Saturday, 9 May 2015

மரணித்த பின் கபுரில் இருந்து மீண்டு வந்த தேவ்பந்தி தப்லீக் மவ்லவி !

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கையாகிறது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் (மஆதல்லாஹ் !!!) .


இது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும் .


 "பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்." (அஸ்தக்பிருல்லாஹ் )



[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59, இஸ்மாயில் தெஹ்லவி ]


தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59


இதே  தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் தங்களது நூலில் மரணித்த பின் ஓர் தேவ்பந்தி  மவ்லவி கபுரில் இருந்து வெளிவருகிறார் என்றும் ,அவர் தேவ்பந்த் தாருல் உலூம் மதரசாவிற்கு வருகை தருகிறார் என்றும் எழுதி வைத்துள்ளனர் . என்னே ! இந்த வஹாபிகளின் ஈனத்தனம் !


ஒரு ஸுன்னி முஸ்லிம் குரான் ,ஹதீஸ் கூறியபடி எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹயாத்துன் நபியாக உள்ளார்கள் என்று கூறினால் அவர் மீது ஷிர்க் ,குப்ர் பட்டம் கட்டி அவரை இஸ்லாத்தை விட்டும் நீக்கி விடுகின்றனர் .


 
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ


(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.


[அல் குரான் - 3:169.]


‏عن ‏ ‏أبي الدرداء‏ ‏قال ‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود تشهده الملائكة وإن أحدا لن يصلي علي إلا عرضت علي صلاته حتى يفرغ منها قال قلت وبعد الموت قال وبعد الموت إن الله حرم على الأرض
أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق


[அறிவிப்பாளர் : அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு ,இப்னு மாஜா ,பாகம் 1,எண் 1626]



இனி இவர்களின் தேவ்பந்தி மவ்லவி அதே குரான் ,ஹதீஸுக்கு மாற்றமான வஹாபிய கொள்கையின் அடிப்படையில் ஷிர்க் செய்து முஷ்ரிக்காகி போய் விட்டாரா இல்லையா என்று தெளிவுபடுத்துவார்களா  ?????














இத்தகைய வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment