Wednesday, 26 August 2015

தேவ்பந்தும் பித்அத்தும் !

இன்னல்களின் போது சங்கையான கத்முல் புஹாரி ஷரீப் நடத்துவது !

கேள்வி  :  
           இன்னல்களின் போது கத்முல்( முழுமையாக ஓதுவது )  புஹாரி ஷரீப் ஓதுவது பித் அத்தா ,இல்லையா ?  ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (முதல் மூன்று நூற்றாண்டுகளில்  வாழ்ந்த ) உலமாக்களின் காலத்தில் இது நிகழ்ந்ததாக ஆதாரம் உள்ளதா ?

பதில் :  ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
     
        புஹாரி ஷரீப் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தொகுக்கப்படவில்லை ,எனினும் அதை இன்னல்களின் பொழுது முழுமையாக ஓதுவது (ஆரம்பம் முதல் இறுதி வரை) ஓர் நல் அமல் ,ஏனெனில் திக்ரின் பின் ஓதும் துஆ அங்கீகரிக்கப்படும் .இந்த செயலின் அடிப்படை ஷரியத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது ,இது பித் அத் அல்ல .

Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi


வாழ்த்துக்கள் எனது தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்துக்கு வக்காலத்து வாங்கும் எனது நண்பர்களுக்கு !

இதை தான் ' மாமியார் உடைத்தால் மண்குடம் ,மருமகள் உடைத்தால் பொன்குடம் ' என்று சொல்வர் .

இவர்கள் இந்த செயலை நடத்த ஒரே காரணம் பணம் பறிக்கவே அன்றி வேறில்லை . நடைமுறையில் பாமர இஸ்லாமியர் அனைவரும் புஹாரி ஷரீப் முழுமையாக ஓது இயலாதவர்களாக இருக்கின்றனர் . எனவே இதை நடைமுறைப் படுத்த இவர்கள் இதை ஆமோதிக்கும் தேவ்பந்தி உலமாக்களை நாட வேண்டிய சூழ்நிலையே உருவாகும் . நாம் இதுகாறும் தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் உலமாக்கள் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சொற்களை பின்பற்றுகின்றனரா என்று வியப்பில் தான் உள்ளோம் !

இனி நாணயத்தின் மறுபக்கத்தைக் காண்போம் !

கேள்வி :

     சரியான அறிவிப்புகளோடும் ,சம்பவங்களோடும் நடைபெறும் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது அனுமதிக்கப்பட்டதா ?

பதில் : ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
 
     அது  வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்ட( நா ஜாயிஸ் ) செயல் .

Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi

தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் செயல் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலாத ஒன்று என்றாலும் அவர்கள் செய்வதால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று ???

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் செய்யும் மவ்லித் மஜ்லிஸ் நாம் குரான் ,ஹதீஸ் ,ஸலபுஸ் ஸாலிஹீன்களின் நடைமுறை ,புகஹாக்களின் நூல்கள் , இமாம்களின் நூற்கலின் மூலம் ஆதாரம் காட்டினாலும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் வஹாபிய விசுவாசத்தால் அங்கீகரிக்க மறுப்பர் !





      
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment