Sunday 14 September 2014

தப்ஸீர் புல்காதுல் ஹைரன்

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் முஹத்திதும் ,முபஸ்ஸிருமான மௌலவி ஹுசைன் அலி பாச்ரானி தேவ்பந்திகளின் இமாமே ரப்பானியான மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மாணவர் ஆவார் .

மௌலவி ஹுசைன் அலி பாச்ரானி தேவ்பந்தி திருக்குரான் ஷரீபுக்கு புல்காதுல் ஹைரன் என்னும் பெயரில் விரிவுரை என்னும் தப்ஸீர் ஒன்றை எழுதினார் . அதில் பின்வரும் தமது வஹாபிய விஷக் கருத்துகளை சேர்த்துள்ளார்.

Tafsir Bulghatul Hairan


அவர் தமது தப்ஸீரில் எழுதுகிறார் அவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடன் ஸிராத்தே முஸ்தகீம் பாலத்தில் நடப்பதாகக் காண்கிறார் .

அப்பொழுது நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஸிராத்தே முஸ்தகீம் பாலத்தில் இருந்து தவறி கீழே விழப் பார்க்கிறார்கள் என்றும் ,

அப்பொழுது இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் ஷைகு எவருக்காக படைப்புகளைப் படைத்ததாக எல்லாம் வல்ல அல்லாஹ் ஹதீது குத்ஸியில் கூறுகிறானோ அப்பேர்ப்பட்ட பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை  இவர் கீழே விழுவதை விட்டும் காப்பாற்றுகிறார் !!!

லா ஹவ்ல வலா ஹூவத்த இல்லா பில்லாஹ் !!!

குறிப்பு : ஸிராத்தே முஸ்தகீம் பாலம் என்பது இஸ்லாமிய நம்பிக்கையின்படி நாளை இறுதி தீர்ப்பு நாளில் எல்லா மனிதர்களும் கடந்து செல்ல வேண்டிய ஒரு தலை முடியின் அளவே உள்ள, நரக நெருப்பின் மீது உள்ள ஓர் பாலம் .

அதைக் கடப்பவர்கள் தான் நித்திய வாழ்வளிக்கும் சுவனும் செல்ல முடியும் .அது தலை முடியின் அளவுக்கும் ,வாளைப் போன்று கூர்மையாகவும் இருக்கும் . ஈமானில்லாத பாவிகள் தான் அந்த பாலத்தை கடக்க முடியாமல் அதில் இருந்து கீழே நரக நெருப்பில்  விழுவர் .

ஸ்கேன் பக்கம் 8
 
Tafsir Bulghatul Hairan Pg 8


இதே தப்ஸீரின் பிறிதொருஇடத்தில் எழுதுகிறார் எல்லாம் வல்ல ஏகனாகிய
அல்லாஹ்  ஜல்லஷானுஹுதஆலா நாம் ஒரு செயலை செய்யும் வரை நமது செயல்களை அறியாதவனாக இருக்கின்றான் .

இது நிச்சயமாக அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் ( அல் அலீம் ) என்பதை மறுக்கும் செயலாகும்  !!!

ஸ்கேன் பக்கம் 157 ,158
 
Tafsir Bulghatul Hairan Pg 157

Tafsir Bulghatul Hairan Pg 158

யா அல்லாஹ் !!! உன்னிடம் நாங்கள் இத்தகைய கொள்கையுடைய நபர்களை விட்டும் ,இத்தகைய கொள்கையுடையவர்களை ஆதரிக்கும் தீயவரை விட்டும் ,இத்தகைய கொள்கையுடையவர்களை நேசித்து  நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் வழிகேடர்களை விட்டும் பாதுகாவல் தேடுகின்றோம் !!!

ஆமீன் !!!
 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment