடங்க செய்திராவிட்டால் இதன் விளைவு எவ்வளவு கோரமாக இருந்திருக்கும் என்பதை எண்ணக்கூட மனம் பதைபதைக்கிறது.
கடைசியில் அவ்வரபியையும் மௌலவி அபுஸ்ஸவூத் அஹ்மத் சாஹிபையும்' மாணவர்கள் என்னிடம் கொண்டு வந்து மன்னிப்புக் கோர வேண்டுமென்பது எனது விருப்பமல்ல. மாணவர்களின் உணர்ச்சியைத் தடுக்க என்னால் இயலவில்லை. மேலும் தற்போதுள்ள தப்லீக் முறைக்கு எதிர்ப்பாக நான் விடுத்த பத்வாவிற்கு பிறகிலிருந்து மௌலவி அபுஸ்ஸவூத் அஹ்மது சாஹிப் இங்கு வரக்கூடிய தப்லீக் ஜமாஅத்தார்களையும் என்னிடம் அழைத்துக் கொண்டு வந்து பலவாறக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். இவ்விதம் அவர் செய்து வந்ததின் நோக்கம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சம்பவம் என்னை மட்டும் அவமானப்படுத்த வேண்டுமென்று செய்யப்பட்டது அல்ல. மற்ற உஸ்தாதுமார்களையும், மத்ரஸா நிர்வாகிகளையும், வேலூர்வாசிகளையும் கூட அவமானப்படுத்த வேண்டுமென திட்டமிட்டு செய்த குழ்ச்சி என நினைக்க வேண்டியதிருக்கிறது. இந்த தப்;லீக் வாதிகள் எங்கு சென்றாலும் இவ்வாறு குழப்பம் விளைவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்டவன் இன்னவர்களுக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டுமென நாம் எல்லோரும் துஆ செய்வோமாக! ஆமீன்.
குறிப்பு:- இச்சம்பவம் பற்றி தனிப்பட்ட நபர்களிடத்தில் மற்றும் வேலூர் சுற்றுப்புற ஊர்களிலும் தவறான வதந்தி பரவிட கூடாதென்பதை விளக்குவான் வேண்டியே இவ்வுண்மையை பத்திரிகை வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்.
இங்கனம்,
ஷேக் ஆதம் அபா அன்ஹு,
காதிமேகுலபா, மதரஸா பாக்கியத்துஸ் ஸாலிஹாத், வேலூர்,
காதிமேகுலபா, மதரஸா பாக்கியத்துஸ் ஸாலிஹாத், வேலூர்,
No comments :
Post a Comment