Thursday 14 May 2015

கண்மணி நாயகம் அவர்களின் நூர் தான் முதல் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளும் தேவ்பந்திகளின் 'ஹக்கீமுல் உம்மத் '

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கையாகிறது அண்ணலெம் பெருமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூராகவும் ,பஷராகவும் இருக்கின்றார்கள் என்பது . இந்த நம்பிக்கை அல் குரான்,ஹதீஸ் மற்றும் சத்திய இமாம்களின் இஜ்மாவின் அடிப்படையில் அமைந்த ஒன்று .


எனினும் இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள், கைர்  முகல்லிது வஹாபிகளைப் போன்று தம் மனோ இச்சையைப் பின்பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூர் என்பதை ஏற்க மறுக்கினர் .


இனி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இந்நம்பிக்கைக்கான ஆதாரங்களைப் பார்ப்போம் .


குரான் பறை சாற்றுகின்றது ,


   يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ


வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.  


 [ குர் ஆன் - 5:15 ]


மிகப் பெரும் முபஸ்ஸிரான அல்லாமா அலூஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) இந்த ஆயத்திற்கு தப்ஸீர் எழுதுகின்றார்கள்  ,


عظيم وهو نور الأنوار والنبـي المختار صلى الله عليه وسلم


அன்னார் ஒளிகளின் பேரொளியாக உள்ளார்கள் (நூருல் அன்வார் ) மேலும் நபியுல் முக்தார் ஆகவும் உள்ளார்கள் 


[நூல் - ரூஹல் மாஃனி ,அல்லாமா அலூஸி ]


இதே போன்று இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லி ,இமாம் ஜலாலுத்தீன் அல் சுயூத்தி ஆகியோர் தமது தப்ஸீர் அல் ஜலாலைனிலும் , இமாம் இப்னு ஜவ்சீ தமது ஜாத் அல் மசீர் பில் இல்ம் அத் தப்ஸீர் நூலிலும் , இமாம் அல் ஷிர்பினி தமது தப்ஸீர் சிராஜுல் முனீரிலும் ,இமாம் பக்ரூத்தீன் ராஸி தமது தப்ஸீர் அல் கபீரிலும் இதே கருத்தை முன் மொழிந்துள்ளனர் .


மேலும் அஹ்காம் அல் குர்ஆன் (6.118) நூலில் இமாம் குர்தூபி மற்றும் மவர்தி ஆகியோர் அரபு இலக்கணத்தின் இமாம் இப்ராஹீம் இப்னு முஹம்மது அல் ஸஜ்ஜாஜ் அவர்கள் இதே கருத்தை உடைய நிலையவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது .


இனி இது விஷயமாக மிகவும் பிரபலமான ஓர் ஹதீத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற அல்லாஹ் முதன் முதலில் எதைப் படைத்தான் என்னும் ஹதீஸ்  . இந்த ஹதீஸ் பின்வரும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது ,
  • முசன்னஃப்  அப்துர் ரஸ்ஸாக் ,பக்கம் 99,ஹதீத் எண் 18 .
  • அல்லாமா  கஸ்தலானி தமது மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 71.
  • அல்லாமா முஹம்மது அல் ஸுர்கானி தமது ஷரஹ் மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 89-91.
  • அல்லாமா அஜ்லுனி தமது கஷ்ப் அல் கபா ,பாகம் 1,பக்கம் 311,ஹதீத் எண் 827.
விரிவஞ்சி இத்துடன் நமது அதாரங்களை இத்துடன் முடிவு செய்கின்றோம் .


இனி இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று கூப்பாடு போடும் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'நஷறுத் தீப்' ல்   இதே கருத்தை பதிவு செய்துள்ளார் .
  
Nashar ut-Tib Volume 001, Page No. 13 ,Ashraf Ali Thanvi .










தற்கால தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் இனியாவது தமது இரட்டை நிலைப்பாட்டை மாற்றுவார்களா ????



Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment