Sunday 14 September 2014

மௌலிதும் ஷைகு ஷிப்லி நுஃமானியும்


           மௌலானா ஷிப்லி நுஃமானி (இறப்பு  1332 ஹிஜ்ரி) ( 1857-1914) இந்தியாவிலுள்ள தாருல் உலூம் நத்வத்துல் உலமா என்னும் இஸ்லாமிய மதரஸாவின் நிறுவனர்களில் ஒருவர் . இவரின் மாணவர்களில் தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் அகீதாவுடைய சுலைமான் நத்வியும் ஒருவர் .

அதன் உருவாகத்திற்கு பின் ,மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உண்டான கருத்து வேற்றுமையின் காரணமாக மாணாக்கர் சிலர் எதிர் போராட்டங்களில் ஈடுபட்டனர் .

இந்த சம்பவம் பற்றிய விவாதத்திற்கு பின் மௌலானா ஷிப்லி நுஃமானி எழுதுகிறார் ,

" இந்த போராட்டத்தின் போது,அது மீலாதுடைய மாதமாக இருந்ததால் மாணவர்கள் வழக்கம் போல் மௌலித் ஷரீப் கொண்டாட வேண்டும் என்று கூறினர் . (உர்து - ஜைஸா ஹமேசா கி மாமூல் தா )
ஆனால் எதிர் தரப்பினர் நான் இந்த மீலாத் விழாவில் சொற்பொழிவாற்றக் கூடும் என்று அஞ்சியதால் அவர்கள் மீலாத் ஷரீப் நடத்துவை விட்டும் தடுக்கப் பட்டார்கள் ,மேலும் இந்த நிலை மூன்று நாட்களுக்கு தொடர்ந்ததது . இதன் பின்னர் எதிர் தரப்பிடம் மீலாத் நடத்துவது தவிர்க்கப்பட்டால் அது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ,கோபத்தையும் ,பிளவையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது .பின்னர் இறுதியாக மௌலித் ஷரீப் சில கட்டுப்பாடுகளுடன் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது "


[ நூல் - மகாலதே ஷிப்லி ,வால்யூம் 6,பக்கம் 131, பழைய பதிப்பு ,ஆசம்கர் ]

இணையதள பதிப்பு : http://www.urducl.com/Urdu-Books/969-416-227-009/p0171.php

Maqalate Shibli
 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment