Thursday, 13 August 2015

தக்வியத்துல் ஈமான் மீது தேவ்பந்திகளின் கேள்வி

அல்லாமா அமீன் ஒகார்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தமது நூலில், இஸ்மாயில் தெஹ்லவி எழுதிய தக்வியத்துல் ஈமான் நூலில் உள்ள வாக்கியத்தை குறிப்புகளுடன் எழுதியுள்ளார்கள் ,

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் கேள்வி :

நீங்கள் அடைப்புக்குறியில் உள்ள சொற்றொடர் மூல நூலில் எங்கு உள்ளது என்று தெரிவிக்க இயலுமா ?

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பதில் :

பக்கம் 20,தக்வியத்துல் ஈமான்

Taqwiyathul Iman,Pg 20
"ஹர் மக்லூக் படா ஹோ யா சோடா வோ அல்லாஹ் கீ ஷான் கே ஆகே சமர் ஸே பீ ஜலீல் ஹை "

மொழிபெயர்ப்பு :
 "எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த அல்லது மிக சிறிய  படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கேள்வி யாதெனில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் என்று அடைப்புக்குறிக்குள் எவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள் ???

தக்வியத்துல் ஈமானின் நூலின் ஆசிரியர் இஸ்மாயில் தெஹ்லவி வஹ்ஹாபி
தமது அதே நூலில் சில பக்கங்கள் கழித்து தாமே 'உயரிய படைப்பு '  என்பதற்கு விளக்கம் அளிக்கின்றார் .

Taqwiyathul Iman,Pg 80

" யானி இன்சான் ஆபஸ் மே சப் பாய் ஹை . ஜோ படா புஜுர்க் ஹை வொஹ் படா பாய் ஹை ,தோ உஸ்கி படே பாய் கே ஹி தசீம் கீஜியே அவ்ர் மாலிக் சப் கா அல்லாஹ் ஹை பண்தகீ உஸ்கோ சாகியே .இஸ் ஹதீஸ் சே மாலும் குஆ கி அவ்லியா வ அன்பியா ,இமாம் வ இமாம் சாடே, பீர் வ ஷஹீத் யானி ஜிதானே அல்லாஹ் கே முகர்ரிப் பந்தே ஹை ,வ சப் இன்சான் ஹி ஹை அவ்ர் பந்தே ஆஜிஷ் அவ்ர் ஹமாரே பாய் ஹை . மகர் அல்லாஹ் நே இன்கோ பதாயி தி ,வோ படே பாய் ஹுயே . ஹம் கோ இன்கீ பர்மபர்தாரீ கா ஹுக்ம் கியா ஹை . ஹம் இன்சே சோடே ஹை ,தோ இன்கே தஜ்நீம் இன்சானோன் கி சீ கர்னீ ஹை ". 

மொழிபெயர்ப்பு : 
         அதன் பொருள் எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் . அவர்களில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர் மூத்த சகோதரனைப் போன்றவர் .
அதனால் அவருக்கு மூத்த சகோதரர் அளவுக்கே மரியாதை செய்ய வேண்டும் ,அல்லாஹ் தான் எல்லா படைப்புகளின் உரிமையாளன் ,இன்னும் அவனையே நாம் வணங்க வேண்டும் . இந்த ஹதீதின் மூலம் நாம் அறிகின்றோம் அவ்லியாக்களும் ,நபிமார்களும் ,இமாம்களும் அவர்களின் மக்களும் ,ஷைகுமார்களும் ஷுஹதாக்களும் ,அதாவது அல்லாஹ்வின் புறம் நெருக்கமானவர்கள் எல்லோரும் மனிதர்கள் ,சக்தியற்றவர்கள் இன்னும் நமது சகோதரர்கள் .ஆனால் அல்லாஹ் அவர்களை உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான் /அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான் ,அவர்கள் நமது மூத்த சகோதரரைப் போன்றவர்கள் . நாம் அவர்களுக்கு கீழ்படியுமாறு கட்டளை இடப்படுள்ளோம் . நாம் அவர்களை விட குறைவான அந்தஸ்த்தில் உள்ளோம் , எனவே இவர்களுக்கு  மனிதர்களைப் போன்றே மரியாதை செலுத்த வேண்டும் .

இதன் மூலம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடைய உலமாக்கள் 'உயரிய படைப்பு ' என்பதற்கு நபிமார்கள் என்று பொருள் கொள்வது தக்வியத்துல் ஈமான் ஆசிரியரின் சொந்த வார்ததைகளில் இருந்தே எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாக விளங்கும் .

நமது சத்திய உலமாக்கள் எந்த மோசடியும் செய்யவில்லை .தவறான மொழிபெயர்ப்பும் செய்யவில்லை .அவர்கள் அதே புத்தகத்தில் இருந்த விளக்கத்தை இங்கு தெளிவுபடுத்தியுள்ளனர் .

நாம் இங்கு ஒரு ஆதாரம் தான் காட்டியுள்ளோம் . தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் முன்னோடி இஸ்மாயில் தெஹ்லவி தமது நூலான தக்வியதுல் ஈமானின் பல இடங்களில் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் ,வலிமார்கள் என்று விளக்கம் தருகின்றார் .

மேலும் இங்கு 'சமார் '  என்ற வார்த்தையின் அர்த்தம் செருப்பு தைப்பவரைக் குறிக்கும் . எனினும் உர்து மொழியை அறிந்த மக்கள் ஒரு சொல்லை எங்கு ,எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதைப் பொறுத்து பொருள் வேறுபடும் என்று அறிவர் . பொதுவாக சமார் என்ற வார்த்தை ஒருவரை அவமரியாதை /இழிவுபடுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது . நீங்கள் உங்கள் நண்பரை நோக்கி ஏன் இவ்வாறு செருப்பு தைக்கும் செம்மானைப் போல் அழுக்காக உள்ளாய் என்று வினவினால் ? உங்கள் பகுதியில் உள்ள செருப்பு தைப்பவர் எவ்வளவு செல்வந்தராய் இருந்தாலும் உங்கள் நண்பர் நீங்கள் அவரை இழிவுபடுத்தவே இவ்வாறு சொன்னீர்கள் என்பார் .

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தக்வியத்துல் ஈமான் நூலை வாசித்தறியாத தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் வேண்டுமானால் இப்படி கேள்விகள் கேட்கலாம் ;
ஆனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தக்வியத்துல் ஈமானை வாசித்து உள்ளார்கள் என்பதோடு ,எங்கே எப்படி சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறிந்தே வைத்துள்ளனர் .

Related Posts Plugin for WordPress, Blogger...

4 comments :

  1. ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி ( ரஹ் )அவர்கள் படைப்புகள் என்று பொதுவாக சொன்னதை திரித்து அபாண்டமாக பழிசுமத்துகிறார்கள் பொதுவான அர்த்தத்தில் உள்ளதை வெளிப்படையான ஆதாரமின்றி குறிப்பாக்குவது அறியாமையாகும்.
    இதற்கு பரேலவியர்களின் வாதத்தின் மூலமே மறுப்பு:
    பரேலவியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபல்யமான அறிஞர் அஷ்ரப் ஸய்யாலு கூறுகிறார்: ﺍﯾﮏ ﮨﮯ ﻋﻤﻮﻣﯽ ﻃﻮﺭ ﭘﺮ ﻣﺨﻠﻮﻕ ﮐﻮ ﺫﻟﯿﻞ ﮐﮩﻨﺎ ﺍﻭﺭ ﺍﯾﮏ ﺧﺎﺹ ﻃﻮﺭ ﮐﺴﯽ ﺷﺨﺼﯿﺖ ﮐﺎ ﻧﺎﻡ ﻟﮯ ﮐﺮ ﺍﺳﮯ ﺫﻟﯿﻞ ﮐﮩﻨﺎ ﺗﻮ ﻋﻤﻮﻡ ﺍﻭﺭ ﺗﺨﺼﯿﺺ ﮐﯽ ﺍﻧﺪﺭ ﻓﺮﻕ ﻭﺍﺿﺢ ﮨﮯ
    கருத்து: பொதுவாக சொல்வதற்கும், குறிப்பிட்டு சொல்வதற்கும் மத்தியில் மிகப்பெரிய வேறுபாடு வித்தியாசம் உள்ளது. ஆக அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையின் மூலம் இஸ்மாயில் ஷஹீத்( ரஹ்) அவர்கள் பொதுவாக சொன்னதை குறிப்பாக்குவது என்ன நியாயம்?

    ReplyDelete
  2. " யானி இன்சான் ஆபஸ் மே சப் பாய் ஹை . ஜோ படா புஜுர்க் ஹை வொஹ் படா பாய் ஹை ,தோ உஸ்கி படே பாய் கே ஹி தசீம் கீஜியே அவ்ர் மாலிக் சப் கா அல்லாஹ் ஹை பண்தகீ உஸ்கோ சாகியே .இஸ் ஹதீஸ் சே மாலும் குஆ கி அவ்லியா வ அன்பியா ,இமாம் வ இமாம் சாடே, பீர் வ ஷஹீத் யானி ஜிதானே அல்லாஹ் கே முகர்ரிப் பந்தே ஹை ,வ சப் இன்சான் ஹி ஹை அவ்ர் பந்தே ஆஜிஷ் அவ்ர் ஹமாரே பாய் ஹை . மகர் அல்லாஹ் நே இன்கோ பதாயி தி ,வோ படே பாய் ஹுயே . ஹம் கோ இன்கீ பர்மபர்தாரீ கா ஹுக்ம் கியா ஹை . ஹம் இன்சே சோடே ஹை ,தோ இன்கே தஜ்நீம் இன்சானோன் கி சீ கர்னீ ஹை ".

    மொழிபெயர்ப்பு :
    அதன் பொருள் எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் . அவர்களில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர் மூத்த சகோதரனைப் போன்றவர் .
    அதனால் அவருக்கு மூத்த சகோதரர் அளவுக்கே மரியாதை செய்ய வேண்டும் ,அல்லாஹ் தான் எல்லா படைப்புகளின் உரிமையாளன் ,இன்னும் அவனையே நாம் வணங்க வேண்டும் . இந்த ஹதீதின் மூலம் நாம் அறிகின்றோம் அவ்லியாக்களும் ,நபிமார்களும் ,இமாம்களும் அவர்களின் மக்களும் ,ஷைகுமார்களும் ஷுஹதாக்களும் ,அதாவது அல்லாஹ்வின் புறம் நெருக்கமானவர்கள் எல்லோரும் மனிதர்கள் ,சக்தியற்றவர்கள் இன்னும் நமது சகோதரர்கள் .ஆனால் அல்லாஹ் அவர்களை உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான் /அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான் ,அவர்கள் நமது மூத்த சகோதரரைப் போன்றவர்கள் . நாம் அவர்களுக்கு கீழ்படியுமாறு கட்டளை இடப்படுள்ளோம் . நாம் அவர்களை விட குறைவான அந்தஸ்த்தில் உள்ளோம் , எனவே இவர்களுக்கு மனிதர்களைப் போன்றே மரியாதை செலுத்த வேண்டும் .

    இதன் மூலம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடைய உலமாக்கள் 'உயரிய படைப்பு ' என்பதற்கு நபிமார்கள் என்று பொருள் கொள்வது தக்வியத்துல் ஈமான் ஆசிரியரின் சொந்த வார்ததைகளில் இருந்தே எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாக விளங்கும் .

    நமது சத்திய உலமாக்கள் எந்த மோசடியும் செய்யவில்லை .தவறான மொழிபெயர்ப்பும் செய்யவில்லை .அவர்கள் அதே புத்தகத்தில் இருந்த விளக்கத்தை இங்கு தெளிவுபடுத்தியுள்ளனர் .

    ReplyDelete
    Replies
    1. ஒரே புத்தகத்தில் என்றாலும் வேவ்வேறு இடம் அல்லவா ஒரு இடத்தில் ஒரு பொருளை நாடுவது மற்ற இடத்திலும் அதுதான் கநாடப்படுகிறது என்று கொள்ள முடியாதல்லவா எனவே இது அவர்கள் மீது சுமத்தும் பழிதான் என்பதை அறியவும்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete