Friday 8 May 2015

தேவ்பந்தின் ஷிர்க்கை உண்டாக்கும் பெயர்கள் :

   
பக்ஷ் என்றால் பரிசு என்று அர்த்தம் . தமது குழந்தைகளுக்கு   நபியின் பரிசு என்றோ வலிமார்களின் பரிசு என்றோ பெயரிடுவது முஸ்லிம்களின் வழக்கம் .அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களும் இது ஷரியத்திற்க்கு மாற்றமில்லா செயல் என்றே சொல்கின்றனர் . ஆனால் வஹாபிகள் இதையும் ஷிர்க் என்றே உளறுகின்றனர் .
         
கேள்வி :
              நீங்கள் குழந்தைகளுக்கு நபி பக்ஷ்,பீர் பக்ஷ்,சலார் பக்ஷ்,மதார் பக்ஷ் என்று பெயர் சூட்டுவதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?



பதில் :   
           இவ்வாறு பெயரிடுவது ஷிர்க் .இவ்வாறு பெயர் சூட்டுவது கூடாது ,இவற்றை மாற்ற வேண்டும் .


[ நூல்- பதாவா ரஷீதியா ,பக்கம் 69,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி ]






'அலி பக்ஷ்,ஹுசைன் பக்ஷ் அல்லது அப்துன் நபி என்று பெயரிடுவதோ அல்லது அல்லாஹ்வும் அவனது ரசூலும்  ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் நாடினால் நிறைவேறும் என்று கூறுவது ஷிர்க் "


[ நூல் - பிஹிஷ்தீ ஜேவர் ,மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,பக்கம் 46 , நூலில் மோசடி செய்யும் முன் ]

ஆக தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகளைப் பார்த்தீர்கள் .


இப்போது மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹியின் சுயசரிதையான தச்கிரதுர் ரஷீத் என்னும் நூலைக் காண்போம் .


 "மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் தந்தை வழி வம்சா வழியைப் பார்ப்போம் .
மவ்லானா ரஷீத் அஹ்மத் (மகன் ) மவ்லானா ஹிதாயத் அஹ்மத் (மகன் )காழி பீர் பக்ஷ் (மகன் ) காழி குலாம் ஹசன் (மகன் ) காழி குலாம் அலி .


மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் தாய்  வழி வம்சா வழியைப் பார்ப்போம் .
மவ்லானா ரஷீத் அஹ்மத் (மகன் )கரீமுன்னிசா (மகள் ) பரீத் பக்ஷ் (மகன் ) குலாம் காதிர் (மகன் ) முஹம்மது ச்வாலிஹ் (மகன் ) குலாம் முஹம்மது ."


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 32 ]


கேள்வி : ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முதல் ஆசிரியர் யார் ?
பதில் : மியான் குதுப் பக்ஷ் .


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 39 ]


கேள்வி : ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முதல் அரபி  ஆசிரியர் யார் ?
பதில்  : மவ்லவி முஹம்மது பக்ஷ் .


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 48 ]


மதிப்பிற்குரிய வாசகர்களே ,இதன் விளைவு என்ன ? ரஷீத் அஹ்மத் கங்கொஹியின் வாழ்க்கையில் எத்துணை பக்ஷ் கள் சூழ்ந்து உள்ளனர் .இவையாவும் ஷிர்க் என்று ரஷீத் அஹமத் பத்வா கொடுத்துள்ளதையும் மறவாதீர் .


மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி தமது பிறப்பின் ஆரம்பம் முதல் ஷிர்க்கால் சூழப் பட்டுள்ளார் என்று எடுத்துக் கொள்வதா ????











குறிப்பு :



தமிழகத்தில் அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய கொள்கைகளைக் கொண்ட நூலான பிஹிஷ்தீ ஜேவர் சுவர்க்க நகைகள் என்னும் பெயரில் மொழிபெயர்த்து திருச்சி டி.எஸ்.ஏ.ரஸூல்    என்பவர் 
தப்லீக் ஜமாஅத்தை தமிழகத்தில் காலுன்றச் செய்து ஆதரவளித்த உலமாக்களான அமானி ஹஜ்ரத்,கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் ஆகியோரின் மதிப்புரை ,சிறப்புரையுடன் வெளிவந்தது .


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமான இந்த  நூலுக்கு மறுப்பு தெரிவித்து காயல்பட்டிணம் தந்த காமில் வலி அல் ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷைகு   அப்துல் காதிர் ஸூபி  பாஜிலே நூரி ஸித்திகி காதிரி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் 'சுவர்க்க நகைகளா ! அல்ல நரக விலங்குகள்' என்ற நூலை எழுதினார்கள் .


நூலை பதிவிறக்கம் செய்ய 



குப்ர் -ஷிர்க் பற்றிய விளக்கம் :


'43. அலி பக்ஷ்,ஹுசைன் பக்ஷ் அல்லது அப்துன் நபி போன்ற பெயர்களை வைப்பது  "


[ நூல் - சுவர்க்க நகைகள் , பக்கம் 77,பிஹிஷ்தீ ஜேவர் தமிழ் மொழிபெயர்ப்பு , மூல நூல் ஆசிரியர் மவ்லவி அஷ்ரப் அலி தானவி]


அதில் மேற்படி பத்வாவைச் சூட்டிக் காட்டி நூலின் மொழிபெயர்ப்பாளர் டி.எஸ்.ஏ.ரசூல் என்ற செய்யத் அப்துர் ரசூல் அவர்களிடம் இந்த பெயரைச் சூட்டியதால் நீங்களும் ஷிர்க்குடைய பெயர் தானே வைத்துள்ளீர் என்று சுட்டிக் காட்டியதும் ,தனது வஹாபிய கொள்கை விட்டு வெளிவராமல் தனது பெயரை குலாம் ரசூல் என்று மாற்றிக் கொண்டு, தமிழக தப்லீக்வாலாக்களின்  பல நூல்களை எழுதிய திருச்சி குலாம் ரஸூல் தான் அவர் .

இத்தகைய வஹாபிய கொள்கை கொண்ட தப்லீக் தேவ்பந்திகளை விட்டும் நம் ஈமானைக் காப்பாற்றிக் கொள்வோமாக ! ஆமீன் !



Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment