Saturday, 9 May 2015

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் ரஹ்மத்துல் ஆலமீன் !

அல்லாஹ் ஹுதஆலா தன் ஹபீபான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை எண்ணற்ற சிறப்பு பெயர்களைக்  கொண்டு திருமறை குரான் ஷரீபிலே அழைக்கின்றான் .
அவற்றுள் ஒன்று ரஹ்மத்துல் ஆலமீன் என்பது .


وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ


(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை."
[அல் குரான் : 21:107]


கண்மணி நாயகம் அவர்கள் இவ்வுலகிற்கு மட்டுமல்ல எல்லா ஆலம்களுக்கும் ரஹ்மத் ஆக இருக்கின்றார்கள் . இது அவர்களின் தனிச் சிறப்பு .அவர்களே நூரே முகம்மதியா என்னும் முதல் சிருஷ்டி .


எனினும் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் கொள்கையாகிறது ,


ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.


[ நூல் - ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12 ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ]


ஃபதாவா ரஷீதியா


உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர் .


[நூல் - தக்தீருன்னாஸ் ,பக்கம் 5 ]


இந்த கேடுகெட்ட கொள்கையுடைய தப்லீக் வஹாபிகள் தங்கள் நூற்களில் ரஷீத் அஹமத் கண்கோஹியை ரஹ்மத்துல் ஆலமீன் என்று எழுதி வைத்துள்ளனர் .










இதன் மூலம் என்ன கருத்தை இந்த தப்லீக் தேவ்பந்திகள் நிலை நாட்டுகின்றனர் . அல்லாஹ் தன் ஹபீபுக்கு வழங்கிய தனித்துவமான இந்த பெயரை இந்த குழப்பவாதிகள் ஏன் திருடி ரஷீத் அஹ்மத் கங்கோஹிக்கு கொடுக்கின்றனர் . அவர் என்ன ரஹ்மத்தா ???? எல்லா படைப்புகளுக்கும் அவர் எந்த வகையில் ரஹ்மத்  ???? அவரைக் கொண்டு ரஹ்மத் அடைந்த படைப்புகள் எவை ??? இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த உலமாக்கள் ,இமாம்கள் ,வலிமார்கள் இவ்வாறு கூறியுல்லனரா ????


நாங்களும் ஸுன்னத் ஜமாஅத் தான்,மத்ஹபை பின்பற்றுகிறோம் ,தரீகாவில் உள்ளோம்  என்று பொய் பேசி ,மோசடி செய்து ஸுன்னத் வல் ஜமாத்தின் அடையாளத்தை திருடும் இந்த முனாபிக்குகளிடம் இருந்து உங்கள் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் !!!



Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment