Wednesday, 23 July 2014

தப்லீகிற்கு எதிரான இந்திய நீதி மன்ற தீர்ப்புக்கள் -2

முதல் வகுப்பு குற்ற இயல் நீதிமன்றம், கபாட்வாஞ்ச், குஜராத் மாநிலம்.

நீதிபதி: மேன்மைக்குரிய திரு. கிருஷ்ண பண்டிட் எம்.ஏ.,எல்.எல்.பி.
C.C.1129/69
மௌலானா குலாம் ஹுஸேன் முஹமத்பாய் தர்ஸோத்- வாதி
1. செய்யது ஆசாத் அலி எம். டாக்டர் – எதிரி
2. ஹாஜி சுலைமான் இப்றரீம் – எதிரி
வழ க்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500
 
தீர்ப்பு:
 
1. வாதி தரப்பு வழக்கின் சாராம்சம் இதுதான். அஹ்மதாபாத்திலிருந்து வெளியாகும் மாத இதழான 'தையிபா'விற்கு முதலாவது எதிரி ஆசிரியரும், இரண்டாவது எதிரி பிரசுரகர்த்தாவும், வெளியிடுவோரும் ஆவார்கள். காட்வான்ஞ்ச் வாழ் முஸ்லிம்கள் மத்தியில் இது அதிகமாக விற்பனையாகும் பத்திரிகையாகும். மேலும் இஸ்லாமியர்கள் அதில் வெளியாகும் செய்திகள் உண்மையானவைகள்தான் என்றும் நம்பிவந்தார்கள். இந்த வழக்கின் வாதி ஸுன்னி பிரிவில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.
 
இந்த வழக்கில் வாதியாகிய நான் ராண்டர் என்ற ஊரில் அமைந்துள்ள 'ஜாமியா ஹுஸைனிய்யா' என்ற அறபி மத்ரஸாவில் பயின்று 'பாஜில', 'காரி' முதலிய பட்டம் பெற்றவன். அந்த மத்ரஸாவானது ஹனபீகளால் நடத்தப்படும் ஸ்தாபனமாகும். எனவே நான் பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும், இன்னும் மத சம்பந்தமான எல்லா விசேடங்களிலும் தலைமையேற்று நடத்தி வைக்கவும், மத்ராஸாக்களில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கவும் தகுதி பெற்றவனாவேன்.கபாட்வாஞ்ச் நகரில் ஒரு ஜும்ஆ பள்ளி இருக்கிறது. அது அந்நகரிலுள்ள மற்ற எல்லா பள்ளிகளைவிட சீரும் சிறப்புமுடையதாகும். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னால் நான் அப்பள்ளியில் பேஷ்இமாமாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து அப்பணியை செய்து வருகிறேன். கபாட்வாஞ்ச் நகரில் ஸுன்னி முஸ்லிம்களுக்குள் பிளவு இருந்து வந்தது. எதிரிகள் என்னை பேஷ் இமாமாக நியமனம் செய்தவர்களுக்கு எதிராக இயங்கி வந்தார்கள்.
 
மேலும் என்னை அவமானப்படுத்த வெண்டுமென்றும், சமுதாயத்தில் என் கௌரவத்தை குலைக்க வேண்டுமென்றும் கெட்ட நோக்கத்தோடு 1968 டிசம்பர் 'தையிபா' இதழ் பக்கம் 16-ல் 'கபாட்வாஞ்ச்சில் வசிக்கும் ஸுன்னி முஸ்லிம்கள் ஜும் ஆமஸ்ஜிதின் வஹ்ஹாபி பேஷ் இமாமை வெளியேற்றினார்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அது என்னையே குறிக்கும். என்னை அவமானப்படுத்த வேண்டும், கேவலப்படுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை 'வஹ்ஹாபி' என வருணித்துள்ளனர்.
 
 'வஹ்ஹாபி' என்ற சொல்லுக்கு கபாட்வாஞ்ச் முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவன் என பொருள் கொண்டார்கள். மேலும் அவர்களில் சிலர் நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை சாதாரண மனிதர்தான் என்று நம்பினார்கள். இந்த செய்தி வெளிவந்தபோது சமுதாயத்தில் என் அந்தஸ்து பறிக்கப்பட்டது. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை. மேலும் என் பின்னால் நின்று தொழுவது குற்றமெனக் கருதி விலகி நின்றார்கள். இன்னும் சில மஸ்ஜிதுகளில்'வஹ்ஹாபிகளே உள்ளே நுழையாதீர்கள்' என தட்டிகள் எழுதி வைத்திருந்தார்கள். இதனால் எனது மனநிலையும், கௌரவமும் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே நான் எதிரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 ன் கீழ் வழக்கு தாக்கல் செய்கிறேன் என நீதிமன்றத்தில் வாதி பேஷ் இமாம் எடுத்துக் கூறினார்.
 
2) மேற்கண்ட வாதியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு நீதிபதியவர்கள் முறைப்படி இ.தச. பிரிவு500 ன் கீழ் குற்றச்சாட்டு பிறப்பித்தார். ஆனால் எதிரிகள் தாங்கள் நிரபராதிகள் என பதிலுரைத்தனர். பிறகு வாதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை ஆரம்பமானது. வாதியின் மற்ற சாட்சிகளும் விசாரிக்கப்பட்டார்கள். பின் எதிரிகள் விசாரிக்கப்பட்டார்கள். தங்கள் பக்கம் எதிரிகள் சாட்சிகள் யாரையும் விசாரிக்கவில்லை. இரண்டு பக்க விவாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி தனது தீர்ப்பை எழுதலானார்.
 
'இப்பொழுது என்முன் நிற்பது மூன்று கேள்விகள்:
1) 1968 டிசம்பர் 'தையிபா' இதழில் எதிரிகள் வாதியைப் பற்றி வெளியிட்ட செய்தி அவதூறு நிரம்பியதுதானா?
2) எதிரிகள் தன்னை கேவலப்படுத்த வேண்டும்,சமுதாயத்தில் தன் அந்தஸ்த்தை குறைக்க வேண்டுமென்ற கெட்ட நோக்கோடு வெளியிட்டார்கள் என்பதை வாதி நிரூபித்து விட்டாரா?
3) அப்படியானால் என்ன தீர்ப்பு வழங்கலாம் என்பதே!
 
முதலாவது கேள்விக்கு நான் வந்த முடிவு எதிரிகள் பிரசுரித்தார்கள் என்பதை நம்புகிறேன்.
இரண்டாவது கேள்விக்கு வாதி தனது தரப்பு வழக்கை நிரூபிக்க தவறி விட்டார்.
 
3) இந்த வழக்கில் வாதியைத் தவிர்த்து அவர் சார்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 'தையிபா' இதழில் வெளியான செய்தி இதுதான்:-
 
'கபாட்வாஞ்ச் முஸ்லிம்கள் இறுதியாக ஜும்ஆ மஸ்ஜிதின் வஹ்ஹாபி பேஷ் இமாமை வெளியேற்றினார்கள்' என்ற தலைப்பில் ஆரம்பித்து கடந்த 14 ஆண்டுகளாக வஹ்ஹாபி தேவ்பந்தி உலமாக்கள் ஜும்ஆ மஸ்ஜிதை தங்கள் பாசறையாக்கிக் கொண்டு மக்கள் மத்தியில் தங்களின் ஊனக் கொள்கைகளை பரப்பி வந்தார்கள். மேலும் நமது கண்ணின் மணியான காருண்ய நாதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைப் பற்றியும் இறைநேசச் செல்வர்கள் பற்றியும் அவதூறாக பேசி வந்தார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் தங்களின் இந்த வஹ்ஹாபி கொள்கையை அஹ்லெ ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் பரப்பி அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் சாகச முயற்சிகள் செய்து வந்தார்கள்.
 
இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடிப் போன இந்த நோயை அகற்றி மறுமலர்ச்சி ஏற்படுத்த கபாட்வாஞ்ச் நகரில் சுன்னத் வல் ஜமாஅத்தினரால் 'ஹதீது' மஜ்லிஸ் ஏற்படுத்தப்பட்டது. இந்த மஜ்லஜிஸானது முதலாவதாக அஜ. ஷேக் அப்துல் ஹக் ஜமால் பாய் வீட்டில் மௌலானா அலி தோராஜிவி ராஜ்பியாலா வாலா என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது மூன்று பிரசங்கங்கள் வஹ்ஹாபியாக்களின் முகத்திரையை கிழித்தெறிய உதவியது. மேலும் பல ஸுன்னி மௌலவிகளில் பிரபலமானவர்களாகிய ஜெ.மௌலவி அப்துர் ரஷீது, மௌலானா ஜெ. பீர் மதானிய்யா, மௌலானா நிஜாமுத்தீன், மௌலானா ஜஹாங்கீர்மிய்யா இன்னும் பலரும் பங்கேற்று உரை நிகழ்த்தியதன் பயனாய் ஸுன்னி முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. எனவே அந்த மஜ்லிஸுக்கு இஸ்லாமிய மக்கள் பெருந்திரளாக வருகை தர ஆரம்பித்தார்கள்.
 
கபாட்வாஞ்ச் நகரில் உள்ள ஸுன்னி முஸ்லிம்களின் முக்கிய பிரமுகர்களாகிய ஜெ. செய்யது மல்ஹர் அலி, ஜெ. செய்யது அலி அஹ்மது, ஜெ.பதான் அலியார்கான், ஜெ. ஷேக் அப்துல் ஹக், இஸ்மாயில் பாய், ஜெ.முபாரிஸ்கான், ஜெ. மாலிக் ஜாமியாத் மியா போன்றோர் இது விஷயத்தில் எடுத்துக் கொண்ட முயற்சியும், சேவையும் பாராட்டத்தக்கது. இதன் பயனாக ஜும்ஆ மஸ்ஜிதின் வஹ்ஹாபி தேவ்பந்தி மௌலவி 21.8.68-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். அதற்கு பதிலாக பாபு மியா என்பவர் பேஷ் இமாமாக நியமனம் செய்யப்பட்டார்கள். புதிய பேஷ் இமாம் பதவி ஏற்றதும் ஸலவாத்தும், ஸலாமும் அதிகமாக ஓதப்பட்டது. இத்தகைய பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உதவிய பெரியார்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் தன் கருணாமாரிளை பொழிந்தருள்வானாக!' இதுவே தையிபா இதழில் வெளிவந்த அவதூறு செய்தியாகும்.
 
இந்த வழக்கில் வாதி சாட்சி கூண்டில் ஏறிச் சொன்ன விபரங்கள் இதோ, நான் ரந்தீரிலுள்ள ஜாமிய்யா ஹுசைனிய்யா மதரசாவில் படித்து பட்டம் பெற்றவன். இதோ அதற்கான அத்தாட்சி என கோர்ட்டில் தான் பெற்ற 'ஸனதை'யும் கல்லூரி முதல்வர் வழங்கியிருக்கும் சர்டிபிகேட்டையும் ஆஜர் செய்தார். நான் பட்டம் பெற்ற ஆலிமாக இருப்பதால் தொழுகை நடத்தவும், திருமண வைபவங்களை முன்னின்று நடத்தி வைக்கவும், சன்மார்க்க போதனைகள் செய்வதற்கும் தகுதியுடையவன். நான் ஸுன்னி பிரிவில் ஹனபீ மத்ஹபை சார்ந்தவன். அதுவே சிறப்புக்குரிய மதஹபாகவும் கருதப்படுகிறது. நான் பணியாற்றி வந்த பள்ளி வாயிலே கபாட்வாஞ்ச் நகரில் பெரியதும், சிறப்பு வாய்ந்ததுமாகும்.
 
 'தையிபா' இதழ் ஒன்றாவது எதிரியை ஆசிரியராகவும், அரண்டாவது எதிரியை பிரசுரகர்த்தாகவும் தாங்கி வெளிவருவதாகும். அது ஸுன்னி முஸ்லிம்கள் கொள்கை விளக்கமுடைய பத்திரிகையாகும். அது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையுமாகும் என சொல்லி 1-3-69 இதழை கோர்ட்டில் ஆஜர் செய்தார் வாதி. மேலும் 1-2-68 இதழையும் ஆஜர் செய்தார். அந்த இதழில் பக்கம் 46-ல் பொய்யான செய்திகள் வெளியிட்டிருப்பதாகவும் சட்டி காட்டினார். ஸுன்னி ஹனபிகளும், வஹாபிகளும் வேறுவேறு கொள்கையுடையவர்கள். ஹனபியாக்கள் நபிகள் நாயகம் அவர்களை ரசூலென்றும், திருத்தூதர் என்றும் படைப்பினங்க்ள எல்லாவற்றிலும் அவர்களே மேன்மைக்கும், சங்கைகக்கும் உரியவர்கள் என்றும் கருதுபவர்கள்.
 
வஹ்ஹாபிகளோ ரசூலுல்லாஹ்வை சாதாரண மனிதர் என்றும், இறைவனின் கட்டளையை மக்களுக்கு எடுத்து சொல்லும் சாதாரண தபால் பெட்டி போன்றவரென்றும், அவர்களுக்கு எத்தகைய தனிச் சிறப்பும் கிடையாது என்றும், ஷைத்தான் கூட நபியை விட சக்தி பெற்றவன் என்ற கொள்கையுடையவர்கள். சமுதாயத்தில் வஹ்ஹாபிகளுக்கு எந்த கௌரவமும் கிடையாது. ஸுன்னி முஸ்லிம்கள் வஹ்ஹாபி கொள்கையுடைய பேஷ் இமாம் பின் நின்று தொழ மாட்டார்கள். ஏனென்றால், அந்த தொழுகை கூடாது என்பது அவர்கள் கருத்தாகும். கபாட்வாஞ்ச் ஜும்ஆ பள்ளிவரிலில் 'வஹ்ஹாபிகள் உள்ளே நுழையக் கூடாது' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மீறி நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கண்டிருந்தது. நான் வஹ்ஹாபி அல்லன். வஹ்ஹாபிகள் வேறு, தேவ்பந்திகள் வேறு.
 
தேவ்பந்தியாக்கள் என்று தனிப் பிரிவு இஸ்லாத்தில் கிடையாது. உத்தரபிரதேசத்தில் தேவ்பந்த் என்னுமிடத்தில் ஒரு அரபி மத்ரஸா இருக்கிறது.அங்கு படித்து பட்டம் பெறுபவர்கள்  தேவ்பந்தியாக்களாவர்கள். ஆனால் நான் அங்கு படித்து பட்டம் பெறவில்லை. என்னை யாரும் வேலை நீக்கம் செய்யவில்லை. சர்ச்சைக்குரிய கட்டுரையில் வந்த விஷயங்கள் அனைத்தும் என்னை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் வந்துவிட்டதால் நானாகவே பதவியை ராஜினாமா செய்தேன். பாபுமிய்யா என்பவர் எனக்கு பதிலாக பேஷ்இமாமாக நியமிக்கப்பட்டார். இந்த கட்டுரை வந்தபின் பொதுமக்கள் என்னைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். மேலும் என்னுடன் பேசக் கூடாது என்றும், நான் ஸலாம் சொன்னால் அதற்கு மறுமொழி சொல்லக் கூடாது என்றும் மக்கள் முடிவெடுத்தனர். மேலும் என்னை இழிவாகவும் கருதத் தலைப்பட்டனர்.
 
எதிரிகள் இருவரும் தாங்கள் 'தையிபா' இதழை நடத்துபவர்கள் என்றும், சர்ச்சைக்குரிய கட்டுரையை பிரசுரித்தது உண்மைதான் என்றும் ஒப்புக் கொண்டார்கள். வாதியின் வாக்குமூலத்திலிருந்தும் அவர் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மனுவிலிருந்தும், எதிரிகளை விசாரித்ததிலிருந்தும், மேற்படி கட்டுரையை எதிரிகள்தான் பிரசுரித்தார்கள் என தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் அது ஜும்ஆ மஸ்ஜிது பேஷ் இமாமை குறித்துதான் எழுதப்பட்டது என்பது மறுக்கப்படவில்லை. வாதியை குறுக்கு விசாரணையின் போதும் நீர் தேவ்பந்தி வஹ்ஹாபிதானா? என கேட்கப்பட்டது. எனவே தையிபா இதழில் வெளிவந்த கட்டுரை வாதியை குறித்துதான் எழுதப்பட்டது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
 
எதிரிகள் வாதியை குறுக்கு விசாரணை செய்யும்போது தேவ்பந்த மத்ரஸாவிலுள்ள 'தாருல் உலூம் தேவ்பந்த' என்ற ஆதாரப்பூர்வமான நூலிலிருந்து சில பகுதிகளைச் சுட்டிக்காட்டி கேள்விகள் கேட்டார்கள். அதாவது வஹ்ஹாபிகள் கண்ணியமானவர்கள்.-சமுதாயத்தில் முறுமலர்ச்சி உண்டு பண்ணுகிற பிரிவினர். ஆனால் பரேலியில் வசிக்கும் முஸ்லிம்கள் இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள். அவர்கள் கருத்துப்படி வஹ்ஹாபிக்ள கீழானவர்கள் என்பதே! மேலும் கபாட்வாஞ்ச் நகரில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் பரேலி பிரிவை சார்ந்தவர்களாதலால் அவர்கள் தன்னை வஹ்ஹாபி என வர்ணித்தால் அவர்கள் மத்தியில் இழிவாகக் கருதப்படும் சூழ்நிலை ஏற்பட்டது என வாதி கூறினார். எனவே இதில் உண்மை இருக்கிறதா? என்பதை இங்கு ஆராய்வோம்.
 
சட்டத்தில் இ.த.ச. 499(1) என்ன சொல்கிறது என்றால், உண்மையான சம்பவம் எதைக் குறித்தும் செய்திகள் வெளிவருமானால் அது குற்றமாகாது. அந்த செய்தி பொதுவாக மக்கள் நலன் கருதி பிரசுரிக்கப்பட்டதா? அல்லது இழிவுபடுத்த வேண்டுமென்ற கெட்ட நோக்கத்தோடு பிரசுரிக்கப்பட்டதா? என்பது அந்த அந்த சந்தர்ப்பத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும். எனவே எதிரிகள் கடமை என்னவென்றால் தாங்கள் பிரசுரித்தது கொதுமக்கள் நலன் கருதிதான் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படியானால்தான் அவர்கள் குற்றமற்றவர்களாவார்கள். வாதி தனது வாக்குமூலத்தில் தான் வஹ்ஹாபி இல்லை என்றும், பேஷ்இமாம் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் கூறி இருக்கிறார். மேலும் தேவ்பந்தி என்பது இஸ்லாமிய மதுஹபுகளுக்கு உட்பட்டதல்ல என்றும், வஹ்ஹாபிகளுக்கும், ஸுன்னி முஸ்லிம்களுக்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறினார்கள்.
 
ஆனால் அவரை குறுக்கு விசாரணை செய்யும்போது தேவ்பந்தி என்பது தனிப்பிரிவு என்றும், தேவ்பந்த மத்ரஸாவில் அந்தக் கொள்கைகளே போதிக்கப்படுகிறது என்றும், எனவே தன்னை தேவ்பந்தி என்று யாரும் அழைக்கலாம் என்றும் கூறகிறார். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால் வாதியின் கூற்றுப்படி தேவ்பந்த் என ஒரு பிரிவு உண்டு என தெரிகிறது. தான் பயின்ற ஜாமியா ஹுஸைனியாவிலும் அதே கருத்துக்களே போதிக்கப்பட்டு வருகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார். எனவே வாதியை தேவ்பந்தி என்று எழுதினது குற்றமாகாது என தீர்ப்பு செய்கிறேன்.
 
இரண்டாவது குற்றச்சாட்டு வாதி வஹ்ஹாபி என்பது. வாதி தனது முதல் விசாரணையில் வஹ்ஹாபிகளின் கொள்கைகளுக்கும் சுன்னத் ஜமாஅத் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உண்டு என்று ஒப்புக் கொள்கிறார். அவரை குறுக்கு விசாரணை செய்யும்போது கலீல் அஹ்மது அம்பேட்டி என்பவர் தேவ்பந்தி மத்ரஸாவில் பெரிய உஸ்தாது என்றும் அவர் 'பாரஹீனே காத்திஆ' என்ற புஸ்தகம் ஒன்று எழுதியிருக்கிறார் என்றும் அவரையே தனது வழிகாட்டியாக தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார்.
Baraheen e Qatia
 
 
ஆனால் மீலாதுஷரீபு கொண்டாடுவது கிருஷ்ண ஜெயந்தி போன்றுதான் என்ற கருத்து தனக்கு உடன்பாடற்றது என்றார். எதிரிகளின் வக்கீல் வாதியடம் ஒரு புஸ்தகத்தை காட்டி அதில்; ஒரு பகுதியை சுட்டிக் காட்டி விளக்கம் கோர வேண்டியபோது ஆண்டுதோறும் மீலாது ஷரீபு கொண்டாடுவது சிருஷ்ண ஜெயந்தி போன்றுதான். அதை கொண்டாடக் கூடாது என்றும் அந்த மஜ்லிஸில் ரசூலுல்லாஹ் ரூஹ் ஹாழிராகிறது என்றும், எனவே அதை சிறப்போடும், கண்ணியத்தோடும் கொண்டாட வேண்டுமென்றும் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் கிடையாது என்றும், அது இஸ்லாமிய ஷரீஅத்திற்கு மாற்றமான 'பிதஅத்' என்றும் சொன்னார்.
 
'பித் அத்' என்பதற்கு நேரடி அர்த்தம் தனக்கு தெரியாது என்றும், கலீல் அஹ்மது அம்பேட்டி எழுதின புத்தகத்திலும் அதற்கு விடை காண முடியவில்லi என்றார். ஒரு மௌலவி என்ற முறையில் ஆகுமான காரியமெது? பித்அத் என்பது எது? என்று தனக்குத் தெரியுமென்றும், முஹர்ரம் மாதத்தில் சர்க்கரை பாகுபானை வைப்பதும், மீலாது ஷரீபிலே ரசூலுல்லாஹ்வை கொளரவிக்கும் கொருட்டு எழுந்து நிற்பதும், தஃஜியாவும் வெள்ளி இரவு இனிப்பு வைத்து பாத்திஹா ஓதுவதும் பிதஅத்தாகும்.
 
 எனது பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்த பித்அத்தா கொள்கைகளை பின்பற்றி வந்தார்களென்றும், சிலரே தவிர்த்து வந்தனெரென்றும் கூறினார். எனது கொள்கைப்படி பிதஅத் என்பது குர்ஆன், ஹதீஸ், கலீபாக்களின் கட்டளை ஆகியவற்றில் இல்லாத ஒன்றை செய்வது என்பதே. மேலும் தாஹாக்களுக்கு சென்று தலை சாய்ப்பதும் பித்அத்தாகும். கபாட்வான்ஞ்ச் நகரில் வாழ்ந்த பெரும்பான்மை முஸ்லிம்கள் பரேலவி பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்குள் கொள்கை மாறுபாடு இருந்தது. தனது சகாக்கள் மற்றவர்கள் பித்அத்தி என்றும் அவர்கள் தங்களை வஹ்ஹாபி தேவ்பந்தி என்றும் அழைத்தார்களென்றும் கூறினார்.
 
 
Al Muhannad ala al mufannad
 
கலீல் அஹ்மது எழுதின 'அல்முஹன்னது' ரஷீது அஹ்மது எழுதின 'பத்வா ரஷீதிய்யா' ஆகிய இரு நூற்களும் தேவ்பந்தியாக்களுக்கு முக்கிய வழிகாட்டும் நூலென்றும், இதில் கண்டுள்ள கருத்துக்கள் தனக்கு உடன்பாடுள்ளது என்றும், மாற்று கருத்து தனக்கு கிடையாது என்றும் கூறினார்.
 
அரேபியாவில் 'நஜ்து' என்ற ஒரு ஊர் இருக்கிறதென்றும், அங்கு முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் என்பவர் வாழ்ந்து வந்தாரென்றும், அவர் 'கிதாபுத் தவ்ஹீது' என்ற நூல் ஒன்று எழுதியுள்ளார் என்றும் அவரைப் பின்பற்றுவோரே வஹ்ஹாபிகள் எனப்படுவர் என்றும் வாதி கூறினார்.


Fatawa-e-Rasheediah
 
 வாதியிடம் ரஷீது அஹ்மது எழுதின 'பத்வா ரஷீதிய்யா' புத்தகத்தை காட்டி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:
 
கேள்வி: யார் வஹ்ஹாபிகள்? அப்துல் வஹ்ஹாப் நஜ்துடைய கொள்கை என்ன? அவரது மார்க்கம் என்ன? அவர் எப்படிபட்டவர்? அவரது கொள்கைகளுக்கும் ஸுன்னி கொள்கைகளுக்கும் என்ன வித்தியாசம்?
 
பதில்: அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றுவோரே வஹ்ஹாபிகளாவார்கள். அவரது கொள்கைகள் சிறப்பும் மேன்மையும் வாய்ந்தது. அவரது மார்க்கம் பின்பற்ற எளிமையானது. ஆனால் அப்துல் வஹ்ஹாப் சற்று எரிச்சல் குணம் படைத்தவர். அவரின் தொண்டர்கள் மிகவும் நல்லவர்கள். வஹ்ஹாபிகளுக்கும், ஹனபிகளுக்கும் ஈமானில் வித்தியாசம் எதுவும் கிடையாது. செயல்முறையை பொறுத்த மட்டில் வித்தியாசம் உண்டு.
 
கேள்வி: வஹ்ஹாபிகளின் பிரிவு எது? அது மக்களால் ஏற்றுக் கெர்ளப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அவர்கள் கொள்கைக்கும் ,ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும் மாறுபாடு உண்டா? அவர்கள் இமாமை பின்பற்றி நடப்பவர்களா?
 
பதில்: வஹ்ஹாபிகள் எம்பெருமானார் அவர்களின் சுன்னத்தை பேணக் கூடியவர்கள்.
 
இந்தியாவில் பொதுவாக 'மத்ஹபை' நிராகரிப்போரைத் தான் வஹ்ஹாபிகள் என்று அழைப்பது வழக்கம். ஆனால் பின்பு என்ன காரணத்தாலோ எம் பெருமானாரின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி பழைய பழக்கவழக்கங்களையும், பிதஅத்களையும் ஒழித்தவர்களுக்கு இப் பெயர் சூட்டப்பட்டது. பம்பாயிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அவ்லியாக்கள், இறைநேசர்களின் கப்றுக்கு சென்று சிர வணக்கம் செய்வது ஆகாது என கூறுவோரை வஹ்ஹாபிகள் என அழைக்க ஆரம்பித்தர்கள்.
 
 வட்டி வாங்குவது கூடாது என சொல்பவர்கள் வஹ்ஹாபிகள். அது ஆகுமானது என சொல்பவர் வஹ்ஹாபிகள் அல்லர் என்றும், வஹ்ஹாபி என்ற சொல்லே அதன் அர்த்தம் தெரியாமல் துர்பிரயோகம் செய்யப்பட்டது. ஒரு இந்திய் மற்றொரு இந்தியனைப் பார்த்து வஹ்ஹாபி என்றாலும் அவர்களுக்குள் இறை நம்பிக்கையில் வித்தியாசம் கிடையாது.
 
வாதி பேஷ் இமாமை முதலில் விசாரணை செய்யும்போது, வஹ்ஹாபிகள் ஷைத்தானுக்கு ரசூலுல்லாஹ்வை விட அதிக ஞானம் இருப்பதாக கூறினார். ஆனால் அவரை குறுக்கு விசாரணை செய்யும்போதுதான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார். மேலும் தேவ்பந்திகளுக்கும் இக் கொள்கை ஏற்புடையது அல்ல என்று மறுத்தார். ஆனால் அவரிடம் 'பராஹினே காத்திஆ' என்ற புத்தகத்தை காட்டி அந்த மாதிரி எழுதப்பட்டுள்ள பகுதியை காட்டும்போது அவர் அதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை. மேலும் அப்பபுத்தகத்தில் கண்டுள்ள விஷயம் தனக்கும் சரி என்று தெரிவதாகக் கூறினார்.


Taqwiyatul Iman
 
தேவ்பந்தியாக்கள் கொள்கைப் படி ரசூலுல்லாஹ் சாதாரண மனிதர்தான் என்பதையும் மறுத்தார். 'தக்வியத்துல் ஈமான்' என்ற நூல் தேவ்பந்தியாக்களின் அதிகாரப் பூர்வ நூலாகும். அதில் 10வது பக்கத்தில், 'அல்லாஹ்வின் முன்னிலையில் படைப்பினங்கள் அனைத்தும் எவ்வளவு சிறப்புக்குரியதாகயிருந்தாலும் அது கீழானவையே! 'எவ்வளவு சிறப்புக்குரியதாகயிருந்தாலும்' என்ற சொல்லானது இவ்விடத்தில் ரசூல்மார்களையும், நபிமார்களையும் குறிக்கும் என்பதை வாதி ஒப்புக் கொண்டார்.
 
மேலும் அந்தப் புத்தகத்தில் 'எல்லா மனிதர்களும் சகோதரர்களே! மேன்மைக்குரிய மனிதர்கள் குடும்பத்தில் மூத்த சகோதரனுக்குள்ள அந்தஸ்தையுடையவர்களே! இந்த உலகமே அல்லாஹ்வுக்குரியதாகும். எனவே அவனையே வணங்க வேண்டும். இந்த ஹதீதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், நபிமார்கள், அவ்லியாக்கள், இமாம்கள், அவர்களின் வாரிசுகள் அனைவர்களும் அல்லாஹ்வின் அன்புக்குரியவர்களே! ஆனாலும் அவர்கள் சாதாரண மனிதர்களே! அவர்களுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது. அவர்களும் நமது சகோதரர்கள்தான். அல்லாஹ் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நமக்கெல்லாம் அவர்கள் மூத்த சகோதரர் போல் ஆகிறார்கள். ஆதலால் அவர்களது கட்டளைகளை நிறைவேற்றுவது நமது கடமை ஆகும். நாம் அவர்களின் இளை சகோதரர்கள் ஆவதால் அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு கௌரவம் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கௌரவம் அளிக்கத் தேவையில்லை.
 
இந்த பகுதியைப் பற்றி வாதியிடம் கேட்டபோது அவைகள் முற்றிலும் சரியான வாசகம்தான் என்று ஒத்துக் கொண்டார். மேலும் ரசூலுல்லாஹ்வின் திருநாமத்தைக் கேட்கும்போது அவர்களுக்கு சங்கை செய்யும்பொருட்டு நடந்து கொள்வது 'பிதஅத்' என்றார். தேவ்பந்திகளின் கொள்கையும் அதுதானென்றார்.
 
 ஆனால் 'பதாவா ரஷீதிய்யா' என்ற நூலைக் காட்டி கேள்விகள் கேட்கும்போது கீழ்கண்டவாறு கூறினார்:-
'ரஹ்மத்துன் லில் ஆலமீன்' என்பது ரஸூலுல்லாஹ்வுக்கு மட்டுமுரிய தனிச் சிறப்பு என்பது சரி அல்ல! அவ்லியாக்களும். மற்ற மகான்களும் உலகுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வந்தார்கள். ரஸூலுல்லாஹ் இவர்களை விட சிறப்பானவர்கள் அவ்வளவுதான்'.
 
தான் ஒரு தேவ்பந்தி என்றும், 'பதாவா ரஷீதியா' தங்களின் அதிகாரப் பூர்வ ஏடு என்றும் அதில் அடங்கி இருக்கும் கருத்துக்களுக்கு மாற்றமாக தான் எதுவும் சொல்ல முடியாது என்றார். வாதியை குறுக்கு விசாரணை செய்யும் போது பெரும்பாலான வஹ்ஹாபிக் கொள்கையை தான் அங்கீகரிப்பதாகவும், தேவ்பந்திகளும் அவ்வாறே கருதுவதாகவும் சொன்னார். இருந்தும் மற்றவர்கள் தன்னை 'வஹ்ஹாபி' என்று சொல்வதை விரும்பவில்லை என்றும் சொன்னார். அதே நேரத்தில் தேவ்பந்தி-வஹ்ஹாபிக் கொள்கைகள் இரண்டும் ஒன்றுதான் என்று உறுதியாக தன்னால் சொல்ல முடியாது என்றார்.
 
ஆனால் அவரது சாட்சியத்தைக் கூர்ந்து படிக்கும்போது இரண்டும் ஒன்றே என்ற கருத்துதான் தொனிக்கிறது. அவர் தன்னை தேவ்பந்தி என்று ஒப்புக் கொள்கிறார். எனவே எதிரிகள் இவரைப் பற்றி 'தேவ்பந்தி-வஹ்ஹாபி' என்று எழுதியது சரிதான் என்பதை வாதியின் சாட்சியம் மூலமே நிரூபித்து விட்டார்கள். எனவே எதிரிகள் குற்றவாளி ஆக முடியாது.
 
அவர் வஹ்ஹாபி என்பதற்கு நேரடி சாட்சியங்கள் இல்லை. ஆனால் அவரது சாட்சியத்தை முழுமையாக பரீசிலிக்கும் போது அவர் வஹ்ஹாபிதானென்று தெரிகிறது.
 
இதே சமயத்தில் சட்டச்  சம்பந்தமாக 1966 ம் வருடம் சுப்ரீம் கோர்ட்டில் முடிவான் ஒரு கேஸ் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால் குற்றவாளி தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து சாட்சியங்களுடன் தான் குற்றவரி அல்ல என்று நிரூபிக்கத் தேவையில்லை. ஆனால் நீதிமன்றத்தின கவனத்தை ஈர்க்கும்வகையில் வாதித் தரப்பு வழக்கு சந்தேகத்திற்குரியதுதான் என்பதுவரைக்கும் எடுத்துக்காட்டினால் போதுமானது. எதிரிகள் குற்றவாளிகள்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கும் பொறுப்பு எப்போதும் வாதித் தரப்புடையதுதான்.எதிரிக்கு அந்த பொறுப்பு கிடையாது. இது குற்றயியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
 
அதாவது ஒருவரை குற்றவாளி என்று சொல்லி நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடர்வோமானால் அதை நிரூபணம் செய்ய வேண்டியது வழக்கு தொடர்ந்தவரையே சாரும்.
 
அவதூறு வழக்கு சம்பந்தப்பட்டவரை சட்டத்தில் சில விதிவிலக்குகள் வரையறுத்திருக்கிறார்கள். அதன் பலன் தனக்கு உண்டென்று எதிரிகள் வாதாட உரிமை உண்டு. இதை வாதி தரப்பில் கட்டுப்படுத்த முடியாது.
 
இந்த வழக்கு சம்பந்தப்பட்டவரை எதிரிகள் 9வது பிரிவு விதிவிலக்கின் கீழ் குற்றவாளி அல்ல என்று வாதாட முடியுமா? என்பதுதான் பிரச்சனை. இந்த வழக்கின் சாட்சியங்களைப் பார்க்கும்போது வாதி ஒரு வஹ்ஹாபிதான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.மேலும் வாதி தனது பிரசங்கத்தில் வஹ்ஹாபிக் கொள்கைகளான 'ரஸூலுல்லாஹ் சாதாரண மனிதர்தான், அவர்கள் பெயரை கேட்கும்போது சங்கை செய்வதும், மீலாது விழா கொண்டாடுவதும் 'பித்அத்' என்றும் தான் பேசியதாக ஒப்புக் கொள்கிறார். இது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு விரோதமானதாகும் இந்தக் கருத்துப்படி பார்த்தால் ரஸூலுல்லாஹ்வையும், அல்லாஹ்வின் அருள் பெற்ற நல்லடியார்களையும் அவமதிக்கும் நோக்கம் தெளிவாகிறது.
 
கபாட்வான்ஞச் நகரில் இஸ்லாமியர்களுக்கிடையில் இரு பிரிவு இருந்தது. மொத்த ஜனத் தொகை 6000 பேரில் 5800 பேர் சுன்னத் ஜமாஅத் கொள்கையை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள் என வாதி ஒத்துக் கொண்டார். பெரும்பான்மையானவர்கள் பேஷ் இமாமுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். வெளியூர்களிலிருந்து உலமாக்கள் வரவழைக்கப்பட்டனர். ஹதீஸ் மஜ்லிஸ்கள் தீவிரமடைந்தன. பிரச்சாரம் சூடு பிடித்ததும் வஹ்ஹாபியினர் போலீசுகக்குப் புகார் செய்தனர். ஆனால், சூழ்நிலையோ பேஷ்இமாம் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலையாகிவிட்டது.
 
இதனால் அப்பள்ளியின் முத்தவல்லியாக இருந்த ஹாஜி சுலைமான் அவர்களும் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. 16-8-68 ல் ஹாஜி சுலைமான் அவர்கள் தான் பள்ளிவாசல் முத்தவல்லி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்தினார். இரு தரப்பிலுமுள்ள சில முக்கியஸ்தர்களை போலீஸ் அதிகாரிகள் கூப்பிட்டு விசாரித்து பேஷ்இமாம் ராஜினாமா செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.
 
பேஷ் இமாம் பதவியிலிருந்து விலக்கப்பட்டதற்கான ஆதாரம்:-
வாதித் தரப்பு வக்கீலின் வாதம் என்னவென்றால், 'வாதி பேஷ்இமாம் பதவியை ராஜினாமா செய்தார். வேலை நீக்கம் செய்யப்படவில்லை. அப்படியிருக்க அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்னும் கருத்தில் எதிரிகளே பத்திரிகையில் பிரசுரித்திருப்பது பொய்யும், அவதூறுமாகும்' என்பதாகும்.
 
இதை மறுத்து எதிரி வக்கீல் சொன்னதாவது 'வாதி தொடர்ந்து பேஷ்இமாம் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. அவருக்கு எதிராக பிரச்சாரங்கள் வெளியில் பகிரங்கமாக நடைபெற்றது. பெரும்பான்மையான மக்கள் அவர் பின்னால் நின்று தொழுவதை புறக்கணித்தனர். மேலும் அவரும், அவரைச் சார்ந்தோரும் பின்பற்றும் கொள்கை தவறானது என்பத எடுத்துக்காட்ட வெளியூர்களிலிருந்து உலமாக்கள் வரவழைக்கப்பட்டனர்.
 
வன்முறை தலைதூக்க கூடிய நிலையில் காவல் நிலையத்தினர் தலையிட்டு இருதரப்பு தலைவர்களையும் அழைத்து விசாரித்து பேஷ்இமாம் கட்டாயமாக ராஜினாமா செய்யவேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. எனவே அவரது ராஜினாமா தன்னிச்சையானது அல்ல. கட்டாயத்தின்பேரில்தான் அவர் ராஜினாமா செய்தார். எனவே எதிரிகள் வேஷ் இமாம் பதிவ நீக்கம் செய்யப்பட்டார் என எழுதியது சரியே! என வாதாடினார். மேலும் அவர்கள் பிரசுரித்த செய்தி உண்மையானதுமதான் என்றும் எடுத்துக் கூறினார்.
 
வாதியின் சாட்சியத்தைக் கூர்ந்து பரீசிலிக்கும்போது வாதியானவர் தனது பதவியை கட்டாயமான் சூழ்நிலையில்தான் துறந்தார் என்று தெரிய வருகிறது. சுமூகமாக மனமுவந்து தானாக ராஜினாமா செய்ததாக இல்லை. எனவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று யாரும் எழுதுவதோ, சnhல்வதோ குற்றமாகாது. இந்த நேரத்தில் 1959ம் ஆ;டு கல்கத்தா ஹை கோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில் ஆராயப்பட்ட சட்ட நுணுக்கத்தை இங்கு கவனத்தில் கொள்வது நல்லது.
 
அதாவது ஒரு விஷயம் பொதுஜன நன்மையைக் கருதி பிரசுரிக்கப்படுமாயின் அது இப்படித்தனர் எழுதப்பட வேண்டுமென ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. எழுதப்படும் விஷயம் மட்டும் உண்மையா? இல்லையா? என்பதுதான் முக்கியம்.எழுதுகின்ற முறை எப்படியும் இருக்கலாம்.
நம் முன் நடந்த இந்த வழக்கு சம்பந்தப்பட்டவரை பேஷ்இமாம் பெரும்பான்மையான மக்களின் கட்டாயமான எதிர்ப்புகளுக்கிடையில் ராஜினாமா செய்தார் என்பதும், அவர் ஒரு தேவ்பந்தி வஹ்ஹாபி என்பதும், அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர்களையும் அவனது அடியார்களைப் பற்றியும் அவதூறு பிரச்சாரம் செய்தார் என்பதும் மிகவும் தெளிவாக எதிரிகளால் நிரூபிக்கப்பட்டு விட்டது.
 
 
'தையிபா' பத்திரிகை கட்டுரை பற்றிய தீர்ப்பு:-
 
அடுத்து நீதிபதியாகிய நான் தீர்மானிக்க வேண்டியது இந்த கட்டுரை நல்லெண்ணத்தோடு இஸ்லாமிய மக்களின் நன்மையைக் கருதி பிரசுரிக்கப்பட்டதா? என்பதுதான். இரண்டாவது எதிரி தான் அஹமதாபாத்தில் 1952ம் வருடம் தாருல் உலூம் சாஹி ஆலம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்த நோக்கமே வஹ்ஹாபிகளின் விஷமப் பிரச்சாரத்தை முறியடித்து குஜராத்தில் பரேல்வி சமூகத்தினருக்க சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையை எடுத்துச் சொல்வதற்காகத்தான் என்று கூறியுள்ளார். அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்படி இந்திய பிரஜை யாரம் தனது மதக் கொள்கையை பிரச்சாரம் செய்யலாம்.
 
அதே நேரத்தில் தத்தமது மதக் கொள்கைக்கு பங்கம் வரும்விதத்தில் யாரும் தாக்கி பேசினால் அவர்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டலாம். தற்போது இந்த நிறுவனம் ஒரு பொது ஸ்தாபனமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து 'தையிபா' இதழ் வெளியாகிறது. இதன் பிரதிகள் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் அதிகமாக விரும்பி படிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய கட்டுரையானது அந்த நிறுவனத்தின் முதல்வர் ஜஹாங்கீர் மியா என்பவரால் செய்திகள் நேரடியாக சென்று சேகரிக்கப்பட்டு அது உண்மையானதுதான் என் அறிந்த பிறகு தங்களை சார்ந்தேரின் நலனைக் கருதி பிரசுரிக்கப்பட்டது என வாதம் எழுப்பப்பட்டது.
 
வாதி பேஷ் இமாமும் தான் முதல்வர் ஜஹாங்கீர் மியா இருந்த வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து உரையாடியதாக ஒத்துக் கொள்கிறார். ஆனால் அது ஒரு கோஷ்டியினரின் நிர்பந்தத்தால் எற்பட்ட சந்திப்பு என்கிறார். ஆனால் ஜஹாங்கீர் மியா தன்னிடம் ஒரே ஒரு கேள்வி கேள்வி கேட்டதாகவும் அதற்கு தான் தெளிவாகவும், விரிவாகவும் பதில் சொன்னதாகவும் சொல்கிறார். இதிலிருந்து சர்ச்சைக்குரிய கட்டுரையானது கவனக் குறைவினாலும் உண்மைக்குப் புறம்பாகவும் பிரசுரிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது.
 
இந்த வழக்கில் எதிரிகள் தரப்பில் கல்லூரி முதல்வர் ஜஹாங்கீர் மியா சாட்சியாக விசாரிக்கப்படவில்லைதான். ஆனால் முதல்வரை சந்தித்தது உண்மை என வாதி ஒத்துக் கொண்டதால் அவரை கோர்ட்டில் விசாரிக்கத் தேவையில்லை. வாதியின் ஒப்புதலிலிருந்து முதல்வர் வாதியிடம்இது சம்பந்தமாக உரையாட வந்தது உண்மைதான் என்று தெளிவாகிறது. எனவே எதிரிகள் பிரசுரித்த கட்டுரையானது உண்மையான சம்பவத்தை பற்றியதுதான் என்பதை அவர்கள் நிரூபித்து விட்டார்கள்.
 
கபாட்வாஞ்ச் ஊரில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பரேலி பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் எதிரிகள் பின்பற்றும் கொள்கையை ஆதரிப்பவர்கள் என்பதையும் வாதி ஒத்துக் கொண்டுள்ளார். இந்த பிரிவினர் பழங்கால வழி முறைகளைப் பின்பற்றக் கூடியவர்கள். தேவ்பந்திகளோ சன்மார்க்கத்தில் நவீன கொள்கைகளை புகுத்துபவர்கள். அவர்கள் வஹ்ஹாபிக் கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள். பரேலி பிரிவினரும் தேவ்பந்த வஹ்ஹாபிகளும் கருத்து வேறுபாட்டால் ஒருவரையொருவர் எதிர்த்து கொண்டிருந்தார்கள்.
 
கபாட்வாஞ்ச் ஊரில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பரேலி பிரிவை சேர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் நலனைக் கருதி'தையிபா'வில் கட்டுரை வெளியிடப்பட்டது. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது பேஷ் இமாம் பள்ளியில் இவர்களுக்கு விரோதமான கொள்கையை பிரச்சாரம் செய்வதை இவர்கள் எப்படி தடுக்காமல் இருக்க முடியும்? மேலும் வாதியின் வாக்குமூலத்தை ஆராயும்போது முதலில் தான் 'தேவ்பந்தி வஹ்ஹாபி' இல்லை என்கிறார். பின்னால் தான் தேவ்பந்தி என்றும, அந்தக் கொள்கையும் வஹ்ஹாபிக் கொள்கையும் ஒன்றுதான் என்கிறார்.
 
ஆகையால் சுன்னத் ஜமாஅத் போர்வையில் வாதி பேஷ் இமாம் தனது வஹ்ஹாபிக் கொள்கையை பிரச்சராம் செய்து வந்திருக்கிறார். எனவே அவரை மக்களுக்கு அடையாளம் காட்டி அவரை பள்ளியிலிருந்து விரட்ட வேண்டிய கட்டாய சூழ்நிலை பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டது. பெரும்பான்மை மக்களின் பத்திரிகையான 'தையிபா'வானது உண்மை சம்பவத்தை மக்கள் நலன் கருதி வெளியிட்டது. மேலும் நல்லெண்ணத்துடன் முதல்வர் ஜஹாங்கீர் மியா என்பவரை அனுப்பி விசாரித்த பின்னர்தான் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இ.த.ச.499 பிரிவு(1)9 வுடைய பலன் எதிரிகளுக்கு உண்டு. எனவே இதற்கு முன் சுட்டிக்காட்டப்பட்ட 1966ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படியும் எதிரிகள் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபித்த விட்டார்கள்.
 
எனவே எதிரிகள் குற்றவாளிகள் அல்ல என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. வாதி தரப்பிலும் அட்வகேட் அவர்கள் பல தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதம் செய்தார். ஆனால் அந்த தீர்ப்புகளின் முழு விபரங்களையும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என கருதுகிறேன். குறிப்பாக சொல்லப்போனால் அந்த வழக்குகளின் சாராம்சங்களும், இந்த வழக்கின் விபரமும் வேறுவேறதானதாக இருக்கிறது.
 
ஆகவே வாதிக்கு அவைகள் எந்தவிதத்திலும் உபயோகமில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் எதிரிகள் தாங்கள் நல்லெண்ணத்துடன் பொதுஜன நன்மை கருதி தீர விசாரிகத்து உண்மை சம்பவத்தை வெளியிட்டதாக நிரூபித்துவிட்டார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில்(பேஷ் இமாம்) வாதி மேல் விரோதமோ, குரோதமோ கிடையாது. அவரது வஹ்ஹாபிக் கொள்கையைதான் கண்டனம் செய்து எழுதியுள்ளார்கள்.
 
இன்னும் வாதித் தரப்பில் அட்வகேட் அவர்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நான்கு தீர்ப்புகளை சுட்டிக் காட்டி வாதம் செய்தார். அதில் ஒரு தீர்ப்பை பார்வையிட்டதில் உண்மையல்லாத செய்தியை கெட்ட எண்ணத்தோடு பிரசுரம் செய்திருக்கிறார்கள். எனவே அ;த தீர்ப்பை இந்த வழக்குக்காக மேற்கோள் காட்டுவது சரியல்ல. ஏனென்றால் இந்த வழக்கில் பிரசுரமான செய்தி உண்மையானது. மற்ற மூன்று தீர்ப்புகளும் சில் கேஸ் சம்பற்தப்பட்டவைகளாக தெரிகிறது. அந்த தீர்ப்புகளின் சட்ட நுணுக்கம் இந்த வழக்கோடு ஒப்பிட தகுந்தவையல்ல என்பதால் அவைகளையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.
 
ஆகையால் எதிரிகள் தங்கள் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரை உண்மையானது-நல்லெண்ணத்தோடு பொதுஜன நலன் கருதி பிரசுரிக்கப்பட்டது என்பதையும் நிரூபித்து விட்டார்கள். எனவே இந்திய தண்டனைச் சட்டம் 49 பிரிவு(1)9-வது ஷரத்துக்களின்படி அவர்கள் வெளியிட்ட செய்தி அவதூறானது ஆகாது  என தீர்ப்பளித்து எதிரிகள் இருவரையும் விடுதலை செய்கிறேன்'.
முற்றும்.

நன்றி- http://sufimanzil.org/
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment