Wednesday, 26 August 2015

தேவ்பந்தும் பித்அத்தும் !

இன்னல்களின் போது சங்கையான கத்முல் புஹாரி ஷரீப் நடத்துவது !

கேள்வி  :  
           இன்னல்களின் போது கத்முல்( முழுமையாக ஓதுவது )  புஹாரி ஷரீப் ஓதுவது பித் அத்தா ,இல்லையா ?  ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (முதல் மூன்று நூற்றாண்டுகளில்  வாழ்ந்த ) உலமாக்களின் காலத்தில் இது நிகழ்ந்ததாக ஆதாரம் உள்ளதா ?

பதில் :  ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
     
        புஹாரி ஷரீப் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தொகுக்கப்படவில்லை ,எனினும் அதை இன்னல்களின் பொழுது முழுமையாக ஓதுவது (ஆரம்பம் முதல் இறுதி வரை) ஓர் நல் அமல் ,ஏனெனில் திக்ரின் பின் ஓதும் துஆ அங்கீகரிக்கப்படும் .இந்த செயலின் அடிப்படை ஷரியத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது ,இது பித் அத் அல்ல .

Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi


வாழ்த்துக்கள் எனது தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்துக்கு வக்காலத்து வாங்கும் எனது நண்பர்களுக்கு !

இதை தான் ' மாமியார் உடைத்தால் மண்குடம் ,மருமகள் உடைத்தால் பொன்குடம் ' என்று சொல்வர் .

இவர்கள் இந்த செயலை நடத்த ஒரே காரணம் பணம் பறிக்கவே அன்றி வேறில்லை . நடைமுறையில் பாமர இஸ்லாமியர் அனைவரும் புஹாரி ஷரீப் முழுமையாக ஓது இயலாதவர்களாக இருக்கின்றனர் . எனவே இதை நடைமுறைப் படுத்த இவர்கள் இதை ஆமோதிக்கும் தேவ்பந்தி உலமாக்களை நாட வேண்டிய சூழ்நிலையே உருவாகும் . நாம் இதுகாறும் தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் உலமாக்கள் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சொற்களை பின்பற்றுகின்றனரா என்று வியப்பில் தான் உள்ளோம் !

இனி நாணயத்தின் மறுபக்கத்தைக் காண்போம் !

கேள்வி :

     சரியான அறிவிப்புகளோடும் ,சம்பவங்களோடும் நடைபெறும் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது அனுமதிக்கப்பட்டதா ?

பதில் : ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
 
     அது  வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்ட( நா ஜாயிஸ் ) செயல் .

Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi

தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் செயல் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலாத ஒன்று என்றாலும் அவர்கள் செய்வதால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று ???

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் செய்யும் மவ்லித் மஜ்லிஸ் நாம் குரான் ,ஹதீஸ் ,ஸலபுஸ் ஸாலிஹீன்களின் நடைமுறை ,புகஹாக்களின் நூல்கள் , இமாம்களின் நூற்கலின் மூலம் ஆதாரம் காட்டினாலும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் வஹாபிய விசுவாசத்தால் அங்கீகரிக்க மறுப்பர் !





      
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 13 August 2015

தக்வியத்துல் ஈமான் மீது தேவ்பந்திகளின் கேள்வி



அல்லாமா அமீன் ஒகார்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தமது நூலில், இஸ்மாயில் தெஹ்லவி எழுதிய தக்வியத்துல் ஈமான் நூலில் உள்ள வாக்கியத்தை குறிப்புகளுடன் எழுதியுள்ளார்கள் ,

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் கேள்வி :

நீங்கள் அடைப்புக்குறியில் உள்ள சொற்றொடர் மூல நூலில் எங்கு உள்ளது என்று தெரிவிக்க இயலுமா ?

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பதில் :

பக்கம் 20,தக்வியத்துல் ஈமான்

Taqwiyathul Iman,Pg 20
"ஹர் மக்லூக் படா ஹோ யா சோடா வோ அல்லாஹ் கீ ஷான் கே ஆகே சமர் ஸே பீ ஜலீல் ஹை "

மொழிபெயர்ப்பு :
 "எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த அல்லது மிக சிறிய  படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கேள்வி யாதெனில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் என்று அடைப்புக்குறிக்குள் எவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள் ???

தக்வியத்துல் ஈமானின் நூலின் ஆசிரியர் இஸ்மாயில் தெஹ்லவி வஹ்ஹாபி
தமது அதே நூலில் சில பக்கங்கள் கழித்து தாமே 'உயரிய படைப்பு '  என்பதற்கு விளக்கம் அளிக்கின்றார் .

Taqwiyathul Iman,Pg 80


" யானி இன்சான் ஆபஸ் மே சப் பாய் ஹை . ஜோ படா புஜுர்க் ஹை வொஹ் படா பாய் ஹை ,தோ உஸ்கி படே பாய் கே ஹி தசீம் கீஜியே அவ்ர் மாலிக் சப் கா அல்லாஹ் ஹை பண்தகீ உஸ்கோ சாகியே .இஸ் ஹதீஸ் சே மாலும் குஆ கி அவ்லியா வ அன்பியா ,இமாம் வ இமாம் சாடே, பீர் வ ஷஹீத் யானி ஜிதானே அல்லாஹ் கே முகர்ரிப் பந்தே ஹை ,வ சப் இன்சான் ஹி ஹை அவ்ர் பந்தே ஆஜிஷ் அவ்ர் ஹமாரே பாய் ஹை . மகர் அல்லாஹ் நே இன்கோ பதாயி தி ,வோ படே பாய் ஹுயே . ஹம் கோ இன்கீ பர்மபர்தாரீ கா ஹுக்ம் கியா ஹை . ஹம் இன்சே சோடே ஹை ,தோ இன்கே தஜ்நீம் இன்சானோன் கி சீ கர்னீ ஹை ". 

மொழிபெயர்ப்பு : 
         அதன் பொருள் எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் . அவர்களில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர் மூத்த சகோதரனைப் போன்றவர் .
அதனால் அவருக்கு மூத்த சகோதரர் அளவுக்கே மரியாதை செய்ய வேண்டும் ,அல்லாஹ் தான் எல்லா படைப்புகளின் உரிமையாளன் ,இன்னும் அவனையே நாம் வணங்க வேண்டும் . இந்த ஹதீதின் மூலம் நாம் அறிகின்றோம் அவ்லியாக்களும் ,நபிமார்களும் ,இமாம்களும் அவர்களின் மக்களும் ,ஷைகுமார்களும் ஷுஹதாக்களும் ,அதாவது அல்லாஹ்வின் புறம் நெருக்கமானவர்கள் எல்லோரும் மனிதர்கள் ,சக்தியற்றவர்கள் இன்னும் நமது சகோதரர்கள் .ஆனால் அல்லாஹ் அவர்களை உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான் /அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான் ,அவர்கள் நமது மூத்த சகோதரரைப் போன்றவர்கள் . நாம் அவர்களுக்கு கீழ்படியுமாறு கட்டளை இடப்படுள்ளோம் . நாம் அவர்களை விட குறைவான அந்தஸ்த்தில் உள்ளோம் , எனவே இவர்களுக்கு  மனிதர்களைப் போன்றே மரியாதை செலுத்த வேண்டும் .

இதன் மூலம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடைய உலமாக்கள் 'உயரிய படைப்பு ' என்பதற்கு நபிமார்கள் என்று பொருள் கொள்வது தக்வியத்துல் ஈமான் ஆசிரியரின் சொந்த வார்ததைகளில் இருந்தே எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாக விளங்கும் .

நமது சத்திய உலமாக்கள் எந்த மோசடியும் செய்யவில்லை .தவறான மொழிபெயர்ப்பும் செய்யவில்லை .அவர்கள் அதே புத்தகத்தில் இருந்த விளக்கத்தை இங்கு தெளிவுபடுத்தியுள்ளனர் .

நாம் இங்கு ஒரு ஆதாரம் தான் காட்டியுள்ளோம் . தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் முன்னோடி இஸ்மாயில் தெஹ்லவி தமது நூலான தக்வியதுல் ஈமானின் பல இடங்களில் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் ,வலிமார்கள் என்று விளக்கம் தருகின்றார் .

மேலும் இங்கு 'சமார் '  என்ற வார்த்தையின் அர்த்தம் செருப்பு தைப்பவரைக் குறிக்கும் . எனினும் உர்து மொழியை அறிந்த மக்கள் ஒரு சொல்லை எங்கு ,எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதைப் பொறுத்து பொருள் வேறுபடும் என்று அறிவர் . பொதுவாக சமார் என்ற வார்த்தை ஒருவரை அவமரியாதை /இழிவுபடுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது . நீங்கள் உங்கள் நண்பரை நோக்கி ஏன் இவ்வாறு செருப்பு தைக்கும் செம்மானைப் போல் அழுக்காக உள்ளாய் என்று வினவினால் ? உங்கள் பகுதியில் உள்ள செருப்பு தைப்பவர் எவ்வளவு செல்வந்தராய் இருந்தாலும் உங்கள் நண்பர் நீங்கள் அவரை இழிவுபடுத்தவே இவ்வாறு சொன்னீர்கள் என்பார் .

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தக்வியத்துல் ஈமான் நூலை வாசித்தறியாத தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் வேண்டுமானால் இப்படி கேள்விகள் கேட்கலாம் ;
ஆனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தக்வியத்துல் ஈமானை வாசித்து உள்ளார்கள் என்பதோடு ,எங்கே எப்படி சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறிந்தே வைத்துள்ளனர் .






Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 12 August 2015

தக்தீருன்னாஸ் நூலில் தேவ்பந்திகளின் மோசடிகள்



தேவ்பந்திகள் மீண்டும் நூலில் மோசடி செய்துள்ளனர் . 'தக்தீருன்னாஸ் ' என்னும் நூல் அவர்களின் அறிஞரான மவ்லவி காசிம் நாநோத்வியால் எழுதப்பட்டது .அதை தேவ்பதிகளே திரித்து மோசடி செய்துள்ளனர் .

இந்த நூலின் மீது தான் இந்தியாவைச் சார்ந்த 260 உலமாக்களும் ,மக்கா முகர்ரமா ,மதீனா முனவ்வராவைச் சார்ந்த 33 உலமாக்களும் குப்ருடைய பத்வாவை சாற்றினார்கள் .

அசல் மொழிபெயர்ப்பு :

         " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருப்பது ஞானத்தில்  தான் . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

Taqdeerun Naas,Qasim Nanothvee

Taqdeerun Naas,Qasim Nanothvee
இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளால் திரித்து மோசடி செய்த பதிப்பு பின்வருமாறு :

  " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருக்கின்றனர்  . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

தேவ்பந்திகள் ' இருப்பது ஞானத்தில்  தான்' என்னும் வாசகத்தை நீக்கி விட்டனர் .


Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband

Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband








Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 10 August 2015

இஸ்லாமியரைக் கொல்லுவது ?



கைர் முகல்லிது வஹாபிய அறிஞர் சுலைமான் பின் சஹ்மான் அந் நஜ்தி எழுதிய நூலை உர்துவில்  சுதந்திரம் பெறுவதற்கு முன் உள்ள  இந்தியாவில்   பிரசித்தி பெற்ற வஹாபிய அறிஞர் இஸ்மாயில் கஜ்னவி மொழிபெயர்த்துள்ளார் . (தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளும் அவர் மீது பெருமதிப்பு வைத்து உள்ளனர் .)




அவர் எழுதுகிறார்


" அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் உதவி தேடுபவர் முஷ்ரிக் . அவர்கள் செய்வது ஷிர்க் ஏ அக்பர் .அவ்வாறு உதவி கோருபவர்கள் ,தாங்கள் உதவி தேடும் நபர் நேரடியாக உதவி அளிப்பதில்லை , அல்லாஹ் தான் அவர்களது கோரிக்கையை கேட்கின்றான் (அல்லது அல்லாஹ் அவர்களுக்கு உதவ சக்தி அளித்துள்ளான் ) என்று எண்ணினாலும் ,அது ஷிர்க் தான் .

இத்தகைய கொள்கையுடையவர்களைக் கொல்வது ஆகும் ( ஐசே லோகோன் கே கூன் பஹானா ஜாயிஸ் ஹை ) ,இன்னும் அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும் கூடும் ( அவ்ர் உன்கே அம்வல் கோ லூட் லேனா ஜாயிஸ் ஹை ) "


[ நூல் - தொஹ்பா ஏ வஹாபியா ,பக்கம் 59] 









குறிப்பு : வஹ்ஹாபிகள் இந்த நூலைப் பதிப்பிப்பதை நிறுத்தி  விட்டனர் . வஹ்ஹாபிகள் தங்களின் அறிஞர்களே தங்களை 'வஹ்ஹாபி '  என்று அழைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .


இது ஏதோ இந்த வஹ்ஹாபி உலமா அறியாமல் சொல்லி விட்டார் என்று வாசகர்கள் கருதி விட வேண்டாம் . வஹ்ஹாபிய கொள்கைகளின் மூல கர்த்தாவான முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தி அல் தமீமி இதே கொள்கையுடையவன் என்பதையும் அதையே தமது காலத்தில் செயலாற்றினான் என்பதையும் அன்றைய மக்கா முப்தி அஷ்ஷைகு அஹ்மத் ஜைனி தஹ்லான் மக்கி அல் ஷாபியி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் எழுதிய 'பித்னத்துல் வஹ்ஹாபியா ' என்ற நூலிலும் காணலாம் . இந்த அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் வம்சா வழியினர் தான் இன்றைய நவீன சவூதி அரேபியாவின் தலைமை மார்க்க முப்திகளாக தொடர்கின்றனர் !


தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் இஸ்மாயில் திஹ்லவி இதே கொள்கையை எழுதுகிறார் ,

 "கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[நூல் - தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 




இஸ்மாயில் திஹ்லவியின் உஸ்தாதான சையத் அஹமத் ரேபரேலியும் இதே கொள்கையுடையவர் தான் . அவர் தனது காலத்தில் தமது படையுடன் வடக்கு மாகாணத்தில் சென்ற பொழுது , கட்டிடம் எழுப்பப்பட்ட கப்ருகளை இடித்தார் என்றும் ,அங்குள்ள பெண்களை பலவந்தப் படுத்தி திருமணம் செய்தார்கள் என்றும் வரலாற்றில் பதிவாகி உள்ளது .


இது பற்றிய விபரங்ககளை இங்கு காண்க !  















Related Posts Plugin for WordPress, Blogger...