கைர் முகல்லிது வஹாபிய அறிஞர் சுலைமான் பின் சஹ்மான் அந் நஜ்தி எழுதிய நூலை உர்துவில் சுதந்திரம் பெறுவதற்கு முன் உள்ள இந்தியாவில் பிரசித்தி பெற்ற வஹாபிய அறிஞர் இஸ்மாயில் கஜ்னவி மொழிபெயர்த்துள்ளார் . (தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளும் அவர் மீது பெருமதிப்பு வைத்து உள்ளனர் .)
அவர் எழுதுகிறார்
" அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் உதவி தேடுபவர் முஷ்ரிக் . அவர்கள் செய்வது ஷிர்க் ஏ அக்பர் .அவ்வாறு உதவி கோருபவர்கள் ,தாங்கள் உதவி தேடும் நபர் நேரடியாக உதவி அளிப்பதில்லை , அல்லாஹ் தான் அவர்களது கோரிக்கையை கேட்கின்றான் (அல்லது அல்லாஹ் அவர்களுக்கு உதவ சக்தி அளித்துள்ளான் ) என்று எண்ணினாலும் ,அது ஷிர்க் தான் .
இத்தகைய கொள்கையுடையவர்களைக் கொல்வது ஆகும் ( ஐசே லோகோன் கே கூன் பஹானா ஜாயிஸ் ஹை ) ,இன்னும் அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும் கூடும் ( அவ்ர் உன்கே அம்வல் கோ லூட் லேனா ஜாயிஸ் ஹை ) "
[ நூல் - தொஹ்பா ஏ வஹாபியா ,பக்கம் 59]
குறிப்பு : வஹ்ஹாபிகள் இந்த நூலைப் பதிப்பிப்பதை நிறுத்தி விட்டனர் . வஹ்ஹாபிகள் தங்களின் அறிஞர்களே தங்களை 'வஹ்ஹாபி ' என்று அழைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
இது ஏதோ இந்த வஹ்ஹாபி உலமா அறியாமல் சொல்லி விட்டார் என்று வாசகர்கள் கருதி விட வேண்டாம் . வஹ்ஹாபிய கொள்கைகளின் மூல கர்த்தாவான முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தி அல் தமீமி இதே கொள்கையுடையவன் என்பதையும் அதையே தமது காலத்தில் செயலாற்றினான் என்பதையும் அன்றைய மக்கா முப்தி அஷ்ஷைகு அஹ்மத் ஜைனி தஹ்லான் மக்கி அல் ஷாபியி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் எழுதிய 'பித்னத்துல் வஹ்ஹாபியா ' என்ற நூலிலும் காணலாம் . இந்த அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் வம்சா வழியினர் தான் இன்றைய நவீன சவூதி அரேபியாவின் தலைமை மார்க்க முப்திகளாக தொடர்கின்றனர் !
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் இஸ்மாயில் திஹ்லவி இதே கொள்கையை எழுதுகிறார் ,
"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[நூல் - தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] இஸ்மாயில் திஹ்லவியின் உஸ்தாதான சையத் அஹமத் ரேபரேலியும் இதே கொள்கையுடையவர் தான் . அவர் தனது காலத்தில் தமது படையுடன் வடக்கு மாகாணத்தில் சென்ற பொழுது , கட்டிடம் எழுப்பப்பட்ட கப்ருகளை இடித்தார் என்றும் ,அங்குள்ள பெண்களை பலவந்தப் படுத்தி திருமணம் செய்தார்கள் என்றும் வரலாற்றில் பதிவாகி உள்ளது .
No comments :
Post a Comment