குஜராத் அஹமதாபாத் கபாடவாஞ்ச் நீதிமன்ற தீர்ப்பு- கிரிமினல் கேஸ் எண்: 1129 of 1969 Offence under section 500 of I.P.C.
விடுதலை என தீர்ப்பு அளிக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வழக்கை வெற்றிகரமாக நடத்திய அட்வகேட் ஜனாப்.காதிரி அவர்களுக்கும் வழக்கின் எதிரி(ஸூன்னி)களுக்கும் மலர் மாலைகள் அணிவித்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொண்டார்கள். பின் நீதிமன்றத்திலிருந்து பெரும் ஊர்வலம் ஒன்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடந்து ஜும்மா மஸ்ஜிதை வந்து அடைந்தது. மஸ்ஜிதில் அனே பெரியார்கள் கலந்து பேருரை நிகழ்த்தினார்கள். மேலும் வழக்கிலே வெற்றி ஈட்டி தந்த இறைவனுக்கு நன்றியும் செலுத்தப்பட்டது.
அறிமுகம்.
குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் நகரில் 1953 ம் ஆண்டு 'தாருல் உலூம் ஷாஇ ஆலம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனமானது ஜமல்பூர் சாலையில் அமைந்திருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகமாகும். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் இது இஸ்லாமிய கொள்கை விளக்கங்களை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தனர்கடந்த பல ஆண்டுகளாக இஸ்லாமிய கலாச்சாரத்தையும், அறிவியலையும் நம் மக்களிடையே பரப்பி வருகிறார்கள்.
ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இஸ்லாமியஇலக்கியங்களை கற்று தேர்ந்து 'ஹாபிஸ்','மௌலவி','காரி' இன்னும் இது போன்று பல பட்டங்கள் பெற்று இங்கிருந்து வெளியேறுகிறார்கள்.
படித்தவருக்கும், பாமரர்க்கும், அறிஞருக்கும், ஏழை, பணக்காரர்களுக்கும் மற்றும் எல்லாவிதமான மக்களுக்கும் இது ஓர் ஆன்மீக ஒளி வீசும் கலைக்கூடமாக திகழ்ந்து வருகிறது.
மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க இங்கு அனுபவமிக்க கலாஞானம் நிறைந்த சங்கைமிகு மௌலவிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு ஃபத்வா அளிப்பதற்கென்றே தனிப் பிரிவு ஒன்று இயங்குகிறது. நாள்தோறும் இங்கு நேரிலும் தபால் மூலமாகவும், உள்நாட்டிலிருந்தும் கடல் கடந்த நாடுகளிலிருந்தும் கேட்கப்படும் ஃபத்வாக்களுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டேயிருக்கின்றன. ஆண்டுதோறும் நிர்வாகச் செலவு ரூ70 ஆயிரம் வரை ஆகிறது. எந்தவிதமான நிலையான வருமானமும் இல்லாமல் நன்கொடையைக் கொண்டே அல்லாஹ்வின் அருளால் இயங்கி வருகிறது.
முன்னுரை
அன்புள்ள சுன்னீ முஸ்லிம்களே!
இந்திய வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்றத்திலே 'ஸுன்னிகள்','வஹ்ஹாபிகளி'ன் கொள்கைகள் தெளிவாகவும், விரிவாகவும் ஆணித்தரமாகவும் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதத்தின் முடிவில் இறை அருளால் வஹ்ஹாபிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது. 'ஸூன்னி முஸ்லிம்களின் கொள்கை வென்றது.
'தாருல் உலூம் ஷாஇ ஆலம்' ஸுன்னி முஸ்லிம்களின் கலைக்கூடமாகும். இது குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் நகரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு இலவசமாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஸுன்னி பிரிவின் கொள்கைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது ஒரு டிரஸ்ட் ஆகும்.இங்கிருந்து குஜராத் மொழியில்'தையிபா' என்ற பெயரில் ஓர் இஸ்லாமிய மாத இதழ் வெளிவருகிறது. அதில் இஸ்லாமிய மக்களுக்குத் தேவையான அறிவு விளக்கங்கள் அனேகம் பிரசுரிக்கப்படுகின்றன.
1968ம் ஆண்டு டிசம்பர் இதழில் காயிரா மாவட்டத்தின் கபாட்வாஞ்ச் என்னும் ஊரில் அமைந்திருக்கும் ஜீம்ஆ மஸ்ஜிதில் பணியாற்றி வந்த பேஷ் இமாம் ஜனாப் குலாம் ஹுஸைன் தார்ஸோத் அவர்களைப் பற்றி ஒரு செய்தி பிரசுரமாயிருந்தது. அந்த இதழில் அவரைப் பற்றி 'வஹ்ஹாபி தேவ்பந்தி' என்று விவரிக்கபப்ட்டிருந்தது. மேலும் தேவ்பந்தி வஹ்ஹாபிக்ள பகிரங்கமாக மேன்மைக்கும், சங்கைக்குரிய நமது நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார்களென்றும், கபாட்வாஞ்ச் முஸ்லிம்கள் அந்த மௌலவியை பள்ளியை விட்டே விரட்டி விட்டார்களென்றும் இன்னும் அந்த மௌலவியின் நடவடிக்கையை பற்றியும், வஹ்ஹாபிகள் கொள்கை சம்பந்தமாகவும செய்திகள் வெளிவந்தன.
எனவே ஜனாப் மௌலி குலாம் ஹுஸேன் அவர்கள் கபாட்வாஞ்ச் முதல் வகுப்பு குற்ற இயல் நீதிமன்றத்தில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 500ன் கீழ் 22-5-69-ல் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் தன்னை அவமானப்படுத்த வேண்டுமென கெட்ட எண்ணத்துடன் தாருல் உலூமின் பொது செயலாளராகிய ஹாஜி சுலைமான் இப்றாகீம், 'தையிபா' இதழின் ஆசிரியராகிய செய்யிது ஆசாத் அலி டாக்டரும் செயல்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு அந்த நீதிமன்றத்தில் 1129/69 என்ற நம்பரில் பதிவாக்கப்பட்டது. அதாவது 1969-ம் ஆண்டில் அந்த நீதிமன்றத்தில் அது 1129-வது வழக்காகும்.
இந்த வழக்கில் வாதி குலாம் ஹுஸேன் தனது சார்பில் வாதாட அனுபவமிக்க வழக்கறிஞர் திரு.ராகின்தாஸ் வி. காந்தி என்பவரை நியமனம் செய்திருந்தார். எதிரிகள்(சுன்னீகள்) தங்களுக்காக அஹமதாபாத்தைச் சார்ந்த பிரபல வழக்கறிஞர் ஜனாப்.உஸ்மான்பாய் காதிரி எம்.ஏ.எல்.எல்.பி. அவர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜனாப்.காதிரி அவர்கள் தாருல் உலூம் நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக அதற்குமுன் ஐந்து ஆண்டுகள் சிறப்பு பணியாற்றி வந்திருக்கிறார்கள்.
இந்த வழக்கில் வாதி குலாம் ஹுஸேன் அவர்களை நமது அட்வகேட் ஜனாப் காதிரி அவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக குறுக்கு விசாரணை செய்தது மொத்தம் 12 மணி நேரமாகும். குறுக்கு விசாரணையின்போது நமது அட்வகேட் அவர்கள் குலாம் ஹுஸேன் மௌலவியிடம் தேவ்பந்தியாக்களின் உருது,பார்ஸி,அரபி புத்தகங்களை காட்டி கேள்விகள் கேட்டார்கள். மேலும் தேவ்பந்தி உலமாக்கள் ரசூலுல்லாஹ் பற்றியும், அவ்லியாக்கள் பற்றியும் குறை கூறி எழுதியுள்ள பற்றி குறிப்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.இறுதியாக அவர் தான் தேவ்பந்தியரின் கொள்கைகளையும், தத்துவ விளக்கங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும் அதனால் தன்னை 'தேவ்பந்தி' என அழைப்பதில் தனக்கு ஆட்சேபணையில்லை என்றும் ஒப்புக் கொண்டார்.
ஒவ்வொரு வாய்தாவிற்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வழக்கு மன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். வழக்கு நடந்த இடமான கபாட்வாஞ்ச் நகர் காயிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.அதாவது அஹமதாபாத் நகரிலிருந்து 64 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.
மேன்மைக்குரிய நீதிபதி திரு.கிருஷ்ணபண்டிட் அவர்கள் தனது தீர்ப்பை 27-2-1970 அன்று கூறினார்.எதிரிகள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். அத்தோடு மௌலவி குலாம் ஹுஸேன் ஒரு வஹ்ஹாபி தேவ்பந்தி என்றும் அவர் சுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் வஹ்ஹாபிக் கொள்கைகளை பிரச்சாரம் செய்தது உண்மைதான் என தமது தீர்ப்பில் கூறியுள்ளார். இது 'ஸுன்னி' முஸ்லிம்களுக்கு இறைவன கொடுத்த மாபெரும் வெற்றியாகும். ஒரு மௌலவி, தன்னை வஹ்ஹாபி என்று அவமானபடுத்திவிட்டார்கள் என நீதி மன்றத்திலே வழக்கு தொடர்ந்து இறுதியாக சாட்சிகள் மூலமாக அவர் 'வஹ்ஹாபி'தான் என நிரூபிக்கப்படடு, உயர் நீதிமன்றத்திலும் அந்த தீர்ப்பு சரிதான் என ஊர்ஜிதம் செய்யப்பட்டது,'ஸுன்னி' முஸ்லிம்களாகிய நாம் தான் இந்த வழக்கின் அகமியத்தை அறிந்து மகிழ முடியும்.
27-2-1970-ம் தேதி தீர்ப்பு நாளன்று காத்லால், மாஹுதா, புரோக், பரோடா, ஆனந்த், சௌராஷ்டிரா, அகமதாபாத் இன்னும் குஜராத் மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்த வழக்கு இஸலாமயிர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணியது. இங்கிலாந்து,ஆப்பிரிக்கா முதலிய வெளிநாடுகளிலிருந்தும் இந்த வழக்கின் முடிவு பற்றி இஸ்லாமியர்கள் ஆவலோடு விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
விடுதலை என தீர்ப்பு அளிக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வழக்கை வெற்றிகரமாக நடத்திய அட்வகேட் ஜனாப்.காதிரி அவர்களுக்கும் வழக்கின் எதிரி(ஸூன்னி)களுக்கும் மலர் மாலைகள் அணிவித்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொண்டார்கள். பின் நீதிமன்றத்திலிருந்து பெரும் ஊர்வலம் ஒன்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடந்து ஜும்மா மஸ்ஜிதை வந்து அடைந்தது. மஸ்ஜிதில் அனே பெரியார்கள் கலந்து பேருரை நிகழ்த்தினார்கள். மேலும் வழக்கிலே வெற்றி ஈட்டி தந்த இறைவனுக்கு நன்றியும் செலுத்தப்பட்டது.
பரோடாவிலிருந்து வெளியாகும் மற்றொரு இஸ்லாமிய ஏடான 'அல்ஹாதி'யிலும் இதே செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அதன் மீதும் பேஷ் இமாம் அவர்கள் இதே நீதிமன்றத்தில் தனி வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் வரிசை C.C.1130/69 ஆகும். இந்த வழக்கிலும் பேஷ் இமாம் அவர்கள் 8 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பும் அதே நாளில் அதாவது 27-2-197ல் தான் சொல்லப்பட்டது. இரு வழக்குகளிலும் வெற்றி ஸுன்னி முஸ்லிம்களுக்கே!
இந்த வழக்கின் விபரங்கள் அனைத்தும் குஜராத் மாநிலத்திலிருந்து வெளியாகும் அனேக நாடுகளிலும் குறிப்பாக 'சான்டேஷ்ஈ டூஜன்ஸாட்டா' போன்ற பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தது. 'தையிபா' பத்திரிகையிலும் மிக விரிவாக பிரசுரிக்கப்பட்டது. இருப்பினும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த வழக்கின் தீர்ப்பை குஜராத்திலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டுமென வேண்டினர். உள்நாட்டிலும்,வெளிநாட்டிலிருந்தும பல நேயர்கள் இந்த விண்ணப்பம் விடுத்திருந்தனர். எனவே முதன் முதலில் C.C.1130/69 என்ற வழக்கின் தீர்ப்பு குஜராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவில் வெளிவந்தது. ஸுன்னி முஸ்லிம்களால் நாடெங்கிலும் இது பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டது. மேலும் அயல்நாடுகளிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை என ஆயிரக்கணக்கான அன்பர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எனNவு எங்களின் நல் ஆதரவாளர்களுக்காகவும், எங்கள் மீது பரிவும், பாசமும் கொண்டவர்களுக்காகவும் குறிப்பாக ஸுன்னி முஸ்லிம்களின் நன்மையைக் கருதியும் C.C.1129/69 வழக்கு தீர்ப்பு நகலை இதோ ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம். இஸ்லாமிய மக்களுக்கு ஸுன்னி முஸ்லிம்களின் கொள்கைகளையும் தத்துவார்த்தங்களையும் எடுத்தியம்புவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பென கருதி இதை பிரசுரிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்வு அடைகிறோம். C.C.1130/69 என்ற வழக்கின் தீர்ப்பும் இதே மாதிரி இருப்பதால் C.C.1129/69 என்ற வழக்கின் தீர்ப்பை மட்டும் இங்கே தருகிறோம்.
மௌலவி ஜனாப். குலாம் ஹுஸேன் அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ;அப்பீல்' தாக்கல் செய்தார்கள். அது அங்கு ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு(அவர்களுக்கு)'தேவ்பந்தி'களுக்கு மற்றொரு மரண அடியாகும்.
நாங்கள் ஈடுபட்டிருந்த அறப்போரில் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பலவிதங்களிலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்த பல்லாயிரக்கணக்கான ஸுன்னி முஸ்லிம்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டவர்களாவோம். மேலும் உண்மையான இஸ்லாமயி கொள்கை கொடிகட்டி பட்டொளி வீசி பறக்க உதவிய அவர்களுக்கு எங்கள் ஆழிய நன்றி!
இங்கனம்,
1-9-1971 ஹாஜி சுலைமான் இப்றாஹிம்
அஹமதாபாத் ஸுன்னி,ஹனபி,காதிரி,ராசவி,
No comments :
Post a Comment